219 views
அசோகன் கலைவாணி இருவரும் அங்கே இருந்து கிளம்பினார்கள்…..
டிரைவர் சென்று கார் கதவை திறந்து விட்டார்…
இரண்டு பேரும் வீட்டிற்குள் நுழைய…. மதிய நேரமானதால் அன்னம்மா பாட்டி மாத்திரம் வீட்டில் இருந்தார்….
மகனின் முகத்தை கண்டவர் ஒரு நொடி கலங்கி நிற்க….. தாயை கண்ட சேய் தனது வயதையும் மறந்து அடைக்கலமானது…..
தனது மகனின் கதறலில் ஆடிப் போய்விட்டார் அந்த தாய்…. கலைவாணியின் நிலையும் தன்னை உலுக்க என்ன என்று கேட்க….
ரூமிற்குள் அழைத்து சென்று நடந்ததை கூறினாள்…
உலகமே ஸ்தம்பித்தது போல சிலையென நின்றார் …
அனைவரும் ரூமிற்குள் அழுது கொண்டிருக்க….முதலில் வீட்டிற்கு வந்த கவின் வீட்டில் யாரும் இல்லாமல் இருக்க…. செக்யூரிட்டி இடம் கேட்க….அவர் உள்ளே தான் இருக்கிறார்கள் என கூறினார்…
உள்ளே வந்தவன் சமையல் செய்யும் பட்டம்மாளிடம் சென்று கேட்க…..அன்னம்மா பாட்டியின் அறையில் இருப்பதாக கூறினார்…
பாட்டிக்கு தான் ஏதோ உடம்பு முடியல போல என எண்ணியவன்… வேகமாக வந்து கதவை திறக்க….மூவரும் அழுத நிலையிலேயே திரும்பி பார்க்க….
அங்கே கவினை எதிர்பார்க்காத அவர்கள்….சட்டென கண்களை துடைத்துக் கொண்டனர்.
” ஏன் மூணு பேரும் இங்கே இருக்கீங்க….அப்பா நீங்க ஆபீஸ் போகலயா….பாட்டி உங்களுக்கு என்ன ஆச்சு….”
அன்னம்மா பாட்டி அவனிடம் ” நான் நல்லா இருக்கேன் கண்ணா…..அப்பாவிற்கு தலைவலியாக இருப்பதால் சீக்கிரமாக வந்துட்டான்…..வேற ஒன்னும் இல்லை…..போடா போய் டிரஸ் மாத்திட்டு வா….உனக்கு சாப்பிட எடுத்து வைக்கிறேன்…..”
சரி பாட்டி என கூறி தனது அறைக்கு சென்றான்…
அவன் சென்றதும்….அன்னம்மா தனது மகன் மற்றும் மருமகளிடம் ” இங்கே பாருங்க… குழந்தைகள் முன்னாடி எதுவும் காட்டாதீங்க….எப்பவும் இருக்கறது போல இருங்க….நாம நாளைக்கு இதை பற்றி பேசுவோம்….தம்பி நீ முதல்ல உன் ரூமுக்கு போ…அம்மாடி கலை அவனை கூட்டிப்போ….பிள்ளைங்க அப்பாவை கேட்டா…தலைவலின்னு சொல்வோம்….”
கவினுக்கு உணவு கொடுத்து விட்டு அவன் அருகில் உட்கார்ந்திருந்தார் பாட்டி..
ரூமில் அசோகன் இன்னும் அழுதபடி இருக்க…கலையோ அவரை சமாதானம் செய்து கொண்டிருந்தார்….தனது மடியில் தலை சாய்த்தபடி அழுத கணவனை எண்ணி கலக்கம் கொண்டாள். .
ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த கவின் மது வரவும் அவளுக்கு பொறுப்பாக சாப்பிட முடியும் கொண்டு வந்து கொடுத்தான்…..சுமதியும் வர அவளுக்கும் சேர்த்து கொடுத்தான்…
” என்னடா…நீ கொண்டு வந்து தர….அம்மா பாட்டி எல்லாரும் எங்கே….” என சுமதி கேட்க….
சமயலறையில் இருந்து பாட்டி வெளியில் வந்து….”அம்மாவிற்கு உடம்பு சரியில்லை…அப்பாவிற்கும் தலைவலி….இரண்டு பேரும் தூங்கராங்க….நீங்க சாப்பிடுங்க….”
இருவரும் ஒன்றும் பேசாமல் சாப்பிட்டு தங்களது அறைக்கு சென்றனர்…..
இரவு உணவை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தனது மகனின் அறைக்கு உணவை எடுத்து சென்றார்…..
இருவரும் இன்னும் அழுது கொண்டிருப்பதைக் கண்டு அவர்களை மிரட்டி அவர்களுக்கு உணவை ஊட்டி விட்டார்…
மறுநாள் காலை கலைவாணி தனது அத்தையை ரூமில் இருக்க கூறிவிட்டு….பசங்களுக்கு தேவையானதை செய்து அவர்களை அனுப்பி விட்டு….உணவை எடுத்து கொண்டு ரூமிற்கு வந்தாள்….
பாட்டி தனது மகனுக்கு உணவை ஊட்டி விட்டு…அவனை சற்று நேரம் படுக்க சொன்னார்…
சரியாக 11 மணிக்கு கம்பெனி மேனேஜர் வீட்டிற்கு சில ஆவணங்களுடன் வர….
மூவரும் கீழே வந்தனர்….
” சார்….என்னை தப்பா நினைக்காதீங்க…. அக்கவுண்ட் எல்லாம் செக் செய்ததில் நீங்க இன்னும் 25 லட்சம் ரூபாய் கம்பெனிக்கு செட்டில் செய்ய வேண்டும்…..அதை எங்க முதலாளி உங்ககிட்ட சொல்ல சொன்னார்….இன்னும் மூணு மாசத்துல உங்களை செட்டிள் செய்யும்படி கூறியுள்ளார்….மீறினால் உங்கள் சொத்துகளை கைப்படுத்துவார்…..” எனக் கூறினார் …
” என்னை மன்னிச்சிடுங்க சார்….நான் பிள்ளை குட்டி காரன்…இந்த வேலை இல்லைனா நாங்க சாகவேண்டியது தான்…அதுதான் மனசை கல்லாகிட்டு உங்க கிட்ட பேசறேன்.. “
” பரவாயில்லை மேனஜர் சார்…..எனக்கு எவ்வளவோ விஷயத்தில் ஹெல்ப் பண்ணி இருக்கீங்க….ஒன்னும் பிரச்சனை இல்லை ..உங்க புது முதலாளிக்கு என்னுடைய வாழ்த்தை தெறிவிச்சுடுங்க….,நான் முடிந்த வரை கண்டிப்பா பணத்தை சீக்கிரமாக கொடுக்க பார்க்கிறேன்….நீங்க போய்ட்டு வாங்க…” என அசோகன் கூறினார்…
மேனேஜர் அவரிடம் விடை பெற்று சென்றார்….
சிறிது நேரம் கழித்து அன்னம்மா அசோகனின் அறைக்கு வந்து ஒரு பெட்டியை கொடுத்தார்….
அதில் சில நகைகளும் பத்திரங்களும் இருந்தது…
” என்னம்மா இதெல்லாம் …எதுக்கு இப்ப என்கிட்ட குடுக்கறீங்க……”
” தம்பி முதல்ல இந்த நகைகளையும் இடங்களையும் விற்று அவன் மூஞ்சில தூக்கி வீசிட்டு வாடா….”
” இல்லம்மா….நான் வேற ஏதாவது வழியில் பணத்தை புரட்ட பார்க்கிறேன்…..”
” ஏன் தம்பி இந்த அம்மாகிட்ட வாங்கறதுல உனக்கு என்ன கவுரவம்….”
” ஐயோ அம்மா அப்படி எல்லாம் இல்லைமா…..இது எல்லாம் தாத்தா உங்களுக்கு கொடுத்தது….அதை நீங்க எவ்வளவு ஜாக்கிரதையாக பார்த்துக்கரீங்க என்பது எனக்கு தெரியும்…அதான் சொன்னேன்….”
” பரவாயில்லை பா….கஷ்டத்துல உதவாத நகை இடம் எல்லாம் இருந்து என்ன பயன்…..நீ முதல்ல விற்க ஏற்பாடு பண்ணு….”
கலைவாணி தானும் தன்னுடைய நகைகளை கொண்டு வந்து கொடுத்தாள்….
அசோகன் அனைத்தையும் விற்க ஏற்பாடு செய்தார்….
நகைகளை விற்றவர் கட்ட வேண்டிய தொகையில் சிறிது மாத்திரமே சேர்ந்திருக்க…. இடங்களை விற்க தெரிந்தவர்களிடம் கூறி வைத்தார்…
ஒருவாரத்தில் அனைத்தையும் விற்று பணத்தை எடுத்து கொண்டு தனது லாயருடன் கம்பெனிக்கு சென்று அவர்களிடம் பணத்தை செலுத்தி விட்டு…..இனி எந்த விதத்திலும் தன்னை பண விஷயத்தில் தொந்தரவு செய்ய முடியாதபடி பத்திரம் எழுதி கையெழுத்து வாங்கினார்….
அனைத்தும் முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவர்…..குடும்பத்துடன் அமர்ந்து பேசி சிரித்தார்….
ஆனால் மதுவிற்கு மட்டும் தனது தந்தையின் சிரிப்பில் மறைந்திருந்த சோகம் தெரிந்தது….பிறகு பேச வேண்டும் என நினைத்தாள்….
அனைவரும் ஒன்றாக அமர்ந்தபடி உண்டு முடித்து உறங்க சென்றனர்…
அசோகன் வேலைக்கு முயன்ற படி இருக்க….
ஒருவாரம் சென்றிருக்க….மது அவர் அருகில் வந்து “என்னப்பா ஏன் நீங்க ஒரு மாதிரி இருக்கீங்க….என்ன பிரச்சனை” என கேட்க….
முதலில் ஒன்றுமில்லை என மறுத்தவர்….பின்பு அவளின் வற்புறுத்தலின் பேரில் கம்பெனி கைவிட்டு போனதை மட்டும் கூறினார்….
அதைக் கேட்ட மது அதிர்ச்சியடைந்து தனது தந்தையை கட்டிக் கொண்டு அழுதாள்…..