398 views

அன்னம்மா பாட்டி மது தான் சுமதியை தள்ளி விட்டாள் என கை காட்டினார்….

மது ஸ்தம்பித்து நின்றாள்

அசோகன் மதுவிடம் வந்துஎன்னம்மா அக்காவிற்கு எப்படி அடி பட்டது….”

நாங்க மூணு பேரும் சேர்ந்து விளையாடிட்டு இருந்தோம் பா…..அப்போ அக்காவிற்கு கல் இடறி விட்டுருக்கும் போலவிழுந்துட்டாங்கஅவங்க துணி துவைக்கும் கல்லின் அருகில் விழுந்ததால்….அவங்க தலை அதில் பட்டுடுச்சு….நான் எதுவும் பண்ணல அப்பா….” என அழுகையினூடே கூற

கவின் அப்பாவிடம்ஆமாம் அப்பா….. அவளாதான் விழுந்தா….மது தள்ளள…”

அசோகன் தனது அன்னையை பார்க்கஅவரோஏண்டா….என்னைய பார்க்கிற….நான் தான் சொல்றேன….கேளு…”

சரிம்மாவிடுங்க….அப்புறமா பேசலாம்….”

டாக்டர் வந்து அசோகனிடம்யாராவது ஒருவர் இல்லனா இரண்டுபேர் இருங்க…. மத்தவங்க எல்லாம் கிளம்பலாம்என்று கூறிவிட்டு சென்றார்….

அவர் சென்றதும் அசோகன் தனது தாயிடம் வந்து குழந்தைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு அவரை வீட்டிற்கு செல்லுமாறு சொன்னார்..

அன்னம்மா பாட்டி மதுவையும் கவினையும் கூட்டிக் கொண்டு வீட்டிற்கு சென்றார்….

மறுநாள் காலை டிரைவர் இடத்தில் அவர்கள் இருவருக்கும் உணவு மற்றும் மாற்று உடை அனைத்தையும் வைத்து அன்னம்மா கொடுத்துவிட்டார்

மாலை ஆனதும் டாக்டர் ஒருமுறை வந்து  சுமதியை செக் செய்துவிட்டு…. அசோகனிடம்இப்ப கொஞ்சம் improvement இருக்கு எப்ப வேணாலும் நினைவு திரும்ப வாய்ப்பு இருக்குஆபத்துக் கட்டத்தைத் தாண்டிட்டாங்க…. பயப்பட வேண்டாம்எனக்கூறிவிட்டு சென்றதும் அசோகன் தனது தாய்க்கு விஷயத்தை கூறினான்….

மறுநாள் காலை 5 மணி அளவில் சுமதி கண்விழிக்க….. அருகில் தனது தாயை கண்டவுடன் அம்மா எனக்  கூப்பிட்டாள்….. அவளது சத்தம் கேட்டதும் கலை பதறியடித்துக்கொண்டு எழுந்து அவள் அருகில் சென்று….அவளை வாஞ்சையுடன் கட்டித் தழுவினார்

என்னமா எனக்கு என்ன ஆச்சுஎன சுமதி கேட்க….

ஒன்னும் இல்லடா நீங்க மூணு பேரும் விளையாடிட்டு இருந்தீங்கள்ளா அப்ப நீ உனக்கு தெரியாம கால் தடுக்கி கீழே விழுந்துவிட்ட மா…..ஒன்னும் பிரச்சனை இல்லை….”

அசோகனைப் பார்த்து….” அப்பா எனக்கு இங்க இருக்கப் பிடிக்கல….வீட்டுக்கு போகணும்….”

அசோகன் அவளிடம்ஒன்னும் இல்லைடா….நாம நாளைக்கு வீட்டுக்கு போய்டலாம்….”

சற்று நேரத்தில் டாக்டர் வந்து சுமதியை பார்த்து விட்டுஅசோகன் ரூமிற்கு வர சொல்லி சென்றார்

அசோகன் அறைக்குள் நுழைந்ததும்….அவரிடத்தில்சுமதி இப்ப சரி ஆயிட்டாள்….எதிர்காலத்தில் அவள் எப்பவாவது தலை வலின்னு சொன்னாகொஞ்சம் கூட தாமதம் இல்லாமல் ஹாஸ்பிடல் கூட்டி போய்டுங்க…..”

ஏன் சார் எதுவும் பிராப்ளம் ….”

அவங்க தலைல ஸ்கேன் பண்ணதுலஇரத்தம் கட்டி ஒன்னு இருக்குஅது ஆபரேஷன் பண்ணிதான் ரிமூவ் பண்ணனும்….அவங்க ஹெல்த் கண்டிஷன் இப்ப ஆபரேஷன் பண்ண முடியாது….ஒரு வருஷம் கழித்து மறுபடியும் ஸ்கேன் பண்ணலாம்…. அப்பத்த கண்டிசன் பார்த்துட்டு முடிவு பண்ணலாம்…..அதுவரைக்கும் இந்த டேப்லெட் எல்லாம் கண்டிப்பா எடுக்கணும்….”

அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தார் அசோகன்….டாக்டரிடம் சரி எனக் கூறி விட்டு வெளியில் வந்தார்

நேராக அங்கே இருந்த கோவிலுக்குள் சென்று பிள்ளையாரை வணங்கி விட்டு….தனது மகளை காப்பாற்ற வேண்டும் என தனது கோரிக்கையை வலியுறுத்தி வந்தார்

கலை இடம் அனைத்தையும் கூறினார்அவரோ கதறி அழ….அசோகன்
நீ இப்ப மனச விடாதடி….நாம தான் மனச தேத்தனும்….நாம தான் அவளை நல்லா கவனிக்கவேண்டும்….அவளுக்கு ஒன்னும் ஆகாதுநான் விட மாட்டேன்….”

அதற்குள் சுமதி எழுந்து விட…..அவளுக்கு உணவை ஊட்டி விட்டுமாத்திரைகளை கொடுத்தார் கலை….

அப்பா….பாட்டியை பார்க்கணும் பா….”

நாளைக்கு போனதும் பார்க்கலாம் மாஅவங்க இங்க வந்தா மதுவும் கவினு தனியா இருப்பாங்க மா….அதான் சொன்னேன்….”

சரிப்பா…..அப்பா உங்க மடியில் தலை வைத்து படுத்துக்கவா…. பிளீஸ்….”

சுமதி கேட்டதும்அசோகன் கண்களில் கண்ணீர் வர…. ஓடிச் சென்று தனது மகளின் அருகில் அமர்ந்துஅவளை மடி சாய்த்துக் கொண்டார்

தனது தந்தையின் மடி சாய்ந்தவள் சற்று நேரத்தில் உறங்கி விடஅவள் பிறந்த பொழுது நடந்தவற்றை நினைவு கூர்ந்தார்அவர் கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது

எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே

நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே
உன் பூவிழி குறுநகை
எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல
அதில் ஆயிரம் கவிதையே

வானம் தாலாட்ட மேகம் நீராட்ட
வளரும் வெள்ளி நிலவே
வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக
வேண்டும் தங்க சிலையே
தாயின் மடி சேரும் கன்று போல
நாளும் வளர்வாய் என் மார்பிலே
சேய் உன் முகம் பார்க்க துன்பம் தீரும்
காலம் கனியாகும் தேவியே
சிறு கிளி போல் பேசும் பேச்சில்
எனை மறந்தேன் நானம்மா

எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே

நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே

மீண்டும் கடவுளிடம் கோரிக்கையை வைத்தார்

(கடவுள் கை விட மாட்டார் என நம்புவோமாக….)

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.