299 views
கலை அசோகனை முறைக்க. ..அவர் சட்டென எழுந்து அவரின் காலை பிடித்தார்…
பதறிய கலை…” என்னங்க பண்றீங்க…. முதல்ல எழுந்திறீங்க….”
அவரது பதட்டத்தை உணர்ந்த அசோகன்…. சிரித்துக்கொண்டே எழுந்து தனது மனைவியின் அருகில் அமர்ந்தார்…..
என்னங்க சட்டுன்னு வந்து என் காலை புடிக்கிறீங்க என பதட்டமாக கலை வினவ…
இது ஒன்னும் இல்லடி சும்மா தொட்டு பார்த்தேன் நமட்டு சிரிப்புடன் சிரித்தார்….
“உங்க அம்மா அப்படி சொல்லிட்டு இருக்காங்க…. நீங்க பாட்டுக்கு அமைதியா இருக்கீங்க…. இதுக்குதான் நான் இங்க வரமாட்ட…இருக்க மாட்டேன் சொன்னேன்….. நீங்க ஊருக்கு போகும் போது நானும் உங்க கூடவே வந்துவிடுகிறேன்….என கூட்டிட்டு போயிடுங்க….”
“கலை அம்மா அந்த காலத்து மனுஷி…. எப்பவுமே பொண்ணுங்க சுயமா எல்லா வேலையும் செய்யணும்னு எதிர்பார்க்கிறாங்க…..என்ன நான் ஒரே பையன் என்கிறதால என்மேல ரொம்ப பாசமா இருக்காங்க…. நான் வந்தா எனக்கு வீண் அலைச்சல் தான் என்ற எண்ணத்தில் சொல்கிறார்களே ஒழிய…. உன்னை அங்கு தனியாக கண்டிப்பா அனுப்ப மாட்டாங்க….. இங்கிருந்து டிரைவரை வச்சு உங்களை அனுப்பி விடுவார்கள்…. நீ கொஞ்சம் கூட புரிஞ்சு நடந்துக்கோ மா….”
“சரிங்க என்னதான் இருந்தாலும் அவங்க என் அத்தை….உங்க அம்மாவை நான் விட்டுக் கொடுக்க கூடாது என்னை மன்னிச்சிடுங்க” என கூறினாள்….
“சரி சரி உன் அத்தான் காலைல ஊருக்கு கிளம்பணும்…. கொஞ்சம் என்னையும் கவனி…. மத்ததை யோசிச்சுட்டே இருக்காதே….” என கண்ணடிக்க இனிய இல்லறம் நடந்தது….
மறுநாள் காலை அசோகன் ஊருக்கு கிளம்ப….. கலை அவருக்கு மதிய உணவு கட்டிக் கொடுத்தாள்….
அவர் கிளம்பியதும் குழந்தைகளுக்கு காலை உணவு பரிமாறிவிட்டு தனது அத்தையிடம் “அத்தை நான் இங்க பக்கத்துல இருக்க முருகன் கோவிலுக்கு போயிட்டு வந்திடறேன்” என கூறினாள்…
“சரி பார்த்து போயிட்டு வா” என அவரும் டிரைவரை அழைத்து கூட்டிச் செல்லுமாறு கூறினார்…..
கோவிலில் முருகனை தரிசித்து விட்டு…. பிரகாரத்தை சுற்றி வந்து அமரும் போது அங்கே சிவாவின் தாய் பரிமளாவை கண்டாள்….. அவர் அருகில் சென்று எப்படி இருக்கீங்க அண்ணி என நலம் விசாரித்தாள்….
பரிமளாவும் கலையை பார்த்து “கலை எப்படி இருக்க….சாரி அண்ணி எப்படி இருக்கீங்க….அண்ணா குழந்தைகள் எல்லாரும் எப்பிடி இருக்காங்க…. ” என கேட்டாள்…..
சற்று நேரம் இருவரும் பேசி விட்டு….வாங்க அண்ணி நான் காரில் தான் வந்து இருக்கேன் உங்கள வீட்டுல விட்டுட்டு நான் போறேன்…. என கலைக் கூற….பரிமலாவும் கலை உடனே கிளம்பி சென்றாள்…..
மாலை அசோகன் தான் பத்திரமாக வந்து விட்டதாக கலையிடம் தெரிவித்து விட்டு தனது தாயிடமும் கூறினார்….
அனைவரும் உணவருந்தி விட்டு உறங்கச் சென்றனர்….
இரண்டு நாட்கள் கழித்து தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த மது..கவின் சுமதி மூவரும் ஒருத்தரை ஒருத்தர் துரத்திக் கொண்டு விளையாட…. அங்கே இருந்த கல்லில் கால் இடறி சுமதி கீழே விழ…. அவளது தலை பக்கவாட்டில் இருந்த துணி துவைக்கும் கல்லில் பட்டு ரத்தம் வந்தது….
அதைக் கண்ட மற்ற இருவரும் அன்னம்மாள் மற்றும் கலையையும் அழைக்க…. இருவரும் பதறியடித்துக் கொண்டு வருவதற்குள் அங்க வேலை செய்து கொண்டிருந்த வேலைக்காரர்கள் சுமதியை தூக்கி காரில் அமர்த்தி கலையையும் அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் சென்றனர்…..
பாட்டி மது கவின் இருவரையும் அழைத்துக்கொண்டு பின்னே ஒரு காரில் சென்றார்….
ஹாஸ்பிடலில் சுமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்க….அன்னம்மா பாட்டி தனது மகனுக்கு போன் மூலம் தகவலை தெரிவித்தார்….
அசோகன் அவசர அவசரமாக ஃப்ளைட் பிடித்து வந்தார்…
அங்கே அவரைக் கண்ட கலை….அவரின் காலை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தார்….
டாக்டர் வெளியில் வந்ததும் அசோகன் அவரிடம் சுமதியின் நிலை குறித்து கேட்க….
“தலையில் அடி பட்டு இருப்பதால்….இன்னும் 24 மணி நேரம் கழித்து தான் எதும் சொல்ல முடியும் ….நாங்க எங்களால முடிஞ்ச அளவுக்கு டிரை பண்ணிட்டு தான் சார் இருக்கோம்…..”
” பிளீஸ் சார்….ஏதாவது பண்ணுங்க ….எங்க பொண்ணக் காப்பாத்துங்க….” ஒரு சேர தம்பதியர் அவரது காலில் விழுந்தனர்…
அவர் சட்டென நகர்ந்து விட்டு “என்ன காரியம் பண்றீங்க இரண்டு பேரும் முதலில் எழுந்திரிங்க“எனக் கூறினார்….
எங்களால முடிஞ்ச அளவுக்கு கண்டிப்பா நாங்க ட்ரை பண்ணுவோம் அதுக்கு மேல இந்த கடவுள் விட்ட வழி தான் கடவுளை நம்புங்கள் கண்டிப்பா கைவிடமாட்டார்…
அவர் நகர்ந்தவுடன் அசோகன் கலைவாணியிடம் எப்படி அடிபட்டது என கேட்க….உடனே அன்னம்மாள் பாட்டி இதோ இவ தான் அவளை தள்ளி விட்டாள் என மதுவை கை காட்டினார்…
மது ஸ்தம்பித்து நின்றாள்….