405 views

குழந்தைகள் மூவரும் குளித்துவிட்டு கீழே வர….. அசோகனும் ஆபீஸ் செல்ல கிளம்பி தயாராகி வந்தார்அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டுவிட்டு எழவும்….

அசோகன் ஆபீஸ் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்….

கலை குழந்தைகளிடம் நாளை கிளம்புவதற்கு தேவையான உடைமைகளை எடுத்து வைக்க சொல்ல….  மூவரும் தங்களுக்கு தேவையானவற்றை எடுத்து தங்களது பெட்டிகளில் அடுக்கத் தொடங்கினர்

சுமதி இயல்பிலேயே கர்வம் கொண்டவள்….தனது பெற்றோர் தன்னை விட அடுத்து பிறந்தவள் மீது அதிக அன்பு வைத்துள்ளதை அவளால் பொறுக்க முடியாமல் அடிக்கடி ஏதாவது பிரச்சனை செய்வாள்…..

ஆனால் மது எதையும் சமாளித்து விடுவாள்….கவின் இருவரையும் சமமாய் நேசிப்பவன்…..

பாட்டி அன்னம்மாள் ( அசோகனின் அம்மா) சுமதியை கண்டாள் அவ்வளவு சந்தோஷ படுவார்……ஆனால் ஏனோ மது மீது அவ்வளவு அன்பில்லை…..காரணம் மது இயற்கையிலேயே பேரழகி…..சிறு வயதிலேயே அவளது அழகை கண்டு பொறாமை கொண்ட சுமதி…..அவளின் அழகை குலைக்க காத்திருக்கிறாள்….

( குழந்தைகளுக்கு சூது வாது தெரியாது…..பெரியவர்கள் அவர்களுடன் அன்போடு பழகினால் அவர்களும் அன்பு காட்டுவார்கள்….ஆனால் விரோதமாக நினைத்தால் மனதளவில் அப்படி தான் நினைப்பர்….)

சுமதியின் எண்ணம் புரிந்த அன்னம்மா பாட்டி அவளின் மனதில் வன்மத்தை தூண்டினார்….

(அழகு என்றால் அவர்களைப் பொறுத்தவரையில் நிறமே…..அசோகன் நல்ல நிறம் ஆனால் கலையோ நிறம் சற்று குறைவு…..அதாங்க கருப்பு……எங்க பாட்டி கருப்பு நிரம்னு சொல்லவே மாட்டாங்க….யானை கலரு அப்பிடின்னு தான் சொல்லுவாங்க)

சுமதி தாயை போல நிறம்…..மற்றவர்கள் இருவரும் தங்களது தந்தை நிறம்….

ஆனால் மதுவோ சுமதி மேல் மிகவும் அன்பாய் இருந்தாள்….

மூவரும் தத்தமது உடைமைகளை எடுத்து வைத்து விட்டு….கீழே வந்தனர்மதிய உணவு முடித்துவிட்டு….சிறிது நேரம் டிவி பார்த்தனர்….

மாலை தங்களது தந்தை வந்ததும்….மறுநாள் தேவையான திண்பண்டங்களை வாங்க சென்றனர்….

அனைத்தும் வாங்கிவிட்டு….இரவு உணவை வெளியில் முடித்து விட்டு…..வீட்டிற்கு வந்தவர்கள் உறங்க சென்றனர்….

அறைக்குள் நுழைந்த கலை ஒருமாதிரி சோகமாக இருக்க….

அசோகன்என்ன மா ஏன் இப்படி இருக்க….உன் அத்தானை விட்டு ஒரு வாரம் எப்படி இருக்கிறது அப்பிடின்னு யோசனையாக இருக்கியா….” என கண்ணடித்து வினவ….

ஏன் அத்தான் நீங்க வேற….இந்த சுமதி இருக்காள்ள….மதுகிட்ட எப்ப பாத்தாலும் வம்பு இழுத்துக்கிடே இருக்கா….அவளை எப்படி சரி பன்றதுண்ணே புரியல….அதான் யோசிக்கிறேன்….”

விடுமா….அவளும் சின்ன பொண்ணுதான….கொஞ்சம் பெறியவலாயிட்ட புரிஞ்சு நடந்துப்பா….இதுக்கு போய் இவ்வளவு வருத்தப்படரே…..சரி காலைல கிளம்ப தேவையான உடைமைகளை எடுத்து வைசுட்டியா….”

ஹ்ம்ம் எல்லாம் ரெடிங்க….காலைல சாப்பாடு மட்டும் ரெடி பண்ணனும்….அவ்வளவுதான்….”

நீ எதுவும் ரெடி பண்ண வேண்டாம்…. நம்ம போற வழியில ஹோட்டலில் சாப்பிடுக்கலாம்…. “

இல்லைங்க திடீர்னு புள்ளைங்க பசிக்குதுன்னு கேட்டாங்கன்னா அப்புறம் என்ன பண்ண முடியும்….”

சரி அப்போ ஒன்னு பண்ணு புளியோதரை மட்டும் ரெடி பண்ணு…..சிப்ஸ் இருக்கு அதை தொட்டுக்கலாம்….புள்ளைங்க கேட்கும்போது புளியோதரை கொடுத்திடலாம்….மதியம் லஞ்ச் வெளியில சாப்பிடலாம்….”

சரிங்க….” எனக் கூறி அலாரம் செட் செய்து விட்டு வந்து கணவனின் மார்பில் தலை சாய்க்க….அவரும் தனது மணையாளை அணைத்தபடி உறங்கினார்….

கதிரவன் தனது கூட்டை விட்டு வெளியில் வந்து பிரகாசிக்கத் தொடங்கினார்

கலைவாணி பூஜை அறையில் விளக்கு ஏற்றி தெய்வத்திடம் வழிபட்டுக் கொண்டிருந்த போது….

குழந்தைகள் மூவரும் தத்தமது உடமைகளை எடுத்துக் கொண்டு கீழே வந்தனர்….

அனைவரும் சென்று குடும்பமாக பூஜையறையில் வழிபட்டுவிட்டு காரில் சென்று அமர்ந்தனர்….

அனைவரும் சந்தோஷமாக இருக்க சுமதி மட்டும் உம்மென அமர்ந்திருந்தாள்

நடுவில் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து விட்டு….கிளம்பினார்கள்உண்ட களைப்பில் குழந்தைகள் மூவரும் உறங்கினார்கள்…. கலை தனது கணவருடன் பேசிக் கொண்டே வந்தார்….

இந்த பிரயாணம் தங்களது வாழ்க்கையை மாற்றும் விதமாக அமைய போவது தெரியாமல் சந்தோஷமாக கிளம்பினார்கள்….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment