352 views
மாலை பாட்டி வீட்டிற்குள் நுழைந்தவுடன்…. அன்னம்மாள் பாட்டி அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றார்…
பின் அனைவரும் களைப்புத் தீர குளித்துவிட்டு வந்தனர்…. அவர்கள் வீட்டின் வேலையாள் வந்து பெரியவர்களுக்கு சூடாக டீ கொண்டுவந்து கொடுத்துவிட்டு…. குழந்தைகளுக்கு பாதாம் பால் கலந்து கொண்டு வந்து கொடுத்தார்…..
சுமதி தனது பாட்டியின் அருகிலேயே அமர்ந்து இருந்தாள்….. மதுவும் கவினும் வெளியே தோட்டத்தில் விளையாட….. அப்பொழுது இவர்களின் அருகில் ஒரு சிறுவன் வந்தான்…
“ஹாய் மது… ஹாய் கவின்…. எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும் “என கேட்டான்
அவனை யாரென்று தெரியாததால் யார் நீங்க என இருவரும் கேட்டனர்…
அவனும் சிரித்துக் கொண்டே “என்னப்பா என்ன மறந்துட்டீங்களா“
“எனக்கு நிஜமா நியாபகம் இல்லை‘ என மது கூற…
” முதல்ல நீ யார் உங்களுக்கு என்ன வேண்டும்….”என கவின் கேட்க
அந்த சிறுவன் ” நீ கூட என்ன மறந்துட்டியா கவின்….”
அவன் ஏதேதோ ஆக்சன் செய்ய.( மூன்றாம் பிறை கமல் போல)….அதைக் கண்ட கவின் சிவா அண்ணா என கூறினான்
அதற்கு பிறகு தான் மது அவனை பார்த்தாள் அவளுக்கும் அப்பொழுதுதான் அவனை அடையாளம் தெரிந்தது…
சிவா அசோகனின் தங்கை மகன்….( அன்னம்மா பாட்டியின் தங்கை மகளின் மகன்)
கவின் சிவாவை அணைத்து கொண்டு ” சாரி அண்ணா….எனக்கு உங்களை அடையாளம் தெரியல…..மீசை எல்லாம் வச்சிருக்கீங்க அதான்….”
” டேய் நான் என்ன ஸ்கூல் பையனா….இப்ப காலேஜ் போரண்டா….அது சரி உன்னை நான் அண்ணா சொல்லாதன்னு எத்தனைவாட்டி சொல்லிட்டேன்….மரியாதையா மாமா இல்லை அத்தான் அப்பிடின்னு கூப்பிடு….”
” அத்தான் பொத்தான்…உவ்வே நல்லாவே இல்ல….” என கவின் முகம் சுளிக்க ..
” டேய் நான் என்ன சாப்பிடற பொருளா குடுத்தேன்….கூப்பிட பெயர் தான டா சொன்னேன்…அதுக்கு ஏன் கோவைல இருந்து சென்னை போகுது மூஞ்சி…..”
” சரி சரி விடுங்க….நான் இனிமே மாமான்னே கூப்பிடுறேன்….” என கவின் கூற….
இதுவரையில் எதுவுமே பேசாமல் இவர்களின் வாக்குவாதத்தில் மூக்கை நுழைக்க மனமில்லாமல் அமைதியாக இருந்த மது….
” எப்பிடி இருக்கீங்க மாமா…” என கேட்டாள்….
” நான் நல்லா இருக்கேன் மது…. ஆமா உன் அக்கா எங்கடா கவின்…”
” யாரு சுமதி அக்காவா…பாட்டி கூட இருக்கா“
” சரி டா நான் போய் மாமா அத்தையை பார்த்திட்டு வரேன்….” என கூறி வீட்டினுள் சென்றான்….
உள்ளே சென்றவன் அனைவரிடமும் பேசிக் கொண்டே தன் மாமன் மகளை துழாவ….அவளோ தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்தாள்….
சற்று நேரம் பேசிவிட்டு தனது வீட்டிற்கு சென்றான்….
இங்கே மதுவும் கவிணும் ஒரு அறையை எடுத்துக் கொள்ள….சுமதி வழக்கம்போல் பாட்டியின் அறையிலேயே தங்கினாள்….
இரவு உணவு முடித்து….அசோகன் தனது அன்னையிடம்…. ” அம்மா …. பசங்களுக்கு இரண்டு மாசம் லீவு…..இங்கேதான் இருக்கணும்னு ஒரே முரண்டு…உங்களால தனியா சமாளிக்க முடியுமா…?”
” இதுல என்னடா இருக்கு….நான் பார்த்துக்கொள்கிறேன்…..எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லடா…..”
” கவின் கலை இங்கே இருக்கணும்னு அடம் பண்றான்….அதனால் கலை ஒரு பத்து நாள் இங்கே இருப்பா….நான் பத்து நாள் கழித்து வந்து அவளை கூப்பிட்டு கொள்கிறேன் …. அநேகமா கவின் என்கூட வந்துடுவான் என்று நினைக்கிறேன்…..”
” ஏன் மகாராணி பஸ்ல வரமாட்டங்களோ….நீ தான் வந்து கார்ல கூட்டிட்டு போகணுமா….? வீண் அலைச்சல் தான….”
அவர் கூறிக்கொண்டு இருக்கும் போதே…. கலை தனது கணவனை முறைக்க…..அவர் மனதில் ஐயோ….இவ இப்படி முறைக்கிராளே….இன்னிக்கு நான் அவ்ளோதான் என நினைத்தார்….
” சரி சரி நேரமாச்சு போய் படுங்க….காலைல பேசிக்கலாம் ” என கூறிவிட்டு அன்னம்மாள் படுக்க சென்றார்….
ரூமிற்குள் நுழைந்த அசோகன் தனது மனையாள் தனக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டு இருந்தாள்….
கதவை தாளிட்டு வந்தவன்…மெதுவாய் அவளின் அருகில் நெருங்கிப் படுக்க…. கலை எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…அவர் கலையின் மேல் கை போட அவள் தட்டி விட்டாள்…
அசோகன் மனதினுள்…புயலுக்கு பின் அமைதி என்று சொல்வாங்க….ஆனா இங்கே அமைதிக்கு பின் சுனாமி வரும் போல இருக்கே….ஆண்டவா என்னை காப்பாத்து…..என கடவுளை வேண்ட….அவரும் அவரது வேண்டுதலை நிறைவேற்றினார்….அதாங்க சுனாமி ரெடி ஆயிடுச்சு….. கலை அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள்….