823 views

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்கந்தர் சஷ்டி கவசம் தனை.
அமரரிடர் தீர வமரம் புரிந்தகுமரனடி நெஞ்சே குறி

சஷ்டியை நோக்கச் சரவணபவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணியாட
மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென்று
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

கலைவாணி பூஜை அறையில் முருகனை மனதார வேண்டிக்கொண்டு தனது அன்றாட பணியை துவங்கினார்…

ஜாகிங் சென்றுவிட்டு அசோகன் உள்ளே வர அவருக்கு காபியை கொண்டுவந்து கலைவாணி கொடுத்தார்….

“குட்டிமா எழுந்துட்டாளா கலை”

“இன்னும் இல்லைங்க இப்பதான மணி ஆறு ஆகுது இனிமே தான் வருவா”

அவர் கூறி கொண்டிருக்கையிலேயே…. மயிலாய் தாவி வந்து தனது தந்தையை அணைத்துக்கொண்டு. குட் மார்னிங் பா என கூறி புன்னகைத்தாள் நமது கதையின் நாயகி மதுமிதா……

“குட் மார்னிங் டா குட்டிமா”

“குட் மார்னிங் கலை” எனக் கூறி தனது அன்னையை அணைத்துக் கொண்டாள்…

அவளுக்கு சிரிப்பை பதிலாகத் தந்துவிட்டு அவளது கையில் காபியைக் கொடுத்தாள் கலைவாணி….

சற்று நேரத்தில் சுமதியும் கவினும் கீழே இறங்கி வர….அவர்களும் காபியை வாங்கிக் கொண்டு தனது தந்தையின் அருகில் வந்து அமர்ந்தனர்….

“என்ன குட்டிமா லீவு ஆரம்பிச்சிருச்சு என்ன பண்ணலாம் இருக்கீங்க மூணு பேரும்” என கேட்டார்….

(சுமதி எட்டாம் வகுப்பிலும் மது ஆறாம் வகுப்பிலும் கவின் மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தனர்)

சுமதி தனது தந்தையிடம் “அப்பா இந்த தடவை நாங்க மூணு பேரும் பாட்டி வீட்டுக்குப் போறோம்….ரெண்டு மாசம் லீவு அங்கதான் என்ஜாய் பண்ண போறோம்….”

“ரெண்டு மாசம் எல்லாம் அங்க போய் இருக்க கூடாது டா தங்கம்….. அப்பாவால உங்க மூணு பேரையும் விட்டு இருக்கவே முடியாது…. வேணும்னா ஒரு பத்து நாள் போயிட்டு வாங்க…. எனக் கூற

“சுமதி அப்பா அப்பா ப்ளீஸ் பா வேணும்னா ஒரு மாசம் மற்றும் இருந்துட்டு வரேன்” என கெஞ்சினாள்…

“சரி மா நாளைக்கு கிளம்புங்க…. நான் உங்க மூணு பேரையும் கொண்டு போய் விட்டுட்டு…. நானும் அம்மாவும் வந்து விடுவோம்”

கவின் ” இல்லப்பா அம்மாவும் அங்க எங்க கூட தான் இருக்கணும்” என அழுதான்…

அசோகன் தனது மனையாளை பார்வையாலேயே என்ன என்று கேட்க கலைவாணி அப்புறம் பேசலாம் என கண்களாலேயே பதில் கூறினாள்…

என்னதான் மூன்று குழந்தைகளுக்கு தாய் ஆகிலும் அசோகன் கண்ணிற்கு கலைவாணி இன்னும் பதுமையே….. அவளது அழகு கூடியதே தவிர குறையவேயில்லை…. கல்யாணத்தின் போது எப்படி இருந்தாரோ அப்படியே இருக்க அசோகன் அவரின் அடிமையாகினார் அவரது அன்பின் அடிமை ஆகினார்…

குழந்தைகள் மூவரும் குளிக்க சென்று விட அசோகன் கலைவாணியை தங்கள் அறைக்கு வருமாறு கூறிவிட்டு சென்றார்…

கலைவாணி உள்ளே நுழைந்ததும்…..அவர் கலைவாணியை பின்னிருந்து அணைக்க…. “என்னங்க இது…. வீட்டில பிள்ளைங்க இருக்காங்க இன்னும் சின்னப் பிள்ளை நினைப்பா…” என செல்லமாக அவரை கடிக்க…

“எத்தனை வருஷம் ஆனாலும் நீ எனக்கு எப்பவுமே ஸ்பெஷல்தான் டி… பசங்க வந்துட்டாங்கருத்துக்காக உன்கிட்ட நடந்துக்கிற விதத்தை என்னால மாத்திக்க முடியாது….. நம்ம ரூம் குள்ள தானே வச்சு உன்னை கட்டி பிடிக்கிறேன் அதுக்கு போய் சிணுங்குற ராட்சசி” என செல்லமாக அவரைக் கடிந்தார்…

“கலைவாணி திரும்பி நின்று அவரை அணைத்துக் கொண்டு….என் மேலே இவ்வளவு அன்பு வச்சிருக்கீங்க…..ஒருவேளை உங்களுக்கு முன்னாடி நான் போயிட்டா என்னங்க பண்ணுவீங்க….?” என கேட்க சட்டென்று அவரது இதழை தன் இதழ் கொண்டு அணைத்தார் அசோகன்….

“இன்னொரு தடவை நீ இந்த மாதிரி பேசினா உனக்கு இதுதான் பனிஷ்மென்ட் ஞாபகம் வச்சுக்கோ”எனக் கூறினார்…

கலைவாணியும் சிரித்துக்கொண்டு “சரி எதுக்காக என்ன கூப்பிட்டீங்க”

“இல்லடி பசங்க மூனு பேரும் அங்க போனா அம்மா தனியா பார்த்துக்க முடியாது என்று நினைக்கிறேன்…. நீ வேணும்னா ஒரு பத்து நாள் அவங்க கூட இருந்துட்டு வாயேன்”

“எனக்கு உங்க அம்மா வீட்டுல போய் இருக்க கண்டிப்பாக முடியாது…. அவங்க ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க….வேணும்னா ஒரு ரெண்டு மூணு நாள் இருக்கேன்….அதுக்கு மேல என்னால இருக்க முடியாது….. நீங்கள் உங்கள் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க….நான் வந்தர்றேன்” எனக் கூறினார்…..

“சரிடி ஓகே அப்ப நீ ஒன்னு பண்ணு…. வரும்போது கவினையும் மதுவையும் கூட்டிட்டு வந்திடு…. சுமதி தான அங்கே இருக்கணும்னு ஆசை ஆசைப்படுகிறாள்…”

“சரிங்க அப்போ ஒரு வாரத்துல நானும் கவினும் மதுவும் வந்தடறோம் …. நீங்க வரிங்களா இல்ல கார் அனுப்புறிங்களா…”. என கேட்க

“உன்னை விட்டு ஒரு வாரம் இருக்கிறது ரொம்ப கொடுமை டி…. நானே வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கொள்கிறேன்….”
என அவரை அணைத்தபடி கூற….

கலைவாணி சிரித்துக்கொண்டே சரி என சொன்னார்…

இந்த பயணம் அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக மாறப் போவதை அறியாமல்…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்