‘பொங்கல்’ ன்னாலே நம்ம மனசுக்குள்ள ஒரு தித்திப்பு உதயமாகிடும். அதே தித்திப்பு பெயர்களை கொண்டவர்கள், தித்திப்பாக நம் கதைக்கு விமர்சனம் அளித்தால்…? தித்திப்போ தித்திப்பு தான்… அந்த தித்திப்பை வாசகராகிய நீங்கள் வழங்கி, மென்மேலும் தித்திக்கும் பல புத்தகங்களை பரிசாக பெறுங்கள்.
போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்புங்கள். ரெஜிஸ்டர் செய்ய இறுதி நாள்: 20/01/2022. வாசகருக்கான போட்டி தொடங்கப்படும் நாள் பிப்ரவரி 12 முதல் மார்ச் 12 வரை.
படிவம் நிரப்பப்பட்டதும், உங்கள் எண்ணிற்கு அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அட்மின் தொடர்பு கொண்டு, சில பொங்கல் பெயர்களை கூறுவார். அதில் உங்களுக்கு பிடித்த பொங்கல் பெயரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கே பிடித்த பொங்கல் பெயர் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும்.
அந்த பொங்கல் பெயரின் முகநூல் ஐடி உருவாக்கப்படும். அதன் மூலம் போட்டி தொடங்கியதும் உங்களின் விமர்சனங்களை அளிக்கத் தொடங்கலாம்.
முதல் பரிசு: வெவ்வேறு எழுத்தாளர்களின் ஐந்து புத்தகங்கள்.
இரண்டாம் பரிசு: வெவ்வேறு எழுத்தாளர்களின் நான்கு புத்தகங்கள்
மூன்றாம் பரிசு: வெவ்வேறு எழுத்தாளர்களின் இரண்டு புத்தகங்கள்.
பொங்கல் பெயரை உபயோகித்து விமர்சனம் மட்டுமல்லாது, மீம்ஸ்களும் பதிவு செய்யலாம். சிறந்த மீம்ஸ்களை பதிவிடுபவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.
விதிமுறைகள்:
1. போட்டிக்கு கொடுக்கப்படும் பொங்கல் பெயரை, மற்ற தளங்களில் உபயோகப்படுத்தல் கூடாது.
2. விமர்சனங்கள் ஆரோக்கியமானதாக, கதையை மட்டுமே விமர்சிப்பதாக இருத்தல் அவசியம். எழுத்தாளரை எவ்விதத்திலும் காயப்படுத்தும் நோக்கில் இருத்தல் கூடாது.
3. போட்டி முடிந்தவுடன், பொங்கல் பெயரில் உள்ள முகப்புத்தக ஐடி deactivate செய்யப்படும்.
4. கதையில் உள்ள முக்கிய முடிச்சுகளை வெளிப்படுத்தா வண்ணம் விமர்சனங்கள் அமைவது நலம்.
போட்டியில் கலந்து கொள்ள கீழுள்ள திரியை கிளிக் செய்யவும்: