Loading

ஹலோ உறவுப்பூக்களே! இதோ அடுத்த வாரத்திற்கான (25/11/2021 முதல் 29/11/2021) வாசகர் போட்டியின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்க் எரேசர் (ink eraser) இது தான் உங்களுக்கான தலைப்பு வாசகர்களே. தூரிகை பட்டாசு போட்டிக்கு இதுவரை வந்திருக்கும் அனைத்து அத்தியாயங்களையும் படித்து, மொத்த கதையையும் விமர்சனம் செய்ய வேண்டும்.

1. ஒவ்வொரு அத்தியாயங்களுக்கும் விமர்சனம் அளிக்கலாம் அல்லது மொத்த அத்தியாயங்களுக்கும் சேர்த்து ஒரே விமர்சனமாக அளிக்கலாம்.

2. விமர்சனத்தில் குறைந்தது ஆறு வரிகள் அல்லது பாயிண்ட்ஸ் இருத்தல் வேண்டும்.

3. அதில் மூன்று நேர்மறை கருத்துகளும், மூன்று எதிர்மறை கருத்துகளும் இருக்க வேண்டும். (குறிப்பு: எதிர்மறை கருத்துகளில் எழுத்தாளரை உத்வேகப்படுத்துவது போன்ற வாசகங்கள் உபயோகிக்க வேண்டும்)

4. உங்களின் விமர்சனத்தை தளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அந்த கருத்துக்கான கதையின் திரியை எடுத்து முகப் புத்தகத்தில் பகிரலாம். மற்றபடி, தளத்தில் கொடுக்கப்பட்ட விமர்சனம் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

5. ஒருவர் குறைந்தபட்சம் ஒரு விமர்சனம் கொடுத்தல் வேண்டும். அதிகபட்சம் எத்தனை விமர்சனம் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

6. போட்டிக்கு இதுவரை 20 க்கும் மேற்பட்ட கதைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் குறைந்த பட்சம் 15 கதைகளுக்கு விமர்சனம் அளித்தல் வேண்டும். அவ்விமர்சனம் எழுத்தாளரை மகிழ்விப்பதோடு, கதைகளில் ஏற்படும் தவறுகளை களைந்து எழுத்தை மெருகேற்றும் விதமாக அமைய வேண்டும். அப்படி பட்ட விமர்சனங்கள் தான் வெற்றி பெற்ற படைப்பாக தேர்வு செய்யப்படுவதோடு, அந்த வெற்றியாளர் இந்த வாரத்தின் “இன்க் எரேசர் ” வாசகராக அறிவிக்கப்படுவார்.

விமர்சனங்களின் வரவை பொறுத்து ஒன்றிற்கும் மேற்பட்டவர்கள் கூட வெற்றியாளர்கள் ஆகலாம். அவர்களுக்கும் ஆச்சரியப்படுத்தும் பல பரிசுகள் காத்திருக்கின்றன…🥰

அப்போ நாங்க என்ன பண்றது? 😳 என்று கேட்கும் மீம்ஸ் கிரியேட்டர்களே… உங்களுக்கும் பரிசு இருக்கிறது. உங்களுக்கான டாஸ்க் என்னவென்றால், வாசகர்கள் அளிக்கும் நேர்மறை விமர்சனங்களை அந்த கதையுடன் ஒப்பிட்டு சிரிக்க வைக்கும் மீம்ஸ்களை உருவாக்க வேண்டும். 🤩

போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை அள்ளுங்கள் 🎁🎁🎁

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
13
+1
0
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்