Loading

வணக்கம் உறவுப்பூக்களே! ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர் வாசகர் போட்டி தனி தனியே நடைபெற்று அதன் மூலம் பல சுவாரஸ்யங்களையும் கொடுத்தது.

அதனை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும் பொருட்டு இந்த கிறிஸ்துமஸ் வாரத்தை இரட்டிப்பு மகிழ்ச்சியாக்க, வாசகர், எழுத்தாளர் இருவருக்குமே போட்டி நடைபெறவுள்ளது. 💃

எழுத்தாளர்களுக்கான இந்த வாரப் போட்டி:

ஃபாஸ்ட்ராக்.

என்னடா வாட்ச் பிராண்ட் பேர் எல்லாம் சொல்றாங்களே என்னவா இருக்கும்ன்னு யோசிக்கிறீங்களா எழுத்தாளர் மலர்களே…

இந்த வாரம் முழுக்க வியாழன் முதல் திங்கள் வரை ( 23 – 12 – 2021 முதல் 27 – 12 – 2021 வரை) ஐந்து நாட்களும் தொடர்ந்து அத்தியாயம் பதிய வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு அத்தியாயம் வீதம் ஐந்து அத்தியாயங்கள் பதிய வேண்டும். ஒரு அத்தியாத்திற்கு குறைந்தது 1500 வார்த்தைகள் இருத்தல் வேண்டும்.

இவற்றை நிறைவு செய்பவரே இந்த வாரத்தின் “ஃபாஸ்ட்ராக்” எழுத்தாளராக அறிவிக்கப்படுவார். 🤩🤩🤩🤩🤩 மனதை கவரும் பரிசும் காத்திருக்கிறது.

வாசகர் போட்டி:

இந்த வாரத்திற்கான வாசகர் போட்டியின் தலைப்பு :
ஜிங்கில் பெல்ஸ் (jingle bells)🌟

இது கிறிஸ்துமஸ் வாரம் ஆதலால், வாசகர்களே, எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கப்போகிறீர்கள்.

“நம்ம என்ன பரிசு குடுக்கிறது? 🤔” அப்டின்னு யோசிக்கிறீங்களா தோழமைகளே…

நீங்க மட்டும் தான் இந்த பரிசை குடுக்க முடியும்.

ஒரு எழுத்தாளரை ஊக்கப்படுத்தி மேலும் மேலும் எழுத வைக்கும் வித்தை வாசகரின் விமர்சனம் மற்றும் ஆதரவில் மட்டுமே இருக்கிறது.

ஆகவே, கருத்துக்கள் மூலமாகவோ, மீம்ஸ் மூலமாகவோ, எப்போ கதை வரும் என்பதை நகைச்சுவையுடன் அந்த எழுத்தாளரை குறிப்பிட்டு கேட்பது மூலமாகவோ ஏதோ ஒரு வகையில் அனைத்து எழுத்தாளர்களையும் கவர அல்லது ஊக்கப்படுத்த வேண்டும்.

அதன் மூலம், இதுவரை டீஸர் மட்டுமே பதிவிட்ட எழுத்தாளர்களை ஒரு அத்தியாயம் பதிய வைக்கும் படி ஜாலியாகவும், அதே நேரம் அவர்களை எழுத வைக்கும் படியும் அமைய வேண்டும்.

இதில் சிறந்த முறையில் பங்களிப்பை அளிக்கும் வாசகருக்கு பரிசு வழங்கப்படும். மேலும் அவர் இந்த வாரத்தின் “Best Supportive Reader” என்ற பெயர் சூட்டப்பட்டு, தூரிகை தளம் சார்பில் e- certificate பெறப்படுவார் என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம்.

என்ஜாய் திஸ் வீக்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்