கண்ணாடி முன் நின்று தன் பின்பத்தை நோக்குகிறாள் அவள். சில நாட்களாகவே அவள் கயல் விழிகளும் அவள் மனதை போல தூக்கம் கொள்ளவில்லை போலும் விழியை சுற்றி கருவளையம் பாகுபாடின்றி அவளை பற்றி கொண்டது. கருப்பு நிற குர்த்தியும் தங்க நிற துப்பட்டாவும் அவளை குறை இல்லாமல் ஜெலிக்க தான் வைத்தது. அது அவளுடையவனுக்கு பிடித்த நிறமானாதால் கூட இருக்கும் என பல முறை நினைத்து விட்டால்.
தனது உருவத்தை பார்க்க…பார்க்க விழி கலங்குவதை தடுக்க அவளால் இயலவில்லை. என்ன செய்வாள் பேதை அவள்.
” சீக்கிரம் வாடி…அவ வந்துட்டா பாரு ” என அவள் தாய் அழைக்கும் சத்தம் கீழ் தளத்தில் இருந்து கேட்க, மேல் தள அறையில் இருந்தவளோ … கட்டாயமாக வரவழைத்த புன்னகையோடு படிகளில் இறங்கி வருகிறாள்.
கீழே அவள் தோழி முறைத்து கொண்டு இருக்கிறாள். விட்டால் அவள் தன் பார்வை கனல் கொண்டு எரித்தாலும் எரித்து விடுவாள் அவளை. காரணம் இருவரும் அறிந்ததே !.
” சீக்கிரம் கல்யாணத்துக்கு இரண்டு பேரும் போய்ட்டு …பத்திரமா வந்துரனும்” என் அவள் தாய் கூற, அவளும் அவள் தோழியும் மேலும் கீழுமாய் தலையை ஆட்டி வைத்தனர்.
தனது தோழி கையை அவள் பிடிக்க , தட்டி விட்டு அவள் விருவிருவென வெளியே செல்கிறாள். அவள் முகம் புன்னகை கொண்டாலும் தன் தோழி செயலை நினைத்து வருந்தவே செய்தது அவள் மனம். அனைத்துக்கும் பார்வையாளர்களாய் இருந்தனர் அவளது தாய் மற்றும் தந்தையும்.
வெளியே செல்ல போன அவளோ மீண்டும் காரணமின்றி மீண்டும் வீட்டினுள் வந்து தனது தாயை அனைத்து கொள்கிறாள். அவர் புரியாமல் பார்க்க…அவள் அவரை விடுத்து அவள் தந்தையும் அனைத்து கொள்கிறாள். பிறகு இருவர் காலையும் தொட்டு விட்டு , வெளியே செல்கிறாள். மகளின் செயல் புரியாத பெற்றவர்கள்… ஏனோ மனது தடுமாறியது இருவருக்கும். ஆனால் , வெளியே காட்டிக் கொள்ள வில்லை இருவரும். முதலில் இந்த திருமணத்திற்கு அனைவரும் செல்லும் யோசனை தான்…ஆனால் அவள் தான் தன் பெற்றோர்கள் காலில் விழுந்து நீங்கள் வர வேண்டாம் என கூறிவிட்டாள். ஒற்றை மகளின் பேச்சை கேட்டு வளர்ந்தவர்களோ , ஒப்பு கொண்டனர் அவள் கூற்றுக்கு.
அவளும் அவள் தோழியும் இறங்கிய இடம் அரண்மனை போன்ற …இல்லை இல்லை அரண்மனையே தான் . திருமணம் நடக்க இருந்த மண்டபம்.
வெளிநாட்டில் இருந்த கல்யாண மாப்பிள்ளை பெற்றோர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தான் வந்திருந்தார்கள். தேடி தேடி மகனுக்காக இவ்வளவு பெரிய அரண்மனையை கண்டுபிடித்தார்கள் தங்களின் மகனின் காதல் திருமணத்திற்காக!.
” இப்போ கூட ஒன்னும் பிரச்சினை இல்லை…வா வந்த வழியாவே திரும்பி போய்டலாம்” என் அவள் இறுதியாய் ஒரு முறை கூறி பார்க்க, எங்கே அவள் செவி அதை எல்லாம் கேட்டது ?. அரண்மனை வாயிலில் இருந்த மணமக்கள் திருநாமத்தை தான் பார்த்தது விழி எடுக்காமல்.
” ஹேய்…இது தான் வர நேராமா டா ! ” என மணமகன் தாய் கூறியவாறே அவள் கையை பிடித்து கொண்டு உள்ளே அழைத்து செல்கிறார்.
அவர் மகன் மற்றும் அவள் நட்பு தெரிந்தது தானே அவர்களுக்கு !. அதனால் தான் இந்த செல்ல கோபம் என புரிந்த அவளோ… அவர் இழுப்புக்கு நடக்கிறாள் அவள்.
எதுவும் செய்ய முடியாமல் அவள் தோழியும் அவள் பின்னே செல்கிறாள்.
இருவரையும் இருக்கையில் அமர வைத்தவர்… எவரோ அழைக்க அங்கு சென்று விடுகிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக அவள் முகம் புன்னகை மறைய இருளை கடன் வாங்கி கொள்கிறது.
அனைவரும் அவர்கள் முன்னிலையில் இருக்கும் மணமக்களை பார்க்கின்றனர். ஆனால் அவள் மட்டும் அந்த மணமகன் முகத்தில் தெரியும் சிரிப்பினை மனதினுள் சேகரிக்கிறாள்.
நேரமாகமாக அவளுக்கு எதுவும் இல்லை. அவள் தோழி தான் அவளை விட துடிக்கிறாள் …தன் தோழி மனம் அறிந்து.
அவன் புன்னகையையும் அவனளவனை மேடையில் இருக்கிறோம் என்பதை கூட மறந்து செல்லமாக கொஞ்சி …நன்றாக கவனித்து கொள்ளும் அனைத்து காட்சிகளும் படமாய் மனதினுள் பதிகிறது அவளுக்கு. அவளது மனது அதை எல்லாம் பார்க்க முடியாமல் கல் பட்ட கண்ணாடியாய் உடைய, அவள் முகமோ அதற்கு மாறாய் மறையாத புன்னகையுடன் இருந்தது.
வாத்தியங்கள் திடீரென முழங்க புரிந்து கொள்கிறார்கள் இருவரும். தன் தோழியின் கையை இறுக்கமாக பிடித்து கொள்கிறாள் அவள். அந்த இறுக்கம் கூறும் பல கதைகளை.
அவனோ முகம் கொள்ளா சிரிப்புடன் தன்னவள் கழுத்தில் திரு மாங்கல்யத்தை அணிவிக்கிறான் . அவனவளும் அதை ஏற்று கொள்கிறாள். ஆனால்
மேடையை விட்டு கீழே இருக்கும் அவளுக்கு தான் அதை ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.
எவ்வளவு முயன்றும் அது தோற்று அவள் விழிகளில் இருந்து நீர் வடிகிறது. மூச்சு முட்ட இருமல் கொள்கிறாள் அவள். தனது கைகுட்டையை எடுத்து இருமலை சரி செய்கிறாள். வெண்மையாய் இருந்த கைக்குட்டை சிவப்பு கொள்ள ஆரம்பிக்கிறது அவள் இருமலுக்கு பின். புரிகிறது அவளுக்கு, இனி இங்கே இருப்பது சரி வராது என்று.
பலர் பரிசு கொடுக்க மேடை ஏறுகின்றனர். இவளோ தன் தோழி கையை பிடித்து கொண்டு வெளியே செல்கிறாள். இதற்காக தான் காத்திருந்தேன் என்பது போல …அவள் தோழியும் பின்னே செல்கிறாள்.
தீடிரென அவள் பெயர் கேட்க… பின்னாடி திரும்பி பார்க்கிறாள் அவள். அவன் தான் மணமகன் தான் முகம் கொள்ள புன்னகையுடன் தன் தோழியை அழைக்கிறான் மேடை வருமாறு. அவள் தோழி மறுப்பாய் அவள் கையை பிடித்து கொள்ள… பிடித்த கையை உதறி அவனை நோக்கி செல்கிறாள்.
” ஃபிரண்ட் கல்யாணத்துக்கு வெறும் கைய தான் வீசிட்டு வந்தியா…சரி வந்ததும் எங்க கிளம்பிற…போட்டோ எடுத்துட்டு சாப்பிட்டு போ ” என கூறியவாறே …தன்னவள் கையை பிடித்து கொண்டு அவளையும் அருகில் அழைக்கிறான் அவன்.
ஒரு வார்த்தை கூட மறுப்பு கூறாது அவளும் அவன் அருகில் நின்று படம் பிடித்து கொண்டு … இறுதியாய் கை குலுக்கி பிரிகிறாள்.
வேக நடைகளை கொண்ட அவள் கால்களோ அந்த அரண்மனை வாயிலை எட்டும் போது சிறிது சிறிதாக தடுமாற்றம் கொண்டு சரிய ஆரம்பித்தது. கீழே விழுகிறாள் அவள். தோழி என்னவானது என புரியாமல் கதறி அழுகையுடன் வெளியே இருந்த அனைவர் உதவியை வேண்டி உதவி செய்யுமாறு அழைக்க… பெரிய இடத்து அவர்களோ விழுந்து கிடக்கும் அவளையும் அவள் வாயில் இருந்து வரும் இரத்தத்தை பார்த்தே அரண்டு அருகில் வர தயங்குகிறார்கள்.
அதை பார்த்து மேலும் அலறுகிறாள் அவள் தோழி.
அவள் தோழி அலறலில் மண்டபத்தில் உள்ளே இருந்தவர்கள் கூட வெளியே வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். ஆனால் எவரும் உதவி கரம் நீட்டவில்லை.
சலசலப்பு ஏற்பட …மணமக்களும் வெளி வர வேண்டியதாய் போனது .
அவனோ தன் தோழியின் நிலை கண்டு பதறி அருகில் வர முயற்ச்சிக்க… அவனவளோ தன்னவள் கையை இறுக்கமாக பிடித்து செல்ல வேண்டாம் என தடுக்கிறாள். இருவரின் பெற்றோர்களும் கூட…திருமண சடங்கு இன்னும் முடிய வில்லை , அருகில் செல்ல வேண்டாம் என வலியுறுத்தினார்கள். அதை ஏற்று கொண்டு அப்படியே நிற்கின்றான் அவன்.
அவள் விழிகளோ சிறிது தொலைவில் அவனவளுடன் கைகோர்த்து நிற்கும் அவனையே புன்னகையுடன் பார்க்கிறது. விழி சிமிட்டல் மறந்து விட்டால் போல… இமைகளை திறந்து மூடாமல் அவனையே பார்த்தாள்.
இறுதியில் யாரோ முகம் தெரியாத அங்கு வேலை செய்பவர்கள் உதவிக்கு வர…தன் தோழியை தூக்கி கொண்டு மருத்துவமனை விலைகிறாள் அவள் தோழி.
அந்த அரண்மனை வாயிலை தாண்டும் வர கூட…அவள் விழிகள் அவனையே இதழ் இரத்தம் வடிய புன்னகையுடன் பார்க்கிறது.
அவன் மனம் அவளுடன் போக கூறினாலும்…அவன் செல்லவில்லை.
அவளும் சென்று விடுகிறாள். சிறிது நேரத்தில் அனைவரும் கலைந்து உள்ளே செல்ல ஆரம்பிக்க…இவனும் உள்ளே செல்ல விழைகிறான்.
இறுதியாய் செல்லும் முன் வாயிற் தரையை பார்க்கின்றான். இரத்த குளியல் கொண்டுள்ளது அது.
அதை பார்த்து மனம் துடிக்கிறது…தன் தோழி அருகில் இருக்க கூறி . ஆனால் முடியவில்லை அவனால் அவன் திருமணம் என்ற காரணத்தினால்!.
அதே துடிப்புடன் உள்ளே சென்று மற்ற சடங்குகளை தொடர்கிறான்.
தன் தோழி சீக்கிரம் குணமாவாள் என்ற நம்பிக்கையில்.
மறுநாள் :
திருமண கூத்து கழிந்து இருந்தது. அவன் முந்தைய இரவு வெட்கம் சிரிப்பு நாணம் சினுங்கல் முனங்களுடன் முடிந்து இருந்தது தன் தோழி நினைவு மறந்து …புது உறவு கிடைத்திருந்ததில்.
மறுநாள் மதியம் தாண்டி இருக்க…அவன் பெற்றோர் அவன் தோழியை பற்றி விசாரிக்க, அப்போது தான் நினைவு வந்து தன் தலையில் அடித்து கொண்டவன் அவளுக்கு அழைக்கிறான். அழைப்பு எடுக்க வில்லை!. தோழிக்கு அழைக்கிறான் அவளும் எடுக்க வில்லை. தன் தோழியின் பெற்றோருக்கு அழைக்கின்றான் அதே பதில் தான்.
இப்போது மனம் அதே துடிப்பு கொள்ள…தன் தோழி வீடு வரை சென்று வருகிறான் என கூறி தன் பெற்றோரிடமும் தன்னவள் நெற்றியில் இதழ் பதித்து கூறியும் செல்ல விழைகிறான் அவள் வீட்டுக்கு.
இருசக்கர வாகன பயணம் அவள் வீடு நெருங்க நெருங்க … படபடப்பு கொள்கிறது அவன் மனம் . காரணமின்றியே!.
என்ன இது தன் தோழி வீட்டில் இருந்து இவ்வளவு சத்தம் . அழுகுரல் என்ன தெரு முனை வரை கேட்கிறது. யார் அது சத்தம் போட்டு கத்துகிறது. தன் தோழியின் தோழி தான் !.
அவள் ஏன் என்னை நோக்கி கத்தியவாறே வருகிறாள்.
என்ன கூறுகிறாள் அவள்.
” சந்தோஷம் தானே! சந்தோஷம் தானே! ஏன் இப்போ இங்க வந்த …எதுக்கு வந்த?. நீ எல்லாம் ஒரு மனுசனா ?. நேத்து உன் முன்னாடி தானே அவ விழுந்தா …உதவி இல்லை இல்ல பக்கத்துல வர யோசிச்ச நீ எதுக்கு இப்போ வந்துருக்க?” என தன் தோழியின் நிலை பார்க்க முடியாமல் அவள் கத்த,
” அது என் நிலைமை அப்படி … புரிஞ்சுக்க டிரை பன்னு ” என அவளிடம் கூறி தன் தோழியை உள்ளே செல்ல பார்க்க,
” ஹேய் நீ உள்ள போகவே கூடாது!. எல்லாம் உன்னால தான்… உன்னால தான்…அவ உன்ன காதலிச்சத தவிற வேற என்னா தப்பு செஞ்சா? ” என இவள் கத்த,
அவனோ என்ன காதாலா என அதிர்ச்சி ஆகி நின்றான்.
” என ஷாக் ஆகுற மாதிரி நடிக்கிற…என்ன சொல்ல போற அவ உன்ன லவ் பண்றது தெரியாதுனா ?. சொல்லு அப்படி தானே சொல்ல போற?. ” என கூற
அவனும் அதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்ட…கோபத்தை கட்டு படுத்த முடியாமல் அவனை அறைந்து விட்டால் அவள்.
” சரி ஒன்னே ஒன்னு சொல்லு!. உனக்கு கால் உடைஞ்சு கிடந்த அப்போ…உன் அம்மா அப்பா வெளிநாடு’ல இருந்து வரனுமே அவ நினைச்சு, அவங்க வரவேண்டாம் அதை விடு … ஏன் உன் ஃபிரண்ட் எல்லாரும் சமைக்க தெரியாதுல அதனால நான் பாத்துக்கிறேனு உன் கூடவே இரண்டு மாசம் இருந்தா தானே அப்போ புரியலையா உனக்கு!. சொல்லு … ஃபிரண்டா இருந்திருந்தா அவ உன்ன தினம் வந்து பாத்திட்டு பாத்திட்டு போய்ருப்பளே தவிர, உன் கூடவே இருந்து சமைச்சு தொவைச்சு உன்ன பாத்திருக்க மாட்டா !. அதை கூட விடு சில ஃபிரண்ட்ஸ் இத கூட பண்ணுவாங்க!.
பெஸ்ட் ஃபிரண்டா இருந்த கூட பாத்ரூம் வாசல் வர தான் வந்து பார்த்து கூட்டிட்டு போவங்க…பாத்ரூம் உள்ள வர உன் கூட ஒருத்தர் வர முடியும்னா ஒன்னு பெத்தவங்களா இருக்கனும் இல்ல பொண்டாட்டியா இருக்கனும்!. தினமும் உன்ன கூட்டிட்டு போனாலே…அப்போ கூட புரியலையா உனக்கு அவ உன்ன லவ் பண்றானு?…இன்னும் இது மாதிரி பல நடந்துருக்கு !. எப்பவும் தெரியலையா அவ காதல்??”
என இவள் அவனை பல அறைகள் தந்து கொண்டே கேட்க, இப்போது தான் அது புரிகிறது அவனுக்கு.
சரிதானே ..எந்த தோழியும் இப்படி செய்ய மாட்டார்களே !. இவ்வளவு நாள் அது புரியாமல் போய் விட்டதே என அவன் மனமும் விழியும் கலங்கியது.
தன் முன் நின்றவளை நகர்த்தி தன் தோழியை பார்த்து இதை பற்றி ஏன் முன்னே கூற வில்லை என அவளிடம் கேட்ட அவன் நினைக்க….இவள் வழி விட வில்லை.
” உன் கால் பட்டா இந்த இடம் கூட விலங்காது ….ச்சீ போ !. மனசே இல்லாத உனக்காக போய் விஷத்தை குடிச்சகருக்கா பாரு அவள கேட்கனும்!. ” என இவள் ஆங்கரமாய் கத்த
” என்ன விஷமா…” என்ற வார்த்தையிலே அதிர்ச்சி ஆகி நின்றான் அவன்.
திடீரென அழுகுரல் அதிகரிக்க…இவள் ஓடுகிறாள் உள்ளே !. அவனும் உள்ளே ஓட…
அதே மாறாத புன்னகையுடன் அவள் புகைப்படம் மாலையுடன் சுவற்றில் தொங்குகிறது. கீழே விரைத்த போன அவள் தேகத்தை தூக்கி இறுதி காரியத்தை செய்ய விழைகின்றனர் பலர்.
” இல்ல …இல்ல நா போக விட மாட்டேன் !. எனக்கு இவ வேணும் ” என குழந்தையாய் அழுகிறாள் அவள் தோழி.
சிலை’யென அதிர்ந்து அந்த அதிர்ச்சியை தாங்கி கொள்ள முடியாமல் நின்றான் அவன்.
அவளை பார்த்த பழகிய நாள் முதல் …அவள் தன்னிடம் காட்டிய அன்பும் அக்கரையும் பாசமும் சண்டைகளும் என அனைத்தும் அவன் கண் முன்னே வந்தது.
தன்னை நினைத்தே வெட்கம் கொள்கிறான் அவன். தன்னை காதலித்து தன் தோழி அதுவும் தன் முன்னே இறந்து போய் இருக்கிறாள் ஆனால் நாமோ நேற்று முழுவதும் திருமணத்தில் திளைத்து இருந்தோம்…என்பதை அவன் நினைக்க நினைக்க துக்கம் தொண்டையை அடைத்தது அவனுக்கு. செத்து விடலாம் போல இருந்தது அவனுக்கு.
இவளை சிலர் பிடித்து கொள்ள…தங்கமாய் இருந்த அவள் தேகம் ஈக்கள் மொய்க்க தூக்கி செல்கின்றனர் .
பல வண்ண பூக்களை தூவி அதன் மனத்தால் அவளை குளிக்க வைத்து அவள் உடலையும் இந்த உலகத்தில் இருந்து அனுப்பு சென்றனர் அனைவரும்
சிலையாய் எதையும் நம்ப முடியாமல் அவனும், ஒற்றை மகளை இழந்த அவள் பெற்றோர்களும் , நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியாத அவள் தோழியும் நிற்கதியாய் நிற்க வைத்தது ஒருதலை காதலே !!……
தோழிக்கும் காதலிக்கும் வேற்றுமை தெரியாத அவனை காதலித்தது அவள் தவறா …
இல்லை அவன் அவளை பயன்படுத்தி கொண்டதாய் நினைக்கும் அவள் தோழியின் கூற்று தவறா …
நேரம் கடந்து கிடைக்கும் அன்பும்
காலம் கடந்து புரிந்த மன்னிப்பும்
பிரயோஜனம் அற்றதே !!
காதலிப்பது தவறு இல்லை !!
ஒரு தலையாய் இருப்பதும் கூட தவறு இல்லை!!
அது தெரியாமலும் தெரிவிக்க படாமலும் இருப்பது தவறு!!.
திருமணத்திற்கு கிளம்பும் முன்பே அனைத்தையும் முடிவு செய்திருந்தாள் அவள்!. இன்று தான் தன் முடிவு இருக்க வேண்டும் என்று. இறுதியில் கூட புன்னகை மாறாமல் அவனை பார்த்து தன் விழிகளில் நிறப்பி கொண்டு உயிர் நீத்த இவளை போன்ற உயிர்கள் இன்னும் வாழ்கின்றனர் என்பது மிகையாகாது.
பெயர்கள் கூறாத இந்த முழு கதையும் புரிந்து கொள்ள முடிகிறது என்றால்…பெயர் தெரிந்து நம்மை சுற்றி உள்ள உள்ளங்களை புரிந்து கொள்ள முடியாதா என்ன??.
*****
🥺❤️அவள் மனதின் வழிகள் நீரால் நிரம்பிய என் விழிகள்🥺🥺