Loading

 

வீட்டில் முனியா காயங்களை கழுவி மருந்து போட்டுக் கொண்டிருக்க, மதுரா எல்லாவற்றிற்கும் கத்திக் கொண்டிருந்தாள்.

“வலிக்குது.. முனியா.. வலிக்குது” என்று மீண்டும் கத்தினாள்.

பிரின்ஸ் படம் பார்ப்பது போல் அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன லுக்கு?”

“ஓவர் ஆக்டிங்.” என்று கூறி அவன் உதட்டை பிதுக்க, மதுரா முறைத்தாள்.

“வலிக்குறது எனக்கு தான தெரியும்”

“அதுக்காக இவ்வளவு கத்த தேவையில்ல” என்றவன் வெளியே சென்று விட்டான்.

“பாருங்க முனியா.. அவங்க டாட் மாதிரியே மனசாட்சியே இல்லாம இருக்கான்” என்று முனியாவிடம் புகார் வாசிக்க, அவர் எப்போதும் போல் புன்னகைத்து வைத்தார்.

“உங்க கிட்ட போய் சொன்னேன் பாரு. எப்பவும் அவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவீங்க” என்று கடுப்பாக கூறி விட்டு திரும்பிக் கொண்டாள்.

முனியா வேலையை முடித்து விட்டுச் செல்ல, மதுரா சுற்றியும் பார்த்தாள்.

இவர்களை விட்டதோடு சஞ்சய் எங்கோ கிளம்பிச் சென்று விட்டான். பிரின்ஸ் அவனுடைய சிறிய காரை எடுத்து ஓட்டுவதற்காக வெளியே சென்று விட்டான்.

மதுராவின் கண் முன்னால் தொலை பேசி இருந்தது. அன்று சஞ்சய் மிரட்டிய பிறகு, அவள் அதை தொடக்கூட நினைக்கவில்லை. அதை விட முக்கியமாக சஞ்சய் எப்போதும் கண் முன்னால் இருந்தான். அதனால் எந்த முயற்சியும் செய்யாமல் அமைதி காத்தாள்.

இப்போது அந்த தொலைபேசி ஒரு முறை பார்த்து விட்டு, மனதில் குறித்ததை எல்லாம் நினைவுக்கு கொண்டு வந்தாள்.

வீட்டிற்கு வரும் போது பாதையை நன்றாக கவனித்து வைத்திருந்தாள். அதை அப்படியே தந்தையிடம் சொல்லி விட்டால் போதும்.

தொலைபேசியை கையில் எடுத்தவள், தந்தையின் எண்ணை அழுத்த ஆரம்பித்தாள். அழைப்பு செல்லவில்லை.

“ப்ச்ச்..” என்று பதட்டத்தோடு மீண்டும் மீண்டும் முயற்சிக்க, எந்த பயனும் கிடைக்கவில்லை.

கண்கலங்கும் போல் இருக்க, அழுந்த மூடித்திறந்து நிதானத்துக்கு வந்தாள்.

“கால் போகாத மாதிரி அவன் எதாவது பண்ணிருக்கனும்” என்ற முடிவுக்கு வந்தவள், அதை எடுத்த இடத்தில் வைத்து விட்டு வலித்த காலோடு எழுந்து சென்றாள்.

அடுத்த நாள் மதுராவிடம் பெரும் மாற்றம் தெரிந்தது. மிகவும் அமைதியாக இருந்தாள். பிரின்ஸிடம் பேசவில்லை. முனியாவிடம் பேசவில்லை. ஏன் சஞ்சய்யை கூட ஒதுக்கி விட்டு மிகவும் அமைதியாக இருந்தாள்.

“வாட்ஸ் ராங் வித் யூ?” என்று பிரின்ஸ் கேட்டு விட, “நத்திங்” என்று முடித்துக் கொண்டாள்.

இத்தனை நாளும் தப்பிக்க முயற்சி செய்யாதது போலவும், நல்ல பிள்ளை போலவும் நடித்துக் கொண்டிருந்தாள். அவளை நம்பி எதாவது ஒரு வாய்ப்பை சஞ்சய் விட்டு விடுவான் என்று நினைத்தாள்.

ஆனால் அப்படி இல்லை. காவலுக்கு இருக்கும் ஆட்கள் எப்போதும் கவனத்துடன் இருந்தனர். வீட்டில் இருந்த தொலைபேசி வேலை செய்யவில்லை. வெளியே சென்ற போது தப்பிக்க நினைத்தவள், காயம் பட்டது தான் மிச்சம்.

மீண்டும் ஒரு முறை வெளியே அழைத்துச் செல்வானா? அப்படி சென்றால் எப்படியாவது தந்தையை அழைத்து விசயத்தை கூறி விட வேண்டும். அதற்கு முன்பு வாசுவுக்கும் சஞ்சய்க்கும் இருக்கும் பிரச்சனையில் தன்னை இழுத்ததற்கு சஞ்சய்யை பழி வாங்கி விட்டு தான் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

என்ன செய்வது? என்ற யோசனை தான் அவள் மூளையில் ஓடிக் கொண்டிருந்தது.

அவளது அமைதியை சஞ்சய் கண்டு கொள்ளாமல் போக, பிரின்ஸ் தான் அவளது மாற்றத்தை புரியாமல் பார்த்தான்.

அடுத்த நாள் பிரின்ஸ் கிளம்பிச் சென்று விட, அன்று மாலை சஞ்சய் மதுராவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

“எங்க போறோம்?”

“ஏன்?”

“தெரிஞ்சுக்க தான்”

“பார்ட்டி”

“யாருக்கு?”

“உனக்கு இல்ல”

“கிண்டலா? பார்ட்டிக்கு எதுக்கு நானு?”

“காரணம் தெரிஞ்சா அழுதுடுவ. அழுத முகத்தோட போனா நல்லா இருக்காது. அதனால இப்படியே வா”

“அழுவேனா?” என்று அவள் அதிர, சஞ்சய் கண்டு கொள்ளாமல் காரை ஓட்டினான்.

இம்முறை மீண்டும் பேச்சோடு பேச்சாக பாதையை கவனித்துக் கொண்டே தான் வந்தாள்.

அன்று உடை தயாரிக்க சொன்ன இடத்தில் உடையை மாற்றியதோடு, அலங்காரமும் செய்து கொண்டாள். அவள் அலங்காரம் முடிந்து வர, சஞ்சய் தயாராகி வந்து விட்டான்.

எப்போதும் சாதாரணமாக இருப்பவன், இன்று கோட் சூட் அணிந்து சிகையையும் அழகு படுத்தி கம்பீரமாய் நின்றான். பார்த்த நொடி மதுரா வாயைப்பிளந்தாள்.

“நீ என்ன மாடலா?” என்று கேட்க, அவளை மேலிருந்து கீழ் பார்த்தான்.

“அப்போ இது வரை நான் யாருனு உனக்கு தெரியாவே தெரியாதா?”

“எங்க சொன்ன? முனியா எதக்கேட்டாலும் ஸ்மைல் தான் பண்ணுவாங்க. வேற எல்லாரும் தெலுங்கு பேசுறாங்க. நான் பேசுற இங்கிலீஷ் அவங்களுக்கு புரியல. நீ யாருனு எப்படித்தெரியும்?”

“இவ்வளவு முட்டாளா நீ?” என்றவன் காருக்கு சென்றான்.

“பதில் சொல்லவே இல்லையே?” என்று கேட்டுக் கொண்டே அவன் பின்னால் வந்தாள்.

“போற இடத்துல நான் யாருனு தெரிஞ்சுப்ப. ஏறு”

“பார்ட்டியே முதல்ல எதுக்குனு புரியல. நான் ஏன் அங்க வர்ரேன்னும் புரியல. இதுல நீ யாருனு அங்க வந்து தான் தெரியுமா?”

சஞ்சய் பதில் சொல்லாமல் போக, “நான் வாசுவுக்கு கால் பண்ணி இங்க தான் இருக்கேன்னு சொல்லிட்டேன்” என்றாள்.

அவளை ஒரு நொடி திரும்பி பார்த்தவன் பதில் சொல்லாமல் போக, “என்ன ரியாக்ஷனே காணோம்?” என்று கேட்டாள்.

“தெரியும். அவன கொல்ல ஆள் அனுப்பிட்டேன்” என்றவன், அவளை பிடித்து உள்ளே தள்ளி விட்டு காரில் ஏறி அமர்ந்தான்.

அதிர்ச்சியில் அவன் தள்ளிய வேகத்தில் விழுந்தவள், சுதாரித்து எழும் முன்பே கார் கிளம்பியிருந்தது.

“ஏய்.. அவர எதுக்கு கொல்ல போற?”

சஞ்சய் பதில் பேசாமல் போக, மதுராவின் முகம் வெளிறியது.

“நான் தெரியாம பண்ணிட்டேன். அவர விட்டுரு சஞ்சய். ப்ளீஸ்”

“நீ அவன் கிட்ட பேச ட்ரை பண்ணா அவன கொன்னுடுவேன்னு சொல்லியும் போன் பண்ணிட்டு.. தெரியாம பண்ணியா?” என்று கேட்டவனின் குரலில் எகத்துக்கும் நக்கல் வழிந்தது.

“சாரி சாரி.. வேணாம். அவர ஒன்னும் பண்ணிடாத”

சஞ்சய் பதில் சொல்லவில்லை. கார் நிற்காமல் செல்ல, மதுவும் விடாமல் கெஞ்சிக் கொண்டிருந்தாள். கண் கலங்கி விட்டது. அழாமல் இருக்க அவள் போராடிக் கொண்டிருக்க, கார் விழா நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டது.

அது பெரிய ஹோட்டல். பிரைவேட் பார்டி என்பதால் அனுமதி இருப்பவர்கள் மட்டுமே உள்ளே நுழைய முடியும். சஞ்சய்யும் உள்ளே வந்து காரை நிறுத்தி விட்டு, மதுவை பார்த்தான்.

கலங்கிய கண்ணை துடைத்துக் கொண்டு அவனை தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். வாசுவிற்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று மனதில் விடாத வேண்டுதல் வேறு.

“மேக் அப் கலைச்சுட்ட பாரு” என்றவன் டிஸ்யூவை எடுத்து நீட்ட, அவள் அதை வெறித்துப் பார்த்தாள்.

“ப்ச்ச்” என்று அவனே துடைத்து விட்டவன், “ரொம்ப அழுது வைக்காத. உன் காதலன் இங்க பங்சன்க்கு உசுரோட தான் வந்துருக்கான்.” என்றான்.

அது வரை சாவை நோக்கி செல்லும் பலி ஆடு போல் முகத்தை வைத்திருந்த மதுவின் முகம் சட்டென மலர்ந்தது.

“வாசு..”

“ஆனா அவன் உயிரோட போகனுமா வேணாமானு நீ நடந்துக்கிறத பொறுத்து இருக்கு. எனிவே.. உனக்கு இன்னைக்கு நிறைய சாக் இருக்கு. இப்பவே அழுது கண்ணீர வேஸ்ட் பண்ணாத.”

“வாசு நல்லா இருக்காரு தான?”

மற்ற அனைத்தையும் விட்டு விட்டு அவள் கேட்க, “ஆமா” என்றான்.

மது நிம்மதி பெருமூச்சு விட்டு விட்டு, டிஸ்யூவை எடுத்து கண்ணை துடைத்துக் கொண்டாள்.

“இப்ப வர்ரியா?” என்று கேட்க உடனே தலையாட்டி விட்டு கதவை திறந்தாள்.

அது பூட்டி இருக்க, சஞ்சய் பக்கம் திரும்பினாள்.

“வர்ரேன்” என்று வாய்விட்டு சொன்ன பிறகே, கதவை திறந்து விட்டான்.

இருவரும் இறங்கியதும் காரை பூட்டியவன், “ஸ்மைல் பண்ணு பார்ப்போம்” என்றான்.

மது புரியாமல் பார்க்க, “ஸ்மைல்” என்று புன்னகைத்து காட்டினான்.

“எனக்கு வரல” என்றாள்.

“வரனும் பேபி. வரலனா வாசுவ இங்க நீ பார்க்க முடியாது” என்று இலகுவாக சொன்னவன் அணிந்திருந்த கோட்டில் ஒரு பட்டனை மட்டும் போட்டுக் கொண்டான்.

அவனது பாவனையில் கண்ணை அழுந்த மூடித்திறந்தவள், “ஓகே” என்று கூறி புன்னகைத்தாள்.

அது கண்ணை எட்டவில்லை. ஆனால் அதைப்பற்றி சஞ்சய் கவலைப்பட்டால் தானே?

“தட்ஸ் குட்” என்றவன் அவளது கையைப்பிடித்து விரலோடு விரல் கோர்த்துக் கொண்டு, “இப்படியே பங்சன் முடியுற வரை இருக்கனும். ஓகேவா பேபி?” என்று கேட்டான்.

மறுக்கவா முடியும்? இழுத்து வைத்த உதட்டோடு வேறு வழியில்லாமல் தலையாட்டினாள்.

கோர்த்த கையோடு இருவரும் உள்ளே நுழைய, அத்தனை கேமராக்களும் அவர்களின் பக்கம் திரும்பியது.

சற்று தள்ளியிருந்த வாசு, சலசலப்பில் திரும்பிப் பார்த்தான். சஞ்சய்யுடன் கை கோர்த்துக் கொண்டு மது சிரித்த முகமாக உள்ளே வர, வாசு அதிர்ந்து போய் பார்த்தான்.

எல்லோருக்கும் புன்னகையுடன் பதில் சொல்லிக் கொண்டு வந்த சஞ்சய், வாசுவை பார்த்ததும் மதுவை விடாமல் அழைத்துக் கொண்டு அருகே வந்தான்.

“ஹலோ வாசுதேவன். எப்படி இருக்க? உன் வருங்கால மனைவி உன்னை பத்தி கவலை பட்டுட்டே இருக்கா. பார்க்க எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு”

முகத்தில் மாற்றமே இல்லாமல் அவன் பேச, மற்ற இருவருக்கும் தான் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது பெரும்பாடாக இருந்தது.

“மது.. நீ..”

“ஏன் வாசு? வருங்கால மனைவி முகம் கூட மறந்துடுச்சா? ஒரு வாரம் தான ஆகியிருக்கு? அதுக்குள்ள மறந்துடுமா?”

“இவன் கூட ஏன் வந்த? உன்னை தேட சொல்லி நான் அங்க ஆள் அனுப்புனேன்” என்று வாசு மதுவிடம் பேச, “நீ தேடி அலைய வேணாம்னு தான் நானே கூட்டிட்டு வந்துட்டேன் வாசு. நல்லா பார்த்துக்கோ” என்ற சஞ்சய், மதுவின் கையை விட்டு விட்டு இடையை இழுத்து அணைத்தான்.

மது அதிர்ந்து கையை தள்ளி விடப்பார்க்க, பிடி இறுகியது.

“சஞ்சய்.. விடு” என்று அவள் பல்லைக்கடிக்க, சஞ்சய் அவளை பார்த்து புன்னகைத்து வைத்தான்.

“கைய எடுடா” என்று வாசு சீற, சஞ்சய் அவனை நக்கலாக பார்த்தானே தவிர அசையவில்லை.

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாய், “ஹலோ சஞ்சய் சார்.. எப்படி இருக்கீங்க? இது யாரு உங்க கேர்ள் ஃப்ரண்ட்டா?” என்று கேட்டுக் கொண்டு வந்தான் ஒருவன்.

நிற்கும் கோலம் அப்படித்தானே கேட்க வைக்கும்?

‘அய்யோ.. இல்ல’ என்று மது மனதில் அலற, சஞ்சய் ஒப்புக்கொள்ளவும் இல்லை மறுக்கவும் இல்லை. வாய்விட்டு சிரித்து விட்டு, “எக்ஸ்கியூஸ் மீ” என்றவன் மதுவை இழுத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

“கொடுத்து வச்ச மனுசன். இல்லையா வாசு சார்? இவரோட கேர்ள் ஃப்ரண்ட் எல்லாரும் அழகழகா இருக்குங்க. வசுந்தராவும் சரி. இந்த பொண்ணும் சரி. ஆமா இவங்கள உங்களுக்கு தெரியுமா சார்? நம்ம கண்ணுக்கு எல்லாம் இப்படி சிக்க மாட்டேங்குதுங்க.” என்று கேட்டு அவனது சாபத்தையும் வாங்கிக் கொண்டு சென்றான்.

வாசு இங்கு மதுவை தேடிக் கொண்டு செல்ல, அதே நேரம் உள்ளே நுழைந்தாள் வசுந்தரா.

தித்திக்கும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
14
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்