Loading

 

வீட்டில் ஒன்றுக்கு இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு, சஞ்சய் போராட்டத்தை ஆரம்பித்திருந்தான்.

மதுராவை தனியாக சமாளித்து விட்டான். ஆனால் பிரின்ஸ் உடன் சேர்ந்து அவள் செய்வதை, அவனால் சமாளிக்க முடியவில்லை.

இருவரும் சிறு குழந்தையாய் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

“இந்த லேடிக்கு ஒரு தோசை சுட கூட தெரியல டாட்.” என்று சலிப்பாய் சொன்ன பிரின்ஸ், முனியா சுட்டுக் கொடுத்த பான் கேக்கை விழுங்கிக் கொண்டிருந்தான்.

“ரொம்ப பேசாத. நானே இப்ப தான் சமைக்கவே கத்துக்கிறேன்”

“இவ்வளவு நாளா தெரியாதா?”

“உனக்கு மட்டும் தெரியுமா?”

“உன் வயசென்ன? அவன் வயசென்ன? அவனுக்கு சமைக்க தெரியுமானு கேட்குற?” என்று கேட்டு சஞ்சய் முறைக்க, “நான் உங்க கிட்ட பேசல. இங்க பேசிட்டு இருக்கேன்” என்றாள் அவசரமாக.

“இத மட்டும் நல்லா பண்ணு. ஏழு வயசு பையன் கிட்ட சண்டை போடுறது.. சாப்பிடுறது.. பொறுப்பே இல்லாம இருக்கது.. இது மட்டும் தான் உனக்கு நல்லா வருது” என்றவன் பிரின்ஸை பார்த்து, “இவ தான் முட்டாள். இவ கூட பேசி நீயும் முட்டாள் ஆகாத” என்று கூறி விட்டான்.

“என்ன சும்மா விட்டா முட்டாள் முட்டாள்னு சொல்லுறீங்க? முட்டாள கடத்துன நீங்களும் முட்டாள் தான்.”

மதுரா எகிற, பிரின்ஸ் சஞ்சய்யை தான் பார்த்தான்.

“யூ மீன் கிட்னாப்?” என்று அவன் கேட்க, சஞ்சய் திரும்பவில்லை.

“ஆமா உன் டாட் என்னை கிட்னாப் பண்ணி இங்க வச்சுருக்கார். என்னனு கேளு”

“வொய் டாட்?”

“இவ சொல்லுறானு நீயும் நம்பிட்டு இருக்கியா?” என்று கேட்டவன் அங்கிருந்து சென்று விட, பிரினிஸ் சாப்பிடும் வேலையை தொடர்ந்தான்.

“அடப்பாவி.. நான் சொல்லுறது தான் உண்மை பிரின்ஸ் நம்பு” என்று சத்தியம் செய்யாத குறையாக பேசியவளை, பிரின்ஸ் வேற்று கிரக வாசி போல் பார்த்து வைத்தான்.

“அடேய் நம்புடா.. முனியா நீங்களாச்சும் சொல்லுங்க” என்று அவரை துணைக்கு அழைத்தால், அவர் புன்னகைத்து வைத்தார்.

“என்ன சிரிக்கிறீங்க? அடப்பாவிங்களா! என்னைய கடத்திட்டு வந்தத கூட மன்னிச்சுடுவேன்டா.. ஆனா அத நம்பாம விடுற இந்த லுக்க தான்டா தாங்க முடியல” என்றவள் நெஞ்சில் கை வைத்து நின்று விட்டாள்.

“கிட்னாப் பண்ணி இப்படி தான் தோசை சுட்டு சாப்பிட சொல்லுவாங்களா? கட்டி தான போட்டு வைப்பாங்க?” என்று கேட்டான் பிரின்ஸ்.

“இது புது வகை கடத்தல்”

அவளை நம்பாத பார்வை பார்த்து விட்டு, அவன் சாப்பிட்டு முடித்துக் கொண்டு சென்று விட்டான்.

மதுரா மட்டும் நிற்க, முனியா அவளது தோளை தட்டி, “தோசையை பாரு” என்று காட்டி விட்டு அவரது வேலையை பார்த்தார்.

இரவு பத்து மணியாகி இருக்க, பிரின்ஸ் தொலைகாட்சியின் முன்னால் அமர்ந்திருந்தான். எதோ ஒரு ஆங்கிலப்படம் ஓடிக் கொண்டிருந்தது.

மதுராவும் அவன் அருகே சென்று அமர்ந்து கொண்டாள். தொலைகாட்சி எப்போதும் அங்கு காட்சி பொருளாகத்தான் இருக்கும். அதில் எதையும் பார்க்க முடியாது. பிரின்ஸ் பென்டிரைவில் படத்தை போட்டிருந்தான்.

அவன் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க, மதுராவிற்கு கொட்டாவி தான் வந்தது.

“இதுல என்னடா புரியுது உனக்கு?”

“உங்களுக்கு புரியலயா?”

“புரியல”

“ஓகே” என்றவன் மீண்டும் பார்க்க ஆரம்பித்து விட்டான்.

“அடப்போடா. நான் போய் தூங்குறேன்”

“குட் நைட்”

“ம்ம். குட் நைட்” என்றவள், எழுந்து சென்று விட்டாள்.

அவள் அறைக்குள் சென்றதும், “நீயும் தூங்கு. டைம் ஆகுது” என்று அதட்டினான் சஞ்சய்.

உடனே அவன் பேச்சைக்கேட்டு எழுந்த பிரின்ஸ், சட்டென நின்றான்.

“டாட்… மதுராவ நிஜம்மாவே கிட்னாப் பண்ணிருக்கீங்களா?” என்று கேட்டு வைக்க, “கிட்னாப் பண்ணவ தான் இப்படி நல்லா சாப்பிட்டுட்டு தூங்க போவாளா?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

“பட் அவங்க அப்படி சொல்லுறாங்களே. நீங்க பொய் சொல்லல தான?”

சஞ்சய் மேலும் கீழும் தலையாட்ட, முகம் மலர்ந்தவன், “குட் நைட் டாட்” என்று விட்டு ஓடினான்.

சஞ்சய்யிடம் பெருமூச்சு எழுந்தது. ஏழு வயது சிறுவன் அவன். எதையும் அலசி ஆராயாமல் வாழ வேண்டிய வயது. ஆனால் அவனால் அப்படி வாழ முடியவில்லை. எல்லாவற்றையும் அளவுக்கு அதிகமாக கவனித்தான். அதிகமாக ஆராய்ந்தான். அவனை சுற்றி இருக்கும் ஒவ்வொருவரையும் ஒரு எல்லையில் வைத்தான்.

தனியாக வளர்வதன் விளைவு. அவன் தான் அவனை பார்த்துக் கொள்ள வேண்டும். வருத்தமளித்தாலும் அதுவே உண்மையும் கூட.

அடுத்த நாள் காலை, சஞ்சய்யும் பிரின்ஸும் வெளியே கிளம்பினர்.

“மதுவ கூட்டிட்டு போகலாம் டாட்”

“வேணாம். அவ இங்கயே இருக்கட்டும்”

“நானும் வர்ரேன். என்னை விட்டுட்டு எங்க போறீங்க?” என்று துள்ளி குதித்துக் கொண்டு வந்தாள் மதுரா.

“உன்னை எல்லாம் கூட்டிட்டு போக முடியாது. நீ வா” என்று பிரின்ஸை அழைக்க, “வரட்டும் டாட். ஜாலியா இருக்கும்” என்று கெஞ்சினான் பிரின்ஸ்.

“என்னை கூட்டிட்டுப்போனா நான் தப்பிச்சு போயிடுவேன்னு தான கூட்டிட்டு போக மாட்டேங்குற?” என்று மதுரா கேட்க, “அப்படி நீ போனா போய் சேருறதுக்குள்ள நான் என்ன செய்வேன்னு உனக்கு நல்லா தெரியும்.” என்றான் சஞ்சய்.

அவனை முறைத்து வைத்தவள், “நான் ஒன்னும் வரல. நீங்களே போங்க” என்று மதுரா உதட்டை பிதுக்க, “டாட்..” என்றான் பிரின்ஸ்.

“இவ கூட சேர்ந்து கெட்டு போயிட்ட” என்று மகனை முறைத்து விட்டு அவன் வெளியே நடக்க, பிரின்ஸும் மதுராவும் குதித்துக் கொண்டு பின்னால் சென்றனர்.

வாட்டர் பார்க் சென்று இருவரையும் விளையாட விட்டு விட்டு, சஞ்சய் பாதுகாத்தான். பிரின்ஸ் எதைக்கேட்டாலும் அது தனக்கும் வேண்டும் என்று சண்டை பிடித்தாள் மதுரா.

“அவன் சின்ன பையன்”

“நானும் தான் சின்ன பொண்ணு”

“உன் சைஸ்க்கு நீ சின்ன பொண்ணா?”

“ஹலோ.. நோ பாடி சேமிங். அப்புறம் மனுசியா இருக்க மாட்டேன்”

“சேமிங் பண்ணுற மாதிரி இருக்கது உன் தப்பு. மத்தவங்கள குறை சொல்லாத”

“என் உடம்பு என் இஷ்டம்”

“என் பணம் என் இஷ்டம். வாங்கி தர முடியாது”

திட்டவட்டமாக கூறி விட்டு சஞ்சய் பிரின்ஸுக்கு மட்டும் வாங்கிக் கொடுக்க, மதுரா கோபித்துக் கொண்டாள்.

முகத்தை தூக்கிக் கொண்டு, “அப்ப நான் போறேன். என் அப்பா எனக்கு வாங்கித்தருவார்” என்றவள் வெடுக்கென திரும்பி நடக்க, ஒருவன் வந்து அவள் மீது பலமாக மோதினான்.

மோதிய வேகத்தில் அவள் கீழே விழ, அவள் மீதே விழப்போனவனின் சட்டையை பிடித்து, விழாமல் நிறுத்தினான் சஞ்சய்.

எங்கே மேலே விழுந்து விடுவானோ என்ற பயத்தில் பதறிப்போயிருந்த மதுரா, கண்ணை மூடிக் கொண்டாள்.

“ஆர் யூ ஓகே?” என்று அருகே வந்த பிரின்ஸ் அவளை தொடும் வரை, என்ன நடந்தது என்று கூட பார்க்காமல் கண்ணை மூடியே இருந்தாள்.

“மதுரா.. கெட் அப்” என்று பிரின்ஸ் உலுக்கவும், கண்ணை திறந்து பார்த்தாள்.

அவளை இடித்தவன் வாயில் ஒழுகும் இரத்தத்தை துடைத்துக் கொண்டு, மறுபக்கம் ஓடிக் கொண்டிருந்தான்.

“என்னாச்சு?” என்று அறியா குழந்தையாய் முகத்தை வைத்துக் கொண்டு அவள் கேட்க, சஞ்சய் அவளை முறைத்து வைத்தான்.

“நத்திங். கெட் அப்” என்றான் பிரின்ஸ்‌.

கீழே விழுந்ததில் சிராய்ந்து போயிருந்த கையை உதறிக் கொண்டு அவள் எழ முயற்சிக்க, சஞ்சய் அசையாமல் நின்றான்.

“கை கொடுக்கலாம்ல?” என்று மதுரா முகத்தை சுருக்கிக் கொண்டு கேட்க, “விழும் போது என்னை கேட்டா விழுந்த?” என்று கேட்டான்.

“அவன் தான் வந்து தள்ளி விட்டுட்டான்”

“அவன் தள்ளி விட்டானா? ஸ்டுப்பிட். அவன் உன் மேல விழுறதுக்காக வந்தான்”

“அது தெரியும். அதான் பயந்து போயிட்டேன்” என்றவள் தானாகவே எழுந்து நின்றாள்.

“எங்க அவன்?” என்று தூசியை தட்டிக் கொண்டு கேட்க, “தெரியாது. வேணும்னா தேடிப்போ” என்ற சஞ்சய் பிரின்ஸ் கையை பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டான்.

“ஹேய்..” என்றவள், சஞ்சய் பின்னால் நடந்தாள்.

சுற்றி நின்று சலசலத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் பேசியதும் புரியாததால் கலைந்து விட்டனர்.

சஞ்சய் முகம் தான் இறுகிப்போய் இருந்தது. ஒரு நிமிடம் தாமதித்து இருந்தாலும், என்ன நடந்திருக்கும் என்று நினைக்கவே முடியவில்லை.

அவள் போகிறேன் என்றதும் அவனுக்கு பெரிதாய் வருத்தம் ஒன்றும் இல்லை. ஆனால் பிரின்ஸ் பாவமாய் பார்க்க, அவனுக்காக மதுராவின் பின்னால் நடந்தான்.

அவளை மோதி விழ வைத்து, அவள் மேலேயே விழும் எண்ணத்தில் ஒருவன் வருவான் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்டது.

சஞ்சய் கொடுத்த அடியை வாங்கிக் கொண்டு அவன் ஓடி விட்டாலும், மனம் ஆறவில்லை.

‘இவ ஏன் இப்படி இருக்கா? கொஞ்சம் கூட அறிவே இல்ல’ என்று மனதிற்குள் தாளித்துக் கொண்டு தான் இருந்தான்.

மதுரா அவன் பின்னால் வந்து கொண்டிருந்தாள்.

“என்ன இப்படி நடுரோட்டுல விட்டுட்டு போற? நான் தப்பிச்சு போயிட்டா என்ன பண்ணுவ?”

“அதுக்கெல்லாம் அறிவு வேணும். அது உன் கிட்ட கிடையாது”

“ஆமா எனக்கு அறிவு இல்ல தான். ஆனா ரத்தம் இருக்கு. இங்க பாரு ரத்தம் வருது” என்று கையை தூக்கி காட்டினாள்.

உள்ளங்கை, கால் பகுதிகளில் இரத்தம் வந்து கொண்டிருந்தது.

“ப்ச்ச்.. ஹாஸ்பிடல் போவோம்”

“என்னால நடக்கவே முடியல. கார இங்க எடுத்துட்டு வா ப்ளீஸ்” என்று மதுரா நின்று கொள்ள, “அதெல்லாம் முடியும். வா” என்றவன் அவளை ஒரு கையில் இழுத்துக் கொண்டு நடந்தான்.

“விடு வலிக்குது. நீ எல்லாம் மனுசனா? ஏற்கனவே இரத்தம் வருது. இன்னும் இழுக்குற. உனக்கெல்லாம் ஜென்மத்துக்கும் லவ்வரே கிடைக்காது. ஒரு பொண்ண இவ்வளவு டார்ச்சர் பண்ணுற. அதான் உன் எக்ஸ் உன்னை விட்டு…”

“ஏய்..” என்று சஞ்சய் சீற, மதுரா பயந்து போய் வாயை மூடிவிட்டாள்.

“எதாவது பேசுன.. நானே கீழ தள்ளி விட்டு கால உடைச்சுடுவேன்.”

விரல் நீட்டி எச்சரித்தவன் விறுவிறுவென நடக்க, பிரின்ஸ் மதுராவின் கையை பிடித்துக் கொண்டு அவளோடு நடந்தான்.

“உங்களுக்கு வசுந்தரா ஆண்ட்டிய தெரியுமா?”

“யாருடா அது?”

“அதான் சொன்னீங்களே.. டாட் எக்ஸ்”

“ஓஹ் அவ பேரு வசுந்தராவா?”

“அப்ப தெரியாதா? அப்புறம் ஏன் எக்ஸ்னு சொன்னீங்க?”

“வெறும் எக்ஸ்னு மட்டும் தான் உங்க டாட் சொன்னாரு. பேரெல்லாம் சொல்லல”

“அவங்க இப்ப டாட் கூட இல்ல. எதோ வேற ஒரு அங்கிள் கூட இருக்காங்க”

“அதையும் சொன்னான். ஆனா அவ தான் விட்டுட்டு போயிட்டாளே. அப்புறம் ஏன் இவன் அவளயே நினைச்சுட்டு இருக்கான்? மறந்துட்டு வேற எவளையாச்சும் கல்யாணம் பண்ண வேண்டியது தான?”

“அம்மாவும் அப்படி தான் சொல்லுவாங்க. டாட் தான் கேட்க மாட்டாரு. பட் வசுந்தரா ஆண்ட்டி சூப்பரா இருப்பாங்க. பார்பி டால் மாதிரி”

“ஓஹ் அதான் இவனால மறக்க முடியல போல.. பிரின்ஸ் நீயெல்லாம் இப்படி லவ் பண்ணிடாத. அப்படியே பண்ணாலும் உன்னை வேணாம்னு போயிட்டா, போடினு குப்பையில தூக்கி போட்டுட்டு, ஜாலியா வேற பொண்ண லவ் பண்ணு. உன் டாட் மாதிரி மத்தவங்க உயிர வாங்காத”

அவனிடம் பேசிக் கொண்டே, கார் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டாள்.

மூவரும் காரில் அமர்ந்ததும், நேராக வீட்டுக்கு சென்றான் சஞ்சய்.

“ஹாஸ்பிடல் போகல?”

அவனிடம் பதில் இல்லை.

“பிரின்ஸ் உன் டாட் என்னை கொல்ல பார்க்குறாரு. காயம் பட்டுருக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகல பாரு”

அவள் குற்றபத்திரிக்கை வாசித்தும், அவனிடம் பதில் இல்லை.

“போச்சு.. இரத்தம் நிக்காம போய் நான் சாக போறேன். அய்யோ இந்த அல்பாயுசுல போறதுக்கா ஆண்டவன் என்னை படைச்சான்? இவன் என்னை கொல்ல போறானே”

“சட் அப்.” என்று சஞ்சய் எகிற ஒரு நொடி பயந்தவள், “செத்தப்புறம் சட் அப்ல தான் இருப்பேன்” என்று பதிலுக்கு எகிறினாள்.

“இப்ப பேசாம வரல கதவ திறந்து வெளிய தள்ளி விட்டுருவேன். உடனே செத்துடுவ” என்றதும், கப்பென வாயை மூடிக் கொண்டு பிரின்ஸை பாவமாக பார்த்தாள்.

தித்திக்கும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
17
+1
5
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்