Loading

அது வரை, சாவை நோக்கி செல்லும் பலி ஆடு போல் முகத்தை வைத்திருந்த மதுவின் முகம் சட்டென மலர்ந்தது.

“இப்ப வர்ரியா?” என்று கேட்க, உடனே தலையாட்டி விட்டு கதவைத் திறந்தாள்.

அது பூட்டி இருக்க, சஞ்சய் பக்கம் திரும்பினாள்.

“வர்ரேன்” என்று வாய்விட்டு சொன்ன பிறகே கதவை திறந்து விட்டான்.

இருவரும் இறங்கியதும் காரை பூட்டியவன், “பேப்ஸ்… ஸ்மைல் பண்ணு பார்ப்போம்” என்றான்.

மது புரியாமல் பார்க்க, “ஸ்மைல்” என்று புன்னகைத்து காட்டினான்.

“எனக்கு வரல” என்றாள்.

“வரனும் பேபி. வரலனா வாசுவ இங்க நீ பார்க்க முடியாது” என்று இலகுவாக சொன்னவன், அணிந்திருந்த கோட்டில் ஒரு பட்டனை மட்டும் போட்டுக் கொண்டான்.

அவனது பாவனையில் கண்ணை அழுந்த மூடித்திறந்தவள், “ஓகே” என்று கூறி புன்னகைத்தாள்.

அது கண்ணை எட்டவில்லை. ஆனால் அதைப்பற்றி சஞ்சய் கவலைப்பட்டால் தானே?

“தட்ஸ் குட்” என்றவன் அவளது கையைப்பிடித்து விரலோடு விரல் கோர்த்துக் கொண்டு, “இப்படியே பங்சன் முடியுற வரை இருக்கனும். ஓகேவா பேபி?” என்று கேட்டான்.

மறுக்கவா முடியும்? இழுத்து வைத்த உதட்டோடு வேறு வழியில்லாமல் தலையாட்டினாள்.

கோர்த்த கையோடு இருவரும் உள்ளே நுழைய, அத்தனை கேமராக்களும் அவர்களின் பக்கம் திரும்பியது.

சற்று தள்ளியிருந்த வாசு சலசலப்பில் திரும்பிப் பார்த்தான். சஞ்சய்யுடன் கை கோர்த்துக் கொண்டு மது சிரித்த முகமாக உள்ளே வர, வாசு அதிர்ந்து போய் பார்த்தான்.

எல்லோருக்கும் புன்னகையுடன் பதில் சொல்லிக் கொண்டு வந்த சஞ்சய், வாசுவை பார்த்ததும் மதுவை விடாமல் அழைத்துக் கொண்டு அருகே வந்தான்.

“ஹலோ வாசுதேவன். எப்படி இருக்க? உன் வருங்கால மனைவி உன்னை பத்தி கவலை பட்டுட்டே இருக்கா. பார்க்க எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு. ஃபைன் தான?”

முகத்தில் மாற்றமே இல்லாமல் அவன் கேட்க, மற்ற இருவருக்கும் தான் கேமராவின் முன்னால் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது பெரும்பாடாக இருந்தது.

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாய், “ஹலோ சஞ்சய் சார்.. எப்படி இருக்கீங்க? இது யாரு உங்க கேர்ள் ஃப்ரண்ட்டா?” என்று கேட்டுக் கொண்டு வந்தான் ஒருவன்.

‘அய்யோ.. இல்ல’ என்று மது மனதில் அலற, சஞ்சய் ஒப்புக்கொள்ளவும் இல்லை மறுக்கவும் இல்லை. வாய்விட்டு சிரித்து விட்டு, “எக்ஸ்கியூஸ் மீ” என்றவன், மதுவை இழுத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

“கொடுத்து வச்ச மனுசன். இல்லையா வாசு சார்?” என்று கேட்டு, அவனது சாபத்தையும் வாங்கிக் கொண்டு சென்றான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்