Loading

  1. ↔அது ஒரு 🗻 மலைப்பாங்கான பகுதி . மலைப் பிரதேசம்  . அங்கு ஒருவன் குதிரை குட்டிகளை வாங்கி அதற்கு பயிற்சி கொடுத்து பிறகு அதை விற்பனை செய்து வந்தான் .

 

அவன் குதிரை களுக்கு எவ்வாறு பயிற்சி கொடுப்பான் என்றால் , நீங்கள் குதிரையின் மேல் அமர்ந்து , காலை இரண்டு பக்கமும் போட்டுக் கொண்டு , பிறகு காலை குதிரையின் மேல் அமர்ந்து அசைக்க , குதிரை ஓட ஆரம்பிக்கும்

 

பிறகு குதிரை வேகமாக ஓட வேண்டும் என்றால் ,   ” அப்பாடி   ” என்று சொல்ல வேண்டும் . குதிரை நிற்க  வேண்டும் என்றால் ,  நீங்கள் ,  ” ஐயோ ” என்று சொல்ல வேண்டும் . எவ்வளவு வேகமாக ஓடினாலும் குதிரை நின்று விடும் .பிறகு நீங்கள் இந்த கட்டளை சொல்லை தவறுதலாக பயன்படுத்தினால் , அதன் பின்விளைவுகளை நீங்கள் தான் அனுபவிக்க வேண்டும் .‌இதை குதிரை வாங்க வரும் எல்லோரிடமும் சொல்லி தான் அவன் குதிரையை விற்பனை செய்வான் .

 

வேண்டுமென்றால் நீங்கள் , குதிரை வாங்கும் முன்பு , குதிரையை டிரையல் (Trial ) பார்க்கலாம் .  அதாவது நீங்கள் குதிரையை  ஓட்டி பார்த்து பிறகு வாங்கலாம் .  அன்று ஒருவன் குதிரையை வாங்க வந்திருந்தான் அவன் குதிரையை ஓட்டி  , பார்த்து பிறகு வாங்கி கொண்டு சென்றான் .

 

அவனிடமும் அந்த கட்டளை சொல்லை சரியாக பயன்படுத்தி தான் குதிரையை ஓட்ட வேண்டும் என்று சொல்லி தான் விற்பனை செய்து இருந்தான் . அவனும் சரியென்று சொல்லி வாங்கி கொண்டு சென்றான் . அவனுடைய ஊர் அங்கிருந்து தூரமாக இருந்ததால்  , அவன் குதிரையை வேகமாக ஓட்ட ஆரம்பித்தான் .

 

அது மலைப்பாங்கான பகுதியால் , மலைகள், குன்றுகள் மற்றும் சமவெளிகள் அதிகமாக இருந்தது . அவன் திடீரென்று பார்க்க , குதிரை மிக வேகமாக ஓடி ஒரு மலையுச்சியை நோக்கி  சென்று கொண்டிருந்தது . அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை . கட்டளை சொல்லை மறந்தான் . குதிரை மலையுச்சியில் ஏறிக்கொண்டு இருந்தது . இன்னும் சற்று தூரத்தில் , மலையுச்சி வந்துவிடும் . அதன் கீழ் மிகப் பெரிய , அதளபாள பள்ளம் . அவன் பயத்தில்  உறைந்து , ” ஐயோ ” என்றான் , கண்ணை மூடிக் கொண்டு . அவ்வளவு தான் என்று நினைத்துக்கொண்டு . மிக  ஆச்சரியமாக வேகமாக ஓடி வந்த குதிரை , மலையுச்சியில் சடன்  ” பிரேக் ” போட்டது போல நின்று விட்டது . கீழே பார்க்க , மிகப்பெரிய பள்ளம் .‌ தான் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தப்பிவிட்டதை எண்ணி , குதிரை விற்றவர் சொல்லிய கட்டளை சொல்லை மறந்து  , சந்தோஷத்தில் , ” அப்பாடி ” என்றான்  பெருமூச்சுடன்…

 

 

ஆசிரியர் குறிப்பு : ஒரு திகில் கதை , அதுவும் சிறுகதை எழுத ஆசை அதான் தாக்கம் , தான்

இந்த கதை . உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்