டீசர் 1
“பொறுக்கி ராஸ்கல்ஸ். காலேஜுக்கு படிக்க வரீங்களா, இல்ல இப்படி பொண்ணுங்க பின்னாடி சுத்த வரீங்களா? ஸ்டுடெண்ட்ஸ் மாதிரியா பிஹேவ் பண்றீங்க நீங்க?” என்று தன்முன் நின்றவர்களை பார்த்து திட்டிக் கொண்டிருந்தான் தீரன் ஆத்ரேயன்.
“கூல் தீரன்.” என்று அமீர் அவனை சமாதானப்படுத்தும் போதே, அந்த குழுவை சேர்ந்த எவனோ ஒருவன், “ஆத்ரேயான்னு பேரு வச்சாலும் வச்சாங்க, நல்லா ஆத்து ஆத்துன்னு ஆத்துறான்டா.” என்று கேலி செய்தான்.
உடனே, கோபம் எக்குத்தப்பாக எகிற, “யாருடா அது? ஹான், யாரு? தைரியம் இருந்தா, முன்னாடி வந்து சொல்லு!” என்று சட்டையை மடக்கிக் கொண்டு இடமும் வலமுமாக தீரன் நடக்க, ஒருவழியாக ஆடி அசைந்து அங்கு வந்து சேர்ந்தார் அந்த துறையின் தலைவரான சீனிவாசன்.
“தீரன், என்ன நடக்குது இங்க? கிளாஸ் டைம்ல இங்க எதுக்கு கூடி இருக்காங்க ஸ்டுடெண்ட்ஸ்?” என்று சாவகாசமாக அவர் கேட்க, வாயிலிருந்து வார்த்தைகள் கொட்ட தயாராக இருந்தது தீரனுக்கு.
துறை தலைவருக்கும் மண்டக்கப்படி நடக்கும் அபாயம் இருந்ததால், தீரனை பேச விடாமல் அமீரே நடந்ததை விளக்கினான்.
*****
“தீரன், இதை நீங்க இவ்ளோ ஹார்ஷா ஹேண்டில் பண்ணனுமா?” என்று சீனிவாசன் வினவ, மாணவர்களை வைத்துக் கொண்டு தன்னை கேள்வி கேட்கும் சீனிவாசனை முறைத்துக் கொண்டே, “எது சார் ஹார்ஷ்? பிடிக்கலன்னு சொல்ற பொண்ணை பின்னாடியே துரத்தி, ஸ்டாக் பண்ணி, பயமுறுத்தி, காலேஜுக்கே வர முடியாத அளவுக்கு மென்டல் டார்ச்சர் குடுத்ததை விட, இப்போ நான் என் சட்டையை மடக்குனது ஹார்ஷ் பிஹேவியரா?” என்று நக்கலாக வினவினான் தீரன்.
அவன் கேட்டது, ‘எங்கு நீ ஆம் என்று சொல்லித்தான் பாரேன்’ என்று சண்டைக்கு அழைப்பது போலவே இருந்தது சீனிவாசனுக்கு.
‘ரவுடி ரவுடி! எச்.ஓ.டின்னு கொஞ்சமாச்சும் மரியாதை தரானா இவன்?’ என்று மனதிற்குள் குமைந்தாலும், வெளியே அதை காட்டிக் கொள்ளவில்லை.
“இனியும், நீங்க அதை ஹார்ஷ் பிஹேவியர்னு நினைச்சா, ஆக்ஷன் எடுங்க. நான் பார்த்துக்குறேன்.” என்று கூறிவிட்டு தீரன் அங்கிருந்து வெளியேற முயல, அப்போது மாணவர்களின் மத்தியிலிருந்து மீண்டும் ஒரு குரல் கேட்டது.
“வாத்தி அறிவுரை எல்லாம் ஸ்டுடெண்ட்ஸுக்கு தான் போல! ஏன்னா, இங்க ஸ்டுடெண்ட்ஸ் மட்டும் தான தப்பு பண்றாங்க!” என்று ஒருவன் கூறவும், இப்போது நிதானமாக திரும்பியவன், கூர்ப்பார்வையுடன் அவர்களை பார்த்தபடி, “ஓஹ், அப்போ நான் தப்பு பண்ணேன்னு சொல்றீங்களா? சரி, என் தப்பு எதுன்னு சொல்லுங்க கேட்போம்.” என்று கைகளை கட்டிக் கொண்டான்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய, “அட சொல்லுங்க. என்ன பயம் உங்களுக்கு? அதான் உங்க எச்.ஓ.டி துணைக்கு இருக்காரு. அவரை மீறி நான் ஹார்ஷா பிஹேவ் பண்ணிட முடியுமா?” என்று அவன் இலகுவான குரலில் பேசிய போதும், வார்த்தைகள் நக்கல் சொட்ட சொட்ட தான் வெளிப்பட்டன.
அதைக் கேட்ட அமீர் சிரிப்பை கட்டுப்படுத்த முயல, சீனியோ சீனி வெடி போல வெடித்துக் கொண்டிருந்தார் உள்ளுக்குள்.
ஆனால், சீனிவாசனின் பெயர் மாணவர்களுக்கு தைரியம் கொடுத்தது போலும்.
ஒருவன் முன்னே வந்து, “ப்ரொஃபெசரா இருக்க நீங்க, ஒரு ஸ்டுடெண்ட்டை கல்யாணம் பண்ணியிருக்கீங்களே, அது தப்பில்லையா?” என்று வினவ, அத்தனை நேரம், ‘என்னிடம் சுட்டிக்காட்ட அப்படி என்ன குறை இருந்து விடப்போகிறது?’ என்ற மிதப்பில் இருந்தவன், இக்கேள்வியில் தளர்ந்தான்.
உடல் தளர்ச்சிக்கு மாறாக, முகமோ இறுகி கடினமாக மாறியது.
இன்னொருவனோ, “நாலு மாசம் முன்னாடி, காலேஜ்ல நடந்த இன்சிடெண்ட் மறந்துடுச்சா சார்? அவ்ளோ சீக்கிரம் எப்படி மறக்கும்? ஏன்னா, இப்போ நாங்க சொன்னதை, அன்னைக்கு விஷால் சார் விஷயத்துல சொன்னதே நீங்க தான? விஷால் சாருக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமா?” என்று வினவ, தன்னை நோக்கி வரும் கேள்விக்கணைகளின் உஷ்ணம் அவனை எரித்துக் கொண்டிருந்தது.
இந்த சூடு அவனை மட்டுமல்ல, அவனின் கரம் பிடித்தவளையும் சேர்த்தே அக்கினி பரீட்சையில் நிறுத்தப் போகிறது என்பதை அவன் அப்போது அறியவில்லை. அறியும்போது, அவர்களுடன் அவர்களின் வாழ்க்கையும் அந்த தழலில் கருகிப் போகுமோ?
😍😍😍Teasor laye impress pannittan theeran 🤗
Thank you sister