கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர், ஜென்ம ஜென்மாகத் தொடரும் பந்தம். அந்த பந்தத்தில் இணையும் முன் பல சந்திப்புகள் நடைபெறும், பல அன்பு பரிமாற்றம் நடைபெறும், அதில் ஒன்று பெற்றவர்கள் சந்திப்பாக இருக்கலாம் இல்லை காதலர்களின் சந்திப்பாக இருக்கலாம்.
ஆனால் இங்கோ, பார்த்த முதல் சந்திப்பிலே காதல் மலர்ந்ததோ இல்லையோ கல்யாணம் முடிவு ஆனது. அதுவும் ஒரு இக்கட்டான நிலையில் நடைபெறும் அக்ரீமெண்ட் மேரேஜ். ஒப்பந்த கல்யாணம். இதனால் விளையும் பாதிப்பு என்னவோ?? யாருக்கோ???
கதையில் இருந்து சில துளிகள்……
மதுரா “மேம் நெக்ஸ்ட் வீக் ப்ரேக். எனி பிளானிங்?” என்று ஆர்வமாக ஜெனியிடம் கேட்க,
“மது நீ எனக்கு முதலில் நல்ல ப்ரெண்ட். பெயர் சொல்லியே கூப்பிடு. எப்ப பார்த்தாலும் மேம் மேம்னு கடுப்ப கலப்பிட்டு” என்று ஜெனி கடுப்புடன் போனைப் பார்த்து கொண்டு சொன்னாள்.
இருவரும் பள்ளி காலத்திலிருந்தே நண்பர்கள். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு முன்னேறிய நிலையில் மதுவின் குடும்ப நிலையை அறிந்து தன் அருகிலே வைத்துக் கொண்டாள். வேலை நேரத்தில் மேம் என்றே அழைப்பேன் என்ற பிடிவாதக்காரி.
மது “என்னப்பா இவ்வளவு ஹாட்டா இருக்க என்ன ஆச்சு. சார் போன் பண்ணலையா” என
“உங்க சார் இருக்கிறாரே.. என்னைப் பதற வைக்கிறதில் கில்லாடி. என் அப்பா நிலைமை தெரியும் தானே. அவருக்கு பயம் எங்க என் கல்யாணத்தை பார்க்க முடியாமல் போய்டுவேனோனு. விபி கிட்ட சொன்னா இன்னும் இரண்டு வருசம் போகட்டுமேனு சொல்றார்” என்று பெருமூச்சுடன் சொல்ல,
“பணம் வந்தா குணம் மாறிப் போகிற காலம் மேம். ஆனால் சார் எப்படி எல்லாம் இல்லையே. உங்களை உண்மையா விரும்புறார். கண்டிப்பா கைவிட மாட்டார். எதோ ஒரு விசயம் அவரை தடுக்கலாம். எது என்னனு கண்டுபிடிங்க” என்றாள்.
********
விபி சத்தியமாக இப்படி ஒரு பெண்ணை எதிர்பார்க்கவில்லை. அழகு கொட்டி கிடைக்கும் பேரழகியாகக் காட்சியளித்தாள். நேர்த்தியான உடையில் கம்பீரமாகவும் இருந்தாள்.
ஒரு நிமிடம் அவனைத் தடுமாற வைத்த அழகியைக் கண் எடுக்காமல் பார்க்க,
அவன் பார்வையைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாத மோகித்ரா அவனைக் கூர் கண்களால் பார்த்துக் கொண்டே “லெட்ஸ் கேட் மேரிட்” என
“வாட்!!” என்று புரியாமல் விழித்தான் விபி என்ற விஸ்வ பிரசாத்.
இனி!!!!
நிலானி
இந்த ஸ்டோரி நவம்பர் 1 ல் இருந்து ஸ்டார்ட் பண்றேன் ப்ரெண்ட்ஸ் . கொஞ்சம் ஸ்டோரி எழுதிட்டு போட ஸ்டார்ட் பண்றேன் . அப்ப தான் என்னால கொஞ்சம் ரெகுலரா கொடுக்க முடியும் . சீக்கிரமா ஸ்டோரியோடு ஓடி வரேன் .