343 views
டீஸர் …..
பிரபல தொலைக்காட்சி சேனல் அமைந்திருக்கும் இடத்தில் திரளான மக்கள் கூடியிருந்தனர். அதிலும் பெரும்பாலானோர் வயது பெண்கள் கூட்டமே.
வாசலில் பல கோடி மதிப்புள்ள ஒரு கார் வந்து நிற்க கூட்டம் ஒதுங்கி கார் உள்ளே வர வழிவிட்டது. ஆயினும் கூச்சல் நின்றபாடில்லை. இன்னும் அதிகரிக்க தான் செய்தது.
“லவ் யூ மது… நான் உங்க பெரிய ரசிகை” என்று பல பெண்கள் கூச்சலிட்டு கொண்டிருக்க காரினுள் இருந்து இறங்கினான் அவன்.
நீல நிற கோட் ஷூட்டில் கூலிங் கிளாஸ் அணிந்து மன்மதன் போன்று.. அல்ல அல்ல மன்மதனே வந்து இறங்கியது போன்று இருந்தான். தனக்காக கூடியிருந்த கூட்டத்தை நோக்கியவன் ஸ்டைலாக தன் கூலிங் கிளாசினைக் கழட்டி தன்னை நேசிக்கும் கூட்டத்திற்கு ஹாய் என்று கைக்காட்ட பெண்களின் கூச்சல் அதிகரித்தது.
அவனின் கண்கள் கூட்டத்தில் யாரையோ தேடியபடி இருக்க தேடிய முகம் இல்லை என்று தெரிந்தவன் நிம்மதி பெருமூச்சும் இளக்கார சிரிப்பையும் கொடுத்தபடி உள்ளே சென்றான். பலவகையான மதிப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டவன் அவனுக்காக பிரத்யேகமாக ஒதுக்க பட்ட தன் இருப்பிடத்தில் அவன் அமர நிகழ்ச்சி இயக்குனர்,
“லைட்ஸ், கேமரா, ஆக்ஷன்” என்று கூறியவுடன் நிகழ்ச்சி தொகுப்பாளினியோ,
“ஹாய் ஹெலோ வணக்கம் இது உங்க சேனல் “*******” நாம எல்லாரும் ஆவலோட எதிர்பார்த்துட்டு இருந்த பிரபல நடிகர், பெண்களின் கனவு கண்ணன், வருங்கால ரொமென்டிக் ஸ்டார் மதுரன் அவர்களோட நேர்காணல் தாங்க இது.. வாங்க நிகழ்ச்சிக்கு போகலாம்..” என தன் உரையை ஆரம்பித்தாள் அவள்.
——————————————————-
இரவு பன்னிரெண்டரை மணி அளவில்.. தன்னைத் தவிர யாருமில்லா தன் வீட்டில் தன் தனிப்பட்ட அறையில் எதையோ தேடும் பொருட்டு தன் கைகளால் தடவித் தடவி அலமாரியைத் துழாவிக் கொண்டிருந்தாள் மதுரிகா.
திடிரென ஏதோ சத்தம் கேட்பது போல் ஓர் உணர்வு. மெல்லிய சத்தம் தான் கேட்டது. அலமாரியைத் துழாவுவதை கைவிட்டவள் மெதுவாக சத்தம் கேட்டுத் திரும்பி நின்றாள். அதற்குள் தான் கேட்ட சத்தம் இன்னும் சற்று அருகினில் கேட்டது.
பூட்ஸ் இல்லாமல் வெறும் ஷாக்ஸ் மட்டும் அணிந்தபடி யாரோ ஒருவர் மெதுவாக கவனமாக நடந்து வருவது போன்று. மதுரிகாவின் இடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால் கண்டிப்பாக இவ்வளவு மெல்லிய சத்தத்தை அறிந்திருக்க மாட்டார்கள்.
தன்னை நெருங்கி அந்த சத்தம் வருவதை மதுரிகாவினால் நன்கு உணர முடிந்தது. ஆயினும் அவள் மனதினில் பயம் என்பது அறவே இல்லை. கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு தைரியமாக நின்றாள் அவள்.
அவளை மிரட்ட எண்ணி அந்த ஷாக்ஸ் காலுக்கு சொந்தக்காரர் அவளின் கழுத்தை நெறிக்க எண்ணி கைகளை அருகில் கொண்டு வர அதற்குள் மதுரிகாவோ,
“வா தூரா.. நீ வருவ னு ஏற்கனவே எனக்கு தெரியும்.. அதனால தான் தூங்காம இருக்கேன்” என்று அவள் கூற கழுத்தருகில் சென்ற கைகள் தானாக தன்னை நிறுத்திக்கொண்டன.
“என்னாச்சு தூரா.. என்கிட்ட பேச தான வந்த அப்றம் என்ன பேசாம நிக்குற…” என மீண்டும் அவள் கேட்க எதிரில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. மாறாக மூச்சுவிடும் சத்தம் மட்டுமே கேட்டது.
“ஓ என்னடா.. இவ்ளோ மெதுவா வந்தும் கண்டுபிடிச்சுட்டாலே னு பாக்குறியா” என கேட்டுத் தன்னக்குள்ளேயே சிரித்தவள்,
“எனக்கு கண்ணு மட்டும் தான் தெரியாதே தவிர.. என்னோட உடம்புல இருக்க ஒவ்வொரு செல்லும் உன்னை நல்ல தெரிஞ்சு வச்சுருக்கு.. நீ வந்தா எங்க வீட்டு காலிங் பெல் எல்லாம் அடிக்கனும் னு அவசியம் இல்லை.. நீ சத்தம் இல்லாம வந்தாகூட என்னோட இதயம் எனக்கு வேகமா துடிச்சு காட்டி கொடுத்துரும்.. அப்றம் உன்னோட வாசனை.. ஐ மீன் எனக்கு பிடிச்ச உன்னோட பெர்ஃப்யூம்.. இது போதாதா நீ தான் னு எனக்கு தெரிய” என கேட்க எதிரில் நின்றவனின் மூச்சு விடும் சத்தம் இன்னும் அதிகரித்தது கோபத்தில். அதையும் கண்டு கொண்டவள்,
“சரி சரி கோபப்படாத.. வந்த விஷயத்தை சொல்லு.. பேச வந்துட்டு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்” என அவனின் கோபத்தை இவள் கிளரும்படி பேச அதற்கு மேல் பொறுக்காதவன்,
“பேச வரல டி.. உன்னை கொலைப் பண்ண தான் வந்தேன்..” என்றவன் அவள் கழுத்தினை நெருக்கினான் அவளுக்கு வலிக்காதபடி. அவளோ சிரித்தாள்.
“வலிக்காம கொலை பண்றவன் நீயா தான் தூரா இருப்ப.. இது தான் என் மேல உனக்கு இருக்குற காதல்” எனக் கூற வந்தவள் அதை கூற முடியாமல் தவித்தாள் அவன் மேலும் நெருக்கியதில்.
அவள் திணறுவதைப் பார்த்தவன் தன் கைகளை அவள் கழுத்தினில் இருந்து எடுத்து விட்டு,
“இங்க பாரு காதலும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது.. கண்ணு தெரியதவளாச்சே னு பாவப்பட்டு உன்னை விட்டு வச்சா ரொம்ப தான் ஆடுற நீ.. நீ என்ன அவ்ளோ பெரிய அழகியா.. உனக்கு நான் கேக்குதா.. இது தான் லாஸ்ட் வார்னிங். என்னோட அனுமதி இல்லாம என்னை உன்னோட லவ்வர் னு யார்கிட்டயும் இனிமே நீ வாய திறக்கக்கூடாது.. அப்றம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்..” என்று எச்சரித்தவன் விறுவிறுவென வெளியேறிவிட்டான் வீட்டை விட்டு.
“நீ என்ன தான் என்னை காயப்படுத்தினாலும் திட்டினாலும் அது எல்லாத்துலயும் எனக்கு என்மேல உள்ள உன்னோட காதல் தான் தெரியுது.. உன்னோட இந்த பொய் வேஷத்தை என்னோட மனசு நம்ப மறுக்குது.. லவ் யூ தூரன்” என்று தனக்குள்ளேயே கூறிக்கொண்டவள் தன்னவனிடம் பேசிய களிப்பில் நிம்மதியாக உறங்க சென்றாள்.
-சுந்தரி செழிலி
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1