ஏனோ, பேரன்புவிற்கு அதனின் சீற்றத்தைக் கண்டு உள்ளுக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. இதற்குமுன்னும் ஐந்தடி இராஜநாகத்தை இவன்தான் பிடித்திருந்தான். ஆனால், அதனைவிட இது இரண்டு மடங்கு பெரியதுதான். உள்ளுக்குள் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது.
“அன்பு, கை நடுக்கத்த காட்டிடாத. உன்னோட பலவீனம் தெரிஞ்சா அது படையெடுக்க ஆரம்பிச்சுடும். பொறி வச்சிட்டேன். நீ அப்படியே அதோட வால புடிச்சு கேட்சிங்க் ஸ்டிக்ல தலைய ஹோல்ட் பண்ணு.” தொடர்ந்து அவனின் பதற்றத்தை குறைக்கும் பொருட்டு பேசிக்கொண்டிருந்தாள்.
பேரன்புவின் இதயத் துடிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. பாம்புகளுக்கு 90 டிகிரி பார்வை கோணம் உண்டு. மேலும், அது அனைத்தையும் உன்னிப்பாகக் கவனிக்கும் தன்மை கொண்டது. தாம் தாக்கப்படப் போகின்றோம் என்ற சிறிய அச்சம் ஏற்பட்டாலே அது எதிர் தாக்குதல் செய்ய தயாராகிவிடும்.
பேரன்பு பிடித்திருந்த அந்த இராஜநாகமும் வெகுநேரமாக பேரன்புவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது. சொல்லப் போனால், அது தாக்குவதற்கான சரியான தருணத்தை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். அதுவும் இருட்டில் கருநாகம் படையெடுத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே எச்சில் விழுங்கச் செய்கிறது.
அன்புவின் கைகள் நடுக்கம் கொண்டன. அவனின் பிடி தளர ஆரம்பித்தது.
“அன்பு என்னடா பன்ற? விட்றாத. ஹோல்ட் பண்ணு.”
“அங்கை” என்றபடி மயங்கி விழுந்தான் பேரன்பு.
“சாமிய நல்லா வேண்டிக்கிட்டு ஊருக்குள்ள வாங்க. இத்தன நாளா உன்ன எதிர்பாத்துட்டு ஆத்தா இருக்கா. நல்லா கும்புட்டு வா பிறைசூடா.” என்றவரும் கடவுளை வேண்டினார்.
‘ஆத்தா, ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் நான் ஊருக்குள்ள வரேன். இத்தன வருசம் கண் இமைக்குற நொடில போய்டுச்சு. அப்பாவும் அம்மையும் என்னை ஏத்துக்கணும். முக்கியமா நான் செஞ்ச காரியத்துக்கு சொக்கன் என்கூட பேசுவானான்னு கூட தெரியல. இனிமே நடக்குற எல்லாத்துக்கும் நீ தான்மா துணையா இருக்கணும். மஞ்சரிய மறுபடியும் பாக்குற சந்தர்ப்பம் கிடைக்குமா?’
Stay tuned…
Enada பாம்பு எல்லாம் வருது 🫣 நான் படத்துல கூட பார்க்க maattenee செம்ம
Thank you ka.. apdiye UD um padicha naan happy annachi…