Loading

 

ஜாலம் 16

 

அன்றைய சம்பவத்துக்கு பின் மாதம் ஒன்று கடந்திருந்தது…

 

வீட்டில் குழந்தைகளின் சத்தத்தை தவிர பெரிதாக வேறெதுவும் கேட்பதில்லை.. மீனாட்சியின் பேச்சு வெகுவாக குறைந்திருந்தது.. அதுவும் குறிப்பாக வேந்தனிடத்தில்.. அவள் மனதில் என்ன இருக்கிறது என்று நண்பர்களாலேயே கண்டறிய முடியவில்லை.. ஆனால் அவளது பூரிக்கோ அவள் எண்ணங்கள் அத்தனையும் அத்துப்படி..

 

மீனாட்சிக்கு அவன் மீது கட்டுக்கடங்காத கோபம் அது எதற்காக என்பது வரை எதுவும் அவன் கண்ணிலிருந்து தப்பவில்லை.. அந்த கோபத்துக்கு முழு காரணமும் அவன் தானே…

 

வேந்தனோ, விஜயின் நிலைக்கு தான் தான் காரணம் என காவல்துறையினரிடம் சென்று அவனாகவே குற்றத்தை ஒப்புக்கொண்டு கைதாகி இருந்தான்…

 

ஆனால் நீதிமன்ற விசாரணை  என்னவோ அவனுக்கு சாதகம் தான்… தற்காப்புக்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே கருத்தப்பட்டது..

 

அதற்கு பெரிதும் உதவியாக இருந்தவை, சம்பவ இடத்தில் இருந்த காவலதிகாரிகளின் வாக்குமூலமும்   பெண்களின் புகைப்படம், காணொளி என விஜய்க்கு எதிராக  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களும் தான்.. 

 

ல்லாம் ஒரு வகையில் அவனுக்கு சாதகமாகவே அமைய, நிரபராதி என்ற ரீதியில் அவனை விடுதலை செய்திருந்தனர்…

 

என்னதான் அவன் விடுதலையாகி இருந்தாலும் தனக்கு பதிலாக  தண்டனையை ஏற்க சென்ற கோபம் அவன் மீது இன்றளவிலும் மீனாட்சிக்கு குறையவே இல்லை…

 

அன்று விடுமுறை தினம்.. இருவரும் குழந்தைகளுடன் வீட்டில் தான் இருந்தனர் 

 

காலையில் எழுந்ததில் இருந்து மீனாட்சிக்கு வேலை முடிந்தபாடில்லை, துணி துவைத்து, வீடு கழுவி, சமைத்து.. அத்தனை வேலைகளுக்கு நடுவில் குழந்தைகளையும் பார்த்து, என நிற்க நேரமில்லாமல் தான் சுழன்று கொண்டிருந்தாள்…

 

ஆனால் இதில் எதிலும் கலந்துகொள்ளாமல் வேந்தன் அங்கே வெறுமனே பார்வையாளனாக அமர்ந்திருக்க, மீனாட்சியின் பார்வை ஒருமுறை சந்தேகமாக இவனை தொட்டுச்சென்றது.. 

 

இத்தனை நாளில் தான் பேசாமல் இருந்தாலும் வழிய வந்து பேசுவதோடில்லாமல் வேலைகளிலும் உதவுபவனாங்கிற்றே… இன்றோ அந்த இடத்திலே அசையாமல் அமர்ந்திருக்க, என்னவென்று தான் பார்த்துவைத்தாள் அவன் மனைவி… 

 

அவள் பார்வையை உணர்ந்து கொண்டவனுக்கு உதட்டுக்குள் சிரிப்பு.. ஆனால் காட்டிக்கொள்ளவில்லை.. 

 

மீனாட்சியின் பராமுகம் தொடர்ந்து கொண்டே இருக்க, வேந்தனின் பொறுமை என்றோ போயிருந்தது… அதற்கு இன்று முடிவுகட்ட சிறப்பான வேலை ஒன்றையும் செய்துவிட்டே தான் சிங்கம் அமைதியாக அமர்ந்திருக்கிறது…

 

“மீனும்மா.. என் புது அதுவ காணோம்…” என்று அவள் அருகில் வந்து நின்றான் ஆர்வன்..

 

“எது ஆரு..”

 

“அதான் மீனும்மா.. அது..” என்று இடுப்பில் இரு பக்கமும் முதல் இரு விரல்களை வைத்து சைகை செய்ய புரிந்து போனது தாயவளுக்கு..

 

“அத ஜட்டின்னு சொல்றதுக்கு என்னவாம் என் ஆருக்குட்டிக்கு.. எப்பப்பாரு இப்படியே கேட்டா எப்போ பெரிய பையன் போல பேசுவாராம் என் ஆரு..”

 

“ம்ம்மா ஷையா இருக்கே.. நான் என்ன பண்ண.. இதோ பாருங்க இவ சிரிக்கிறா.. என்று அருகில் சிரித்தபடி நிற்கும் மகியை காட்ட,

 

“உனக்கென்னடி சிரிப்பு..” என்று மகியிடம் கேட்க.. மகளோ வெடுகேன்று முகத்தை திருப்பிக்கொண்டாள்…

 

“நானும் பாத்துட்டே தான் இருக்கேன் மேடம் ரொம்ப தான் சிலுத்துகிறீங்க.. என்னடி உனக்கு..” என்று கோபமாய் வினவ அப்போதும் மகியிடம் அதே மிதப்பான பார்வை தான்…

 

“உன்ன தான் கேக்குறேன் சொல்லுடி..” என்று மகள் கையை பிடிக்க, தட்டிவிட்ட மகியோ, “அப்பா கூட பேசாத யாரும் எங்கிட்ட பேச தேவல்ல..” என்று மீண்டும் முகத்தை திருப்பிக்கொள்ள, மீன்ட்சியின் பார்வை வேந்தனை நோக்க, அவன் பார்வையில் கண்டனம்..

 

இப்படி குழந்தைக்கு தெரியுமளவுக்கு நடந்து கொண்ட மடத்தனைத்தை நொந்தவள்.. “மகிகுட்டிக்கு யாரு சொன்னா நான் அப்பாகூட பேசுறதில்லனு..”

 

“யாரும் சொல்லல மகிக்கே தெரியும்..”

 

“அடடா பெரியமனிஷிக்கு தெரியுமாமா.. நான் அப்பாகூட பேசுவனே.. நீங்க ரெண்டு பேரும் தூங்குனதுக்கு அப்பறம்..” என்றாள் குரலில் ஏற்ற இரக்கத்துடன்..

 

மகியும் ஏன் என்று அறியும் ஆர்வத்தில் கோபத்தை மறந்தவளாக, “ஏன்..” என்றாள்..

 

அதுவா.. அப்பாகூட பேசுனா ரொம்ப நேரம் பேசணும்.. அப்பறம் எப்படி மகிக்குட்டியையும் ஆருக்குட்டியையும் கவனிக்கிறதாம்.. வேணும்னா உன் அப்பாகிட்டயே கேட்டுப்பாறேன்…” என்க

 

மகி பார்வையாலேயே “ஆமாவாப்பா..” என்று வேந்தனிடம் சைகை செய்ய அவனும் பதிலுக்கு மேலும் கீழுமாய் தலையாட்டினான்…

 

“இப்போ ஓகேயா கோபம் போய்டிச்சா..”

 

“இந்த கோபம் போய்டிச்சு… ஆனா போன மாசம் எங்கள எல்லாம் விட்டுட்டு  நீ மட்டும் தனியா ரெண்டு நாள் டூர் போனத மன்னிக்க மாட்டேன்..” என்றவள் உள்ளே ஓடிவிட.. மீனாட்சி அந்த நாளின் ஞாபகத்தில் உறைந்து நின்றாள்..

 

மீனாட்சி காணாமல் போன இரண்டு நாட்களுக்கும் குழந்தைகளிடம் சொல்லி சமாளித்த பொய் அது…

 

அந்த தாக்கத்தில் நின்றிருந்தவளை  ஆர்வன் சட்டையை பிடித்து இழுத்து உலகுக்கு அழைத்து வந்திருந்தான்..

 

அவன் முகத்தை பார்த்த மீனாட்சிக்கோ எதைப்பற்றியும் யோசிக்காதே நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கையை கொடுத்தது போலவே ஒரு தோற்றம்..

 

“என்னடா கண்ணா?..”

 

“மீனும்மா..” என்று மீண்டும் அவன் தயங்க.. 

 

“உன் ஆளு ஸ்பைடர் மேன் தான் வெளில தெரியிற போல போட்டுட்டு சுத்துறாரே ஆரு உனக்கென்னவாம்.. இனிமேல் வேணும்னா ஸ்பைடர் மேன் காணோம்னு கேளு.. அம்மாக்கு புரியும் ஓகேவா?..” என்றவள் அவன் கேட்டதை எடுத்து தர..

 

அவனோ சிரிப்புடன்  “தேங்க்ஸ் மீனும்மா.. டபுள் ஓகே..” என்று கன்னத்தில் முத்தமிட்டு செல்ல, மீனாட்சியின் இதழ்கள் பல நாளைக்கு பிறகு சிறிதாய் விரிந்துகொண்டது…

 

அதே சிரிப்புடன் மெல்ல திரும்பியவளின் கண்கள் வேந்தனின் கண்களோடு முத்தமிட்டுக்கொள்ள, அவளோ சட்டென பர்வையை திருப்பிகொண்டாள்.. ஆனால் அவன் பார்வை அப்படியே அவளிடம் தான் தேங்கி நின்றது.. அதனை பார்க்காமலே அவளால் உணர்ந்துக்கொள்ளவும் முடிந்தது…

 

“செய்றதையும் செஞ்சிட்டு பாக்குறத பாரு…” என்று மனதுக்குள் திட்டியபடி மீண்டும் வேலையை தொடர, மீனாட்சியின் தொலைபேசி அதன் இருப்பை உணர்த்தியது…

 

எடுத்துப்பார்க்க ஸ்ருதி தான் அழைத்திருந்தாள்.. உயிர்ப்பித்து காதில் வைக்க.. “உனக்கு விஷயம் தெரியுமா மீனு..”

 

“எடுத்ததும் விஷயம் தெரியுமான்னு கேக்குறியே.. என்னனு சொன்னாதானடி தெரியும்..” என்றாள் இருந்த கோபம் எல்லாம் அவளிடம் கொட்டியபடி…

 

“விஷயம் என்னனு தெரிஞ்சா நீ இப்படி பேசமாட்ட…”

 

“அடியேய் இப்படியே பேசிட்டு இருந்தன்னு வெய்யேன் கல்யாண பொண்ணுன்னு கூட பாக்காம வெளுக்க போறேன் பாரு..”

 

“ஓகே ஓகே டென்ஷன் ஆகாத.. அடுத்த மாசம் கல்யாணத்த வெச்சிட்டு உன்னோட உருள என்னால முடியாதுடா சாமி…”

 

“அடியேய் என்னனு தான் சொல்லி தொலையேன்.. எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு.. இங்க ஒன்னும் யாரும் வெட்டியா இல்ல…” என்று வேந்தனை முறைத்தபடி தோழியிடம் வெடித்தாள்.. 

 

அதன் பின்னும் சொல்லாவிட்டால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை உணர்ந்த ஸ்ருதியோ, “உன் பூரி பாரின் போக போறாங்களாம்.. நாளைக்கே பிளைட்டாம்… தெரியுமா? தெரியாதா??..”

 

“எதே பாரினா… ஏன்டி பைத்தியம் போல உளறுற.. கனவு ஏதாச்சும் கண்டியா?…”

 

தோழியின் பதிலிலே இன்னும் விடயம் தெரியவில்லை என்பதை புரிந்து கொண்டவள்.. தீர்க்கமான குரலில், “உண்மையா தான் மீனு.. உனக்கு தெரியாதா?… கௌரவ் இப்போதான் சொன்னான்… எனக்கு ஷாக்.. அதான் உனக்கு தெரியுமான்னு கேக்க போன் பண்ணேன்.. மீனு ஆர் யூ ஓகே?.. அண்ணா கூட ஏதும் ப்ரோப்லமா?.. அண்ணாக்கிட்ட மனசுவிட்டு பேசு மீனு.. எல்லாம் சரியாகும்..” என்றாள்.. 

 

என்ன பதில் சொல்வது என்றே புரியாமல் மீனாட்சியிடம் சிறிது நேர அமைதி.. பின் அவளே, “ஓகே ஸ்ருதி நான் பாத்துக்கிறேன்..” என்றபடி அழைப்பை துண்டித்தவளுக்கு மனது அடித்துக்கொள்ள தொடங்கியது…

 

“ஏன்?? எதுக்காக??..” என்ற கேள்விகளே மனதில் ஓட.. அத்தனை நாள் மௌனத்தை உடைத்தவளாக அவன் முன்னே போய் நின்றாள்.. 

 

அவள் முன் நிற்பதை உணர்ந்தவன் நிமிர்ந்து பார்க்கவில்லை.. வேண்டும் என்றே தொலைபேசியில் மூழ்கியவன் போல் நடித்தான் கள்வன்..

 

மீனாட்சியோ பல்லை கடித்தபடி “க்க்கும்..” என்று சத்தம் எழுப்ப.. அவனோ, “வாடி வா… புருஷன்னு கூட பாக்காம மனிசன இத்தன நாள் பேசாம தவிக்க விட்டல்ல.. செத்தடி சிட்டு…” என்று மனதில் குத்தாட்டம் போட்டவன்.. வெளியில் சாதாரணமாக அமர்ந்திருந்தான்…

 

“பேசணும்..” என்றாள்.. அவனோ நிமிர்ந்து பார்த்து மீண்டும் குனிந்துகொள்ள, இவளோ மீண்டும், “உங்ககிட்டதான் பேசணும்..” என்றாள்..

 

“எங்கிட்டயா?.. நான் யாரு உங்களுக்கு என் கிட்ட எதுக்கு பேசணும்..” என்று அவளை வம்பிழுக்க எண்ணி பேசினாலும் ஆதங்கமாகவே வந்து விழுந்தது வேந்தனவனின் வார்த்தைகள்..

 

அவளோ, “ப்ச்.. பேசணும்னு சொல்லுறேன்ல..” என்க

 

பட்டென்று எழுந்தவனோ.. “என்னடி பேசணும் பேசணுங்கிற.. நான் பேசும் போது பேசுனியா?.. பெரிய இவ மாதிரி விரப்பா இருந்தீல.. இப்போ மட்டும் என்ன புதுசா அக்கரை.. எனக்கு யார் அக்கரையும் வேணா.. என்னால உங்களுக்கு ஏன் சிரமம்.. இன்னைக்கு மட்டும் தான் என் தொல்ல எல்லாம் உங்களுக்கு..”

 

இன்னைக்கு மட்டும்னா என்ன அர்த்தம்..”

 

“இன்னைக்கு மட்டும்னு தான் அர்த்தம்… நாளைக்கு இங்க இருக்கவே மாட்டேன்னு அர்த்தம்..”

 

“ஏன் நாளைக்கு என்ன வந்திச்சு.. இங்க நான் என்ன செத்தா போய்ட்டேன்..”

 

“அடியேய் வேணா போய்டு.. அப்படியே அறைஞ்சேன்னா பாத்துக்கோ.. உன் வாய்னா எதுவேனா பேசுவியா?..” என்று அடிக்க கை ஓங்க, அப்போதுதான் அவளுக்கே பேசிய வீரியம் புரிந்தது…

 

“ஐ எம் சாரிங்க.. வேணும்னு பேசல ஏதோ..” என்று மேலும் ஏதோ சொல்லவர கை நீட்டி தடுத்தவன், “ஏது பேசுறதா இருந்தாலும் என்னோட சிட்டுவா… இந்த வேந்தனோட சிட்டுவா வா  அப்பறம் பேசலாம்..” என்று கோபமாய் அவனறைக்குள் நுழைய போனவன் அங்கிருந்து அவளை நோக்கி திரும்ப அவன் எண்ணியது போலவே அவன் சொன்னது புரியாமல் தான் நின்றிருந்தாள்…

 

“அடியேய் மக்கு பொண்டாட்டி.. போய் உன்ன நீயே கண்ணாடில பாரு புரியும்..” என்று அவளிடம் சொன்னவன்.. “கொஞ்ச நாள்லயே இவ மேல பைத்தியம் பிடிக்க வெச்சிட்டா மாயக்காரி.. கொஞ்சமாவது கோபப்பட முடியுதா?.. இப்படி கியூட்டா எல்லாம் ரியாக்ஷன் குடுத்தா எங்க இருந்து கோபப்படுறதாம்…” என்று தனக்கு தானே புலம்பியபடி அறைக்குள் நுழைந்து கொண்டான்…

 

அப்படியே நின்றிருந்த மீனாட்சி தன்னறைக்குள் நுழைந்து கண்ணாடியை பார்க்க.. அவன் சொன்ன அர்த்தம் புரிந்து போனது..

 

இங்கு வந்த நாளில் இருந்து அத்தனை நேர்த்தியாய் புடவை அணிபவள் இந்த ஒரு மாதம் அதனை மறந்திருந்தாள்.. ஏனோ தானோவென்று ஒரு பெரிய சட்டை.. அதில் இன்னொரு மீனாட்சி நுழையும் அளவுக்கு இடைவெளி வேறு.. 

 

கண்ணில் கருவளையம் வர அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தது.. மொத்தத்தில் வேற யாரோ ஒரு பெண் போன்ற தோற்றம் தான் அவளுக்கும்…

 

அவள் பார்வை கழுத்தில் பதிய கேட்கவேண்டிய கேள்வியும் ஞாபகம் வந்தது… அவனிடம் பேசி ஆகவேண்டிய கட்டாயம்…

 

எல்லாம் பழைய நிலைக்கு மாற வேண்டும் என்றால் முதலில் தன்னிடம் மாற்றம் ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்ற.. இளம் சிவப்பு நிற புடவை ஒன்றை எடுத்துக்கொண்டவள்.. பத்தே நிமிடத்தில் பழைய மீனாட்சியாய் தயாராகி வெளியே வர.. மகியும் ஆர்வனும் தங்கள் விளையாட்டு பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்ப தயாராகி நின்றிருந்தனர்..

 

“வாவ்.. மீனும்மா.. ரொம்ப அழகா இருக்கீங்க..” என்ற ஆர்வன் அவளை தன் உயரத்துக்கு குனியவைத்து கன்னத்தில் முத்தமிட்டான்..

 

“தேங்க்ஸ் ஆரு.. போக ரெடி ஆகிடீங்களா ரெண்டு பேரும்.. போய் சமத்தா விளையாடனும்.. சண்டை போடக்கூடாது..” என்று தொடங்க மீதியை குழந்தைகள் சொல்ல ஆரம்பித்தனர்…

 

“தெரியாத யாரும் எதுவும் தந்தா வாங்கி சாப்பிடக்கூடாது.. அங்கிள் கூடவே இருக்கனும்.. அவர தொந்தரவு பண்ணக்கூடாது… தனியா ரோட் கிராஸ் பண்ண கூடாது.. டூ அவர்ஸ்ல வீட்டுக்கு வந்துடனும்… அதான மா…” என்று குழந்தைகள் இருவரும் முடித்திருந்ததனர்..

 

மீனாட்சி இடுப்பில் கைவைத்து முறைக்க.. “ஹி ஹி மம்மி நீதான் எவ்ரி சன்டே இத சொல்லிடுறியே.. அப்படியே பாடமாகிடுச்சு..” என்றாள் மகி..

 

“ஓகே எல்லாம் ஞாபகம் இருக்குல்ல அதே போல நடந்தா சரிதான்… பாத்து போங்க..” என்றவள் வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தாள்..

 

இது விடுமுறை நாட்களில் வழமையான ஒன்றுதான்.. பக்கத்துவீடுகளில் இருக்கும் வாண்டுகள் சேர்ந்து அருகிலுள்ள பூங்காவுக்கு சென்று வருவது வழக்கம்..

 

ஒவ்வொரு முறையும் யாராவது பெற்றோர் ஒருவர் கூட செல்வது வழக்கம்… போன முறை வேந்தன் சென்றிருந்தான்.. இன்று எதிர்வீட்டு பையனின் அப்பா செல்வதாக இருந்தது… அதனாலேயே மீனாட்சி அனுப்பி வைத்ததும் கூட…

 

_____________________________________________

 

மெத்தையில் அமர்ந்திருந்த வேந்தன் கதவு திறந்த சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க அவன் சிட்டு.. அவனுக்கேயான சிட்டுவாய் நின்றிருந்தாள்.. அவன் கண்களிலோ மின்னல்..

 

“ஏன் இப்போ பாரின் போக என்ன அவசியம் வந்திச்சு..”

 

“எங்கூட இருக்க சிரமப்படுறவங்க கூட இருந்து அவங்கள ஏன் கஷ்டப்படுத்தனும்…”

 

“நான் கஷ்டம்னு சொன்னேனே?..”

 

“சொன்னாதானா.. அவொய்ட் பண்றதுலேயே புரியுதே…” என்றாள் வேறெங்கோ பார்த்தபடி.

 

“அது… அது எனக்கு கோபம்.. ஏன் அப்படி பண்ணீங்க.. எதுக்காக நான் பண்ணதுக்கு நீங்க தண்டனை அனுபவிக்க நெனச்சீங்க..” என்றவளுக்கு அத்தனை நாளில் அடைத்துவைத்த ஆதங்கத்தின் தாக்கம் வெளியே கண்ணீராக ஊற்றெடுத்தது…

 

அதற்கு மேலும் அவன் தள்ளி இருப்பானா என்ன?.. அவளை அணைத்துக்கொண்டவன்.. “நீ மட்டுமில்லயேடா நானும் தான் பண்ணேன்.. இதே என்ன ஒருத்தன் கொள்ள வந்து, நான் அவன கொன்னுட்டேன்னு வெஞ்சிக்கோ.. அப்போவும் தப்பு பண்ண நான் தான் தண்டனை அனுபவிக்கணும்னு யோசிப்பியா?…” என்க அவள் தலையோ இல்லை என்பதாய் அசைந்தது…

 

“அப்பறம் எப்படி எங்கிட்ட கோச்சுகிட்ட நீ.. எட்டு வருஷமா லவ் பண்றதால இப்போ வந்த என் லவ் கொறஞ்சதுனு நினச்சிட்டியா மீனாட்சி…” என்றவன் கண்களில் வழிந்த கண்ணீர் அவள் கன்னத்தில் பட்டு தெரித்தது…

 

“என்னங்க நான் அப்படிலாம் நினைகலங்க.. ஏதோ ஒரு ஆதங்கம்… தப்பு தான் ஐ எம் சாரி.. உங்க இடத்துல இருந்து யோசிக்காம விட்டுட்டேன்.. அதுக்காக எங்கள விட்டுட்டு போயிடுவீங்களா நீங்க?..”

 

“பின்ன ஒரே வீட்ல இருந்துட்டு யாரோ மாதிரி பேசாம இருந்தா வலிக்குதுல…” என்றான் அவளை இன்னும் தனக்குள் இழுத்தபடி..

 

“ரொம்ப ரொம்ப சாரிங்க… போகவேண்டாமே..” என்றாள் கெஞ்சும் குரலில்..

 

“இப்படிலாம் கேட்டா கேன்சல் பண்ண முடியாதே… ஸ்வீட் சாப்பிட்டு வேணா சாரி கேளு.. அப்போ மன்னிக்க தோணினா போகாம இருப்பேன்.. உன் கைல தான் இருக்கு.. நீ ஸ்வீட் சாப்டு பாரின் போறதையே மறக்க வெச்சிட்டா ஓகே…” என்றான் கள்ள புன்னகையுடன்…

 

“என்னங்க..” என்று அவன் அணைப்பில் இருந்தவள் சிணுங்க, வேந்தனுக்கோ கட்டுப்பாடு மொத்தமும் இழந்த நிலை தான்…

 

“இப்படியே நீ யோசிச்சிட்டே இருந்தனா.. நான் டாட்டா பாய் சொல்லிட்டு போய்ட்டே இரு…”  என்று பேசிக்கொண்டு போனவனின் “இருப்பேன்” என்ற வார்த்தை முற்றுப்பெற்றது என்னவோ மீனாட்சியின் இதழுக்குள் தான்..

 

ஆரம்பித்தது வைத்தது மீனாட்சி தான் ஆனால் தொடர்கதை எழுதும் பொறுப்பு வேந்தனிடம்… இப்போதைக்கு தொடர்கதையை முடித்து முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணம் சிறிதும் அவனிடம் இல்லை… மெகா சீரியல் எழுத தொடங்கினானோ என்னவோ ஆயிரம் அத்தியாயங்களை கடந்தாலும் முடிப்பான? என்பது கேள்விக்குறி தான்….

 

முத்தமிட்டு அந்த முத்தத்தில் மூழ்கி இருந்த மீனாட்சிக்கு, கேட்க வேண்டிய கேள்வியின் எண்ணம் அந்த நிலையில் ஞாபகம் வர.. முத்தத்திழிருந்து விடுபட முயல.. அது முடிந்தால் தானே..

 

மேலும் நிமிடங்கள் கடந்த பின்னரே அவள் எதிர்ப்பு அவனுக்கு புரிய அவளை விட்டு விலகியவன்… “ஏண்டி…” என்றான்.. அது கூட அத்தனை மென்மையாகவே வந்தது அவள் மீதிருந்த மயக்கத்தில்…

 

“இல்ல டவுட்..” என்றாள் தயக்கமாக..

 

“டவுட் கேக்குற நேரமா சிட்டு இது..” என்றவன் அவளையும் மெத்தையில் அமரவைத்து தானும் அமர்ந்துகொண்டான்….

 

“இப்போ சொல்லு என் சிட்டுக்கு என்ன டவுட்டாம்.. கிஸ்ல எத்தனை வகை இருக்குனு அதிமுக்கிய டவுட் ஏதாச்சும் வந்துடுச்சா.. வாய்ப்பில்லையே உனக்குத்தான் அப்படி ஆக்கபூர்வமான டவுட் எல்லாம் வராதே..”

 

“என்னங்க.. ப்ளீஸ்..”

 

“சரி சொல்லு..”

 

“அவளோ கழுத்தில் போட்டிருந்த தங்க செயினை கழட்டி காட்டியபடி.. “மாமாவோட செயின் உங்ககிட்ட எப்படி வந்திச்சு?.. மாமாவ உங்களுக்கு முன்னவே தெரியுமா?… ஏன் எங்கிட்ட சொல்லல…”

 

அவள் கேள்விகளில், இத்தனை நேரம் இருந்த இதம் மறைந்து  அவன் முகமோ கடுமை பூசிக்கொண்டது…

 

இதனை எப்படி மறந்தோம் என்ற எண்ணம் தோன்ற ஆழ மூச்செடுத்துக்கொண்டவன்.. “நான் ரொம்ப நாளா ஒரு பொண்ண தேடுறேன்னு சொன்னேன்ல மீனா…”

 

“ஆமா.. அதுக்கென்ன..”

 

“அந்த பொண்ணு வேற யாருமில்ல நீதான்…”

 

“நானா… நான் எப்படி?..”

 

“அன்பு என்னோட பிரண்ட்… ஆசிரமத்துல ஒன்னா தான் வளந்தோம்..” என்று தொடங்கியவன் அவர்களை பற்றி சொல்ல..

 

“அப்போ மாமா எனக்காக பார்த்த மாப்பிள்ளைனு சொன்னது உங்கள தானா?…”

 

“ம்ம்ம்ம்…”

 

“அப்படினா ஆர்வன்… ஆரு… அவன்..” என்றவளுக்கு அடுத்த வார்த்தை வராமல் தொண்டையில் சீக்கிகொண்டது….

 

“எஸ் ஆரு உன்னோட அக்கா பையன்.. என் அன்புவோட பையன்…”

 

“ஐயோ அப்போ மகிழன் உயிரோட.. என் மஞ்சு குழந்தைங்க எங்கிட்ட..” என்றவள் மேலும் பேசமுடியாமல் வேந்தன் நெஞ்சிலே சாய்ந்து அத்தனை அழுகை…

 

“எனக்கு இப்போவே மகிழ பாக்கணும்… என்ன கூட்டிட்டு போங்க ப்ளீஸ்… அவன பாக்கணும்…”

 

“சிட்டு.. ரிலாக்ஸ்.. இப்படி அவன்கிட்ட ரியாக்ட் பண்ணினா குழந்தை பயந்துடுவான்டா.. அவன் உன் பையன் யாரு என்ன சொல்லுவா எப்போ வேணா கொஞ்சலாம்… அவனா வரும் போது பாத்துக்கோ.. இப்போ அவசரமா போய் கூட்டிட்டு வந்தாலும் நீ ஸ்டேபிலா இல்லைல.. முதல்ல ரிலாக்ஸ் ஆகு…” என்க அவளுக்கும் நிதர்சனம் புரிய அமைதியாகவே அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்…

 

சிறிது நேர அமைதிக்கு பின், “ஏங்க மஞ்சுக்கு மட்டும் இப்படி?.. அவள அவளே காப்பாத்திக்க தேவையான வலிமைய கடவுள் அவளுக்கும் கொடுத்திருக்கலாமே..”

 

“சிட்டு சில விடயங்கள் நம்ம கற்பனைக்கும் நம்ம சக்திக்கும் அப்பாற்பட்டதுடா.. நிதர்சனத்த ஏத்துக்க பழகணும்.. ஐ நோ ஏத்துக்க கஷ்டமான சூழ்நிலை தான்… ஆனாலும் ஏத்துக்கிட்டு தான ஆகணும்..” என்றவன் அவள் முகத்தை கையில் எந்தியபடி மீண்டும் தொடர்ந்தான்…

 

“எந்த ஒரு ஆத்மாவும் அதனால தாங்கிகொள்ளக்கூடிய அளவுக்கு மேலதிகமா சோதிக்கப்படுறதில்லனு.. ஒரு புக்ல படிச்சேன்.. தாங்குற சக்தி ஆளுக்காள் வேறுபடலாம்.. ஆனா நம்மளோட ஸ்ட்ரோங் நமக்கு தெரியனும்ல.. எந்தவொரு நடந்து முடிஞ்ச விஷயத்தை யோசிக்கும் போதும் இப்படி நடந்திருக்கலாமேனு யோசிக்க கூடாதுடா… அதான் அது முடிஞ்சிடிச்சே.. எப்படி ஓவர்க்கம் பண்ணி வரணுமிங்கிறதான் யோசிக்கணும்.. என் தங்கப்பொண்ணு ரொம்பவே ஸ்ட்ரோங்ல..” என்க அவள் தலை மேலும் கீழும் ஆடியது….

 

“எஸ் என் சிட்டு ரொம்பவே ஸ்ட்ரோங்.. இப்படி யோசிச்சு பாரு.. கடவுள் அவருக்கு ரொம்ப பிடிச்சவங்களத்தான் சீக்கிரமே அவர் கூட கூப்பிட்டுப்பாராம்.. மஞ்சுவும் அன்புவும் அவ்வளவு பியோர் சோல் அதான் கூடவே வெச்சிக்க கூப்பிடிருக்காரு.. அவங்க சொர்க்கத்துல சந்தோசமா இருப்பாங்கடா.. நம்மளும் நமக்கான கடமைகளை முடிச்சிட்டு சீக்கிரமே அவங்க கூட போய் சேர்ந்துக்கலாம் சரியா?…”

 

“ம்ம்ம் கண்டிப்பா…” என்றவள் சிறு தெளிவு கிடைத்த தைரியத்தில் அவன் நெஞ்சில் சுகமாக சாய்ந்துகொண்டாள்…

 

நமக்கு தேவைப்படுவது எல்லாம் எந்தவொரு கனமான சூழ்நிலையையும் கையாள ஒரு துணை.. அதுவே புரிதலோட நமக்கேயான உறவா கிடைக்கிறதெல்லாம் வரம்… அந்த வரம் மீனாட்சியோட வாழ்க்கைல கணவன் என்கிற உறவா அவளுக்கு கிடைச்சிருக்கு..

 

“நீங்க ரொம்ப ரொம்ப ஸ்வீட் பாரி… நான் ரொம்ப லக்கில.. எப்படியோ போக இருந்த என் வாழ்க்கைக்கு வர்ணம் கொடுத்து உயிர்ப்பா என்ன வாழ வெச்சு… என் வாழ்க்கைல பெரிய வர்ணஜாலமே நிகழ்த்திடீங்க… என் வாழ்க்கைக்கு ஏதாச்சும் தலைப்பு வைக்க சொன்னா கண்ண மூடிட்டு.. என் வர்ணஜாலம் நீயடானு தான் வெச்சிருப்பேன்…”

 

“அடடே பெயிண்டர் மேடத்துக்கு வர்ணம் ஜாலம்னு எல்லாம் வார்த்தை ஜாலமா வருதே.. அப்படினு பார்த்தா நானும் தான் சொல்லணும்… என் வாழ்க்கைல இப்படி ஒரு பொண்ணால காதலிக்கப்படுவேன்.. நானும் அவள வெறித்தனமா காதலிப்பேன் அப்படினுலாம் சத்தியமா நினச்சு கூட பார்த்ததில்லை… என் வாழ்க்கைய சந்தோசமா மாத்துன உனக்காக நம்ம வாழ்க்கைக்கு நான் வைக்கிறதுனா.. வர்ணஜாலம் நீயடின்னு தான் வெச்சிருப்பேன்…” என்றவன் இன்னும் அவளை இறுக அணைத்துக்கொண்டான்…

 

“இல்ல நீயடா தான்…”

 

“இல்ல நீயடி தான்…” என்றதும் அவள் முறைக்க உலக கணவர் சங்கத்து உறுப்பினர் அவன் மட்டும் என்ன விதிவிலக்கா??.. கணவனாக சற்று அடங்கிதான் போனான் வேந்தன்..

 

“ஓகே ஓகே உனக்கும் வேணா எனக்கும் வேணா.. நம்ம சேர காரணமா இருந்த நம்மளோட வர்ணஜாலம் நம்ம குழந்தைங்கனு வெச்சிப்போம் சரியா?….”

 

“வாத்திக்கு பேச சொல்லியா தரணும்..”

 

 இப்படி அவர்களுக்குள் பேசிகொண்டிருக்க.. அவர்கள் வாழ்க்கையை நேர்கோட்டில் இணைத்த குழந்தைகள் “அப்பா. மீனும்மா..” என்ற சத்தத்துடன் அவர்களிடம் ஓடி வர அதன் பின் சந்தோஷத்துக்கு ஏது பஞ்சம்….

 

_____________________________________________

 

அங்கே மருத்துவமனையில்.. காட்டு கத்து கத்திகொண்டிருந்தான் விஜய்…

 

“வாஷ்ரூம் போகணும் யாராச்சும் இருக்கீங்களா??….” என்று ஆறாவது முறையாக கிட்டத்தட்ட கெஞ்சல் குரலில் கத்தியும், அங்கே அமர்ந்திருந்த தாதி ஒருவர் அப்படியே தான் அமர்ந்திருந்தார்…

 

பாதிக்கப்பட்ட பெண்களில் அவர் பெண்ணும் ஒருவள்.. அவன் கதரலை ஆசைத்தீர கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார் ஒரு தாயாய்…

 

ஆனாலும் அடுத்த முறை அவன் அழைப்புக்கு கால்கள் தன்னால் அவளுக்கு உதவி செய்ய விரைந்தது…

 

ஒரு தாயாக கோபம் இருந்தாலும்.. ஒரு தாதியாக அவர் கடமை அதுவல்லவா??.. அப்படியே இருக்க அவர் ஒன்றும் விஜய் போல் மிருகம் இல்லையே..

 

எந்த பெண்களை தரக்குறைவாய் போதை பொருளாய் சீரழித்தானோ அந்த பெண்கள் வர்க்கத்திடம் கெஞ்சும் நிலை… கடவுள் நியாயமானவர் என்பது இப்படி சில வியங்களில் உறுதியாக உணரமுடிகிறது…

 

இந்த மருத்துவவாசம் முடிய நிரந்தர சிறைவாசம் அவனுக்காய் காத்துகொண்டிருந்தது….

 

ஜாலம் தொடரும்….

               

                  …ஆஷா சாரா..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
17
+1
61
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. அவனால் சீரழிக்கப்படும்போது ஒவ்வொரு பொண்ணும் எப்படி கதறி இருப்பாங்க இப்போ

      விஜயோட கதறலை கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு??