ஜாலம் 07
காதல் காதல் என்று சுற்றும் அவள் கூட கடந்த நான்கு நாட்களின் அவனை நினைத்தாளோ இல்லையோ?.. ஆனால் வேந்தனின் எண்ணம் முழுவதும் அவள் ஆட்சியே..
முதல் முதலில் அவளை காணும் நேரம் ஒரு சுவரஷ்யம்.. மீண்டும் தான் நன்றி சொல்ல தேடும் பெண்ணாக ஒரு அறிமுகம்… பிறகு அவள் காதலை நினைத்தும் பொறுப்புணர்வை நினைத்தும் ஒரு பிரமிப்பு.. இப்படியாக பார்த்த மூன்று சந்திப்பிலும் அவனுள் ஏதொவொரு உணர்வை ஊடுகடத்தியே சென்றிருந்தாள் பெண்ணவள்…
இன்றும் இந்த இரவில் தலைக்கு கையை தலையணையாக்கி தரையில் படுத்திருந்தவனது எண்ணம் மீண்டும் மீண்டும் அவளிடமே தஞ்சம் புகுந்தது.
யாரிவள், மூன்றே முன்று சந்திப்பில் தன் மூளைக்குள் சென்று அமர்ந்து கொண்டாளே என்ற யோசனையில் இருந்தவனை கலைத்தது நெஞ்சில் திடீரென கூடிய பாரம் தான்… அதுவும் சுகமான பாரம்..
தூக்க கலக்கத்தில் தந்தையை மெத்தையில் தேடி கிடைக்காமல் போனதில் ஆர்வன் அவனை தேடி வந்திருந்தான்..
“என்னாச்சு என் ஜெர்ரிக்கு தூக்கலயா?…”
“நீ ஏன் உன் ஜெர்ரிய விட்டுடு வந்த?.. நான் பயந்துட்டேன் தெரியுமா?”
“ஆஹான் என் ஜெர்ரி தான் சூப்பர் ஹீரோ ஆச்சே.. அப்பறம் ஏன் பயந்தாராம்?..” என்றான் நெஞ்சில் உறங்கும் மகனை தட்டிகொடுத்தபடி..
“ஜெர்ரிக்கு காக்ரோஜ் எல்லாம் நோ பயம்.. டாம் காணாம போய்டுவன்னு தான் பயம்…” என்றான் குழந்தை..
அதிலேயே புரிந்து போனது வேந்தனுக்கு… கரப்பனை கண்டு பயந்து தான் குட்டி சிங்கம் வந்துருக்கிறது என.. இருந்தும் காட்டிக்கொள்ளவில்லை..
“அப்படிங்களா சார்? உங்க டாம் ஒன்னும் காணாம போகலயே.. இப்போ ஓகே தான?..”
“ம்ம்ம்… நீ ஏன் தூங்கல டாம்… ட்ரீம்ல கோஸ்ட் வந்துடுச்சா?…”
“ம்ம்ம்ம் கிறுக்குத்தனமான கோஸ்ட் தான்.. பட் கொஞ்சூண்டு அழகான கோஸ்ட்..” என்றான் மீனாட்சியின் நினைவில்…
“என்ன கட்டிக்கோ டாம் கோஸ்ட் ஒன்னும் பண்ணாது”
“ஓகேங்க சிங்கக்குட்டி..” என்றான் குழந்தையை அணைத்தபடி..
“அப்பா..”
“ம்ம்ம் என்ன ஆரு..”
“மார்னிங் மகி உன்ன கேட்டப்பா.. அப்பா வரலையானு அழுதுட்டே கேட்டா.. புது அப்பா வரப்போறாங்கலாம் அவளுக்கு பிடிக்கவே இல்லயாம்.. உன்ன அவளுக்கே தரட்டுமாம்னு எங்கிட்ட கேட்டா…”
“அதுக்கு ஆருகுட்டி என்ன சொன்னீங்க..”
“உன்ன அவளுக்கு குடுத்தா ஆருக்கு யாரிருக்கா??… டாம் இல்லாம என்னால இருக்க முடியாதே..” என்று உதட்டை பிதுக்கி காட்ட, வேந்தனுக்கு உருகிவிட்டது…
மீண்டும் குழந்தையே, “ஆனாலும் ஆரு கிளவர் பாய்லப்பா.. அதனால நீயும் மீனும்மாவும் எங்க வீட்டுக்கு வந்துடுங்க.. அப்போ உனக்கு அப்பா கிடைப்பாங்க.. எனக்கு அம்மா கிடைப்பாங்க.. நாளு பேரும் ஒன்னா இருக்கலாம்னு சொன்னேன்… சரிதானப்பா?..”என்று கன்னம் தீண்டி வினவியவனின் பேச்சில் வேந்தன் தான் உறைந்து போயிருந்தான்…
நான்கு நாளாய் அவன் யோசனைக்கு எவ்வளவு எளிய பதிலை மகன் தந்துவிட்டான்… அதிலும் ஆர்வன் அம்மாக்காக ஏங்கி இருக்கிறானா?.. எப்படி இதை கவனிக்காமல் விட்டோம் என்று அவன் மீதே அவனுக்கு கோபம்…
“ஆரு கண்ணாக்கு அம்மா வேணுமா?.. ஏன் அப்பாகிட்ட சொல்லல..”
“அம்மா வேணும்னு கேட்டா திவ்யா ஆன்ட்டி தான் எனக்கு அம்மாவா வருவாங்கலாமே… டெய்லி உங்கிட்ட அம்மா வேணும்னு கேக்க சொல்லி டாச்சர் பண்ணுவாங்கப்பா.. அவங்க ரொம்ப பேட் கேர்ள்.. ஏன் சொல்லலனு கேட்டு ஆருக்கு திட்டுவாங்க… சோ அவங்க ஆருக்கு அம்மாவா வேண்டாம்னு தான் சொல்லலப்பா..” என்ற குழந்தையின் நெற்றியில் முத்தம் வைத்தவனுக்கு திவ்யா மீது பயங்கர கோபம்…
பிஞ்சு குழந்தையை வைத்து திட்டமிட்டிருக்கிறாளே… அவள் குணம் குழந்தைக்கும் தெரியும் படி நடந்துகொண்ட அவளை என்ன சொல்வது.. அதுவும் ஒரு வகையில் நல்லது தானே.. மகன் அவள் குணத்தை புரிந்துகொண்டமட்டில் சந்தோசம் தான்..
“அப்போ உனக்கு மீனும்மாவ மட்டும் ஏன் பிடிச்சிருக்கு ??.. ஒரு நாள் தான பாத்தீங்க அவங்கள..”
“மீனும்மா சோ ஸ்வீட்ப்பா.. முன்னவே ஆருக்கு தெரியுமே.. மகிய ஸ்கூல்ல விட டெய்லி லேட்டாதான் வருவாங்க.. பைக் பாஸ்ட்டா ஓடி வருவாங்களா பாக்க காமெடியா இருக்கும்.. அதுக்காகவே டெய்லி லேட்டானாலும் கேட்கிட்ட நின்னு பாப்பேன் தெரியுமா?…” என்றான் கண்கள் மின்ன..
“உன்ன ஏர்லியா கொண்டு போய் ஸ்கூல்ல விட்டா நீ கேடி தனம் பண்ணிட்டு இருந்திருக்க..” என்று மகனின் காதை பிடிக்க, கிளுக்கி சிரித்தவனோ..
“நீயும் ஒரு நாள் பாரேன்ப்பா உனக்கும் பிடிக்கும்..”
“அதுசரி மூனு வாட்டி பாத்ததுக்கே பட்டது போதும்டா சாமி ஆளவிடு.. வேற என்ன பண்ணாங்க உன் மீனும்மா?…” என்று மீனும்மாவில் சற்று அழுத்தம் கொடுத்தே வினாவினான்…
“ஒருநாள் அவங்களேயே பாத்துட்டு நடந்து போய் கீழ விழுந்துட்டேன் தெரியுமா?.. அவங்க என்ன தூக்கி விட்டு அழக்கூடாதுனு கிஸ் பண்ணாங்க, எனக்கு வலிக்கவே இல்ல.. சும்மா வலிக்குது சொல்லவும் இன்னொரு கன்னதுலயும் கிஸ் பண்ணாங்க… ஐ லவ் ஹர் ப்பா…”
“இல்லாத கேடித்தனம்லாம் பண்ணிட்டு திரிஞ்சிருக்க.. இன்னொரு விஷயம் சொல்லவா.. உனக்கு பிடிச்ச கேக் பண்றதும் உன் மீனும்மா தான்…”
“ஆமாவாப்பா?..” என்று கண்கள் விரிய கேட்டவன்.. “மீனும்மாவையும் மகியையும் நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்துடலாம் கிளம்புப்பா?..” என்று வேந்தனை ஒரு வழிபண்ண
“அடேய் குட்டி வாண்டு.. இப்போ மணி நைட் ரெண்டுடா.. இப்போ போனா அடிச்சு தூரத்துவாங்க.. மார்னிங் போகலாம் இப்போ தூங்கு..”
“நிஜமாவாப்பா.. மீனும்மா இங்க வருவாங்களா?…”
“கூப்பிட்டு பாப்போம் வராட்டி என்ன பண்றது…”
“ஆரு சொன்னா வருவாங்கப்பா.. இல்லனா தூக்கிட்டு வருவோம்..” என்று சொன்னா மகனின் ஆர்வத்தை கண்டவனுக்கு மனம் வலிக்கவே செய்தது.. எப்படி ஏங்கி இருக்கிறான்.. இவன் மட்டுமா மகியும் அப்படி தானே..
அவன் தேடும் பெண் திருமணம் செய்திருக்கவில்லை என்றால் அவளை தான் திருமணம் செய்யவேண்டும் என இத்தனை நாளாய் எண்ணி இருந்தான்.. அதற்கும் காரணம் இருந்தது…
இப்போதும் அவன் மனம் மொத்தமாய் மீனாட்சியின் பக்கம் சாய்ந்திருந்தது.. காதலா என்று கேட்டால், இல்லை என்றுதான் அவனிடமிருந்து பதில் வரும்… ஆனால் ஏதோ ஒரு பிடித்தம் அது காதலின் ஆரம்பப்புள்ளியாக கூட இருக்கலாம்.. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்…
மனதில் தீர்க்கமான முடிவெடுத்துக்கொண்டவன்.. மகனுடன் சேர்ந்து ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றான்…
____________________________________
அதிசயத்திலும் அதிசயமாக மீனாட்சி வரவேண்டிய நேரத்துக்கு, அரைமணி நேரம் முன்னரே அந்த பூங்காவில் அமர்ந்திருந்தாள்…
காலையில் எதிர்பாராத முதல் அழைப்பு அவனிடமிருந்து தான்… சந்திக்க வேண்டும் என்று.. இவளுக்கோ மனதில் திடுக்கிடல்..
கைகளை பிசைந்தபடி அவள் அமர்ந்திருக்க, அருகில் அமர்ந்திருந்த மகிக்கோ கண்களில் ஆர்வம் வாயிலையே பார்த்திருந்தாள்..
“மா அப்பா எப்போ வருவாங்க?… அப்பாக்கு நான் கிப்ட் வெச்சிருக்கேனே..”
” அப்பா சொல்லாதனு சொன்னேன்ல மகி..”
“அப்பாவ அப்பான்னு தான மம்மி சொல்லணும்..”
இதற்கு மேலும் எப்படி இவளுக்கு புரியவைக்க போகிறோம் என்பது அவளுக்கும் தெரியவில்லை… அன்று வேந்தன் திட்டியது எந்தளவுக்கு சரி என்று மனம் இப்போது எடுத்துச்சொன்னது…
கண்களை மூடி திறந்தவள் பேச்சை மாற்றும் விதமாக, “அது என்னடி கிப்ட் எனக்கு தெரியாம?..”
“அதெல்லாம் உங்கிட்ட சொல்ல முடியாது.. அப்பாகிட்ட தான் குடுப்பேன்..”
“ரொம்பத்தான்டி.. மீனுன்னு வருவல்ல அப்போ பாத்துக்கிறேன்..”
அம்மாவினதும் மகளினதும் காத்திருப்பின் நாயகன் சரியாக சொன்ன நேரத்துக்கே அந்த பூங்காவினுள் நுழைந்தான்.. கூடவே ஆர்வனும்…
கறுப்பு நிற ஷேர்ட்டில் இருந்தவனை மீனாட்சியின் கண்கள் மொத்தமாய் அள்ளிக்கொள்ள, கண்கள் ஊடக மனதுக்குள் ஊடுருவியது அவன் தோற்றம்..
எவ்வளவு தான் மனதை கடிவாளமிட்டு அடக்கியும் நீ சொல்லி நான் கேட்பதா என மீண்டும் அவனிடமே குதித்தோடியது…
“மீனு கன்ட்ரோல் கன்ட்ரோல்… இப்போ உன் பூரி அடுத்த தட்டோட பூரி ஆகிட்டான்…” என்று மனதுக்கு புரியவைக்கும் முயற்சியில் இறங்க.. அப்பா மகன் இருவரும் அருகில் வரவும் சரியாக இருந்தது..
அவன் நெருங்கியது தான் தாமதம் மகியோ “அப்ப்பா..” என்று அவனிடம் தாவ, அவனும் தூக்கிகொண்டான்…
அதன் பின் மகியை கேட்கவும் வேண்டுமா?… வேந்தனுக்கு முத்த மழை தான்..
வேந்தனோ அங்கே வெளியில் போடப்பட்ட கடையை பார்த்தவன் குழந்தைகளுக்கு ஏதேனும் வாங்கி தருவோம் என எண்ணி அவளை தூக்கியபடி ஆர்வனை பார்க்க, அவனின் பார்வை மொத்தமும் மீனாட்சியிடம் தான்…
இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணியவன் மகியுடன் அங்கிருந்து சென்றான்..
அவர்கள் சென்றதும் தான் ஆர்வனின் பார்வை மீனாட்சிக்கு புரிந்தது.. பார்த்தவளது கண்களில் பரிவு… இன்று என்றில்லை.. இவனை பார்த்த நாளில் இருந்து மனதுக்கு நெருக்கம் போல் ஒரு உணர்வு…
“ஆரு.. இங்க என் பக்கத்துல வரீங்களா?…”
“சூர் மீனும்மா..” என்றவன் அவள் மடியிலே போய் அமர்ந்துக்கொள்ள, அவளும் அவனை அணைத்தபடி பிடித்துக்கொண்டாள்…
அவன் பேச இவள் கேட்டுக்கொண்டு அமர்ந்திருக்க அப்பாவும் மகளும் கை நிறைய ஸ்னாக்ஸுடன் வந்து சேர்ந்தனர்..
இவர்களை தெரியாத யாரேனும் பார்த்தாள் நிச்சயம் கண்களுக்கு நிறைவான குடும்பம் என்று தான் எண்ணக்கூடும்.. அத்தனை பாந்தமாய் பொருந்தி இருந்தனர் நால்வரும்…
மகியையும் ஆர்வனையும் ஸ்னாக்ஸுடன் அந்த இருக்கையில் அமரவைத்த வேந்தன்..
“மகி, ஆரு.. ரெண்டு பேரும் சமத்தா சாப்பிடுவீங்கலாம்.. யாரு சமத்தா பர்ஸ்ட் பினிஷ் பண்றாங்கன்னு பாக்கலாமா?…”
“ஓகேப்பா…” என குழந்தைகள் இருவரும் ஆர்ப்பரித்தனர்..
“ஓகே அம்மாவும் அப்பவும் அந்த மரத்துகிட்ட போய்ட்டு வரதுக்குள்ள யாரு பினிஷ் பண்றாங்கனு பாக்கலாம்..” என்றான் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து சற்று குறுகிய தூரத்திலிருந்த மரம் ஒன்றை காட்டியபடி…
நடக்க தொடங்கியவர்கள் நான்கு எட்டு தான் வைத்திருப்பர் அதற்குள் “அந்த மாப்பிளை என்னாச்சு?..” என்ற கேள்வி அவனிடமிருந்து வந்தது..
“செட் ஆகல.. அவருக்கு அவர் பிள்ளைங்களை பாத்துக்க தான் வைப் வேணுமாம்.. என் பொண்ணயும் சேர்த்து பாத்துக்க முடியாதாம்.. அம்மா அப்பாகிட்ட விட்டுடு வரட்டாம்…” என்றாள் சாதாரணம் போல… இதுவரை வந்தவர்கள் சொன்ன அதே பதில் தானே.. அவளுக்கு பத்தோடு பதினொன்னு என்ற எண்ணம் தான்…
“ஏற்கனவே கல்யாணம் பண்ணி குழந்தையும் இருக்கறவன் எதுக்கு..”
“பின்ன கல்யாணம் பண்ணாதவனா வருவான்.. எந்த காலத்துல இருக்கீங்க.. மகி என் குழந்தை இல்லனாலும் சமூகத்துக்கு தெரியாதாம்னு தான் காரணம் சொல்லுவாங்க… அப்படியே வந்தாலும் சீதனம் எங்குற பேர்ல கொள்ளையடிக்க தான் பாப்பாங்க.. அந்தளவுக்கு கொடுக்குறதுக்கும் எங்ககிட்ட இல்ல.. அப்படியே இருந்தாலும் இப்படிபட்டவன் எப்படி மகிய தன் பொண்ணா பாத்துப்பான்…” என்றவள் சிறிது அமைதிக்கு பின்
“நான் தேடுறது மகிக்கு அப்பாவ, எனக்கு புருஷன இல்ல…” என்றவளின் இறுதி வரியிலிருந்த உணர்வு அவனுக்கு புரியவே செய்தது..
“மகிக்கு அப்பாவா மட்டுமில்ல உனக்கும் நல்ல புருஷனா இருப்பேன்.. என்ன கட்டிக்கிறியா?…” என்றவன் அருகில் நடந்து வந்தவளை பார்க்க, அவள் கண்களோ அதிர்ச்சியுடன் அவனை நோக்கியது…
“உன் காதுல விழுந்தது உண்மை தான்… என்ன கட்டிக்கிறியா?…” என்றான் அவள் முகத்தில் வந்து போன குழப்ப ரேகையை படித்தவன் போல…
சும்மாவே அவன் மீது பைத்தியம் போல் சுற்றுபவள்.. இப்படி அவள் கண்ணை பார்த்தபடி நெஞ்சில் ஒன்றை கையை வைத்து சின்ன சிரிப்புடன் கொள்ளை அழகாய் வினவினால் அவளும் என்னதான் செய்வாள்…
மாய உலகில் சஞ்சரித்தவளுக்கு, மாப்பிளை பார்க்க வந்த அன்று நடந்த ஒரு நிகழ்வின் ஞாபகம் வர, சந்தோசம் அணைத்தும் வடிந்து முகம் சோகத்தை தத்தெடுத்தது…
“என்னாச்சு என்ன பிடிக்கலையா?..” என்றவனுக்கும் தெரியும் இந்த கேள்வி அபத்தம் என்பது…
“அப்படி சொல்லுவேன்னு நினைக்கிறீங்களா?…” என்றாள் எதிர் கேள்வியாய்
அவன் தலையோ இடம் வலமாக அசைந்தது… “அப்பறம் என்ன சோகம் இந்த மூஞ்சில…”
“அன்னைக்கு மாப்பிள வீட்டாக்கள் வந்து போனப்பறம் விஜய் அண்ணா வந்திருந்தாங்க..”
“விஜய் யாரு?..”
“என் பிரண்ட் விக்ரமோட அண்ணா.. மகிய காப்பாத்தி கூட்டி வந்ததும் அவங்க தான்.. அன்னைக்கு நடந்த ஆக்சிடெண்ட்ல மகிய மட்டும்தான் காப்பத்த முடிஞ்சிது…” என்றவள் அந்த நினைவில் இன்றும் கண் கலங்க, அதற்கு மேல் அதனை துருவ விரும்பாதவன்..
“அவர் வந்ததுனால என்ன ப்ரோப்லம்?..” என்று அவள் கவனத்தை தன் மீது திருப்பினான்..
“என்ன கட்டிக்க விருப்பமாம்.. மகிபத்தி அவருக்கு தான் எல்லாம் தெரியுமாம்… அவராலதான் எங்கள நல்லா பாத்துக்க முடியுமாம்னு பேசினாங்க…”
“ஏன் நாங்க பாத்துக்க மாட்டோமா?..” என்றான் சட்டென்று தோன்றிய கோபத்துடன்…
நேற்று தான் அவளை மனைவியாக மனதில் நினைத்திருந்தான்.. அதுக்கே அவனுக்கு கோபம் வருகிறது.. மீனுவின் காதலுக்கு எட்டு வயது எத்தனை ஆழம் இருக்கும் என்பது புரிய சற்று கோபத்தை குறைந்தவன்..
“அதுக்காக.. அந்த விஜய்ய கட்டிக்க போறியா?…” என்றவனின் குரலில் சினத்தின் மிகுதி இருந்தது..
“என்னால முடியாது… விக்ரம் மாதிரியே அவர அண்ணான்னு சொல்லி பேசியே பழகிட்டேன்.. நேர்ல பேசலனாலும் எங்களுக்குள்ள அப்படித்தான் பேசிப்போம்.. நான் போய் அவர எப்படி?..”
“அப்பறம் என்ன கட்டிக்கிறதுல என்ன பிரச்சனை..” என்றான் அவசரமாய், என்னவோ பல வருட காதல் கொண்டவன் போல…
“அப்பவே வேணாம்னு சொல்ல போனேன் அம்மா விடல… மகிய காப்பாத்தி கொடுத்ததுல இருந்து அவங்க மேல ரொம்பவே மரியாதை இருக்கு.. நன்றிகடனும் இருக்கு… பேசிட்டு சொல்றோம்னு சொல்லி அனுப்பினாங்க… நான் கூட சத்தம் போட்டேன்… இப்போ உங்க கூட கல்யாணம்னு எப்படி சொல்றது…”
“ஓகே அதெல்லாம் விடு… இப்போ நம்மல பத்தி பேசுவோமா?.. சொல்லு என்ன கட்டிக்கிறியா?…”
“விஜய் அண்ணா..” என்றாள் அப்போதும் இழுவையுடன்..
“ஐயோ அத நான் பாத்துக்கிறேன்டி.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..”
அவளுக்கோ திடீரென வார்த்தைகள் பஞ்சாமாகி போன உணர்வு… அவன் கண்களை பார்க்க முடியவில்லை… தலையை குனிந்தபடி ஆமோதிப்பாய் தலையசைத்தாள்…
“இன்னொரு விஷயம் உங்கிட்ட சொல்லணும்.. இப்போவே சொல்லிட்டா நல்லது..” என்றவன் அதையும் சொல்ல அவளிடம் அதிர்ச்சி தான்..
“அப்போ ஆருவோட அம்மா…”
“உயிரோட இல்லை…”
“ம்ம்ம்ம்…”
அதன் பின் அவர்களிடம் சிறிது அமைதி… வேந்தன் அதனை உடைத்தவனாக, “நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கலாமா?…”
“அவ்வளவு சீக்கிரமாவா?..”
“ஏன் வேணாமா?..”
“வேணும் தான்…”
“அப்போ பண்ணிக்கலாம்…” என்றவனின் பேச்சை தடுத்தது ஒரு குரல்…
“இதான் நீ வர்றன்னு சொன்னதப்பா?… நாங்க பினிஷ் பண்ணி எப்பவோ முடிஞ்சிதே..” என்று மகியின் குரலுக்கு இருவரும் திரும்ப அங்கே மகியும் ஆருவும் அவர்களை முறைத்துக்கொண்டிருந்தனர்…
வேந்தனோ மாட்டிக்கொண்டது போல முழிக்க, மீனாட்சிக்கோ இதழில் குறுநகை…
அவர்களின் உயரத்துக்கு மண்டியிட்தவன், “நாளு பேரும் ஒன்னா ஒரே வீட்டுல இருக்க ஓகேயான்னு அம்மாகிட்ட பேசிட்டு இருந்தேன்டா குட்டி.. ஆனா அம்மாக்கு அதுல விருப்பம் இல்லையாமே..” என்றவன் சோகமாய் முகத்தை வைத்து அவளை மாட்டிவிட…
“மீனு… மீனும்மா…” என்ற அழைப்புடன் குழந்தைகள் அவளிடம் பாய்ந்திருந்தனர்…
“மகி அப்பாக்கு ஏதோ கிப்ட் வெச்சிருக்கனு சொன்னல்ல… அத கொடுக்கலயா?…” என்று பேச்சை மாற்ற அது மகியிடத்தில் வேலை செய்தது…
வேகமாய் அதனை எடுக்க மகி ஓட…
“மகி பாத்து..” என்று வேந்தனும் ஓடி கைகளில் அவளை அள்ளி தூக்கிச்சென்றவன் அங்கே அவள் அமர்ந்திருந்த இடத்தில் இறக்கி விட்டான்..
“அப்பா கிளோஸ் யுவர் ஐஸ்..” என்று பிஞ்சி கரத்தால் அவள் கண்ணை முடியவள் பரிசை அவனிடம் தர…
அவள் கொடுத்த பரிசை பிரித்தவன் அப்படியே உறைந்து தான் போயிருந்தான்…. அவன் எடுத்த முடிவு தான் சரி என அவன் மூளையும் இதயமும் ஒன்றாய் குரல் கொடுத்தது….
ஜாலம் தொடரும்…
_ஆஷா சாரா_
Adei nijamale hero payangaram propose panrappadi ❤️❤️ பேசாம நம்ம ஆள் marattam பண்ணிக்கலாமா என்ன சொல்லுற😄😄 yoschchi நல்லா mudivaa சொன்னா ரெண்டு பாரியையும் மீட் பண்ண சொல்லி discuss பண்ணலாம் seekiram அந்த gift scence காட்டு ❤️❤️
🤣🤣 எங்காளுக்கு இன்னும் லவ் வரல… வந்தா இதவிட performance la pinnuvaaru 🤭🤭🤭… மாத்திக்கலாமே கூடவே மீனுவும் வருவா ஓகே வா… 🤭🤭🤭
மீனு உன் பூரி உனக்கே கிடைச்சிடுச்சு.
மகி வேந்தனுக்கு அப்படி என்ன கிப்ட் கொடுத்தா??
என்னதான் நடக்குது இங்க.? எதுவும் கரெக்ட்டா கெஸ் பண்ணவே முடியல சிஸ்டர்.. very interesting