அடுத்து கலப்படம் அற்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் அழகு சாதன பொருட்கள் மற்றும் மசாலா வகைகளை செய்வதற்குரிய ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளான்..
இப்படி ஒவ்வொரு துறையாக அவன் உண்மையாக ஈடுபடுவதால் அவனுக்கு என்றும் தொழில் கைவசம் வெற்றிதான்..
அவனுக்கு நல்லது செய்வதற்கு வருபவர்களை ஆதரிப்பான் கெட்டது செய்ய வேண்டும் என்று நினைத்தாலே முதல் அடி அதன் பின் தான் பேச்சு வார்த்தை..
. போகப் போக மதுரையில் முளைக்கும் புதுப்புது எதிரிகள் அனைவருக்கும் அவனது குணம் தெரிந்து சற்று அடங்கித்தான் இருக்கிறார்கள்..
யார் அவனிடம் சிக்கி அடிவாங்கி சின்னாபின்னம் ஆவது அவன் உடல் மற்றும் மன பலம் அப்படிப்பட்டது..
வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு அவன் அமரவும் இலை போட்டு சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது..
அவனுக்கு அருகில் சீனியும் அமர்ந்து சாப்பிடும் பொழுது “ அம்மா உங்களுக்கு மருமகள் ரெடி.. ” என்றான் சீனி.
“ அப்படியா மகனே.. சீனி பையன் சொல்றது உண்மைதானா எனக்கு கூடிய சீக்கிரம் சண்டை போடுவதற்கு மருமகள் வரப்போறாளா?.. ஐ ஜாலி.. தினமும் நாங்க சண்டை போட்டு சண்டை போட்டு விளையாடுவோமே..
பொண்ணு போட்டோ வச்சிருக்கியா மகனே..!
பொண்ணு பேரு என்ன? வயசு என்ன? என்ன பண்ணுது?.” என்று கேள்விக்கணைகளை தொடுத்தார் பத்மா..
“ கொஞ்சம் பொறுமையா இருங்க எல்லாம் இந்த தடியன் சொல்லுவான்.. ” என்றான் சீனி..
“ அம்மா அதெல்லாம் இருக்கட்டும் அவங்க பொண்ண கல்யாணம் பண்றதா இருந்தா நாம ஒன்னு பண்ணனும்னு கண்டிஷன் போட்டு இருக்காங்க.. ” என்றான் ஈஸ்வர்
“ என்னடா மகனே..! வீட்டோட மாப்பிள்ளையா இருக்கணும்னு கேட்டு இருக்காங்களா?.. ஏண்டா இந்த வீட்டோட மாப்பிள்ளை மட்டும் போதுமா?. இல்ல மாமியார், கொழுந்தன் எல்லாரும் போனாலும் ஓகேவா?.. நீ இல்லாம நான் இல்ல. நாம இல்லாம இந்த சீனி பய இல்ல.. அது தான் கேட்டேன். எல்லாரும் போகலாம்னாலும் ஓகே ஜாலியா போய் மருமக வீட்டுல இருந்துக்கலாமே.. என்ன நான் சொல்றது.. ” என்றார் பத்மா..
“ அம்மா இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு லொள்ளு ஆகாது.. அவங்களுடைய பெரிய பாரத்தையே நம்ம தலையில கட்டுறாங்க அப்படியா பட்ட அவங்க நம்மை சேர்த்து அங்க வச்சிக்கிட்டாலும் கிழிஞ்சிரும்.. ” என்றான் சீனி..
“ மகனே..! இந்த சீனி பைய என்ன சொல்றான்.. என்ன ஏதுன்னு சாப்பிட்டுட்டு சீக்கிரமா அம்மாக்கு செப்பு.. மருமக போட்டோ பார்த்து மருமகளை பத்தி தெரிந்து கொள்ள வில்லை என்றால் தலையே வெடிச்சிடும் போல இருக்கு..” என்று மூவரும் பேசிக்கொண்டு சிக்கன் பிரியாணியை ஒரு கை பார்த்தார்கள்..
சாப்பிட்டுவிட்டு தாயை அழைத்துக் கொண்டு வெளி முற்றத்திற்கு வந்து அங்கே போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து அவர் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான் ஈஸ்வர்..
அவர்களுக்கு அருகே ஒரு சேர் போட்டு அமர்ந்தான் சீனி..
“ என்ன கண்டிஷன் சீக்கிரம் சொல்லி தொலைங்கடா?.. நீங்க கொடுக்கிற பில்டப்பை பார்த்தா என்னவோ..! ஏதோ என்று மனுஷனுக்கு பதட்டமா இருக்கா இல்லையா? …” என்றார் பத்மா..
“ அது ஒன்னும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லம்மா.. அவங்க அம்மா ஒரு கண்டிஷன் போட்டு இருக்காங்க அதுதான் விஷயம்.. அது என்னன்னா தெளிவா கேட்டுக்கோங்க ஒரு முறை தான் சொல்லுவேன்..
நிலா பொண்ணுக்கு ரெண்டு அண்ணன் இருக்காங்க..
அவளுக்கு மதுரையில தான் மாப்பிள்ளை பார்க்கணும் அதாவது மதுரையை பூர்வீகமாக கொண்ட மண்வாசத்தோடு, இயற்கையோட ஒத்து வாழுற ஒரு குடும்பத்தில் தான் அவள் வாக்கப்படனும்..
அதாவது நம்ம குடும்பம் மாதிரி..
அப்படி மதுரை பூர்வீகமாக கொண்ட குடும்பம் அப்படின்னா அவங்களுக்கு அங்காளி, பங்காளி அப்படி நிறைய சொந்தம், உறவு இருக்கும்..
மாப்பிள்ளை கூட பொறந்த அக்கா தங்கச்சியா இருந்தாலும் பரவாயில்லை.. அப்படி இல்லாத பட்சத்தில் அவங்களுக்கு விரும்பின உறவுல நிலா பொண்ணோட அண்ணன் இரண்டு பேருக்கும் கட்டிக்கக்கூடிய உறவு முறையில் இருக்க ரெண்டு பொண்ணுங்களை நாமலே பார்த்து நம்ம செலவுல அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்..
பொண்ணுங்க இந்த காலத்து பொண்ணுங்களா இருக்கக்கூடாது. அதாவது 2கே கிட்ஸா இருந்தாலும் குணத்துல நடை, உடை பண்பில் எல்லாமே 80ஸ், 90ஸ் கிட்ஸ் இருக்கணும்..
அன்பான, பண்பான குணம் இயற்கையை ஆராதிக்கிற இயற்கையோடு ஒத்து வாழும் குணம், ஆடம்பரம் அற்ற அத்தியாவசிய தேவைகளை மற்றும் நிறைவேற்றக்கூடிய பொறுமையான பொறுப்பான குணம்.
நல்லவற்றையும், தீயவற்றையும் பகுத்தறியக்கூடிய நிதானமான குணம்.
அப்படி உள்ள ரெண்டு பொண்ணுங்கள பார்த்து நம்ம செலவில் அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டு நான் அவளை கல்யாணம் பண்ணனும்.. இதனால அவங்க அம்மா என்ன சொல்ல வராங்கன்னா ஒரே இடத்துல ஒரே சொந்தத்தில் கல்யாணம் பண்ணினால் தன்னோட மூன்று பிள்ளைகளும் வருங்காலத்துல அவர்களுக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா ஒற்றுமையா இருப்பாங்க அப்படின்னு அவங்க அம்மா சொல்ல வராங்க.. கல்யாண செலவு எல்லாம் பெரிய விஷயமே இல்ல..
இந்த காலத்து மாடலிங் பொண்ணுங்களுக்கு மத்தியில நம்ம 80ஸ், 90ஸ் கிட்ஸ் குணத்தோட பொண்ணுங்க தேடி பிடிச்சி ஆர்டர் போட்டு அந்த காட்டானுகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுதான் இங்க பெரிய டாஸ்கே..
ஒவ்வொருத்தனும் 100 கிலோ இருப்பான்.. பெரிய மலையவே முழுங்கக்கூடிய மாதிரி இருக்கானுக.. ஆளுங்க தான் அப்படி. ஆனால் முகத்தை பார்த்தா பால் குடிக்கிற பச்சை பிள்ளைங்க மாதிரி இருக்கு..
இப்படிப்பட்ட ஒரு கண்டிஷன் போட்டு இருக்காங்க, அதுக்கு என் தாய்க்குலம் ஐடியா சொல்லும் அப்படின்ற நம்பிக்கையில் அவர்களுக்கு கூடிய சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றதுக்கு நான் அழைச்சு சொல்லுறேன் அப்படின்னு ஒரு நம்பிக்கையை கொடுத்துட்டு வந்து இருக்கேன்..
தாய்க்குலமே நல்ல வழியை காட்டுங்க.. ” என்றான் ஈஸ்வர்..
“ அடேய் மகனே.. இவ்வளவு தானா விஷயம். நானும் என்னவோ ஏதோ? என்று ரொம்ப பெரிய திங் பண்ணிட்டேன்..
பொண்ணுங்க என்ன பொம்மைகளா?. அவங்க இப்படித்தான் வேணும் அப்படித்தான் வேணும்னு ஆடர் போட்டு எடுக்குறதுக்கு..
இதெல்லாம் சும்மா அல்வா மேட்டர். அம்மா சொல்றபடி செய் அவங்க வாழ்க்கை அமோகமா போகும்..
இந்த காலத்து பொண்ணுங்களை குறை சொல்லக்கூடாது.. இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி மாடலிங் நவீன நாகரிகத்தோட பொண்ணுங்க இருக்காங்க. குடும்பம், கட்டுப்பாடு அன்பு, பண்பு இப்பிடிப்பட்ட பொண்ணுங்களும் இருக்காங்க..
ஒரு மனிதன் யாருக்கும் தீங்கு விளைவிக்காத வரையில் அவன் எப்படி இருந்தாலும் அது அவனுடைய சுய விருப்பம், சுதந்திரம் அதுல யாரும் தலையிட முடியாது..
ஓகே அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். என் மருமகள் எப்படி இருப்பா காட்டு. அவளை பத்தி சொல்லு இல்லாட்டி கால் பண்ணி குடு நான் பேசுறேன்.. ” என்றார் பத்மா..
எதையும் மறைக்காத மகன் தாயிடம் அவளைப் பற்றி முழு விவரமும் அவன் பார்த்தது வரை அனைத்தையும் கூறினான்..
“ அப்படியாப்பட்ட பொண்ண ஏன் நீ அங்கேயே விட்டுட்டு வந்த. கையோட ஒரு தாலிய கட்டி வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல உள்ளங்கையில் வைத்து தாங்கி இருப்பேன்.. ”
“ எனக்கு மட்டும் விட்டுட்டு வர ஆசையா?. எனக்கும் அப்படி ஒரு எண்ணம் மனசுல வந்தது தான். ஆனா அவங்க சொன்ன மாதிரி அந்த காட்டான்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணுமே.. அதுக்காக தான் நான் பொறுமையா வந்தது.. ” என்றான் ஈஸ்வர்..
“ சூப்பர் டா மகனே.. எனக்கு அடுத்த ஸ்டோரி எழுதுறதுக்கு ஒரு நல்ல கன்டன்ட் கிடைச்சிருக்கு.. அம்மா இனி அந்த வேலையிலும் பிஸியா இறங்கணும்.. இடையில அந்த காட்டன்களுக்கு பொண்ணும் பாக்கணும் அப்படித்தானே.. ” என்றார்..
“ எஸ் பத்து குட்டி.. ” என்றான் ஈஸ்வர்..
“ இனி ரொம்ப நாளைக்கு என் மருமக அந்த வீட்ல இருக்க வேண்டாம் அவளை கூடிய சீக்கிரம் என்கிட்ட கொண்டு வந்து சேர்த்துடு. அந்த காட்டான்களுக்கு பொண்ணு ரெடி. அடுத்து வரும் முகூர்த்ததில் கல்யாணம் வச்சுக்கலாம். இப்பவே கால் பண்ணி தா. நானே பேசுறேன்.. ” என்றார்..
“ என்னமா ரெண்டு நிமிஷ நூடுல்ஸ் மாதிரி சொன்ன உடனே பொண்ணு ரெடி என்று சொல்லுறீங்க யாருமா? அந்த பொண்ணுங்க ரெண்டு பேரும்.. ” என்று தற்பொழுது தான் சீனி வாய் திறந்தான்..
“ அது ஒன்னும் பெரிய வித்தை இல்லடா சீனி.. இவங்க போட்ட கண்டிஷனை பார்த்தா எனக்கு ஏதோ இப்படித்தான் எனக்கு ஒரு பொண்ணு வேணும்னு அந்த முரட்டுபீஸ் இரண்டும் சேர்ந்து பண்ணுற வேலையா இருக்குமோன்னு தோணுது.. அதுக்கு இல்லாத அவங்க அம்மாவை சாட்டு சொல்றாங்களோ அப்படின்ற ஒரு எண்ணம்..
அப்படி அவங்களுக்கு பொண்ணு கிடைத்தால் வாழ்க்கை அமோகமா போகுமே.. அப்படி போன நமக்கு அங்க என்ன வேலை..
நம்ம சந்திராக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்கு தானே.. அவங்க ரெண்டு பேரையும் அண்ணன், தம்பிக்கு நாம கல்யாணம் பண்ணி வச்சுருவோம். எப்படி ஐடியா..
ஒரு பைசா செலவில்லாமல் உன் பொண்ணுங்களுக்கு மாப்பிள்ளை கிடைக்கும் என்றால் சந்திரா நாய் மாதிரி குறைக்கையும் செய்வா. அப்படியா பட்ட சந்திரா. அவ பொண்ணுங்களை அவங்களுக்கு முன்னாடி நம்ம சொல்ற மாதிரி தயார் படுத்தி வைக்க மாட்டாளா என்ன?..
இப்ப உடனே நான் அவங்களோட பேசி மூத்தவன் எப்படி, இளையவன் எப்படி, என்று தீர்மானிச்சுட்டு தான் இரண்டு பொண்ணுகளையும் யாருக்கு யார் என்று நான் ஒரு முடிவுக்கு வர முடியும் இனி இந்த கேம் என்னோடது..
என் மருமகளை பத்தி நீங்க சொல்றதுக்கு முன்னாடி இந்த கல்யாணத்தை கொஞ்சம் தள்ளி ஆறுதலா பண்ணுவோம். என்று நான் நினைச்சிருந்தேன். ஆனா என் மருமக இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அங்க உதவிக்கு யாரும் இல்லாமல் தனித்து இருக்க எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு.. அதனால கூடிய சீக்கிரம் அவ நம்ம வீட்டுக்கு வந்தே ஆகணும்.. அதுக்காக எந்த லெவலுக்கும் நான் போக தயார்..
த கிரேட் எழுத்தாளர் பத்மாவதியின் ஆட்டம் ஆரம்பமாக போகுது மகனே.. ” என்றார்..
சந்திராவின் பெண்கள் என்று சொன்னதுமே ஈஸ்வர் ஷாக் ஆகி அமர்ந்து விட்டான்..
சீனி அந்த இடத்திலேயே இல்லை..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
+1