Loading

செதுக்கும் சிற்பி அவன்

எப்போதும் சத்தங்கள் நிறைந்து
காதுகளில் வலி தந்து விடும் தான்…. ஆனாலும் இது அவன் பரம்பரை தொழில்…கைவிட முடியாது…

ஊரில் பாதிரியார் தொடங்கி மேற்றானியார் வரை ஆலங்களை புதுப்பித்தல் தொடங்கி அன்னதானம் வரை அழைக்க கூடிய அளவு பாரிய பரம்பரை இவர்களது

சொந்த அண்ணனே ஏற்கவில்லை யே…

தனக்கான பாகத்தில் வேறு இலாபம் ஈட்ட மட்டுமே தேட நினைக்கின்றான்..

நான் : ஹர்ஸ்.

தொழில் : மர பலகைகள் ஆளை

நிறுவனம்

இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு அண்ணனுடன் பிறந்த கலகலப்பாக மைந்தன் தான்…

சொந்த தொழிலை ஏற்கும் வரை…
தந்தையால் மேற்கொண்டு நடத்த முடியாது தினிக்கப்பட்ட தொழில் தான்…அண்ணன் படிப்போடு சார்நத கட்டுமான துறையை தேர்ந்தெடுத்து வாழ… வேறு வழியின்றி சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் போதே தொழிலின் நுணுக்கங்களை தந்தை யும் நம்பிக்கையான ஒருவரின் வழிகாட்டலுடன் கையில் எடுத்து நடத்த துவங்கினான்….

ஊழியர்களின் ஊழல் முறியடித்து தலைதூக்கவே 3 வருடங்கள் ஆகிவிட்டது…

தன் குடும்ப பெருமை காக்க நிறைய தான தர்மங்களை சரி வர தொடரவே மூச்சு முட்டி போய்விட்டது….

எத்தனை commitments…

ஒர் ஊரின் முதல் குடிமகன் நிலையில் வாழ்ந்து சென்ற அவன் மூதாதையர்களை நிஜமாகவே நினைத்து பெருமை கொள்ளாமல் இருக்கமுடியவில்லை…

அரசாங்க அனுமதியுடன் நடத்துவது அத்தனை இருக்கவில்லை தான்…

இதில் மரங்களின் தரம் கொஞ்சம் கூட குறையாமல்…

பதப்படுத்த

அறுக்க

தரம்பிறிக்க

அட்டவணை படுத்த

என ஒவ்வொன்றையும் யாரிடமும் ஒப்படைக்காது ஓட வேண்டும்…

ஒரு பகுதியில் இருந்து அடுத்த பகுதி போகவே ஒரு மணி நேரம் எடுத்து விடும்.

இதில் பில் செய்து ஏற்றச் சொல்லி அவனே உறுதிப்படுத்திய பின்பே வண்டிகளை வெளியே அனுமதிப்பது இப்போதெல்லாம்..

பூட்டன் வீடையும் சேர்த்தே கட்டிவைக்க

கொஞ்சமாவது ஆசுவாசப்பட முடிந்தது அவனால்…

இதில் அழுவலக அறை வந்தாலே …

வீட்டின் தேவை என …

ஒரு சில ஆயிரங்கள் கணக்காக கூறி பணம் பெற முதல் ஆளாக வந்து நிற்கும் தாய் வேறு….

ஒரளவு கட்டுப்படுத்தினாலும் தாய் தந்தை கு தான் கொடுப்பதா என தோன்றவே ..

தங்கள் தேவையை தங்களுக்கான விதத்தில் கையால ஒரு புது முறையையும் இந்த 10 வருடங்களில் செய்து விட்டிருந்தான்
மொத்தமான ஒரு பெரும் தொகையை அவர்களுக்கே தெரியாமல் சேர்த்து

அவர்களே அதில் கணிசமாக கிடைக்கும் வட்டியை பெற்று தானே இயங்க வைத்தான்.

எதிர்காலத்தின் தனக்கு மனைவி ஒருத்தி வந்தாலும் தன் பெற்றோரை குறைவான எண்ண கூடாது என்ற ஒரே எண்ணத்தில்.

இதற்கு காரணம் அண்ணன் தனி குடித்தனம் போனதாலும் இருக்கலாம்…

நெருங்கிய தோழன் ஶ்ரீ கு அழைப்பு விடுத்தான்…

“மச்சி.. திருமண நிச்சயம் ஞாயிறு இருக்கு தங்கச்சி யை கட்டாயம் கூட்டி வா டா.. நீங்க ரெண்டு பேரும் என் கண் முன்னே இருக்கனும் எல்லாம் நல்ல விதமாக முடியும் வரை”

“கண்டிப்பா ஹர்ஸ் “

தங்கள் பயணத்திற்கு தனி வாகனம் புக் செய்து சென்றனர்..

தன் மனைவி இவ்வாறான வைபத்திற்கு என்ன செய்வது என புரியாமல்..100 ரோஜாக்களை வட்ட மலர் கொத்தாக செய்து கூடவே ஒரு மோதிரமும் வாங்கி இருக்க…மலருக்கான விலையில் கொஞ்சம் கோபம் கொண்டான் ஶ்ரீ
ஆனால்
ஆடம்பர ஹோட்டல் முன்பு ஆளுக்கு ஒர் திசையில் கூடி பேசிக்கொண்டிருந்த அனைவரையும் கடந்து செல்ல.

மணமகன் சோர்ந்து தனித்து நின்க கண்டான்..

மணமகளை அழைக்க மலர் கொத்தை மறந்து விட்டனராம் ..புதிது வர நேரம் ஆகும்..என

தன் தங்கை கையில் உள்ளதை கண்டு ஆனந்தம் கொண்டான்..

அடர் சிவப்பு ரோஜாக்களின் பூங்கொத்தோடு தன் வருங்கால மனையாளை நோக்கி எதிர்கால கனவுகளுடன் முன்னேறினான் ஹர்ஸா.

 

💫 சுபம் 💫

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஹர்ஸ் தாய் தந்தை யாரோட கையையும் எதிர்பார்க்கக்கூடாதுனு தனியா பணத்தை செட்டில் பண்ணியது அருமையான விஷயம்..