Loading

ஆர்ஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம் வகுப்பிற்குள் ஒருவரும் இல்லையோ என எண்ணும் அளவிற்கு மைதானத்திலும் வராண்டாவிலும் மாணவர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது அங்கு கணிதப் பிரிவு ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் ஹச்ஓடிக்கான மேஜையின் பின் அமர்ந்திருந்த ஜெனிஃபர் தன் முன்னால் இருக்கும் பரிட்சை தாள்களையும் அடுத்த வகுப்பிற்கு தேவையான குறிப்புகளையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

அருகில் இருக்கும் இரு ஆசிரியர்கள் பேசிக் கொண்டிருந்ததும் அவர் காதில் விழுந்து கொண்டுதான் இருந்தது “அந்த ஹேமா பொண்ணு இன்னும் வீட்டில் நடந்த ராபரிலேந்து வெளிய வரலன்னு நினைக்கிறேன் அவ முகமே சரியில்லை”.

“அது நடந்து ஒரு வாரம் ஆகியிருக்கும்ல அத நினச்சுட்டே இருந்தா மட்டும் எல்லாம் சரியாகிடுமா. என்னோட லாஸ்ட் கிளாஸ்ல கூட நான் கவனிச்சேனே கொஞ்சம் நார்மலா தான் இருந்தா”.

“எனக்கு கடைசி பீரியட் அங்கதான் அவ முகமே சரியில்ல வீட்ல ஏதாச்சும் ப்ராப்ளமா இருக்குமோ என்னவோ”.

“ஏற்கனவே நடந்ததே போதாதா போலீஸ்காரன் வீட்டிலேயே ஒருத்தன் கை வச்சிருக்கானு சொல்லும்போது கொஞ்சம் பயமாத்தான் இருக்கு”.

“மயக்க மருந்துக்கு பொலீஸ் தெரியும் இல்ல டீச்சர்னு தான் தெரியுமா யார இருந்தாலும் மயங்க வச்சுட்டு போயிட்டு தான் இருக்கும்”.

“ஆனாலும் பாரேன் போலீஸ் வீட்லயும் திருட்டு போய் ஒரு வாரம் ஆச்சு இன்னும் திருடனை கண்டுபிடிக்கல இந்த லட்சணத்தில தான் இருக்காங்க நம்ம ஊரு போலீஸ் எல்லாம்” என அவர்கள் அதைப் பற்றியே விவாதித்துக் கொண்டிருக்க இடைவேளை முடிந்ததற்கான ஓசை கேட்டது உடனே ஜெனிஃபர் தன் இருக்கையிலிருந்து எழுந்து மூன்றாம் ஆண்டு கணிதபி நோக்கி நடந்தார்.

வகுப்பிற்குள் நுழைந்ததும் தன் கைகளில் இருந்தவற்றை மேஜையில் வைத்தவர் “குட்மார்னிங் ஸ்டுடென்ட்ஸ்” என வாழ்த்து அறிவிக்க “குட்மார்னிங் மேம்” என கோரஸ் பாடினர் மாணவர்கள்.

அதனை சிறு புன்னகையுடன் ஏற்றவர் “லாஸ்ட் கிளாஸ்ல சொல்லிக் கொடுத்ததுல யாருக்காச்சும் சந்தேகம் இருக்கா” என கேட்டார்.

“நோ மேம்” என மீண்டும் கோரஸ் பாட “ஓகே அப்போ நெக்ஸ்ட் தியரிக்கு போலாம் நோட் பண்ணிக்கோங்க” என்றவர் தன் கையோடு கொண்டு வந்திருந்த குறிப்பை பச்சை வண்ணம் பூசப்பட்ட பலகையில் அனைவருக்கும் தெரியுமாறு தன் குண்டு குண்டு எழுத்துக்களால் ஏழுத ஆரம்பித்தார்.

தொடர்ச்சியாக இரண்டு வகுப்புகள் மாணவர்களின் கவனம் வேறு எங்கும் செல்லாமல் பாடத்திலேயே இருக்குமாறு கவனித்துக் கொண்டவர் இறுதிப் பதினைந்து நிமிடத்தின் முன் வகுப்பை நிருத்திக்கொண்டார்.

“ஓகே ஸ்டுடென்ட்ஸ் இன்னைக்கு எடுத்தது வீட்டுல போய் ரிவிஷன் பண்ணிடுங்க டவுட் இருந்த நம்மளோட நெக்ஸ்ட் கிளாஸ்ல பார்ப்போம் அப்றம் இது உங்களோட இன்டர்ணல் பேப்பர்” என்றவர் முதல் வரிசையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நீட்ட அவள் அனைவருக்கும் கொடுத்தாள்.

“பேப்பர்ல யாருக்காவது டவுட் இருந்தா மார்க் சொல்ல வரும்போது கேளுங்க” எனக் கூறியவர் அவர்கள் வகுப்பிற்கான மதிப்பெண் பதிவேட்டை எடுத்து அமர்ந்ததும் ஒவ்வொருவராய் வர அவர்கள் கேட்பதை தெளிவுபடுத்திக் கொண்டு மார்க்கை குறித்துக் கொண்டார்.

“வெரி குட் ஸ்டுடென்ட்ஸ் இந்த முறை எல்லாருமே நல்ல மார்க் ஸ்கோர் பண்ணியிருக்கீங்க” என பாராட்டியவரின் பார்வை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலைகொள்ள ஒரு மாணவி எழுந்து நின்றாள் “வெரிகுட் ஹேமா இந்த முறையும் என்னோட சப்ஜெக்ட்ல நீதான் ஃபர்ஸ்ட் மார்க்” என்று வாழ்த்த முகத்தை தரையில் புதைத்துக் கொள்ளும் அளவிற்கு தலையை குனிந்து “தேங்க்ஸ் மேம்” என்று முணுமுணுத்தாள் அது பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேட்டால் கூட அதிசயம்தான்.

“உன்கிட்ட நேத்து என்ன மீட் பண்ண சொல்லிருந்தேன் ரைட்”.

“எஸ் மேம்” என அதற்கும் அவள் முனுமுனுக்க அவள் பக்கத்திலிருந்த தோழி எழுந்து “மேம் நேத்து அவளுக்கு ரொம்ப உடம்பு முடியல லஞ்ச் கூட சாப்பிடல அப்படியே படுத்திருந்தா அதான் வர முடியல”.

“ஓ இப்ப எப்படி இருக்கா” என்ற கேள்விக்கு ஒருமுறை தோழியை பார்த்தவள் “இப்போ நல்லாயிருக்கா மேம்” என்றாள்.

“தென் லிசன் இன்னைக்கு லஞ்ச் முடிச்சதும் அவளை என்கிட்ட கூட்டிட்டு வர வேண்டியது உன்னோட பொருப்பு” என்றுக்கூற சரியாய் வகுப்பு முடிந்ததை உணர்த்தும் விதமாய் ஒசை கேட்க “தேங்க்யூ ஸ்டுடென்ட்ஸ்” என்று கூறியவர் மாணவர்களின் வாழ்த்தையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றார்.

ஏஜே ஆட்சின் கேண்டீனில் சூர்யாவும் கவிதாவும் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்க “என்ன காயு ஒரு வார்த்தை கூட பேசாம உள்ள தள்ளிட்டேயிருக்க அவ்ளோ பசியா”‌ என்று கேட்க “நான் கோபமா இருக்கேன்” எனக்கூறி முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டாள் காவியா.

“பார்ரா என்னோட பர்த்டேக்கு அதிசயம் எல்லாம் நடக்குது”.

“கிண்டல் பண்ணாத சூரி ஆபீஸ்ல எல்லாருக்கும் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்த எனக்கு மட்டும் கொடுக்கல” என்றாள் பாவமாய்.

“இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல அதான் உனக்கு என்ன வேணுமோ ஆர்டர் பண்ண சொல்லிட்டேனே”.

“நான் ஆர்டர் பண்ணி வாங்குறதும் நீ பர்த்டேக்கு ஸ்வீட் குடுக்குறதும் ஒன்னா” என அப்போதும் அதையே கூற “ஹாய் சூர்யா” என்றவாறு வந்தான் பிறந்ததிலிருந்தே ஏசியில் இருந்ததுபோல் சுண்டினால் ரத்தம் வரும் நிறத்துடைய இளைஞன்.

“ஹாய் சிவா ஏதாவது வேலையா”.

“ஹே நோ நோ விஷ் பண்ணலானு தான் ஹாப்பி பர்த்டே சூர்யா” என்றவாறு அவள் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“தேங்க்யூ ஜூஸ் ஆர்டர் பண்ணட்டுமா”.

“நோ நோ இன்னிக்கு ஈவினிங் ஃப்ரீயா வெளிய போலாமா அது எனக்கு கொஞ்சம் பேசணும் உன்கிட்ட லெட் செளிப்ரட் யுவர் பர்த்டே டுகதர் நான் டேபிள் புக் பண்றேன்” என கூறி முடிப்பதற்குள் அவன் முன்னெற்றி வியர்த்திருந்தது.

“சாரி சிவா ஈவினிங் வேற பிளானிருக்கு”.

“ஓ ஓகே தென் சியூ லேட்டர்” என முகம் வாடி செல்ல “என்ன காயு நான் எவ்வளவு சில்லா கேண்டில் பண்ணேன் பாத்தியா” என கேட்டு ஒரு கை சிக்கன் பிரியாணியை இவளையே வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தவளின் வாயில் திணித்தாள். 

கைகளால் சூப்பர் என்று காட்டியவள் வாயிலிருந்த சிக்கன் பிரியாணி காலியானதும் “என்னால நம்பவே முடியல நீ இவ்வளவு அமைதியா பேசுற அதுவும் சிவாட்ட ஏற்கனவே இரண்டு முறை அடிவாங்கியும் எப்டி வந்து பேசுறான் நான் கூட இன்னைக்கும் அவன் கன்னம் தீஞ்சுடும்னு நினைச்சேன்”.

“கமான் காயு நான் பெரிய பொண்ணாய்டேன் இப்ப யார எப்படி ஹேண்டில் பண்ணனும் எப்படி கோவத்த கண்ட்ரோல் பண்ணணும் எல்லாம் எனக்கு தெரியும் புதுசா இப்போ யோகாவும் கத்துக்கிறேன்” என தற்பெருமை பேசிக் கொண்டாள்.

கல்லூரியில் ஜெனிஃபர் தன்னிடத்தில் சாப்பிட்டு முடித்து அமர்ந்திருக்க ஹேமாவின் தோழி அவளை அழைத்துக்கொண்டு வந்தாள் “எஸ்கியூஸ்மி மேம்” எனக்கேட்டு மற்ற ஆசிரியர்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து தயங்கி வாசல் பக்கமே நின்றார்கள்.

அவர்களை பார்த்துவிட்டு எழுந்து வந்தவர் அவள் தோழியை அனுப்பிவிட்டு ஹேமாவுடன் கேண்டீன் நோக்கி சென்றார் மதிய உணவு இடைவேளை என்பதால் அங்கு கூட்டமாக இருந்தது. 

அவளை ஒரு இருக்கையில் அமர வைத்தவர் இருவருக்குமான கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி கொண்டு அவளெதிரே அமர்ந்து ஒன்றை அவளிடம் கொடுத்து அமைதியாக தன்னதை ரசித்துக் குடித்தார் இடைவேளை முடிந்து அனைவரும் அங்கிருந்து அகன்றதும் தன் கையிலிருந்த கூல் ட்ரிங்க்ஸை நகர்த்தி வைத்தவர் கையை கட்டிக் கொண்டு அவளையே பார்த்தார்.

“நான் கிளாஸ் போகவா” என அவள் வெளியே வராத குரலில் கேட்க அவரிடம் எந்த பதிலும் வரவில்லை அதுவரை கூல் ட்ரிங்க்ஸை இருக்கைகளாலும் இறுக்கிப் பிடித்தவாறு அதிலேயே தன் பார்வையைப் பதித்திருந்தாள் மெல்ல தன் விழியுயர்த்தி பார்த்தாள்.

அதற்க்காகவே காத்திருந்தது போல் “சொல்லு ஹேமா என்ன பிராப்ளம் உனக்கு ” என்றுக்கேட்டார்.

“ஏதுமில்லை மேம்” என மீண்டும் தலைகுனிந்து கூற அவர் அமைதியாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“மேம் அது… வீட்ல… சூழ்நிலை சரி…ல்ல என்னால…. கன்சிடரேஷன்…பண்ண முடியல” என ஒரு வாக்கியத்தை முடிக்கும் முன் அவளிற்கு மூச்சு வாங்கி முகம் முழுவதும் வேர்த்திருந்தது.

“உங்க வீட்ல திருட்டு நடந்தது ஒரு வாரம் முன்னாடி அப்ப கூட நீ இப்படி ரெஸ்ட்லெஸா இல்ல இப்போ ரெண்டு நாளா தான் உன்கிட்ட ஏதோ சரியில்ல என்னாச்சு” எனக்கேட்க அவளிடம் அமைதி மட்டுமே பதிலாய்.

“லிசன் ஹேமா எந்தப் பிரச்சனையையும் உனக்குள்ளேயே வச்சிருந்தா அது சால்வ் ஆகாது ஒன்னு என்கிட்ட சொல்லு இல்லன்னா உன்னோட வீட்டுல சொல்லி சால்வ் பண்ண பாரு”.

“இல்ல.. என்னால… என்னால… இத சொல்ல.. முடியாது”.

“உன்னோட அப்பா இன்ஸ்பெக்டர் அத மறந்துடாத அவரால உன்னோட ப்ராப்ளம சரி பண்ண முடியாதுனு நினைக்குரியா” எனக்கேட்க அவளிடம் பதிலில்லை “சரி வீட்ல சொல்ல வேண்டாம் என்கிட்ட சொல்லு என்ன பிராப்ளம்” என்று கேட்க இரண்டு நாட்களாய் மனதிற்குள் அழுத்திக் கொண்டிருந்த அழுத்தம் எல்லாம் அவள் கண்களில் கண்ணீராய் வெளியேறியது.

அவள் அழுவதை ஏதும் கூறாமல் பார்த்துக்கொண்டே அவர் அமைதியாய் இருக்க அவளாகவே அழுது முடித்து விசும்பலோடு பேச ஆரம்பித்தாள் “உங்களுக்குத் தெரியும்ல மேம் எங்க வீட்டில திருட்டு நடந்தது அது ஏதோ ஏசில… மயக்க மருந்து.. ஸ்பிரே பண்ணி விட்டு..”.

“ம்”.

“அப்போ.. அப்போ.. நான் குளிச்… குளிச்சிட்டு… ரூம்ல ட்ரெஸ்… எனக்கு திடீர்னு… எனக்கு ஒரு மாதிரி… மயங்கிட்டேன்… அப்புறம்தான் தெரிஞ்சது திருட்டு நடந்திருக்குனு” எனக்கூறி அமைதியாக ” ம்ம்” என்று தான் கேட்டுக் கொண்டிருப்பதை அவளுக்குத் தெரியப்படுத்தினார்.

“ரெண்டு நாள் முன்னாடி காலேஜ் விட்டு போயிட்டு இருக்கும்போது ஒருத்தன் வந்து……. என்னோட…..” என்றவள் உதடுகளை தன் இருகைகளாலும் மூடி தன் அழுகையின் சத்தத்தை கட்டுப்படுத்த ஜெனிஃபர் எழுந்து அவளருகில் அமர்ந்து தோளில் சாய்த்துக் கொண்டார் ஆறுதலாய்.

தன்னை ஒருவாறு சமாதானப் படுத்திக் கொண்டவள் அவர் தோளில் சாய்ந்தவாரே “திடீரென்று ஸ்கூட்டி நிறுத்தி… தெரியுதானு கேட்டு…. எனக்கு தெரியல…. அப்போ போன்ல…என் போட்டோ….. அன்னைக்கு ட்ரெஸ்…” என தன் இருக்கைகளையும் நெஞ்சோடு இருக்கியவாரு ஏங்க அவள் தலையை கோதியவாரே “என்ன வேணுமா அவனுக்கு” எனக்கேட்டார்.

“என்ன… என்ன… நான் வேணும்..”.

“அதுக்கப்புறம் பார்த்தியா அவன”.

“ம் நேத்து.. காலேஜ் விட்டுப் போகும்போது… குரூப்பா… போன்ல பார்த்து…. என்ன பார்த்து… ரூம் கேமரா… என்னவோ”.

“ம்”.

“இன்னைக்கு…. இன்னைக்கு…. நான் எத்தனை நாள் லேட் பன்றேனோ….. அத்தனை பேர் கூட…. என்னால முடியல…. செத்துடலாம்னு இருக்கு”.

“என்ன பேசுற ஹேமா இதை நீ முதல்ல வீட்ல சொல்லியிருக்கணும்”.

“இல்ல என்னால முடியல…. அம்மா…. உங்களுக்கு தெரியுல்ல ரொம்ப பயந்தவங்க இப்போ ரொம்ப பயப்படுறாங்க முன்னாடியே அவங்களுக்கு வெளியே போனும்னா கூட தம்பி இல்லைனா நான் கூட போகணும் இதெல்லாம் தாங்க மாட்டாங்க”.

“உன்னோட அப்பா”.

“எப்டி நான்…என்னால முடியல… சொல்ல நினைக்கும் போதெல்லாம்… அப்பா முகத்தையே பாக்க முடியல…. உடம்பெல்லாம் கூசுது… என்னால….என்னால சொல்ல முடியல..”.

“அப்போ நீ செத்தா எல்லாம் சரியாயிடும்னு சொல்றியா” என அவள் மனநிலையை அறிந்துகொள்ள கேட்டார்.

“இல்ல மேம் எனக்கு தெரியும்… நான் செத்தாலும் இது என்னோட குடும்பத்தைப் பாதிக்கும்.. ஆனா இதுலேந்து எப்படி வெளிய வர்ரதுனு தெரியல ஆனா நான் நிச்சயமா அவன் பேச்சை கேட்க மாட்டேன்…. நான் மாட்ட….”.

“ஹேமா இங்க பாரு இந்த பிரச்சினையை சால்வ் பண்ண நான் ஹெல்ப் பண்றேன் ஆனா உன்னோட அப்பாவும் நம்ம கூட இருக்க வேண்டியது முக்கியம் புரியுதா”.

“ம் புரியுது…ஆனா இத அப்பாக்கு சொல்ல என்னால முடியாது”.

“சரி நான் பாத்துக்குறேன் உன்னோட அப்பா நம்பர் சொல்லு”.

“என்ன! இப்போவே”.

“இந்த பிரச்சினையை எவ்ளோ சீக்கிரம் முடிக்குறோமோ அவ்ளோ நல்லது நம்பர் சொல்லு” என்று கேட்டு வாங்கியவர் மீண்டும் கூல் ட்ரிங்க்ஸ் அவள் கையில் கொடுத்து “பினிஷ் பண்ணு” என்றவர் சற்றுத்தள்ளி சென்று அவள் தந்தையை அழைத்தார்.

“ஹலோ இன்ஸ்பெக்டர் கிரிகரன் ஸ்பீக்கிங்” என்ற கம்பீரக் குரல் இவரை அடைந்ததும் “சார் நான் ஜெனிஃபர் ஹேமாவோட ஹச்ஓடி”.

“சொல்லுங்க மேம் எனி ப்ராப்ளம்”.

“உங்களால இப்போ காலேஜ் வர முடியுமா”.

“இப்போவேவா என்ன ஆச்சு ஹேமா நல்லா இருக்கால”.

“நல்லா இருக்கா எனக்கு உங்ககிட்ட முக்கியமா ஒன்னு பேசணும் இட்ஸ் அர்ஜென்ட்”.

“ஓகே நான் வரேன்” என்க்கூறி வைத்ததும் அவர் மீண்டும் ஹேமாவின் அருகே வந்தமர “நான் இப்ப ஓகே மேம் நீங்க கிளாஸ் போங்க” என்று கூற அவளைப் பார்த்து சிரித்தவர் “என்னோட அவர் ஆல்ரெடி முடிய போகுது லாஸ் அவர் எனக்கு கிளாஸ் இல்ல நீ நார்மலா இரு” எனக்கூறி அமைதியாய் அமர்ந்துகொண்டார்.

சிறிது நேரத்தில் அவர்களின் அமைதியை மொபைல் ஒலியெழுப்பி கலைக்க அழைப்பை ஏற்றவர் “சொல்லுங்க மிஸ்டர் கிரிகரன்” என்றார்.

“மேம் நான் வந்துட்டேன் நீங்க?”. 

“நீங்க கேன்டின் வந்துருங்க மிஸ்டர் கிரிகரன்” என்று கூறி வைக்க இங்கே ஹேமாவின் கைகள் நடுங்க தொடங்கியது.

“இதுல உன்னோட தப்பு எதுவுமே இல்ல ஹேமா. நீ பயப்படுறதுக்கும் அவசியமில்லை நிச்சயமாக இந்த பிராப்ளம் சால்வ் ஆயிடும்” என்று அவளின் கைப்பிடித்து அழுத்தம் கொடுத்தார்.

வேகமாக அங்கே வந்த கிரிகரன் தன் மகளின் அழுது வீங்கிய முகத்தைப் பார்த்து யோசனையோடு அவர்களின் எதிர் இருக்கையில் அமர்ந்தார்.

“சொல்லுங்க மேம் என்ன ப்ராப்ளம்” என வந்ததும் நேர விசயத்திற்கு வர இவரும் எந்த சுத்திவளைப்பும் இல்லாமல் “உங்க வீட்டுக்கு திருட வந்தவன் ஹேமாவை தப்பா போட்டோ எடுத்து மிரட்டிட்டு இருக்கான்” என நேரேக்கூற கேட்டவருக்கு ஒருநிமிடம் அதிர்ச்சியில் ஏதும் பேச முடியவில்லை.

சிறிதுநேரத்தில் அதிர்ச்சியிலிருந்து தன்னை மீட்டவராய் “இதையேன் நீ முன்னாடியே சொல்லல எப்போலேந்து மிரட்டுறாங்க” என்று சிறு குறல் உயர்த்தி கேட்க அதிலேயே ஹேமாவின் உடல் தூக்கிப்போட்டு விட்டது.

“சார் ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க இப்பதான் ரெண்டு நாளா உங்ககிட்ட சொல்லணும்னு ட்ரை பண்ணி இருக்கா ஆனால் அத நெனச்சிட்டு உங்க முகத்தை கூட பார்க்க முடியலனு சொல்றா இது பெண்களுக்கேயான உணர்வு அதை மாத்துறது கஷ்டம் பொண்ணுக எவ்ளோ தான் தைரியமா இருந்தாலும் இந்த இடத்தில விழுந்துடுறாங்க இப்போ ஹேமா எழுந்து நிக்க உங்க சப்போர்ட் ரொம்ப முக்கியம்” என்றுக்கூற அவரிடம் சிறிது நேரம் மௌனம்.

“எந்த நம்பர்லேந்து மிரட்டல் வருது? அந்த நம்பர் குடு” என்று மகளைப் பார்த்து கேட்க அவள் இல்லை என்பது போல் தலையசைத்தாள் அவர் மீண்டும் ஜெனிஃபரை பார்க்க “போன்ல இல்ல நேரா காலேஜ் வரும்போதும் போகும்போதும் மிரட்டி இருக்கான்” என மீண்டும் அதிர்ச்சி கொடுத்தார் அவருக்கு.

“உங்க வீட்டில திருட வந்தவன் தான் இத பண்ணி இருக்கான் அது கன்ஃபார்ம் அவன பத்தி டீடெயில்ஸ் எதுவும் கிடைக்கலயா சார்”.

“ரெண்டு மூனு திருட்டு ஒரே மாதிரி நடந்திருக்கு க்ளூ எதுவும் இல்ல எப்டி இவன கண்டுபிடிக்க”.

“கண்டுபிடிக்கிறதுல பிரச்சினையில்ல ஹேமாவை ஃபாலோ பண்ணா ஈஸியா கண்டுபிடுச்சுடலாம் ஆனா அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு நினைக்கிறீங்க அவன் ஹேமாவ மிரட்டினதுக்கு நம்மகிட்ட எந்த ஆதாரமும் இல்லை”.

“நான் யோசிக்கணும் பொண்ணு விஷயம் எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்ய முடியாது”.

“நானும் அதைத்தான் சார் சொல்றேன் பொண்ணு விஷயம் நேரத்தை தள்ளிப் போடுறதுல எந்த பிரயோஜனமும் இல்லை” எனக்கூற அவரிடம் பெருமூச்சு கிளம்பியது வேறு யாருக்கும் இதே பிரச்சினை என்றால் எப்படி தீர்ப்பாரோ என்னவோ தன் மகளுக்கு என்றதும் மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது போலும்.

“நீங்க ஏசிபி ஆதவ் கிருஷ்ணன் பத்தி என்ன நினைக்கிறீங்க சார்” எனக் கேட்க திடீரென்று அவர் முகத்தில் வெளிச்சம் பரவியது சென்னை போலீஸ் டிபார்ட்மென்ட் மொத்தத்திற்கும் தெரியுமே பெண்களிடம் சின்ன பிரச்சனை செய்தாலும் அவன் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவான் என்பது.

“ரொம்ப நேர்மையானவர் இந்த பிரச்சனையை அவரால நிச்சயமா சால்வ் பண்ண முடியும்னு தோணுது நீங்க என்ன நினைக்கிறீங்க”.

“எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அவரு சரியானவர்னு தான் நினைக்கிறேன் ஆனா உங்க டிபார்ட்மெண்ட்ல இருக்கவர் பத்தி என்னவிட உங்களுக்கு தான் சார் நல்லா தெரியும்”. 

“ஓகே மேம் நான் சார பாக்குறதுக்கு ஏற்பாடு பண்றேன் இப்ப நான் ஹேமா கூட்டிட்டு போலாமா” என்று கேட்க அவள் ஜெனிஃபரின் கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.

“இந்த விஷயம் உங்க வைஃப்க்கு தெரியவேண்டாம்னு ஃபீல் பண்றா அட்லீஸ்ட் இந்த ப்ராப்ளம் முடியும் வரைக்கும்” எனக்கூற கேள்வியாய் பார்த்தார்.

“ஹேமா சொன்ன வரைக்கும் உங்க வைஃப்க்கு ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவங்க இந்த விஷயம் தெரிஞ்சு அவங்க பயந்தா அது இவளையும் பாதிக்கும் பிராப்ளம் சால்வ் ஆனாதுக்கு அப்புறம்னா கூட கொஞ்சம் மேனேஜ் பண்ணிப்பா இப்ப இவளுக்கு தேவ தைரியம் மட்டும்தான் அது உங்களால் கொடுக்க முடியும்னு நம்பறேன்”.

“புரியுது மேம்”.

“தென் இஃவ் யு டோன்ட் மைண்ட் நீங்க ஏசிபி பார்க்கும்போது நான் கூட இருக்கலாமா இவளுக்கு கொஞ்சம் சப்போட்டா இருக்கும்”.

“ஓகே மேம் நான் அப்பாயின்மென்ட் வாங்கிட்டு உங்களுக்குச் சொல்கிறேன்” என்றுக்கூற கல்லூரி முடிந்ததற்கான ஓசை இவர்களை எட்டியது.

“நான் என்னோட வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன்” என அவர் தயக்கமாய் பார்த்தார்.

“என்னோட வீட்ல நானும் என்னோட பொண்ணு மட்டும் தான் நீங்க கவலைப்பட வேண்டாம் நான் பாத்துக்குறேன் இவ அம்மாவுக்கும் நானே பேசுறேன்” என்றதும் மகளைப் பார்த்தவர் ஒரு தலையசைப்புடன் விடைபெற்று சென்றார்.

அன்றைய வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர் தோழிகள் இருவரும் அப்போது சிக்னலில் மாட்டிக்கொள்ள “போச்சா நாம கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாம்” என்று சூர்யா சலித்துக்கொள்ள “நீயும் ஒவ்வொரு வாட்டியும் இந்த சிக்னலோட போட்டி போட்டுட்டு தான் இருக்க” என அவளைக் கேலி செய்யதாள் காவியா.

“விட்டா நான் இது வரைக்கும் வின் பண்ணவே இல்லைனு சொல்லுவ போல”.

“ஆப்போனட்டே இல்லாமல் போட்டிபோட உன்னால மட்டும் தாண்டி முடியும்” என்று தோழிகளுக்கே உண்டான கேலிச் சிரிப்போடு அவர்கள் பேசிக் கொண்டிருக்க ஒரு பைக் அவர்களின் ஸ்கூட்டியை இடித்துக்கொண்டு வந்து நின்றது.

“கண்ணு தெரியலையா உனக்கு அதான் சிக்னல் போட்டிருக்குல பின்னாடி நிக்கிறதுக்கு என்ன இடுச்சுட்டு வந்து நிக்குற முன்னாடியாச்சு பொண்ணுங்க ரோட்டுல நின்னாதான் இடிப்பீங்க இப்போ ஸ்கூட்டியையும் விடுறதில்ல” என்று எடுத்த உடனேயே சூர்யா டாப் கியரில் கத்த “சாரி சாரி” என்றவன் பைக்கை சற்று நகர்த்தி நிறுத்தினான்.

மீண்டும் ஒருமுறை தலையசைத்து மன்னிப்பு கேட்டவன் தன் தலையிலிருந்த ஹெல்மட்டை காழட்டியவாறு அடித்துக் கொண்டிருந்த தனது மொபைலை ஆன் செய்து காதுக்குக் கொடுத்தான் சூர்யா அவனை முறைத்துவிட்டு திரும்பிக்கொண்டாள்.

“சாரி மச்சி சிக்னல்ல மாட்டிக்கிட்டேன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவேன்” என அந்தப்பக்கம் என்ன கூறப்பட்டதோ இவர்களுக்கு இவன் பேச்சு மட்டுமே கேட்டது.

“எனக்கு என்ன மச்சி இரண்டு பஞ்சவர்ணக்கிளி கண்ணுக்கு குளிர்ச்சியா முன்னாடியே இருக்கு” எனக்கூற பெண்கள் இருவருக்குமே தெரிந்தது அவன் தங்களை பற்றிதான் பேசுகிறான் என்று.

காவியா சூர்யாவின் காதின் அருகே சென்று “சூர்யா கண்ட்ரோல் பண்ணிக்கோ இப்போ போயிடலாம் பிரச்சினை பண்ணிடாத” என்று கெஞ்ச அவள் தன் கைகளால் கைப்பிடியை அழுத்திப்பிடித்து தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்றாள்.

“எப்படிடா இவளுகளுக்கு மட்டும் முன்னாடி பின்னாடி எல்லாம் இப்டி வளருது”.

“மச்சி ஒரு டவுட்டுடா கைப்பட்டாதான் முன்னாடி வளருமாமே அப்டியா” என இவர்களை பார்வையால் அளந்துகொண்டே கேட்க அவ்வளவுதான் முடிந்தது கதை.

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Hello sis…. Surya character semma….. Nalla bold aana character…. Intha mathiriye yella ponnungalum irunthutta entha thappum nadakkathu…. Pavam hema intha mathiri oru situation suraya mathiri ponnungaluku nadanthuruntha ava handle eh Vera mathiri irunthurukum…. Samaiya makkaluku nadanthuruntha athula irunthu veliya varrathe rmba kastam … Antha prblm mudinjalum niyabagam vanthutte irukum… Hero help pannuna nalla irukum… And Jeni mathiri professor irukurathala pala students avanga prblm la irunthu veliya varanga…… En school college teacher professor ellam rmba friendly … Hairiyana share pannalam…. Rmba help pannuvanga… Mis them lot now… Super sis….