கண்ணீரை பரிசாக அளிக்கும்
வெங்காயத்தை நறுக்கும் நிமிடமெல்லாம்
உன் நினைவே…!!
எண்ணெய்யில் கடுகு வெடித்து
கோபத்தை காட்டுகிறது
என் முகத்திலோ முத்திரையை
பதிவிட்டு செல்கிறது
உனக்காக நான் வாங்கிய
முத்திரைகள் என்றால்
முகம் முழுவதும் ஏற்றுக்கொள்வேன்
முத்திரைகளை….!!!
என் விரல்களுக்கு சமையல்
சூட்டை பரிசாக அளித்தாலும்
எனக்கு புன்னகையே மலரும்….!!!
நீ கூறும் ஒற்றை வார்த்தையில்
இல்லாத சந்தோசம்
உன் புன்னகையில் ஆயிரம் வார்த்தைகளாக…….!!!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1
நினைவுகளில் மலர்ந்த கவிதை.. இன்னும் கொஞ்சம் வார்த்தைகள் சேர்த்திருக்கலாமோ அப்படி எனக்கு தோன்றியது..
அழகாக கவிதை எழுதி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள் மா..👍👍👍
கண்டிப்பாக சகி😊 முயற்சி செய்கின்றேன்….🙏மிக்க நன்றி….
என் விரல்களுக்கு சமையல் சூட்டை பரிசாக அளித்தாலும் என் முகத்தில் புன்னகையே மலரும்.. அற்புதமான வரிகள் சிஸ்..
மிக்க நன்றி சகோ😍