சுவையை உருவாக்க சமையலறைத் தேவை….
சமையலை உருவாக்க மனிதஇனம் தேவை…..
அதில் பெண்களின் பங்களிப்பே அதிகம்…..
வாழ்நாளின் பாதியை சமையலறையில்
செலவிடுகின்றனர்….
சமையலுக்கும் ,சங்கீதத்திற்கும் சில ஒற்றுமை உண்டு….
இரண்டிற்கும் வாய் தான் பிறப்பிடம்…..
சங்கீதத்தின் மூலம், ஸப்த சுவரங்களான
****ஸ ரி க ம ப த நி ஸ****வைத்து சில வரிகள்….
ஸ _ சமைக்கும் போது ஏற்படும் சாமான்களின் சத்தம் சங்கீதமே….
ரி _ இல்லறத்தின் சுவையைக் கூட்டுவது சமையலே…..
க _ கத்தி நடனமாட, காய்கறிகளும் கதை பேச ,தானியங்கள் சேர்ந்து சமத்துவம் பேசும் இடமல்லவா…..
ம _ மணத்தால் உலகத்தையேக் கட்டி போடும் வல்லமை உணவிற்கு உண்டு…
ப _ பார்த்தவுடன் சுவைக்கத் தூண்டும்….
த _ தித்திக்கும் தேன் சுவையினால் தின்பண்டங்களை தயாரிக்க உதவுவது சமையலறையே…..
நி _ நீரும் ,நெருப்பும் இணைந்து உருவாக்கும், உணவே உன்னதமானது…..
ஸ _ சங்கீதத்திற்கும், சமையலுக்கும் மனதை ஒருமை படுத்தினால் உண்டு வாழ்வு….
புதிய முயற்சி.. சங்கீதத்தோடு சமையலை ஒற்றுமை பாராட்டி சொல்லி இருக்கிறீங்க. அருமை.
இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கல்லாம் போல எனக்கு தோன்றியது. வாழ்த்துக்கள் தோழி…
புதிய சிந்தனை அருமை சகி..
ஏனோ எனக்கு இன்னும் நீண்டிருக்கலாம் என தோன்றியது.
வாழ்க வளமுடன்….
வாவ்..சங்கீதமும் சமையலும்..இரண்டு கலைகளை இணைத்த வித்தியாசமான முயற்சி..அருமை சிஸ்