Loading

அத்தியாயம் 7

 

ஹே தியா, உனக்கு என்ன பிரச்சனை? நீ இன்னைக்கு டான்ஸ் கிளாஸ்ல கூட மூட்அவுட்ல இருந்தியாமே!”

 

ப்ச், எனக்கு பிடிக்கல மகி. எதுவும் பிடிக்கல. ஒருமாதிரி ஸ்ட்ரெஸா இருக்கு.”

 

என்ன பிரச்சனைன்னாவது சொல்லேன் தியா.”

 

ருத் மேல நான் வச்ச காதல் தான் பிரச்சனை மகி. நீயே சொல்லு எவ்ளோ நாள் தான் நேர்ல பார்க்காமலேயே லவ் பண்ண? இதை சொன்னா, கொஞ்ச நாளாகட்டும்னு தள்ளி போட்டுட்டே இருக்கான். இங்க எல்லாரும் என்னை கேலி பண்ணியே டவுன்னா ஃபீல் பண்ண வைக்குறாங்க. இந்த ஜோஸ்ஃபின் சொல்றா, ருத் என்னை ஏமாத்துறான்னு. இப்போலாம், எனக்கும் அப்படி இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு மகி. இந்த சந்தேகம் சரியா தப்பான்னு கூட தெரியல. இதுவே, எனக்குள்ள காம்ப்ளெக்ஸை உருவாக்குது. லோவா ஃபீல் பண்ண வைக்குது. சில சமயம், சூசைடல் தாட்ஸ் கூட வருது. எனக்கு பயமா இருக்கு மகி.”

 

ரிலாக்ஸ் தியா. எந்த ஒரு பிரச்சனைக்கும் சூசைட் தீர்வாகாது. நீயே ஒரு கன்குளுஷனுக்கு வரதுக்கு முன்னாடி, இப்போ என்கிட்ட சொன்னதை உன் ஆளுகிட்ட சொல்லி டிஸ்கஸ் பண்ணு. கிவ் ஹிம் அ சான்ஸ் டூ எக்ஸ்ப்ளெயின்.”

 

ஓகே மகி. இன்னைக்கு அதை தான் பேசப் போறேன்.”

 

*****

 

மகி, நீ சொன்ன மாதிரி ருத் கிட்ட பேசுனேன். யூ க்னோ வாட், நாளைக்கு மீட் பண்ணலாம்னு சொல்லிருக்கான்.”

 

வாவ் சூப்பர் தியா. ஹாப்பி ஃபார் யூ.”

 

*****

 

தியா…”

 

தியா!”

 

தியா, பிளீஸ் ரிப்ளை.”

 

ப்ச், நான் உன்கிட்ட பேசணும் தியா. காலையும் அட்டெண்ட் பண்ண மாட்டிங்குற. பிளீஸ் லெட் மீ டாக்.”

 

*****

 

மகதியின் அலைபேசியிலிருந்து மீட்டெடுத்த செய்திகளை பார்த்தனர் வல்லபி மற்றும் பிரகதீஷ்வரன்.

 

“லாஸ்ட்டா அனுப்பி டெலிட் பண்ண மெசேஜ், ரெண்டு பேருமே இறந்த அதே நாள் காலைல போயிருக்கு.” என்றான் பிரகாஷ்.

 

“சோ, ஆராதியா தப்பான முடிவு எடுக்கப்போறான்னு தெரிஞ்சு தான் மகதி அவளோட பேச நினைச்சுருக்கான்னு சொல்றீங்களா?” என்று வல்லபி பிரகாஷிடம் வினவ, “மேபி இருக்கலாமே மேம்.” என்றான் பிரகாஷும்.

 

“ஆனா, ரெண்டுமே சூசைட் மாதிரி இல்லையே. இத்தனை இடத்துல வெட்டிட்டா சூசைட் பண்ணனும்?” என்ற ஜெகதீஷோ பிரகதீஷ்வரனை பார்க்க, “அது அட்டாப்சி ரிசல்ட் வச்சு தான் கன்ஃபார்ம் பண்ண முடியும்.” என்றான் பிரகதீஷ்வரன்.

 

‘அட்டாப்சி’ என்றதும் நினைவு வந்தவனாக, “சார், ரெண்டு டெட் பாடிஸுக்கும் அட்டாப்சி முடிஞ்சுதாம். ரிப்போர்ட்ஸ் வந்து கலெக்ட் பண்ணிக்க சொன்னாங்க.” என்றான் ஜெகதீஷ்.

 

“ஓகே, நீ அந்த டான்ஸ் ஸ்டுடியோ போய், அங்க இருக்க எல்லாரையும் தனித்தனியா விசாரி ஜெகா. சந்தேகப்படுற மாதிரி யாராவது தெரிஞ்சா, மகதி பத்தி விசாரிச்சு அவங்க பாடி லேங்குவேஜ் நோட் பண்ணு. முக்கியமா, எல்லாமே ரெக்கார்ட் ஆகியிருக்கணும்.” என்று கூறினான் பிரகதீஷ்வரன்.

 

வல்லபியும் பிரகாஷிடம், “எல்லா சோசியல் மீடியா அக்கவுண்ட்ஸும் செக் பண்ணுங்க. இவங்க ரெண்டு பேரோட சாட்ஸ், கரண்ட் அண்ட் டெலிடெட், எல்லாமே வேணும்.” என்றாள்.

 

பின்னர் திரும்பி பிரகதீஷ்வரனை பார்க்க, அவனும் ஒரு தலையசைப்புடன் அவளை முன்னே செல்லுமாறு கூறினான்.

 

*****

 

பிரகதீஷ்வரனும் வல்லபியும் மருத்துவர் சோஃபியாவின் அறையில் இருந்தனர்.

 

மூவருக்குமான அறிமுகம் முடிந்ததும், “டாக்டர், உங்க கன்குளுஷன் என்ன?” என்றான் பிரகதீஷ்வரன்.

 

“எனக்கு என்ன கன்குளுஷனுக்கு வரதுன்னு தெரியல, மிஸ்டர். பிரகதீஷ்வரன். இது பார்க்குறதுக்கு நார்மலான சீரியல் கில்லர் கேஸ் மாதிரி தெரியலாம். பட் இட்ஸ் ட்விஸ்டட்.” என்றவர், இறந்த இருவரின் கோப்புகளையும் பிரித்து காட்டினார்.

 

இருவரின் இறந்த உடல்களின் புகைப்படங்கள் அதில் இருக்க, அதைக் கண்ட வல்லபிக்கு முதலில் ஒரு மாதிரி இருந்தாலும் சமாளித்துக் கொண்டாள்.

 

“இந்த ரெண்டு ஃபோட்டோஸ் பார்த்தா, உங்களுக்கு ஏதாவது டிஃப்பரென்ஸ் தெரியுதா?” என்று சோஃபியா கேட்க, “ரெண்டுலயுமே கட்ஸ் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கு. ப்ரெசிஷன் லெவல்ல தான் டிஃப்பரென்ஸ் தெரியுது.” என்றாள் வல்லபி.

 

“எங்க கண்ணுக்கு பெருசா எந்த டிஃப்பரென்ஸும் தெரியல டாக்டர். ஆனா, உங்க டாக்டர் கண்ணுக்கு என்ன தெரியுது?” என்று எதிர்கேள்வி கேட்டான் பிரகதீஷ்வரன்.

 

“முதல் ஃபோட்டோல, ஐ மீன் ஆராதியா இறந்ததுக்கான முக்கியமான காரணம் எக்ஸஸிவ் பிளட் லாஸ். ஆனா, மகதி இறந்தது கட் த்ரோட் இஞ்சுரியால.” என்றார் சோஃபியா.

 

“ஆனா, எப்படி? ரெண்டு பேரோட பாடிலயும் ஒரே மாதிரியான காயங்கள் தான? அப்போ காஸ் ஆஃப் டெத் ஒரே மாதிரி தான இருக்கணும். ஏன் டிஃப்ரெண்ட்டா…” என்று ஆரம்பித்த வல்லபி, ஏதோ புரிந்ததும் அதிர்ந்தவளாக, “அப்போ, மகதியோட பாடில இருக்க மத்த காயங்கள் எல்லாம்?” என்று நிறுத்தினாள்.

 

சோஃபியாவோ ஒரு பெருமூச்சுடன், “நீங்க கெஸ் பண்றது சரிதான் மிஸ். வல்லபி. இந்த ஃபோட்டோவை பார்த்தாலே தெரியும். கழுத்துலயிருந்து வந்த இரத்தத்தையும் மத்த காயங்கள்லயிருந்து வந்த இரத்தத்தையும் கம்பேர் பண்ணா புரியும். மத்த காயங்கள்லயிருந்து அவ்ளோவா ரத்தம் வரல. ஏன்னா, அந்த காயங்கள் எல்லாம் மகதி இறந்து கிட்டத்தட்ட ரெண்டுல இருந்து நாலு மணிநேரம் கழிச்சு ஏற்படுத்துனதா இருக்கணும். இதை நாங்க லிவோர் மோர்ட்டிஸ்னு சொல்லுவோம். இதயம் துடிக்கிறதை நிறுத்திட்டா, மத்த உறுப்புகளுக்கு இரத்தம் பம்ப்பாகாது. ஆட்டோமேட்டிக்கா, கிராவிட்டியால உடம்புல இருக்க இரத்தம் எல்லாம் கீழ் நோக்கி போயிருக்கும். அதனால தான், கைகள்ல இருக்க காயத்துல இருந்து இரத்தமே வரல.” என்று தன் விளக்கத்தை கூறி முடித்தார்.

 

சில நொடிகள் அந்த அறையில் மௌனம் நிலவ, அதை கலைத்தது பிரகதீஷ்வரன் தான்.

 

“ரெண்டு கொலைல எது முதல்ல நடந்துருக்கு டாக்டர்?” என்று அவன் வினவ, “மகதியோட இறப்பு தான் முதல்ல நடந்துருக்கு. மகதி இறந்தது சுமார் பதினொன்னு நாற்பத்திநாலு மணிக்கு. ஆராதியா இறந்தது பன்னிரெண்டு ரெண்டுக்கு.” என்றார் சோஃபியா.

 

“பேர்லி ஃபிஃப்டீன் மினிட்ஸ் தான் ரெண்டு கொலைகளுக்குமான வித்தியாசம். ஒரே ஆளால எப்படி இருபது கிலோமீட்டரை கடந்து இந்த ரெண்டு கொலைகளையும் பண்ணியிருக்க முடியும்?” என்று தனக்குத்தானே கேட்பது போல சத்தமாக கேட்டிருந்தாள் வல்லபி.

 

பிரகதீஷ்வரனோ யோசனையுடன், “டாக்டர், ரெண்டு பாடில இருக்க காயங்கள் ஒரே ஆள் பண்ண மாதிரி இருக்கா? உங்க ஒப்பினியன் என்ன?” என்று வினவினான்.

 

“வெல், என்னை கேட்டா… ஆராதியா பாடில இருக்க எல்லா காயங்களும், மகதி பாடில இருக்க கழுத்தை தவிர மத்த இடங்கள்ல இருக்க காயங்களும் ஒரே ஆள் பண்ண மாதிரி தான் இருக்கு. ஆனா, மகதி கழுத்துல இருக்க காயம்… இட்ஸ் டிஃப்ரெண்ட். க்ரைம் சீன்ல கிடைச்ச ரெண்டு கத்தியோடயும் அந்த காயம் மேட்ச் ஆகலை.” என்றார் சோஃபியா.

 

“சோ, ரெண்டு கில்லர்ஸ் இன்வால்வ் ஆகியிருக்காங்க இல்லையா?” என்று பிரகதீஷ்வரன் யோசனையுடன் வினவ, “எஸ், கில்லர் ஒன், ஆராதியாவை கொலை பண்ணிட்டு மகதியை தேடி வந்துருக்கணும். ஆனா, அவனுக்கு முன்னாடியே கில்லர் டூ மகதியை கொலை பண்ணியிருக்கணும்.” என்றாள் வல்லபி.

 

“ம்ம்ம், பட் கில்லர் ஒன் எப்போ மகதி வீட்டுக்கு வந்தான், ஆராதியாவை கொலை பண்ண உடனே வந்துருந்தானா, ஏன் ரெண்டு மணி நேரம், அதாவது மகதியோட டெட் பாடில லிவோர் மோர்ட்டிஸ் நடக்க ஆரம்பிச்சதுக்கு அப்பறம் மத்த காயங்களை ஏற்படுத்தனும்? கில்லர் ஒன் அண்ட் டூ ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து இந்த கொலைகளை பண்ணாங்களா, இல்ல ஒருத்தருக்கொருத்தர் தெரியாம பண்ணாங்களா?” என்று தன் சந்தேகங்களை வரிசையாக அடுக்கியவன், இருக்கும் இடம் உணர்ந்து ஒரு பெருமூச்சுடன், “தேங்க்ஸ் டாக்டர். உங்க ரிப்போர்ட் வச்சு நாங்க ப்ரோஸீட் பண்றோம். இன் கேஸ் ஆஃப் எனி டவுட்ஸ், உங்களை கான்டேக்ட் பண்றோம்.” என்று கிளம்ப ஆயத்தமானான்.

 

“ஸ்யூர் மிஸ்டர். பிரகதீஷ்வரன்.” என்று சோஃபியாவும் அவர்களை வழியனுப்பி வைத்தார்.

 

வெளியே வந்த இருவரும் அவரவர்களின் சிந்தனையில் மூழ்கி இருக்க, அந்த பயணம் சண்டையின்றி சற்று அமைதியாகவே கழிந்தது.

 

திடீரென்று வல்லபி என்ன நினைத்தாளோ, தன் அலைபேசியை எடுத்து நவீனுக்கு அழைத்தவள், “இன்னுமா அந்த வாட்ச்மேனை கண்டுபிடிக்கல?” என்று எரிச்சலாக வினவினாள்.

 

அவளின் சத்தத்தில் சிந்தனை கலைந்தவன், “ப்ச், இவ ஒருத்தி எப்போ பார்த்தாலும் எரிச்சலாவே சுத்திட்டு இருப்பா!” என்று முணுமுணுத்தபடி, அவளின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தான்.

 

மறுமுனையிலிருந்து நவீனோ, “மேம், அந்த வாட்ச்மேனை கண்டுபிடிச்சுட்டோம். ஆனா, ஆளு ஃபுல் மப்புல இருக்கான். அதான் கிளியர் பண்ணிட்டு இன்ஃபார்ம் பண்ணலாம்னு…” என்று இழுத்தான்.

 

“ப்ச், சீக்கிரம் ஸ்டேஷன் கூட்டிட்டு வாங்க.” என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.

 

அவளின் பேச்சிலிருந்தே ஓரளவுக்கு புரிந்து கொண்ட பிரகதீஷ்வரனோ, “அந்த அப்பார்ட்மெண்ட்ல சிசிடிவி வேலை செய்யல ஓகே, வாட் அபவுட் நெய்பரிங் ஏரியாஸ்?” என்று கேட்டான்.

 

வல்லபி ஏனோ அவன் கேள்விக்கு பதில் சொல்லும் மனநிலையில் இருந்தாள் போலும், “அந்த அப்பார்ட்மெண்ட் இருக்க இடம் ரொம்பவே செக்ளுடட். பக்கத்துல இருக்க அப்பார்ட்மெண்ட், வீடு எல்லாம் அண்டர் கன்ஸ்ட்ரக்ஷன்ல இருக்கு. சோ, அந்த ஏரியால வேற சிசிடிவிக்கு வழியில்ல. அந்த இடத்துல இருந்து ரெண்டு கிலோமீட்டர்ல இருக்க ஹைவேல இருக்க ஒரு ஹோட்டல்ல தான் சிசிடிவி இருக்கு. அது ஹைவேங்கிறதால, அங்க போற வெஹிக்கில்ஸ் வச்சு தேடுறது ரொம்ப கஷ்டம்.” என்றாள்.

 

“ம்ம்ம், ஆனா, வேற வழியில்லன்னா, அதை வச்சு தான் டிரேஸ் பண்ணனும்.” என்றான் பிரகதீஷ்வரன்.

 

அப்போது வல்லபிக்கு பிரகாஷிடமிருந்து அழைப்பு வர, பரபரப்புடன் அழைப்பை ஏற்றாள் வல்லபி.

 

“எனி லீட்ஸ் பிரகாஷ்?” என்று ஆரம்பித்திலேயே கேள்வியை கேட்க, “மேம் அதில்ல. சந்தோஷ் ஊர்ல இருந்து வந்துட்டான். அவனை ஸ்டேஷன் கூட்டிட்டு வந்துருக்காங்க.” என்றான்.

 

அந்த செய்தியில், எதிர்பார்த்த மனம் ஏமாற்றம் அடைந்தாலும், “ஓஹ், நான் வரேன் பிரகாஷ்.” என்றபடி அழைப்பை துண்டித்தாள்.

 

பிரகதீஷ்வரன் கேள்வியாக பார்க்க, “சந்தோஷ், மகதியோட ஒரே காலேஜ் ஃபிரெண்ட் ஸ்டேஷனுக்கு வந்துருக்கான். அவனை விசாரிக்கணும்.” என்றாள் வல்லபி.

 

அதைக் கேட்டதும், “ஹ்ம்ம், நானும் டான்ஸ் ஸ்டுடியோ போய் ஜெகா கூட இன்வெஸ்டிகேஷன்ல ஜாயின் பண்ணிக்குறேன். எதாவதுன்னா, எனக்கு கால் பண்ணு.” என்று பிரகதீஷ்வரன் கூற, அதற்கு தலையை மட்டும் அசைத்தாள்.

 

வழக்கின் தீவிரமும், யூகத்திற்கு அப்பாற்பட்டு கிடைக்கும் துப்புகளும், இருவரின் சண்டையை தற்காலிகமாக மறக்க வைத்தது என்று தான் கூற வேண்டும்.

 

ஒருவேளை, இது புயலுக்கு முன்னான அமைதியோ!

 

*****

 

வல்லபியின் விழிகள் தனக்கு முன்னே அமர்ந்திருந்த சந்தோஷை தான் கணிக்க முயன்று கொண்டிருந்தன.

 

கல்லூரி மாணவனுக்கான அனைத்து பொருத்தமும் பொருந்தியிருக்க, முகம் மட்டும் மாறுதலாக கவலையை வெளிப்படுத்தியது. கண்களை சுற்றி கருவளையமும், முகத்தில் தெரிந்த சோர்வும் வேறு கதை கூற, “ஆர் யூ ஓகே?” என்று தன் விசாரணையை ஆரம்பித்தாள் வல்லபி.

 

என்னென்னவோ கேள்விகள் கேட்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்திருப்பான் போலும், வல்லபியின் இந்த கேள்வியில் முதலில் தடுமாறி பின், “யாஹ், ஐ’ம் ஃபைன் மேம்.” என்றான்.

 

“ஹ்ம்ம், பார்த்தா அப்படி தெரியலையே!” என்றவள், “ஏன்  உங்க சொந்த ஊருக்கு போனீங்க?” என்று வினவ, “ஹை ஃபீவர் மேம். என்னால இங்க தனியா சமாளிக்க முடியல. அதான் முந்தாநாள் ஈவினிங் வீட்டுக்கு கிளம்பிட்டேன்.” என்றான் சந்தோஷ்.

 

“ம்ம்ம், இப்போவும் உங்களுக்கு சரியான மாதிரி தெரியலையே. அப்பறம் ஏன், இன்னைக்கே ஊருக்கு வந்தீங்க?” என்று வல்லபி கேட்டதும், அவன் விழியோரம் கண்ணீர் கசிய ஆரம்பித்தது.

 

“நேத்து மார்னிங்ல இருந்து ட்ரிப்ஸ் ஏறிட்டு இருந்ததால, மகியோட டெத் நியூஸ் நைட் தான் கேள்விப்பட்டேன் மேம். கேட்டதும் மனசு தாங்கல. அதான் இன்னைக்கே வந்தேன்.” என்றவனின் கண்களில் கண்ணீர் இடைவிடாமல் வழிந்து கொண்டிருந்தது.

 

சிறிது நேரம் அவனுக்கான அவகாசத்தை கொடுத்த வல்லபியோ, “ரிலாக்ஸ் சந்தோஷ். எனக்கு உங்க வலி புரியுது. உங்க மகியை கொலை பண்ண கொலையாளி யாருன்னு கண்டுபிடிக்குறதுல தான் எங்க ஃபோகஸ் ஃபுல்லா இருக்கு. சோ, அதுக்கான ஒத்துழைப்பை நீங்க கொடுத்தா தான், அவனை சீக்கிரம் கண்டுபிடிச்சு தண்டிக்க முடியும்.” என்றாள்.

 

வல்லபி கூறியதைக் கேட்டதும் கண்களை துடைத்துக் கொண்டவன், “எனக்கு தெரிஞ்சதை நான் சொல்றேன் மேம். நீங்க உங்க கேள்விகளை கேளுங்க.” என்றான்.

 

*****

 

அதே சமயம், டான்ஸ் ஸ்டுடியோவை வந்தடைந்திருந்தான் பிரகதீஷ்வரன். அவனைக் கண்ட ஜெகதீஷோ, “சார், அட்டாப்சி ரிப்போர்ட்ஸ் என்னாச்சு? ஏதாவது புது க்ளூ கிடைச்சுருக்கா?” என்றான்.

 

சுற்றிலும் பார்வையை ஓட்டியபடி, “அதை ஸ்டேஷன் போனதும் சொல்றேன் ஜெகா. இங்க இன்வெஸ்டிகேஷன் எந்தளவுக்கு போயிட்டு இருக்கு?” என்று வினவினான் பிரகதீஷ்வரன்.

 

“இன்னும் மூணு பேரு மட்டும் இருக்காங்க சார். இதுவரை விசாரிச்சவங்க எல்லாரும் ஒரே மாதிரி, ஆராதியா அவ்ளோ க்ளோஸா இல்லன்னு தான் சொல்றாங்க. பெருசா எந்த துப்பும் கிடைக்கல. இதோ, இப்போ விசாரிக்கப் போற ரெண்டு பொண்ணுங்க தான் ஆராதியாக்கு ரொம்ப க்ளோஸ்னு சொல்றாங்க.” என்றான் ஜெகதீஷ்.

 

“ம்ம்ம், ப்ரோஸீட் பண்ணலாம்.” என்று பிரகதீஷ்வரன் கூறியதும், மதுமதியையும் ஜோஸ்ஃபின்னையும் அழைத்து வந்தான் ஜெகதீஷ்.

 

இருவரும் பயந்தபடியே வர, “நீங்க ரெண்டு பேரும் தான ஆராதியாவோட இறந்த உடலை முதல்ல பார்த்தது?” என்று பிரகதீஷ்வரன் வினவ, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு, ‘ஆம்’ என்று தலையசைத்தனர்.

 

“ஓகே, ஆராதியா பத்தி சொல்லுங்க.” என்று அவன் கேட்க, “சார், தியா இங்க வந்து ஒரு வருஷமாச்சு. வந்ததுல இருந்து எல்லாருக்கிட்டயும் நல்லபடியா பேசுனாலும், ஒரு ஒதுக்கம் இருக்கும். ஆனா, என்னவோ தெரியல, எங்க ரெண்டு பேருக்கிட்ட நல்லா பேசுவா. மோஸ்ட்லி, நாங்க மூணு பேரும் தான் சேர்ந்து சுத்துவோம். நாங்க மூணு பேருமே காலேஜ் முடிச்சு ஒன் இயர் ஆச்சு. ஒரே வயசுனால வந்த நெருக்கமா கூட இருக்கலாம். இந்த ஒரு வருஷம் அவளை பார்த்தது வச்சு சொல்லணும்னா, அவ ரொம்ப நல்ல பொண்ணு. யாரையும் ஹர்ட் பண்ற மாதிரி பேசக்கூட மாட்டா. ரொம்ப ஸாஃப்ட் நேச்சர். அவ இவ்ளோ கோரமா இறந்து போயிட்டான்னு இன்னமும் என்னால நம்ப முடியல.” என்றாள் மதுமதி.

 

“அவங்களுக்கு எதிரிங்க யாராவது இருக்காங்களா?” என்று ஜெகதீஷ் வினவ, “நான் தான் சொன்னேனே சார், அவ திட்ட கூட யோசிப்பா. அவளுக்கு யார் எதிரிங்க இருக்கப் போறாங்க?” என்றாள் மதுமதி.

 

“மேபி, அவங்க மேல உண்டான பொறாமையால கூட இந்த கொலை நடந்துருக்கலாம். உங்களுக்கு அப்படி யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா?” என்று பிரகதீஷ்வரன் வினவ, “இங்க டான்ஸ் ஸ்டுடியோலையா? சான்ஸே இல்ல சார். என்னதான் தியா மத்தவங்க கூட பேசலைன்னாலும், எல்லாருக்கும் அவளை பிடிக்கும் சார். எனக்கு அப்படி யாரு மேலயும் சந்தேகப்பட தோணலை.” என்றாள் மதுமதி.

 

அதுவரை அவள் மட்டுமே பேசியபடி இருந்ததை குறித்துக் கொண்ட பிரகதீஷ்வரனோ, “மிஸ். ஜோஸ்ஃபின், நீங்க ஏன் அமைதியா இருக்கீங்க? நீங்க தான லாஸ்ட் இன்வெஸ்டிகேஷன்ல, ஆராதியா அவங்க லவரோட ஏதோ மிஸ்ஸண்டர்ஸ்டேண்டிங்கால கொஞ்சம் டிப்ரெஸ்ட்டா இருந்தாங்கன்னு சொன்னீங்க. அந்த லவர் பத்தியும் எதுவும் தெரியாதுன்னு சொன்னீங்க. அம் ஐ ரைட்?” என்றான்.

 

மதுமதியை ஒருமுறை திரும்பி பார்த்த ஜோஸ்ஃபினோ, “ஆமா சார்.” என்று பதிலளித்தாள்.

 

“ம்ம்ம், ஆராதியா பத்தி இன்னும் எங்களுக்கு தெரியாத டீடெயில்ஸ் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.” என்று பிரகதீஷ்வரன் கேட்க, ஜோஸ்ஃபின் இப்போதும் மதுமதியை திரும்பி பார்த்துவிட்டு, ஏதோ சொல்ல தயங்கிபடி இருக்க, “தயக்கம் வேண்டாம் ஜோஸ்ஃபின். நீங்க சொல்லப் போற சின்ன தகவல், உங்க ஃபிரெண்டோட கொலையாளியை கண்டுபிடிக்குற துருப்புச்சீட்டா கூட இருக்கலாம்.” என்று அவளை சொல்ல தூண்டினான் அவன்.

 

“சார், நான் இப்போ சொல்லப் போறது சரியா தப்பான்னு தெரியல. நான் கூட இதனால தியா கிட்ட சண்டை போட்டேன் தான். ஆனா, இதை வச்சு அவளை தப்பா ஜட்ஜ் பண்ணிடாதீங்க.” என்று கூற, ஆண்கள் இருவரும் இப்போது ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

*****

 

“சொல்லுங்க சந்தோஷ், மகதிக்கும் உங்களுக்குமான ஃபிரெண்ட்ஷிப் எப்படி? ஜஸ்ட் ஃபிரெண்ட்ஸ் ஆர்?” என்று கேள்வியை முடிக்காமல் விட்டாள் வல்லபி.

 

“ஷீ இஸ் மை குட் ஃபிரெண்ட் மேம். நான் தான் அவளை ரெண்டரை வருஷமா பின்தொடர்ந்து பேசி, ஃபிரெண்டாக்குனேன். ஏனோ தெரியல, அவளை முதல்முறை பார்த்தப்போவே, அவளோட ஃபிரெண்டாகனும்னு தோணுச்சு. அது அவளோட பயந்த சுபாவத்துனாலயா, இல்ல எப்பவும் ஒதுங்கியே இருந்ததாலயான்னு தெரியல. அவ கண்ணுல எப்பவும் ஒரு இன்செக்யூரிட்டி ஃபீலிங் இருந்துட்டே இருக்கும். அதை எப்படியாவது போக்கணும்னு என் மனசு சொல்லிட்டே இருந்துச்சு. ஆறு மாசத்துக்கு முன்னாடி, அவ என் ஃபிரெண்ட்ஷிப்பை அக்செப்ட் பண்ணி பேச ஆரம்பிச்சப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவ கண்ணுல இருந்த இன்செக்யூரிட்டி கூட மறைஞ்ச மாதிரி தான் இருந்துச்சு. ஆனா, அந்த சந்தோஷம் கம்மின்னு நான் நினைச்சே பார்க்கல.” என்று சோகமாக கூறினான் சந்தோஷ்.

 

அவன் குரலிலும் சோகத்திலும் இருந்த உண்மை மகதிக்கும் புரிந்தது.

 

“ரீசண்ட்டா மகதி டிப்ரெஸ்ட்டா இருந்தாளா சந்தோஷ்? இதை ஏன் கேட்குறேன்னா, அவங்க அம்மா கிட்ட விசாரிச்சப்போ, அவங்க பொண்ணு கொஞ்ச நாளுக்கு முன்னாடி வரை டிப்ரெஸ்ட்டா தான் இருந்தான்னு சொன்னாங்க.” என்றாள் வல்லபி.

 

அதைக் கேட்டதும் சந்தோஷ் முகத்தில் சில மாறுதல்கள் வந்து மறைந்ததை வல்லபி கவனித்தாள்.

 

“நோ மேம், சமீபமா அவ டிப்ரெஸ்ட்டா இல்ல. ஆனா, அதுக்கு முன்னாடி அவ ரொம்ப ஸ்ட்ரெஸ்ல தான் இருந்தா. அதனால, அவ வாழ்க்கையே பாதிக்கிற நிலைமைல கூட இருந்துருக்கா.” என்று தயங்கினான் சந்தோஷ்.

 

“லுக் சந்தோஷ், நீங்க இப்போ தயங்குறதை வச்சு, இப்போ நீங்க சொல்லப் போறது சென்சிட்டிவ்வான விஷயம்னு புரியுது. டிரஸ்ட் மீ, நீங்க சொல்றதை வச்சு உங்க ஃபிரெண்டை நான் ஜட்ஜ் பண்ண போறதில்ல. மாறா, இந்த விஷயம் உங்க ஃபிரெண்டோட கில்லரை கண்டுபிடிக்க உதவலாம்.” என்றாள் வல்லபி.

 

“மேம், மகதி ‘ஃபேன்டசி நைட்ஸ்’ங்கிற அடல்ட் வெப்சைட் யூசர்.” என்று சந்தோஷ் கூறியதைக் கேட்ட வல்லபிக்கு அதிர்விலிருந்து நிகழ்வுக்கு வர சில நொடிகள் தேவைப்பட்டது.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
13
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்