சாபம் – 9
“மதி. இந்த சாஸ்திரம் தான் நம் காதலின் வரமென கூறினாயல்லவா.. ஆனால் இது காதல் சாபமாய் விளங்கப்போகிறது மதி.” என மாறன் கலக்கமாய் கூற அதனை கேட்டு அதிர்ந்த மதி…
“மாறா என்ன சொல்ற நீ. இது காதல் சாபமா.. ஏன் அப்படி சொல்ற. இல்ல இல்ல நான் ஏத்துக்க மாட்டேன்.” என ஆதங்கமாய் சத்தமிட்டாள் மதி.
“ஆம் மதி. மந்திரம் உச்சரித்து தோடினை வீசினால் மட்டுமே நீர் விலகும். சாஸ்திரத்தை நம்மால் எடுக்க இயலும். ஆனால் என்னிடம் இருப்பதோ ஒரே ஒரு மந்திரம் மாத்திரமே. அதனைக் கொண்டு நீரினை விலக்கினால் பிறகு உன் கைகளில் நான் மந்திர கயிற்றினை எவ்வாறு கட்டுவேன்” என அழுதுகொண்டே கூற மதியோ,
“என்ன மாறா சொல்ற ஒரு மந்திரம் தான் இருக்கா. உன்கிட்ட எட்டு மந்திரம் இருந்துச்சு தானே. அதுல நாம ஒருத்தருக்கொருத்தர் பேசுறது புரியனும்னு சொல்லி ரெண்டு மந்திரம் உபயோகிச்ச. மீதி ஆறு மந்திரங்கள் இருக்கனுமே. என் உயிர காப்பாத்த மந்திரம் சொன்னியா” என கேட்க அவனும்,
“உன்னுயிர் காக்க மூன்று மந்திரங்கள் ஒரு சேர உச்சரிக்க வேண்டும் என சாஸ்திரத்தில் இருந்தது” என கூற அவள்,
“சரி அப்படி நாலும் முதல்ல ரெண்டு அப்றம் மூணு அஞ்சு மந்திரங்கள் தான பயன்படுத்தியிருக்க. மீதி மூணு மந்திரம் இருக்கேயா” என அவள் கேட்க மாறனோ குற்றஉணர்வாய்,
“நான் தவறிழைத்துவிட்டேன் மதி. என் மானம் உன்னிடம் போய்விட கூடாதென்று அற்பமாக நினைத்து இரண்டு மந்திரங்களை உபயோகித்து பூமியின் இயக்கத்தை நிறுத்தி தான் அந்த வண்ணத்து பூச்சியினை உன் கையில் பிடித்து கொடுத்தேன். அது முழுக்க முழுக்க என் தவறே. என் அலட்சியமே நம் காதலுக்கு சாபமாய் வந்துவிட்டது மதி” என கூறிக்கொண்டு மீண்டும் கதறினான்.
அதனை கேட்ட மதிக்கோ மேலும் குற்றஉணர்வாய் தோன்றியது.
“இல்ல மாறா. என்னோட அற்ப ஆச தான் இதெல்லாத்துக்கும் காரணம். எல்லாம் என்னால தான். நான் மட்டும் அந்த பூச்சியைப் பிடிக்கணும்னு கேக்காம இருந்திருந்தா நீ அப்படி பண்ணிருப்பியா. அதுமட்டும் இல்லாம முட்டாள்தனமா யோசிக்காம அந்த பழத்தை நான் சாப்பிட போய் தான் என் உயிரைக் காப்பாத்த நீ மூணு மந்திரம் பயன்படுத்திருக்க. ஐயோ எல்லாம் என்னால தான். என்னோட முட்டாள்தனம் நம்ம காதலுக்கு சாபமாயிருச்சு மாறா. இதுக்கு நீ என் உயிரைக் காப்பாத்தாம இருந்திருந்தா நானும் நிம்மதியா செத்துருப்பேன். நீயும் நிம்மதியா இருந்துருப்ப.” என மதி கதற ஆரம்பித்தாள்.
இவ்வாறே இருவரும் தங்கள் காதல் இனி நிறைவேறாது என நினைத்து நினைத்து அழுதனர்.
இணையும் போது வரமாகவும்
பிரியும் போது சாபமாகவும்
தோன்றுவது தான் காதல் விதியோ…
விதியை மதியால்
வெல்லலாம் என்பர்.
ஆனால் இங்கே அவ்விதி
மதியை வைத்து
விளையாடிவிட்டு சிரிக்கிறது.
விதியின் சூழ்ச்சியில் சிக்கிய
மதியும் மாறனும் கதறுகின்றனர்.
இது தான் காதல் சாபமா…?
வெகுநேரமாக இருவரும் அழுது ஓய்ந்துவிட்டு ஆளுக்கொரு புறம் வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். பிறகு பெருமூச்சுவிட்டபடி கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு எழுந்த மதி மாறனிடம்,
“மாறா. எந்திரி. இன்னும் கொஞ்ச நேரத்துல சூரியன் அஸ்தமனமாயிரும். அதுக்குள்ள சாஸ்திரத்தைக் கண்டுபிடிப்போம் வா. நம்ம காதல் தான் நிறைவேறல. அதுக்காக உன்னையே நம்பி இருக்க உன்னோட உலகத்தை விடுவிக்க மறந்துராத. இந்த ஜென்மம் இல்லனா என்ன அடுத்த ஜென்மத்துல நாம சேர்வோம். சேர முடியாத காதலா தான போச்சு. அதுக்காக உண்மை காதல் இல்லனு ஆகிறது. உன்னோட இருந்த இந்த ரெண்டு நாள் நெனப்பு போதும் எனக்கு. வாழ்நாள் முழுக்க உன் நெனப்போடையே நான் வாழ்ந்துருவேன். உன் கடமையை முடி மாறா” என தன்னைத் தேற்றிக்கொண்டு மாறனையும் தேற்றினாள் வேறுவழியின்றி.
அவள் கூறுவது அவனுக்கும் சரி என்று தோன்ற எழுந்தான். அவள் தோடினைக் கழட்டி கொடுக்க அதனை வாங்கியவன் காகிதத்தில் இருந்த கடைசி மந்திரத்தை உச்சரிக்க அது மறைந்தது. பிறகு தோடினை வீசினான் நீரில். வீசிய தோடு நீரில் விழுந்த மறுகணமே நதியின் நீரோட்டம் நின்று நீர் பிரிந்து நின்று வெற்றிடத்தைக் காட்டியது.
விறுவிறுவென அவ்விடத்திற்கு சென்று மண்ணுக்கடியில் தோண்ட ஓர் இரும்பு பெட்டகம் ஒன்று தென்பட்டது. அதனைத் தூக்கி கொண்டு நிலத்திற்கு வர நீரோட்டம் மீண்டும் சீராகி ஓடத் தொடங்கியது.
இருவரும் அப்பெட்டகத்தைத் திறக்க அதில் பூத உலகின் தேவசாஸ்திரம் பாகம் இரண்டு என எழுதப்பட்ட அதன் முகப்பு அட்டை தங்க முலாம் பூசியது போல ஜொலித்தது. அதனைக்கண்டு இருவரும் விரக்தியாக சிரித்துக்கொண்டனர். சாஸ்திரத்தைக் கையில் எடுத்தவன் திறக்கக் கூட தோன்றாமல் தான் கொண்டு வந்த முதல் சாஸ்திரத்தோடு கைகளில் ஏந்திக்கொண்டு மதியை ஏக்கமாக பார்த்தான்.
“கவலைப்படாம போய்ட்டு வா மாறா. இந்த மதி எப்போவும் உனக்கானவ மட்டும் தான். கஷ்டமா தான் இருக்கு நீ என்னை விட்டு பிரியுறது. ஆனாலும் என் மாறன் அவனுக்கு கொடுத்த கடமையை செஞ்சு முடிச்சுட்டான்னு ஒரு திருப்தி மனசுல இருக்கு. நீ நல்லவன் மாறா உனக்கு நல்லது மட்டும் தான் நடக்கும்” என வெளியில் வரத்துடிக்கும் கண்ணீர்துளிகளை முயன்று உள்ளடக்கியபடி தன்னவனுக்கு ஆறுதல் கூறினாள் மதி.
“உன்னால் மட்டும் எவ்வாறு மதி இவ்வளவு பெருந்தன்மையாக நடந்துகொள்ள முடிகிறது. கடமையை முடித்த திருப்தியைக் காட்டிலும் நம் காதல் நிறைவேறாத வருத்தம் தான் என் மனதினை வதைக்கிறது. என் மச்சகரிக்காக இன்னும் எத்தனை ஜென்மம் வேண்டுமென்றாலும் நான் காத்திருப்பேன். போய்வருகிறேன் மதி” என கூறியவாறு மாறன் தேவர்களிடம் கடமையை முடித்துவிட்டேன் என கூறி பூதஉலகிற்கு செல்ல ஆயத்தமாக அப்பொழுது மதியோ,
“மாறா ஒரு நிமிஷம்” என அழைத்தாள்.
அவளின் அழைப்பில் அவளை மாறன் நோக்க மதியோ கண்கலங்க அவனைப் பார்த்து,
“மாறா.. நம்ம காதலுக்கும் வாழ்க்கைக்கும் பதில் கிடைக்காம போனா கூட பரவாயில்ல. ஆனா சாஸ்திரத்துல வந்த மாதிரி உன்னோட மந்திரக்கயிற தாலியா நெனச்சு என் கைல கட்டிவிட்டுட்டு போயா. என்கூட நீ இருக்குற மாதிரி நெனைச்சுப்பேன்.” என ஏக்கமாய் அவள் கேட்க அவளை இறுக்கியணைத்துக் கொண்டான் மாறன். பிறகு அவளின் வேண்டுகோளுக்கிணங்க தன் கையில் இருந்த இரண்டு சாஸ்திரங்களையும் அருகிலிருந்த பாறையில் வைத்தவன் தன் மந்திர கயிற்றை எடுத்து அவளின் கண்களைக் காதலாய் நோக்கியபடி மதியின் கையில் மூன்று முடிச்சிட்டு கட்டினான்.
கட்டிய மறுநொடியில் காதலாக அவன் பார்த்துக்கொண்டிருந்த அவளின் கரு விழிகள் சிறிது சிறிதாக பச்சை நிறமாக மாறத்தொடங்கியது. அதனைக் கண்டவனின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன.
“என்னாச்சு மாறா. ஏன் அப்படி பாக்குற” என அவனின் பார்வையின் மாற்றத்தினை உணர்ந்தவள் கேட்க அவனோ,
“மதி .. உனது கண்களின் நிறம்…” என அதிர்ச்சியில் கூற முடியாமல் திணற அவளோ,
“என் கண்ணுக்கு என்ன மாறா” என அவள் புரியாமல் முழிக்க சிறிது சிறிதாக அவளின் உடலில் மாற்றங்கள் நிகழ்வதை அவளால் உணர முடிந்தது.
“மாறா எனக்குள்ள என்னமோ ஒரு மாதிரி பண்ணுது.” என கண்ணை மூடிக்கொண்டு கீழே அமர திடிரென்று தலையில் வலியெடுக்க ஆரம்பித்தது.
ஆனால் மாறனோ இன்னும் அதிர்ச்சி விலகாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“மாறா எனக்கு தலைவலிக்குது” என அவள் தலையைப் பிடித்தபடி முனங்க சிறிது சிறிதாக அவளின் தலையிலிருந்து கொம்புகள் முளைக்க ஆரம்பித்தன. அதனைக் கண்ட மாறனுக்கு மேலும் அதிர்ச்சி அதிகரித்தது. ஆம் மனித ரூபத்தில் இருந்து இப்பொழுது முழுவதுமாக மதி பூதமாக மாறிவிட்டாள்.
இதனை மாறன் புரிந்து கொண்டதால் தான் இந்த அதிர்ச்சி. ஆனால் இது எப்படி சாத்தியம் ஒரு மானிடப் பெண் எவ்வாறு பூதமாக மாற முடியும் என்ற சிந்தனை வேறு மனதில் ஓட வலியில் துடித்த மதி இப்போது சிறிது சிறிதாக சகஜமானாள். முழுவதுமாக பூதமாக மாறிய மதி தற்போது குழப்பத்துடன் எழுந்து நின்றாள்.
“மாறா நான் பாட்டுக்கு வலில துடிச்சுட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு சும்மா நிக்குற. என்னாச்சு உனக்கு. இப்போ வலி இல்ல போயிருச்சு. என்னாச்சு எனக்கு. ஏதோ வித்தியாசமா எனக்கு தோணுது” என அவள் கூற அவளை அதிர்ச்சி விலகாமல் கை பிடித்து ஓடும் நதியின் அருகே கூட்டி சென்று,
“மதி தெளிந்த நீரில் உன்னைப் பார்” என கூற அவளும் பார்க்க பார்த்த உடன் அரண்டுவிட்டாள். பார்த்தவுடன் அதிர்ச்சியில் அங்கேயே மீண்டும் மயங்கி விழ அவளைத் தூக்கிக்கொண்டு கரைக்கு வந்தான் மாறன்.
“மதி எழுந்திரு மதி” என கன்னம் தட்டி அவன் எழுப்ப சிறிது நேரத்தில் கண் விழித்தவள் மருண்டு நோக்கினாள். தன் தலையில் முளைத்த கொம்பினைக் கைகளால் தொட்டு பார்த்தாள்.
“மாறா எனக்கென்னாச்சு மாறா.. நான் எப்படி இப்படி மாறினேன்.” என குழப்பமாகவும் பதற்றமாகவும் கேட்க மாறனோ,
“அது தான் எனக்கும் புரியவில்லை மதி” என மாறன் கூற அப்பொழுது வானில் பலத்த இடி சத்தம் ஒன்று கேட்டது. அதனைத் தொடர்ந்து அசரீரி கேட்க துவங்கியது. இருவரும் குழப்பமாய் நோக்கிவிட்டு கேட்க தொடங்கினர்.
“பூதமதி உனது சாபத்திற்கு பூதமாறனால் விமோச்சனம் கிடைத்துவிட்டது. மானிடப்பெண்ணாக நீ வாழும் உன் சாபகாலம் இத்துடன் நிறைவடைந்தது. மீண்டும் நீ பெண்பூதமாக மாறிவிட்டாய்.” என அசரீரி கேட்க அதனைக் கேட்டு மேலும் குழம்பினர்.
“மாறா என்ன சத்தம் அது. யாரு பேசுறாங்க மாறா” என ஏற்கனவே தனக்குள் நடந்த மாற்றத்தை எண்ணி பயந்திருந்தவள் மேலும் பயந்தவாறு கேட்க மாறனோ,
“இதனை அசரீரி என்று கூறுவோம் மதி. தேவர்கள் நம்மிடம் பேசும் மொழி” என கூற மதியோ நடப்பது அனைத்தையும் குழப்பமாய் பார்த்தாள். அவளுக்கு தலை வெடித்துவிடும் போல் இருந்தது.
“என்ன சாபம் என்ன விமோச்சனம். நான் ஏன் பூதமா மாறினேன். எனக்கு ஒன்னும் புரியல தலை வெடிச்சுரும் போல” என கத்த ஆரம்பித்தாள் மதி. பாவம் மாறன் மட்டும் என்ன செய்வான். அவனும் செய்வதறியாமல் விடைத் தெரியாமலும் விழிக்க காற்று பலமாக அடிக்க தொடங்கியது. அதில் இரண்டாவது சாஸ்திரம் தானாக திறக்க அதிலிருந்து ஓர் காகிதம் பறந்து வந்து மதியின் முகத்தில் ஒட்டியது.
அதில் சாபம் பெற்ற பூதமதியும் பூதமாஞ்சோலையும் என்றிருக்க அதனைப் படிக்க ஆரம்பித்தனர் இருவரும். படிக்க படிக்க அதிலுள்ள எழுத்துக்கள் மறைய துவங்கின.
சில வருடங்களுக்கு முன்பு,
‘பூதமதி… பூத உலகின் பெண்களுள் அழகிலும் அறிவிலும் பேச்சாற்றலிலும் சிறந்து விளங்கியவள். ஒருமுறை தன் தோழி ஒருத்தியுடன் யாகம் நடத்த தேவையான பூக்களைப் பறிக்க பூதமாஞ்சோலையின் வினோத காட்டுப்பகுதிக்கு சென்றிருந்தாள். அப்பொழுது அங்கே பூதமாறன் அமர்ந்து தேவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தான். அவளின் தோழியோ,
“மதி. அங்கே பார் உன் மணாளன் இங்கு என்ன செய்கிறார்?” என பூதமாறனைக் கைக்காட்ட அவனைக் கண்டவள் கண்கள் காதலில் பெருகியது. அவளின் தோழியோ,
“ஆரம்பித்துவிட்டாயா. இன்னும் எத்தனை நாட்களுக்கு இவ்வாறே தொலைவில் இருந்து காதலிக்கப்போகிறாய். உன் காதலை அவரிடம் சென்று கூற வேண்டியது தானே மதி.” என அவள் கேட்க மதியோ,
“என்னவருக்கு என்மீது விருப்பமில்லை என்றால் என் மனம் தாங்காது.” என்றாள் மதி. அந்த நேரம் மாறன்,
“என்னவளை நான் கண்டுபிடிக்க ஏதேனும் அடையாளமாவது கூறுங்கள் தேவர்களே. எவ்வாறு நான் கண்டுகொள்வேன்” என சத்தமாக தேவர்களிடம் முறையிட்டு கொண்டிருந்தான். அதனைக் கேட்ட பூதமதியும் அவளின் தோழியும் தேவர்கள் என்ன கூறுகிறார்கள் என உற்று கேட்க துவங்கினர். மாறனுக்கு பதிலளிக்கும் விதமாக ஓர் அசரீரி கேட்டது.
“மணவாளியின் மேனியில் மதிமச்சம்” என்று வானில் இருந்து குரல் வர அதனைக் கேட்டு மாறன்,
“நன்றி தேவர்களே. என் மச்சக்காரியை நான் கண்டுபிடிப்பேன் கூடிய விரைவில்” என கூறிவிட்டு உற்ச்சாகமாய் இருந்தான். அதனைக் கேட்ட மதியும் அவளின் தோழியும் ஆச்சரியமடைந்தனர்.
“மதி. உனது முதுகில் தானே அவ்வாறு மச்சமுள்ளது. அப்படியென்றால் தேவர்கள் கூறிய மாறனின் மணவாளி நீ தான டி.” என மகிழ்ச்சியாக கூற அவளும்,
“ஆம். என்னவரின் அவள் நான் தான். இது போதும் எனக்கு. இனி கண்டிப்பாக என் காதல் நிறைவேறும்” என ஆனந்த கண்ணீருடன் கூறினாள்.
“பிறகு என்ன. இப்பொழுதே சென்று கூறு. நான் தான் தங்களின் மச்சக்காரி என்று” என அவள் தோழி கூற மதியோ மறுத்துவிட்டாள்.
“ஆனால் என்னவர் என் மச்சத்திற்காக அல்லாமல் எனக்காக என்னைக் காதல் செய்யவேண்டுமென விரும்புகிறேன். அதனால் இப்போது நான் உண்மையை உரைக்க மாட்டேன். கூற வேண்டிய சமயம் வந்தால் நான் கூறிவிடுவேன்” என அவனைப் பார்த்தவாறு கூற,
“என்னவோ செய். சொன்னால் மட்டும் கேட்கவா போகிறாய். எந்த ஒரு நல்ல விஷயத்தையும் உடனே கூறிவிடுவது தான் நல்லது. பிறகு நாம் கூற நினைக்கும் சமயத்தில் காலம் ஒத்துழையாது. சரி வா செல்லலாம்.” என கூற இருவரும் சென்றனர்.
யாகம் முடிந்த பின் அவையில் அனைவரும் கூட பூதராஜன் பேச ஆரம்பித்தார்.
“யாம் இந்த யாகம் நடத்த காரணம் நம் பூதமாஞ்சோலைக்கு பெரிய கண்டம் நேர போகிறது என எச்சரிக்கை வந்துள்ளது. அதனைத் தடுக்கவே இந்த யாகம். அந்த கண்டமானது என்னவெனில் தீவினைப் பூதங்களின் வருகை. நம்மை சோதிக்கவும் நம்மைக் கடமை செய்ய முடியாதபடி தடுக்கவும் தீவினைப் பூதங்கள் வர போகிறதாம். ஆதலால் நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக தேவசாஸ்திரங்களை கையாளும் நபர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என கூற அனைவரும் சென்றனர்.
(பூதங்களில் இரண்டு வகை. ஒன்று நல்வினை பூதங்கள். தேவர்களால் நன்மை செய்ய படைக்கப்பட்டவை. மற்றொன்று தீவினை பூதங்கள். நல்வினை பூதங்கள் செய்யும் கடமையை செய்யவிடாத படிக்கு அவைகளுக்கு தீங்கு விளைவிப்பவை. வண்ணத்துப்பூச்சியை வைத்து திசைதிருப்பியது, விஷபழங்களை உண்ண வைத்தது எல்லாம் சாஸ்திரத்தை எடுக்கவிடாதபடிக்கு இந்த தீவினை பூதங்கள் செய்த செயல்களாக இருக்கலாம்.)
பூதமதிக்கோ நாளுக்குநாள் மாறனின் மீதான காதல் அதிகரித்தது. தன் காதலைக் கூறும் தக்க சமயத்திற்காக காத்திருந்தாள். ஆனால் மாறனுக்கு இவளைப் பற்றி தெரியாது. ஒருமுறை பூத சாஸ்திரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள் பூதமதி. அந்த நேரம் வெளியே மாறனின் குரல் கேட்க சாஸ்திரத்தை அவ்[IT_EPOLL id=”1″][/IT_EPOLL]வாறே வைத்துவிட்டு ஆவலுடன் மாறனைப் பார்க்க வெளியே வந்தாள் மதி. அதனை ஓர் தீவினை பூதம் ஒன்று கண்டுவிட்டது.
சாஸ்திரம் தனியே இருப்பதைப் பார்த்த அந்த தீவினை பூதம் பூத உலகத்தை சாபத்தில் தள்ள திட்டமிட்டு அதனை இரும்பு பெட்டகத்தில் வைத்து பூட்டி பூமியை நோக்கி வீச அது சஞ்சீவினி ஆற்றில் சென்று விழுந்தது.
காதல் சாபம் தொடரும்…