Loading

அத்தியாயம் -14

விசித்ரா கன்ஸ்ட்ரஷன்ஸ் எம்.டி அறையில் அமரந்திருந்தாள் தாரிகா..!

கல்லூரி முடித்த கையுடன், தந்தைக்கு பக்க பலமாக நிறுவனத்தின் பொறுப்பை எடுத்து பார்த்து கொள்கிறாள்.

அழகு,அறிவு, ஆளுமை என பார்போரை ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் பெண்.

” வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்..! இப்படி எல்லாம் கோட்டேஷன் அனுப்புனா என்னால அவங்களுக்கு டென்டர் ஓகே பண்ண முடியாது. ஒழுங்கா அவங்க எம்.டிய வந்து நேர்ல பாக்க சொல்லு, இல்லனா அவங்க பார்ட்னர்ஷிப்பே வேணாம்னு கான்சல் பண்ணிரு!”

அவள் கத்தின கத்தில் கொஞ்சம் அரண்டு போனார் அவளின் மேனேஜர் ராம்.

“ஓகே மேம் “

இதற்கு மேல் இங்கு இருந்தால் அடுத்த தன் தலை தான் உருளும் என விட்டால் போதுமென ஓடிவிட்டார்.

” என்ன இருந்தாலும் அவங்க அப்பா மாறி இல்ல. கொஞ்சம் கூட பொறுமையே இல்லப்பா”

“இது என்ன புதுசா? எப்பவுமே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு தானே பேசுவாங்க.. சரி சரி கம்முனு இரு எல்லா பக்கமும் ஸ்பை வெச்சி இருக்காங்க. நாம பேசுறத கேட்டு யாராவுது போடு கொடுத்தற போறாங்க! அவங்க சொன்ன வேலைய மட்டும் செஞ்சிட்டு போவோம் தப்பு கரெக்ட்டுனு சொல்ல நாம யாரு?”

“அதுவும் சரி தான் “

வருணின் அறைக்குள் தயங்கி தயங்கி நுழைந்தார் அவனின் மேனேஜர்.

” சார் அது வந்து “

“சொல்லுங்க என்ன விஷயம்?”

” அது விசித்ரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்ல இருந்து அங்க வேல செய்யறவங்களுக்கு ஃபுட் சப்ளை பண்ணுற கேட்டரிங் ஆர்டருக்கு நாம அனுப்புன டென்டர் கொட்டேஷன்ல எதோ மிஸ்டேக்காம்.. “

“அப்படியா? எதுக்கும் இன்னொரு வாட்டி வெரிஃபை பண்ணிட்டு அவங்களுக்கு மறுபடியும் மெயில் பண்ணுறேனு சொல்லிருங்க..”

“இல்ல சார் அது வந்து.. அவங்க எம்.டி தாரிகா மேடம், உங்கள நேர்ல வந்து மீட் பண்ண சொல்லி இருக்காங்க.. இல்லனா..”

“இல்லனா?”

“இல்லனா பார்ட்னர்ஷிப்பே கேன்சல் பண்ணிக்கலாம்னு சொல்லுறாங்க. நா வேணா ஐயா கிட்ட இந்த விஷயத்தை பத்தி சொல்லி என்ன முடிவு எடுக்கறதுனு கேக்கட்டுமா சார் “

“இல்ல, அப்பாக்கு இந்த விஷயம் தெரிய வேணா நானே பாத்துக்கறேன். நீங்க போலாம்.”

அடுத்த பத்தாவது நிமிடம் தாரிகாவின் முன்பு நின்றிருந்தான் வருண்.

” பராவாலயே நீங்க இவளோ சீக்கரம் வருவீங்கனு நா எதிர்ப்பாக்கல, எனிவேஸ் சும்மா பேசி டைம் ஓட்ட எல்லாம் எனக்கு நேரம் இல்லை. ஸ்ட்ரைட்டா விஷயத்துக்கே வரேன், நீங்க அனுப்பி இருக்க கொட்டேஷன் அமௌன்ட் எல்லாம் ஓகே பட், எங்களுக்கு நீங்க இன்னும் ரெண்டு மூணு ஐட்டம்ஸ் சேத்தி கொடுக்கனும். பிகாஸ் எங்க லேபர்ஸோட சேட்டிஸ்ப்பிகேக்ஷன் தான் எனக்கு முக்கியம்.
அப்றம் டெண்டர் நீங்க 5 வருஷத்துக்கு கேட்டு இருக்கீங்க, அதுல கொஞ்சம் சேஞ்சஸ் பண்ணனும். ஒரு வருஷம் முதல்ல கொடுங்க, எங்களுக்கு திருப்தினா அப்றம் அத கன்டின்யூ பண்ணுறத பத்தி யோசிக்கலாம். யூ மே லீவ் “

அவளை துளைக்கும் பார்வை ஒன்று பாத்தவன், திரும்பி அறை கதவை நீக்க போக அப்படியே நின்றான்.

“ப்ச் என்ன விடு “

“முடியாதே..” என்றவள் அவனை பின் இருந்து இன்னும் இறுக்கமாக கட்டி கொண்டாள்.

“விடுடி ” என்றான் பல்லை கடித்து கொண்டே,

“அச்சசோ என்ன இது? என் பாய் ஃப்ரண்டுக்கு கோவம் எல்லாம் வருது ? இது எல்லாம் உலக அதிசயத்துல்ல ஒன்னாச்சே..! சீக்கிரம் சீக்கிரம் மூஞ்ச திருப்பு அந்த கோவமான மூஞ்சிய நானும் ஒரு தடவ சைட் அடிச்சுக்கறேன்..!” என்றவள் அவன் தாடையை பிடித்து அவள் பக்கம் திருப்ப, அதில் சிரித்தவன். சட்டென முகத்தை மாற்றி,

“இப்படி தான் வர சொல்லுவியா?” என்றவனின் குரலில் கொஞ்சம் கோபம் தேங்கி இருந்தது.

“பின்ன என்ன பண்ணுறதாம் ? என்னோட பிசி பாய் ப்ரண்டுக்கு அவனோட கேர்ள் ப்ரண்ட மீட் பண்ண தான் டைம் இல்ல. அட்லீஸ்ட் பிஸ்னஸ் பார்ட்னரையாவது மீட் பண்ணலாம்னு தான் வர சொன்னேன் ” என்றவள் கண் சிமிட்டி பேச,

அவளின் பாவனையை ரசித்த வருண், அவளின் நெற்றியில் விழுந்த முடிக்கற்றை காதோரம் ஒதுக்கி விட்டே,

“என்ன பாக்க என்ன வேணா பண்ணுவியா? “

“ஆமா என்ன வேணா பண்ணுவேன் ” என்றாள் இறுமாப்பாக.

” என்ன்ன்ன்ன்ன வேணா பண்ணுவியா? ” என்றவன் அர்த்தமாக அவளை பார்த்து சிரிக்க,

அதில் சிவந்தவள், ” ஷ்ஷ்.. இது ஆஃபிஸ் “

” ஓ.. இது ஆஃபிஸ்னு மேடம்க்கு இப்போ தான் நியாபகம் வருதா? “

அதில் நாக்கை கடித்தவள், ” சும்மா என்ன ஓட்டாத வருண். நானே இப்போ தான் 10 நாள் ஊருக்கு போய்ட்டு வந்தேன். வந்து உன்ன பாக்கலாம்னா சார் பிசியோ பிசி..! அதான் ஆஃபிஸயே நம்ம பிக்னிக் ஸ்பாட்டா மாத்திட்டேன். “
என்றாள் காதல் சிரிப்போடு.

” இப்போ மட்டும் நல்லா பேசு. ஆனா டென்டருக்கு என்ன பேச்சு பேசுனா ” என்றவன் பொய் கோபம் காட்ட,

” மிஸ்டர் பாய் ஃப்ரண்ட்..! அது ப்ரொப்பஷனல் இது பர்சனல் ” என்றாள் அவன் காதில் அணிந்திருந்த கடுகனை வருடிய படி.

தாரிகாவின் அக்கா விசித்ராவின் திருமண கேட்டரிங்கை வருணின் நிறுவனம் தான் செய்து கொடுத்தது.

வருணும் தொழிலை கற்று கொள்ள வேண்டும் என அவனையே முழுதாக அந்த ஆர்டரை பார்க்க சொல்லி விட்டார் அவனின் தந்தை.

அக்கா திருமணத்திற்கு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யும் தாரிகாவை வருணிற்கு பிடித்திருந்தது.

அவள் தான் கேட்டரிங் மெனு கூட போட்டு தந்தாள்.

” நீங்க சொன்ன டிஷ் இதுக்கு முன்னாடி நாங்க ட்ரை பண்ணுனதே இல்ல வேணா மாத்திக்கலாமா? “

“நோ..நோ.. கண்டிப்பா கல்யாணத்துல்ல சைனீஸ் டிஷ் ஒன்னு வெச்சே ஆகணும் “

என்றவள் கையோடு அவனை சைனீஸ் ரெஸ்டாரண்ட்டிற்க்கும் அழைத்துச் சென்று அந்த உணவை சாப்பிடவும் வைத்தாள்.

விசித்ராவின் திருமணத்தோடு மட்டும் நிறுத்தவில்லை அவர்களின் பந்தம்.
அவர்களின் கேட்டரிங் சர்வீஸ் மிகவும் பிடித்துப் போய் இரு குடும்பமும் தொழில் ரீதியாகவும் கைகோர்த்தனர்.
அதுவே வருண் மற்றும் தாரிகாவின் காதலிற்கும் பாலமாக அமைந்தது.

முதலில் வேலை விஷயமாக பேச ஆரம்பித்து அப்படியே நட்பாகி இன்று காதலில் வந்து நின்றிருக்கிறது அவர்களின் உறவு…!

“ஆஆ..அம்மாஆஆ.. அடிக்காதடி சைத்தான் குட்டி” என கத்தி கொண்டே மாதவ் ஓட, கையில் தோச கரண்டியோடு அவனை துரத்தி கொண்டிருந்தாள் கண்மணி.

“ஒழுங்கா நீயே வந்தேனா மூணு அடியோட விட்டுருவேன். ஓடுன அப்றம் இந்த கரண்டி ஒடையற வரைக்கும் விட மாட்டேன் பாத்துக்க “

‘செஞ்சாலும் செய்யும் பிசாசு ‘ என எண்ணியவன் அவனாகவே அவள் முன்பு போய் நின்றான்.

“கைய நீட்டு “

அவன் நீட்ட, அதில் சுளீர் என ஒரு அடி போட்டவள்.

” ஏன் என்கிட்ட முன்னாடியே
சொல்லல? “

” அது.. அது.. வந்து “

மீண்டும் ஒரு அடி,

“ஆஆ.. சொல்றேன் சொல்றேன். நீ பில் பண்ணுவேனு தான்டி லூசே
சொல்லுல “

” நீ சொல்லாதனால தான்டா நா இப்போ பீல்லிங்கா உக்காந்து இருக்கேன்..! அந்த பத்திரிக்கைய பாத்த உடனே எனக்கு எப்படி இருந்திச்சி தெரியுமா? ஒரு நிமிஷம் உயிரே போய்யிருச்சு. “

” விடு அதான் கல்யாணம் ஆகலைல அப்றம் என்ன? “

“அது இப்போ தான எனக்கு தெரியும் அப்போ தெரியாதே? ஏன்டா மாங்கா என்கிட்ட அப்போவே சொல்லல “

” இல்ல கண்மணி, நீ பாஸ விரும்பறனு சொல்லுற, அப்போ வந்து உன்கிட்ட அவரு ஏற்கனவே ஒரு பொண்ண லவ் பண்ணி அது கல்யாணம் வரைக்கும் போய் தீடிர்னு கல்யாணத்துக்கு பத்து நாள் முன்னாடி நின்னுருச்சுனு சொன்னா நீ எப்படி எடுப்பனு தெரில அதான் “

“மூஞ்சி..!”

” நிஜமாவே அவரு லவ் பண்ணாரா? “

“ம்ம்.. ஆமா அவங்கள கூட நா பாத்து இருக்கேன். அப்போ அப்போ ஜோடியா ஆஃபிஸ்க்கு வருவாங்க. ஆனா கல்யாணம் நின்னதுக்கு அப்றம் பாஸ் ஆஃபிஸ்க்கு வரவே இல்லை. இப்போ புதுசா அவர் ப்ராஜெக்ட்டுகாக தான் வராரு. ஆனா முன்னாடி எல்லாம் இவளோ ஒர்க் பிரஷர் பண்ணவே மாட்டாரு. ஆனா இப்போ தான் இந்த மூனு மாசத்துல்ல இத முடிச்சே ஆகனும்னு ரொம்ப தீவிரமா இருக்காரு. அப்படி என்ன தான் அவசரமோ அவருக்கு தெரில “

அவன் பேச்சில் கவனம் வைக்கவில்லை கண்மணி. காதலித்த பெண்ணை கரம் கோர்க்க முடியாமல் போனால் எவ்வளவு வலித்திருக்கும் அவனிற்க்கு.

திருமணம் ஏன் நின்றது என யோசிக்காமல்,
நின்றதால் அவனின் மனம் கொண்ட தவிப்பி பற்றி யோசித்தாள்..!
ஏன் காதலித்தான் என்பதை
யோசிக்காமல்,
காதல் முறிவால் அவனுள் இருந்த வேதனையை பற்றி யோசித்தாள்..!
தன் காதலை ஏற்று கொள்வானா என்பதை யோசிக்காமல்,
அவன் மனம் கொண்ட இறுக்கத்தை பற்றி யோசித்தாள்..!

மொத்ததில் தன்னிலை மறந்து தன் தலைவனை பற்றியே யோசித்தாள் கண்மணி.

ஒரு வாழி நீரை நிறமூட்ட ஒரு சொட்டு நீலம் போதுமானது.
அதை போல தான் கண்மணியின் மனம் முழுக்க நிறைந்திருந்தான் வருண்..!

“பாஸ் ஒரு சப்ரைஸ்..!” என்ற கண்மணி வருணிடம் ஒரு டிபன் பாக்ஸை நீட்ட யோசனையாய் அத வாங்கினான்.

” சீக்கரம் ஓபன் கரோ!”

அதை திறந்து பார்க்க, அதில் அவனிற்கு மிகவும் பிடித்த அவல் பாயாசம் இருந்தது. மதுவிடம் இருந்து தெரிந்து கொண்ட விஷயங்களில் இதுவும் ஒன்று.

” என்ன தீடிர்னு “

” ம்ம்க்கும் இது மாறி எல்லாம் எனக்கு யாராவுது செஞ்சு கொண்டு வந்தா இப்படி கேள்வி எல்லாம் கேக்க மாட்டேன். ஓரே கல்பா அடிச்சிருவேன் நீங்க என்னடானா..!”

” இருந்தாலும் எதாவுது ரீசன் வேணும்ல..? “

‘ ஹா.. உங்கள லவ் பண்ணுறது தான் ரீசனு நா இப்போ சொல்ல முடியுமா?’ என எண்ணியவள்.

“அது.. ஹான்.. இன்னிக்கு புதன்கிழமையில்ல அதான் “

“புதன்கிழமையா “

” ஆமா புதன்கிழமை புதன்கிழமை பாயாசம் வெச்சு நாலு பேருக்கு கொடுத்தா நல்லது நடக்கும்னு..”

” யாரு ஜோசியர் சொன்னாரா? “

“இல்ல நானே சொல்லறேன் மை லைப் மை ரூல்ஸ் பாஸ் “

” வாயி வாயி இப்படி பேசியே எல்லாரயும் மயக்கிடு “

“நீங்களும் மயங்கிட்டீங்களா என்ன?” அதில் ஒரு நிமிடம் திடுக்கிட்டவன், பின் அமைதியாக பாயாசத்தை சாப்பிட ஆரம்பித்தான்.

” நாட் பேட் “

” எதே நாட் பேட்டா? ஒரு நாள் முழுக்க யூட்யூப்ல வேற வேற ரெஸிபி ட்ரை பண்ணி, ஒன்ன ஃபைனல் பண்ணி செஞ்சு கொண்டு வந்தா இப்படி சொல்லுறீங்க? நீங்க ஸ்கூல்ல படிச்சீங்களா இல்லயா? “

” என்ன சமந்தம் இல்லாம கேள்வி கேக்கற? “

“சமந்தம் இருக்கு பதில் சொல்லுங்க “

“படிச்சேன் “

“அதுல தமிழ், இங்கிலிஷ் எல்லாம் சொல்லி கொடுத்தாங்களா இல்லயா?”

அவளை வினோதமாய் பார்த்தவன்,
” சொல்லி கொடுத்தாங்களே!”

” அப்போ இந்த சூப்பர்,வாவ், மார்வலஸ், அமேசிங், அட்டகாசம், அற்புதம், அருமை இந்த வார்த்தை எல்லாம் தெரியுமா தெரியாதா “

” தெரியுமே “

“அப்போ சொல்ல வேண்டியது தானா? “

” ஹாஹா.. என்ன நீ இப்படி கேட்டு வாங்கற”

“சும்மா உக்காந்துட்டே இருந்தா காக்கா கூட நம்மள காரி துப்பிட்டு போயிரும். தன் வாயே தனக்கு உதவி பாஸ்..”

” அது சரி ” என சிரித்தவனின் முகம் சட்டென சுருங்கியது.

” என்னாச்சு “

” ஒன்னும் இல்ல” என்றவன் அவனின் கையை நீவி கொடுக்க,

” என்னாச்சி கை வலிக்குதா? எங்க காட்டுங்க “

” இ.. இல்ல ஒன்னும் பிரச்னை நா பாத்துக்கறேன் “

“ஒருவேள நைட் ஒரு கை மேல ஒந்திரிச்சி படுத்திட்டீங்களோ? அதான் வலிக்கும், எனக்கும் இப்படி தான் அப்போ அப்போ ஆகும், சுடு தண்ணி ஒத்தனம் கொடுத்தா சரியா போய்ரும் “

“ம்ம்ம் “

“ரொம்ப வலிக்குதா?” என்றவள் அவன் கையை பிடிக்க போக,

“நான் தான் ஒன்னும் இல்லனு சொல்லிட்டேன்ல அப்றம் என்ன? சும்மா நை நைனு டென்ஷன் பண்ணிட்டு இருக்க? மொதல்ல போய் உன் வேலைய பாரு போ.” சற்று எரிச்சலாக வந்தது அவனின் வார்த்தைகள்.

அவனின் கோபத்தை முதல் முறையாக பார்த்தவளுக்கு சட்டென கண்கள் கலங்கி விட்டது. அதை மறைக்கும் பொருட்டு, ” சரி.. நா.. நா போய் வேலைய பாக்கறேன் ” என்றவள் உடனே வெளியேறி விட்டாள்.

” அவரு மேல அக்கறையா தான கேட்டேன். அதுக்கு இப்படியா
கடிக்கனும்?” ஆதங்கமாக வந்த கண்ணீரை யாரும் அறியா வண்ணம் துடைத்தவள் அவள் கேபினுள் முடங்கி கொண்டாள்.

தீவிரமான யோசனையில் உலன்று கொண்டிருந்தான் வருண். ஏதேதோ சிந்தனைகள் அவனுள் ஓட முகம் மிகவும் சோர்வாக இருந்தது.

பெரு மூச்சு விட்டவன், டீம் மீட்டிங்கிற்கு அழைத்தான்.

அனைவரும் வந்து விட,

” ஏற்கனவே ரெண்டு மாசம் முடிஞ்சிது, இன்னும் ஒரு மாசம் தான் டைம் இருக்கு. சீக்கிரம் இந்த ப்ராஜெக்ட்ட முடிக்கணும், தயவ செஞ்சு எல்லாரும் கோ ஆப்பரேட் பண்ணுங்க, எனக்கு டைம் இல்ல..! நாளைல இருந்து இனிமே ரெண்டு மணி நேரம் எக்ஸ்டெண்ட் பண்ணி வேலை செய்ங்க பீ சீரியஸ் “

‘ இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல’ என நினைத்து கொண்ட கண்மணி பதில் ஏதும் பேசவில்லை.

சாத்விகா தான், குழந்தை இருப்பதால் தாமதமாக வீட்டிற்கு போக முடியாது என கூற, அவளின் வேலையும் சேர்த்தி அஷ்வினியின் தலையில் தான் வந்து விடிந்தது.

” என்ன வினி ரொம்ப வேல சொல்லறாங்கனு யோசிக்கறீயா? “

“ச்சே.. ச்சே.. அப்படி இல்ல கண்மணி. நா தங்கி இருக்க ஹாஸ்ட்டல் நைட் ஏழு மணிக்குள்ள வந்தரனும்னு ரூல்ஸ் இருக்கு. ஆனா இங்க வேல எல்லாம் முடிச்சிட்டு அங்க ஏழு மணிக்கு எல்லாம் கண்டிப்பா போக முடியாது. அதான் என்ன பண்ணுறதுனு தெரில வேற ஹாஸ்ட்டல் தான் பாக்கனும் “

” நீ ஏன் வேற ஹாஸ்ட்டல் பாக்கற? என்கூட என் வீட்டுல ஸ்டே பண்ணிக்க..!”

” அது எப்படிப்பா முடியும் உங்க வீட்டுல எதாவுது நெனச்சுப்பாங்கள “

” ஹையோ.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, நான் தனியா தான் இருக்கேன். நீ வந்தேனா வாடகைக்கு வாடகையும் ஆச்சு. துணைக்கு துணையும் ஆச்சுனு பாத்தேன், நீ எப்படியும் ஹாஸ்டலுக்கு பீஸ் கட்டனும்ல அதுக்கு பதிலா நீ பாதி வாடகை கொடுத்துரு..!முடிஞ்சிது, சோ சிம்பிள். “

” தேங்க்ஸ் கண்மணி ” என்றாள் புன்னகையோடு.

“தேங்க்ஸ் எல்லாம் வேணா நாளைக்கு என்கூட ஷாப்பிங் வா அது போதும். “

ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்த கண்மணியின் முன்பு வந்து நின்றான் வருண்.

அவனை பார்த்தும் பார்க்காதது போல் அவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய,

“ஒரு நிமிஷம் ” என்றான் சற்று தயக்கதோடு.

அவள் கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்தவள், ” அர நிமிஷம் முடிஞ்சிது “

” என்ன? “

“முக்கா நிமிஷம் முடிஞ்சிது “

” சாரி கண்மணி ” ஒரு வழியாக மனதில் உறுத்தி கொண்டிருந்ததை கேட்டு விட்டான்.

விழி விரிய ஆச்சிரியமாக அவனை ஏறிட்டு பார்த்தாள் கண்மணி.

” ஏதோ டென்ஷன்ல அப்படி சொல்லிட்டேன். இப்படி கோவப்படுறது என்னோட கேரக்டரே இல்ல,ஆனா “

“ஆனாவும் வேணா ஆவனாவும்
வேணா நீங்க மனசார தானே சாரி கேட்டீங்க?”

“ஆமா “

“அப்போ நா உங்க சாரிய அக்சப்ட் பண்ணனும்னா என்கூட ஒரு இடத்துக்கு நீங்க வரனும், என்ன யோசிக்கற மாறி இருக்கு, வரீங்க அவளோ தான். வாங்க லேட் ஆகுது வந்து பின்னாடி உக்காருங்க “

கண்மணி ஸ்கூட்டியை ஓட்டி கொண்டிருக்க, பின்னாடி அமர்ந்திருந்தான் வருண்.

” எப்படி சூப்பரா வண்டி ஓட்டுறேனே? உங்களுக்கு தெரியுமா என்னோட திறமைய பாத்துட்டு அந்த டிரைவிங் ஸ்கூல்லயே என்ன டீச்சரா சேந்துக்க சொன்னாங்க. நான் தான் முடியவே முடியாதுனு சொல்லிட்டேன். என்ன பண்ணுறது எல்லா பக்கனும் இந்த கண்மணிக்கு ரொம்ப டிமாண்ட். “

” அது எப்படி தானோ கொஞ்சம் கூட அச்சு பிசக்காம ப்லோவா
அடிச்சு விடுற? “

” அது தான் என் சீக்ரெட் டேலண்ட்..!”

எதிர் காற்றையும் தாண்டி சிதறி ஒலித்தது இருவரின் சிரிப்பு சத்தமும்.

ஒரு சின்ன வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தினாள் கண்மணி.

” யார் வீடு? “

“சொல்லறேன் சொல்லறேன் வாங்க”

“கல்யாணி அக்கா “

“வா கண்மணி என்ன இன்னிக்கு லேட்டா வந்துருக்க, இப்போ கடைய சாத்தலாம்னு பாத்தேன்.”

” நல்லவேள இன்னும் சாத்தலல..?ரெண்டு நொறுக்கல் கொடுங்க கா நாங்க உக்காந்து இருக்கோம்”

தட்டுவடை கடை வீட்டிலேயே வைத்து நடத்தி கொண்டிருப்பவர் தான் கல்யாணி.

வீட்டின் முன் போர்ஷன் கடையாகவும், பின் போர்ஷனை குடியிருப்பாகவும் வைத்திருக்கிறார்.

அவள் கேட்டதை அவர் தயார் செய்து கொண்டிருக்க, அங்கு போட்டிருந்த பலகையில் இருவரும் அமர்ந்திருந்தனர்.

” நொறுக்கல்லா அப்படினா என்ன? ” என கேள்வியாய் வினவினான் வருண்.

“போச்சு போச்சு வாயில அடிங்க வாயில அடிங்க. நொறுக்கல் தெரியாதா உங்களுக்கு? நல்ல வேள இப்போ இங்க வேற எந்த கஸ்டமரும் இல்ல அவங்களுக்கு மட்டும் இது தெரிஞ்சிது, இன்னேரம் இந்த இடம் கலவர பூமி ஆகிருக்கும், தட்டு வடைய அப்படியே தூள் தூளா நொறுக்கி போட்டு. அதுல பொடி பொடியா வெட்டுன வெங்காயம், தக்காளி, கேரட், பீட்ரூட்ட அள்ளி வீசி, அதுலயே கொஞ்சம் வேர்க்கடலை, பொதினா சட்னி, கார சட்னி, அக்காவோட ஸ்பெஷல் சட்னியையும் போட்டு நல்லா டிங்கு டிங்குனு ஒரு கிண்டு கிண்டி, மழை சாரல் மாறி கடைசியா அதுல கொத்தமல்லி தழையும் காரா சேவ்வும் தூவி கொடுப்பாங்க பாருங்க..! அடடடா.. சொர்க்கமே என்றாலும் அது நொறுக்கல்ஸ் போல வருமானு பாட்டே பாடலாம்னா பாத்துகோங்களேன்..! ” உச்சி கொட்டி அவள் பேசி முடிக்க அவளையே இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தான் வருண்.

அவள் கேட்ட நொறுக்கல்ஸ் வந்துவிட ஆர்வமாக அதை சாப்பிட ஆரம்பித்தனர்.
கண்மணிக்கு புடித்தது போல் எக்ஸ்ட்ரா காரமாக தான் கொடுத்திருந்தார் கல்யாணி.

பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகே வருணிற்கு காரம் தலைக்கேறியது. காரம் தாங்காமல் அவன் இரும்ப ஆரம்ப்பித்தான்.

தண்ணீர் குடித்தும் காரம் அடங்கவில்லை.

குடுகுடுவென பின்பக்கம் இருந்த கல்யாணியின் வீட்டிற்கு ஓடினாள் கண்மணி. எப்பொழுதும் உரிமையாக செல்வது தான்.

சமையலறைக்குள் ஓடியவள் மிக்ஸியை எடுத்து, ஹாலில் உக்காந்து பாடம் எழுதி கொண்டிருந்த அவர் மகனிடம்,

“வாசு பிரிட்ஜில்ல இருந்து ஐஸ்கட்டியும், தயிரும் கொடு ” என்றாள்.

அவன் எடுத்து கொடுக்க, அதை மிக்ஸி ஜாரில் போட்டவள், அதில் கொஞ்சம் தாராளமாக சக்கரையும் அள்ளி கொட்டி ஒரு சுத்து விட்டு, டம்ப்ளரில் எடுத்து ஊற்றி அவனிடம் விரைந்தாள்.

இரும்பல் சற்று நின்றிருந்தது. இருப்பினும் , காரத்தின் தாக்கத்தினால் கண்களில் கண்ணீர் வந்திருந்தது.

” இத குடிங்க உடனே சரியா போய்ரும்”

அவன் யோசனையாய் அவளை பார்க்க

“அட வாயில வைங்கனு சொல்லறேன்ல” என்றவள் டம்பளரை அவன் வாய் அருகே கொண்டு சென்று அவனிற்கு ஊட்டி விட்டாள்.

உண்மையில் அவள் சொன்னது போலவே ஜில்லென்று அது தொண்டை குழிக்குள் இறங்க, மூளை நிரம்புகள் எல்லாம் புத்துணர்ச்சி பெற்றது போல் ஒரு உணர்வு. நிம்மதி பெரு மூச்சு விட்டாவன் அவளை ஏறிட்டு பார்க்க,

“ஸ்வீட் லஸ்ஸி..! எப்படி உடனே சரி ஆகிருச்சா?”

எப்படி இந்த பெண்ணால் மட்டும் சிறு சந்தோசத்தை கூட பெரிதாகவும், பெரும் துன்பத்தை சிறிதாகவும் எடுத்து கொள்ள முடிகிறது. தனது எல்லா பிரச்னைகளுக்கும் கைவசம் ஒரு தீர்வு வைத்திருக்கிறாள்.

அவள் போல் இருக்கதான் ஆசைப்படுகிறான், ஆனால் அவனின் கடந்த காலத்தின் வடுவும், எதிர்காலத்தின் பயமும் அவனை விடாது துரத்தி கொண்டிருக்க, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல் ஆகிவிட்ட தன் விதியை நினைத்து விரக்தி புன்னகை சிந்தினான் வருண்.

பஸ் ஸ்டாப்பில் இறங்கி அருகில் இருக்கும் அவள் ஹாஸ்டலுக்கு நடந்து போய் கொண்டிருந்தாள் அஷ்வினி.

அவள் முன்பு பைக்கில் வந்து இறங்கினான் மாதவன்.

அவனை அங்கு எதிர்ப்பார்த்திராதவள் அவனை பார்த்து விழிக்க,

“இந்த முட்ட கண்ண வெச்சி முழுச்சே ஆள கொல்லுவா ” அப்பொழுதும் அவளை அவன் வர்ணிக்க தவறவில்லை.

ஒரு வழியாக தைரியத்தை திரட்டி இன்று நிச்சயம் தன் மனதில் உள்ள காதலை அவளிடம் சொல்லி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவளிடம் வந்தான்.

ஆனால் பஞ்சமிட்டாயை பார்த்தவுடன் வார்த்தைகள் பஞ்சமாகி போய் விட்டதோ எனவோ, சொல்ல வந்ததை மறந்து அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

‘அய்யோஓ மாதவா சோதப்புறியே டா!! இதுக்கு மேல விட்டா நண்டு சிண்டு எல்லாம் உன்ன கலாய்க்கும், கமான் மாதவா கமான், உன் பவரு என்ன உன் கெத்து என்னனு காமிக்க வேண்டிய நேரம் வந்துருச்சு..! லவ்வ சொல்லுற அவள ஓகே பண்ணுற கமீட் ஆகுற..!!
நீ ஒரு மன்மதன் மாதவன்னு இந்த உலகத்துக்கு ப்ரூஃப் பண்ணுற..! ‘ என எண்ணியவன் ஒரே மூச்சாக,

” ஏய்.. இங்க பாரு உன்கிட்ட ஒன்னு சொல்லுவேன், அத கப் ஜீப்னு கேட்டுட்டு ஓகே சொல்லிட்டு போய்ட்டே இருக்க புரிஞ்சிதா? “

முகத்தை மிரட்டும் பாவனையில் வைத்து அவளை அதட்டும் தோரணையில் அவன் பேச, உண்மையில் பயந்து தான் போனாள் அஸ்வினி.

அவன் மேலும் பேச விட்டாமல் தடுக்கும் விதமாக போன் அடிக்க, சற்று எரிச்சலாக போன்னை எடுத்து பார்த்தான்.
அவன் நண்பன் தான் கூப்பிட்டு கொண்டிருந்தான். அவனிடம் தான் கேட்டரிங் பிஸ்னஸ் ஆரம்பிக்க எங்கேயாது குறைந்த வட்டியில் பணம் கிடைக்குமா என விசாரித்து கூற சொல்லி இருந்தான்,ஒரு வேளை அது விஷயமாக கூப்பிட்டு இருப்பானோ? என யோசித்தவன்.

” இங்கேயே இரு எங்கயும் போய்ராத போன் பேசிட்டு வரேன் ” என்றவன் சற்று தள்ளி போய் நின்று பேசிக்கொண்டிருந்தான்.

பேச்சியில் கவனம் இருந்தாலும் அவ்வப்பொழுது அவளையும் நோட்டமிட்டு கொண்டு தான் இருந்தான்.
யாரோ ஒரு பெண்மணி அஷ்வினியிடம் பேசி கொண்டிருந்தார். முதலில் அதை சாதரணமாக நினைத்தவன், பின் அவள் அழுவது போல தெரிய. ” டேய் நா அப்றம் கூபிட்றேன் டா ” என்றவன் போனை வைத்து விட்டு அவளிடம் விரைந்தான்.

” என் குடும்ப சந்தோசத்தையே அழிச்சிட்டு நீ மட்டும் சந்தோசமா இருக்காலாம்னு பாக்கறியா? ஊரு விட்டு ஊரு வந்துட்டா பண்ண பாவம் மட்டும் போயிருமா என்ன? வயிறு எரிஞ்சு சொல்றேன் டி நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட “

அவர் இப்படி கடுமையாக அஷ்வினியை திட்ட, ” ஏங்க,யார் நீங்க? நடு ரோடுனு கூட பாக்காம இப்படி பேசறீங்க? “

” நா யாரா? பேசறதோட நிறுத்திட்டேனு சந்தோசபடு இவள எல்லாம் போலீஸ்ல புடிச்சி கொடுத்து இருக்கனும் “

அவரின் பேச்சில் கோபமடைந்தவன் பதில் பேச போக, அவனின் கைபிடித்து கெஞ்சுதல் பார்வை பார்த்தாள் அஷ்வினி. ” ப்ளீஸ் சண்ட வேணா! ” அழுது கொண்டே அவள் கேட்க. செய்வதறியாது கலங்கி போனான் மாதவன். விஷயம் இது தான் என்ன தெரிந்தால் தானே அவனால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
அவள் அழுதவது வேறு அவனிற்கு மிகவும் குழப்பதை கொடுத்தது.

நல்ல வேளையாக அந்த அம்மாவோடு வந்தவர்கள் அவரை வழுக்கட்டாயமாக இழுத்து சென்று விட சற்று நிம்மதியாக உணர்ந்தான் மாதவ்.

ஆனால் இவளின் கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை. முதலில் அவளை சமன் செய்ய நினைத்தவன்.

“இங்க பாரு அழாத..! அவங்க சொன்னது எல்லாம் பெருசா எடுத்துக்காத..”

“இல்ல அவங்க சொன்னது கரெக்ட் தான். எனக்கு வாழவே தகுதி இல்ல. நா.. நா.. எல்லாம் செத்து
போய்யிறனும் “

” ஏய்.. பைத்தியம் மாறி பேசாத எப்பவுமே அமைதியா இருக்க
மாட்டேன் ” என்றவன் சற்று கோவமாக கத்த,

“உங்களுக்கு என்ன பத்தி என்ன தெரியும்னு எனக்கு இப்படி சப்போர்ட் பண்ணி பேசறீங்க “

” உன்ன பத்தி எனக்கு தான்டி நல்லா தெரியும் ” என்றான் வேதனையாக,

“இல்ல.. நா.. நா.. நா.. ஒரு கொலகாரி..!!” என்றவள் தேம்பி தேம்பி அழுக, அவளின் வாக்கியதில் அதிர்ந்து போய் அவளை பார்த்தான் மாதவன்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
31
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. kavitharajasekaran28175

      Hi
      Romba nalla iruku…neenga Salem side aa?? Sila words la therinthathu…but norukal la confirm aagiten..very nice dr❤️🔥❤️🔥
      All 3pairs have FB S..dunno how u gonna complete in 4 or 5 episodes…ithula feelings sum kondu varanum., waiting how u tackle them..

      .

      1. காதல் காத்தாடி
        Author

        😍😍😍 இன்னும் 7 எபிஸ் பிளான் பண்ணி இருக்கேன் டியர்.. பாப்போம் அதுக்குள்ள முடியுதாணு.

        எப்படி tackle பண்ணுறேன்ணு நீங்க தா படிச்சிட்டு சொல்லணும் 🙈