Loading

சக்கரை தழுவிய நொடியல்லவா!

அத்தியாயம் 38

மருத்துவமனையிலிருந்து வந்து விட்டுச்சென்றவன் அதற்குப் பிறகு இங்கு வரவே இல்லை ஆனால் அடிக்கடி அன்புவுக்கும், அஸ்வந்துக்கும் அழைத்துப் பேசிக்கொண்டு தான் இருந்தான். மதுவுக்கும், சித்தார்த்துக்கும் இருக்கும் பிணக்கு அரசல் புரசலாக அன்புவுக்கும் தெரிந்து தான் இருந்தது.

ஆனால் தன்னிடம் காட்டிக்கொள்ளாமல் சுத்தும் மகளையும், மருமகனையும் எப்படியாவது மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும் என நினைத்தவர், சித்தார்த்தை அலைப்பேசியில் பேசும் போதெல்லாம் வீட்டிற்கு வருமாறு அடிக்கடி கூறிக்கொண்டே இருந்தார்.

மதுவிடமும் அடிக்கடி சித்தார்த்தை பற்றியே பேசிக்கொண்டிருந்தார் ஆனால் அவளோ கழுவுற மீனில் நழுவுற மீனாகப் பதில் கூற, சித்தார்த்திடம் கராராகப் பேசி வரவழைத்திருந்தார். வந்தவனிடம் கொஞ்ச நேரம் வேலை விஷயம், தங்குமிடம் என எல்லாவற்றையும் பேசிவிட்டு கடைசியாக விஷயத்துக்கு வந்தார்.

“என்னா சித்து உனக்கும், மதுவுக்கும் என்ன பிரச்சனை?”

“அதான் மாமா எனக்கும் தெரியல.. அம்மா உங்க கிட்ட சண்டை பிடிக்கும்.. உங்களுக்கு உடம்புக்கு நல்லதில்லனு சொல்லி என்னனென்னமோ பேசுனா.. இங்க வரவே கூடாதுனு சொல்லிட்டா.. நானும் அவ போக்குக்கே போறேன். தினமும் கால் பண்ணுறேன் எடுக்குறா இல்ல.. எனக்கே ஒன்னும் புரியல அதான் கொஞ்சம் நார்மலாகட்டும்னு இருந்தேன்”

“ஆனா ரொம்ப கேப் விடுறதும் நல்லதில்ல. நீ பேசு.. சீக்கிரம் அவள சரி பண்ணி கூட்டிட்டு போ. தனியா எத்தனை நாள் இருப்ப”

“சரி மாமா” என்றவன் அவரிடம் விடைபெற்று, அவளறைக்கு சென்றான்.

அங்கு அவளோ அவனைப் பார்க்கத் துடித்த மனதில் நங்கு நங்கெனக் கொட்டி அடக்கி வைத்துக்கொண்டு படுத்திருந்தாள். அவனைப் பார்க்கக் கூடாது.. அவனிடம் பேசக் கூடாது.. என மந்திரம் போல மனதிற்குள் கூறிக்கொண்டிருக்க, அறையைப் படாரெனத் திறக்கும் சத்தம் கேட்டது.

அவள் அறைக்குள் கதவைத் தட்டாமல் வரும் ஒரே ஜீவன் அவன் தான். அதிலே அவன் தான் வருகிறானெனத் தெரிந்து கொண்டு தூங்குவது போலப் படுத்திருந்தாள்.

“தூங்கலனு தெரியும். எழும்பு தாரா” எனக்கூறவும், கண்டுகொண்டானே என்ற எரிச்சலில் அசையாமல் அப்படியே படுத்திருந்தாள்.

அவனோ மெல்ல அவளருகில் வந்து படுத்தவன் பின்னோடு சேர்த்து அணைத்துக்கொள்ள, துள்ளி எழுந்தாள். அதில் கள்ளத்தனமாகச் சிரித்தான் சித்தார்த்.

“நான் தான் என்ன பார்க்க வராதீங்கனு சொன்னேனே! உங்க மாமாவ பார்க்க வந்தா பார்த்துட்டு போக வேண்டியது தான.. இப்போ என்னாத்துக்கு இப்படி ஒட்டிக்கிட்டு வந்து படுக்குறீங்க?” எனக்கேட்க,

“மாமா மக என்னையும் வந்து பாரேண்டா மடையானு நித்தமும் கனவுல வந்து ஒரே தொல்லை. அதான் பார்க்கலாம்னு வந்தேன்”

“ஆமா கேட்குறாங்க. சும்மா சாக்கு சொல்லாம போங்க” என ஜன்னல் பக்கமாக வந்து வெளியில் வேடிக்கைப் பார்க்க, திரும்பவும் பின்னால் வந்து அணைத்தவன் அவள் வெற்று தோளில் முத்தமிட, உருகித்தான் போனாள். தீடீரெனக் கிடத்த அவன் ஸ்பரிசத்தை அவளால் உதறித்தள்ளவும் முடியவில்லை.

அவன் வேண்டும் என அழையும் மனதிற்கும், வேண்டாமெனக் கதறும் மூளைக்கும் நடுவில் சிக்கி நஞ்சு கொண்டிருந்தது அந்தச் சக்கரை நிலவு.

“இப்படி எல்லாம் பண்ணாத பிளீஸ் எனக்குப் புடிக்கல” என மெல்ல வந்தது வார்த்தை.

“வேற எப்படி பண்ணா பிடிக்கும்னு சொல்லு அப்டியே பண்றேன்” என்றான் மீண்டும் அவள் முதுகில் முத்தமிட்டு.

“ம்ம்” எனக் கூச்சத்தில் நெளிந்தவள், அவன் பிடியிலிருந்து கஷ்டப்பட்டு திரும்பியவள் கண்களில் கண்ணீர். அதைத் துடைத்தவன்,

“என் மேல உனக்குக் கோபம் எல்லாம் இல்ல. எனக்குத் தெரியும் சும்மா நடிக்காத.. உன் மண்டையில என்ன தான் இருக்கு. உடைச்சு சொல்லு சரி பண்ண முடியுமானு பார்க்கலாம். என்னாலயும் உன்ன விட்டு இருக்க முடியல உன்னாலயும் என்னை விட்டு இருக்க முடியல”

“ஆனா இருந்து தான் ஆகனும். நான் உனக்கு வேணாம் சித்தத்து” என்று சொல்லும் போதே குரல் உடைந்து தான் வந்தது.

“ஏண்டீ” என்றான் அவனும் ஆதங்கத்துடன்.

“வேண்டாம்னா விடேன். நீ என்னை டிவொர்ஸ் பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணி அத்தை, மாமா கூடவே போய் இரேன்” என மீண்டும் கோபமாக கூறினாள்.

“முடியாது. எனக்கு நீ மட்டும் போதும் வேற யாரும் வேண்டாம்” என்றான் அவனும் அதே கோபத்துடன்.

“அதுனால தான் சொல்றேன். என்னோட இருந்தா என்னோட மட்டும் தான் நீ கடைசி வரை இருக்கனும். வேற யாரும் உன்கூட இருக்க மாட்டாங்க.

அதே என்னை விட்டுட்டு நீ வேற கல்யாணம் பண்ணிக்கிட்டா அம்மா, அப்பா, தங்கச்சி குடும்பம், உனக்குனு பொண்டாட்டி, புள்ளைனு குடும்பமா வாழலாம்.

உனக்குத் தான் குழந்தைனா ரொம்ப பிடிக்குமே.. உனக்காகத் தான் சொல்றேன் சித்தத்து. பிளீஸ் புரிஞ்சுக்கோ”

“ஏன் நீ என் கூட இரு.. அப்பவும் நான் குடும்பம், பொண்டாட்டி குழந்தைனு அப்பவும் சந்தோஷமா தான இருப்பேன்” எனக்கூற எதக்கொண்டி அவனை அடிக்க எனப் பார்த்தவள்,

“சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா? எனக்குக் குழந்தை பிறக்காது” என கத்தினாள். அவளை புரியாமல் ஓர் நிமிடம் பார்த்தவன்,

“சரி. பரவாயில்ல. அதுனால என்ன உனக்கு நான் எனக்கு நீ. குழந்தை வேணும்னா அடாப் பண்ணிக்கலாம்” என அசால்ட்டாகக் கூற, அடுத்து பேசவே அவளுக்கு வாய் வரவில்லை. இப்படி பட்டுனு ஒரு பதிலை அவனிடமிருந்து அவள் எதிர்பார்க்கவே இல்லையே!

“ஆனா.. ஆனா அது உன் குழந்தையா இருக்காதே.. என்னால ஏன் உன் வம்சமே அழியனும்? நீ போயிடு பிளீஸ் போயிடு.. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா என்னோடவே இருந்துருனு நானே சொன்னாலும் சொல்லிருவேன். என் மனசை மாத்த டிரை பண்ணாம போய்டு”

“முடியாது.. இங்க தான் இருப்பேன் உன்னைக் கூட்டிட்டு தான் தூத்துக்குடி போவேன்” எனச் சட்டமாகக் கூறி கட்டிலில் படுக்க,

“இப்போ நீ போகல நான் மொத்தமா போய்டுவேன்” எனக்கத்த, அந்த வார்த்தையைத் தாங்க முடியாத கோபத்தில் எழுந்தவன் அவள் கன்னத்தில் பளாரென ஒன்னு வைக்க, அவன் கையிலே மயங்கி விழுந்தாள்.

“ஏய் தாரா! தாரா!” என அழைக்கப் பதிலில்லை. பதறிவிட்டான் அன்றும் அப்படி தான மயங்கி விழுந்து அட்டாக் வந்தது. இன்னைக்கும் அதே போல் மயங்க.. பதறியவன் அவளைக் கைகளில் அள்ளிக்கொண்டு கீழே வரக் கூடத்தில் அமர்ந்திருந்த அஸ்வந்த்,

“டேய் மதுக்கு என்னாச்சு?” எனப் பதறி எழும்ப,

“மயங்கிட்டா” எனச் சோபாவில் படுக்கவைத்து முகத்தில் தண்ணீர் தெளிக்க, மொத்த குடும்பமும் கூடிவிட்டது.

“ஏண்டா மயங்கினா?” எனக் கேட்க,

“அடிச்சுட்டேன்” எனக் கூற அனைவரும் அதிர்ந்து அவனைப் பார்க்க, அஸ்வந்தோ அடுத்த நிமிடம் சித்தார்த் சட்டைய ஏற்றிப் பிடித்தான்.

“எதுக்குடா என் தங்கச்சிய அடிச்ச?” எனக் கையை ஓங்க ஈகையும், அன்பும் தடுத்துவிட்டனர்.

“செத்து போறேனு சொல்றா விடவா? இவள சாகக் குடுக்கவா குத்து கல்லாட்டம் நான் இருக்கேன்? இல்ல இவ செத்தா நான் தான் இருப்பேனா? எதாவது புரியுதா இந்த மரமண்டைக்கு அவளே எதோ கற்பனை பண்ணிக்கிட்டு என்னென்னமோ பேசிட்டு இருக்கா” எனக்கூற அமைதியானான் அஸ்வந்த்.

அதற்குள் தண்ணீரை தெளிக்கவும் கண்விழித்து விட்டாள் மது. அவள் அருகில் அமர்ந்த வைரம் பாட்டியோ..

“என்னடா தங்கம்.. என்ன இப்படி அடிக்கடி பயம் காட்டுற.. என்னாச்சு?” என அவள் கைகளைப் பிடிக்க, அந்தக் காலத்து மனுசிக்கு என்ன தெரிந்ததோ.. மீண்டும் அழுத்தமாகக் கையைப் பற்றி நாடி பார்க்க அவர் கண்கள் சந்தோஷத்தில் மின்னியது.

“நீ இங்க வந்து ஒரு மாசம் ஆச்சுல.. வந்ததுல இருந்து நீ தான விளக்கேத்துற இத எப்படி நான் கவனிக்கல.. நல்ல விஷயமா இருக்கும் போல இருக்கு.. என் தங்கம்” என அவளுக்குத் திருஷ்டி கழிக்க, அனைவரின் முகமும் பிரகாசமாக மின்னியது மது முதற்கொண்டு.

அவளுக்கு என்ன பேசுறாங்க என முதலில் புரிபடவில்லை ஆனால் கொஞ்ச நேரத்தில் மாதவிடாய் பற்றிய பேச்சு எனப் புரிபட, உள்ளுக்குள் என்னமோ ஒன்னு உருகி குளிர்ந்தது. அவளுமே அப்போ தான் அதைப் பற்றிச் சிந்தித்தாள். இன்னும் உறுதியாகத் தெரியவில்லை தான் ஆனால் அப்படி இருக்குமோ என்ற நினைப்பே அவளை வானுக்கும், பூமிக்கும் குதிக்க வைத்தது.

அன்று சண்டையின் போது ஆனந்தி அவளுக்கு குழந்தை பாக்கியமே இல்லை எனக்கூறியதை அப்படியே மண்டையில் ஏற்றியிருந்தாள் மது.  இதற்காகத் தான் அவனை விட்டுப் பிரிய நினைத்தாள். ஆனால் இன்று அதெல்லாம் தேவையே இல்லை என்பது போல அவனவனின் இரத்தத்தில் உருவான உயிர் என் வயிற்றில் இருக்குமோ என நினைக்கவே வானம் வசப்பட்ட உணர்வு. இனி தன்னவனை விட்டுப் பிரிய வேண்டிய அவசியமில்லை என்ற நிம்மதி. தங்களுக்கு ஒரு குழந்தை என்ற ஆனந்த உற்சவம்.

மனம் தன்னவனை தேடியது. கண்களைச் சுழற்றி அவனைத் தேட அங்கிருந்த அத்தனை பேரின் முக மகழ்ச்சிக்கு மாறாக அதிர்ந்த முகத்துடன் நின்றுகொண்டிருந்தான். சிறகொடிந்தது போல் ஆனது மதுதாராவுக்கு.

‘குழந்தை வரப் போகிறதென நான் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க, அவனை விட்டுப் பிரியாமல் காலம் முழுக்க ஒற்றுமையாக இருக்க தனக்கு கிடைத்த பொக்கிஷத்தால் நான் துள்ளிக் குதிக்கிறேன் ஆனால் இவன் முகம் என்ன இப்படி இருக்கிறது’ என யோசித்தவள் மண்டைக்குள் இருந்த சாத்தானோ

‘ஹ்ம்ம் அவன் அம்மா சொன்ன மாதிரி புள்ளைக்கும் என்னை மாதிரி சர்க்கரை வியாதி இருக்குமோனு நினைக்கிறான் போல’ எனப் பதிலைக் கூறியது.

‘ஓஹ். அதானா.. எனக்கும் ஏகப்பட்ட சீக்கு, அப்போ என் வயித்துல வளருற என் பிள்ளைக்கும் இருக்கும்ல அதான் யோசிக்கிறானோ? சரி தான் அவனுக்கு ஏன் இந்தக் கஷ்டம்? அவன் அம்மா சொன்ன மாதிரி எங்க இரண்டு பேருக்கும் சீக்கு பார்த்தே அவன் நோகவா?

முன்னாடி எடுத்த முடிவு தான் சரி. அவன விட்டுப் பிரிஞ்சிடலாம். முன்ன ஒரு பிடிப்பும் இல்லாம இருந்துச்சு இப்போ எனக்கே எனக்கா ஒரு குட்டி சித்து எனக்கு அது போதும். அவன் நினைப்பும், என் காதலுக்கு கிடைச்ச என் பொக்கிஷமும் எனக்குப் போதும்’ என நினைத்துக் கொண்டிருந்தவளை கலைத்தது அவளவனின் குரல்.

“இந்தக் குழந்தை வேண்டாம் கலச்சிடலாம்” எனக்கூற அத்தனை பேருக்கும் அதிர்ச்சி. சித்தார்த்தா இப்படி எல்லாம் சொன்னது? குழந்தைகள் என்றால் அவனுக்கு எவ்ளோ பிடிக்கும் என அனைவருக்குமே தெரியுமே!

அவளோ விரக்தியாகச் சிரித்தவள் “உங்க அம்மா சொன்னது போல என் புள்ளைக்கும் என்னைப் போலச் சர்க்கரை நோய் இருந்தாலும் பரவாயில்ல.. என்னால என்புள்ளைய பார்க்க முடியும். வேறு யாரும் பார்க்கனும்னு அவசியம் இல்ல.

நான் முன்னயே சொன்ன மாதிரி என்னை டிவோர்ஸ் பண்ணிட்டு வேற ஹெல்தியான பொண்ணை கட்டிக்கோங்க.. நல்ல ஹெல்தியா குழந்தை பெத்துக்கோங்க. எனக்கு என் குழந்தை மட்டும் போதும்” எனக்கூற,

“இன்னொரு அறை வாங்காம நீ ஓய மாட்ட..” எனக்கூறியவன் மீண்டும் “வேணாம் இந்தக் குழந்தை வேண்டாம்” எனத் திரும்பக் கூற, வைரம் பாட்டி அவனை இரண்டடி அடித்து,

“ஏண்டா உன்னை நாங்க நல்லா தான வளர்த்தோம்.. ஆனா ஏன் உங்காத்தா மாதிரியே எடுத்தோம் கவுத்தோம்னு பேசுற.. செய்யுற..” என ஆதங்கமாகக் கேட்க,

“நான் சொல்றதுல அர்த்தம் இருக்கு.. நான் ஒன்னும் அவங்க மாதிரி கிடையாது. இனி யாராவது அப்படி சொன்னா நல்லா இருக்காது.

இப்போ எதுக்கு குழந்தை? இல்ல எதுக்கு இப்போ குழந்தைனு கேட்குறேன்? எனக்கு அவளும், அவளுக்கு நானும் மட்டும் போதும். இங்களுக்கு இடையில யாரும் வேணாம்”

அஸ்வந்த் “உலக அழகியா இருந்தாலும் ஒரு கட்டுத்துக்கு மேல ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டே இருக்க முடியாதுடா.. புதுசா ஒருத்தர் வேணும்.. அப்புறம் குழந்தைக்காகப் பேசுவோம், உழைப்போம் பார்த்துப் பார்த்து வளர்ப்போம்.

அது ஒரு தனி அனுபவம் டா.. குழந்தை வரலனா பரவாயில்ல சரி வாழ்க்கையை என்ஞாய் பண்ணுங்கனு விடலாம். ஆனா வந்த குழந்தையை அழிச்சுட்டு என்னடா செக்ஸ் வேண்டியிருக்கு” என வார்த்தையைவிட, பெரியவர்கள் முகம்சுளித்து கண்டிக்கும் விதமாக “அஸ்வந்த் என்னடா பேச்சு இது?” எனக் கேட்க,

சித்தார்த் “என்ன பார்த்தா அதுக்கு அழையுறவன் மாதிரியாடா இருக்கு? என்னதான் நீயெல்லாம் என் கூடவே இருந்தியோ? இந்த உலகத்துக்கே வராத குழந்தையைப் பத்தி மட்டுமே நீங்க எல்லாம் யோசிக்கிறீங்களே இவள பத்தி யோசிச்சியாடா?” என அவள் கையைப் பற்றி இழுத்து தன்னருகில் நிற்க வைத்தவன்,

“இப்போ தாண்டா அட்டாக் வந்து சரியாகிடுக்கா.. அவளால குழந்தையைப் பெற முடியுமா? பிரசவத்துல பிரஸர் ஜாஸ்த்தி ஆனா என்னாகும்னு யாராவது யோசிச்சு பார்த்தீங்களா? எனக்கு முகம் தெரியாத அந்தக் குழந்தைய விட இவ தான் வேணும். இவ மட்டும் தான் வேணும். குழந்தைக்காகனு பார்த்து என்னால என் தாராவ விட முடியாது.

அவளுக்குக் குழந்தை தான் வேணும்னா ஒரு குழந்தையை அடாப் பண்ணிக்கிறோம். எங்க இரத்தம் தான் வேணும்னா ஒரு சரகேஸி மதர் மூலமா கூடப் பெத்துக்கலாம். ஆனா இயற்கையா வேண்டாம். வேண்டவே வேண்டாம்” எனக்கூற, மீண்டும் மீண்டும் அவன் அன்பின் முன் தோற்று, அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள் அவனின் தாரா.

அவள் மனதிலுள்ள குழப்பமெல்லாம் எங்கோ ஓடியது. தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று தானே நினைத்து தான் அவனை தள்ளி வைத்தாள். அப்பறமும் கண்டதையும் நினைத்து குழம்பியவளுக்கு நெற்றிப்பொட்டில் அடித்தது போல அவன் மனதை போட்டு உடைக்க, அவள் மனம் சிறகில்லாமல் பறந்தது.

“நான் இந்தக் குழந்தைய பெத்துப்பேன். நீ மட்டும் என் கூட இரு எனக்கு ஒன்னும் ஆகாது..” எனக்கூற,

“பயமா இருக்குடி”

“நான் தான் சொல்றேன்ல.. நீ மட்டும் என் கூடவே இரு.. எனக்கு ஒன்னும் ஆகாது” எனக்கூற அவனும் அவளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

அங்கிருந்த அனைவருக்கும் ஆனந்த கண்ணீர் தான். ஒவ்வொருவரின் மனதிலும் ‘இவங்கள பிரிச்சு இருந்தா இரண்டு பேரும் இப்போ என்ன ஆகிருப்பாங்களோ.. இனியாவது இரண்டு பேரும் சந்தோஷமா இருக்கனும்’ என மனதில் நினைத்துக் கடவுளிடம் ஆளுக்கொரு பிராத்தனை வைத்து அவர்களின் வாழ்வு சிறக்க வேண்டிக் கொண்டனர். அனைவரின் வேண்டுதலுக்கும் செவி சாய்த்தாரா கடவுள்? மதுவின் பிரசவம் சுகமாக அமைந்ததா? பொருத்திருந்து பார்க்கலாம்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
12
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாது, அப்படியே குழந்தை வந்தாலும் அது தனது குறையை கொண்டிருக்குமோ என்று அஞ்சி விலகி நிற்கின்றாள்.

    சித்தார்த்தோ குழந்தையே தேவையில்லை நீ மட்டுமே போதும் என்று தீர்மானமாக இருக்கின்றான்.

    அனைவரும் வர விருக்கும் குழந்தையை பற்றி சிந்திக்க, சித்தார்த் மட்டும் மதுவின் உடல்நிலையை பற்றி சிந்திக்கின்றான்.

    முன்னர் பெற்றோருக்காக அவர்களின் மனநிம்மதிக்காக என சித்தார்த்தை பிரிய எண்ணினால் மது, இப்பொழுது அவனுக்காக அவன் வம்ச விருத்திக்காக வேண்டி அவனை பிரிய எண்ணுகிறாள்.

    எப்பொழுதும் சித்தார்த்தை விட்டு கொடுத்துக் கொண்டே இருக்கின்றாள்.

    ஆனால் சித்தார்த் மதுவின் மீது ஆழமான நேசம் கொண்டுள்ளான். அவன் வாழ்வில் இருந்து அவளை பிரித்து வைத்து யோசிக்க கூட எண்ணியதில்லை.