Loading

அலுவலகத்திற்குள் நுழைந்த ரகுவை பார்த்ததும் மைதிலியின் மனதில் ஏற்பட்ட படபடப்பை அடுக்கிக்கொண்டு இன்று எப்படியாவது காதலிப்பது ராமிடம் சொல்லிவிட வேண்டுமென்று முடிவுசெய்து இன்டர்காமில் ரகுராமை  அழைத்தாள்.

ஹலோ ரகுராம்  என்னோட கேபின் க்கு கொஞ்சம் வர முடியுமா..

லேசான கதவு தட்டும் ஒலியை  தொடர்ந்து இனிமையான ஆண் குரல் ஒலிக்க.

எஸ் கம்மிஙன் என்ற மைதிலியின் குரலில் சிறு நடுக்கம் தோன்றி மறைந்தது.

வாங்க ரகுராம் உட்காருங்க

சொல்லுங்க மேடம் என்ன விஷயம்?

உங்க கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்

சொல்லுங்க மேடம்

எங்க வீட்ல எனக்கு அம்மா அண்ணன் மட்டும்தான் தெரியும்ல்ல உங்களுக்கு எங்க அண்ணனோட திருமணத்திற்கு முன்னாடியே என்னோட மேரேஜ்  முடிச்சிடலாம்ன்னு பாக்குறாங்க.

அதான் அத பத்தி உங்ககிட்ட பேசணும்னு கூப்பிட்டேன்.

இதுல என் கிட்ட பேசுறதுக்கு என்ன இருக்கு உங்கள்  கல்யாணம்ண  சந்தோஷமான விஷயம்தான எனிவே கங்கிராட்ஸ்.

இல்ல ரகு என்னோட திருமணத்தை பற்றி நான் உங்ககிட்ட தான் பேசணும்.

நான் இந்த ஆபீஸ்க்கு ட்ரைனிங் வரும்போது நீங்கதான் எனக்கு ட்ரெயின் பண்ணிங்க  என்னோட வாழ்க்கையில நான் பார்த்தது இரண்டு ஆண்கள் என்னோட அப்பாவும் அண்ணனும் என்னோட அப்பா நான் சின்ன வயசா இருக்கும்போதே எங்கள விட்டுட்டு போயிட்டாரு என்னோட அண்ணன் அவரு வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தாலும் அவர்குள்ளே அவரு இறுகி போய்ட்டாரு என் மேல அளவுக்கதிகமான பாசம் வைத்திருந்தாலும் வாழ்க்கையோட ஓட்டத்திலே நான் பேசுவது கேக்கறதுக்கு யாரும் இல்லை.

உங்கள பார்த்த நாள்ல இருந்து உங்க கூடவே இருக்கணும்னு ஆசையா இருக்கு நான் என்ன என்ன எல்லாம் என் மிஸ் பண்ணினோ அதெல்லாம் உங்க மூலமா கிடைக்கும்னு நம்புறேன்.

நான் உங்கள ரொம்ப லவ் பண்றேன் உங்களை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப் படுறான் நீங்க என் வாழ்க்கைல இருந்தா நான் எப்பவுமே சந்தோஷமா இருப்பேன் நினைக்கிறேன் அவ்வளவுதான் இதை சொல்லத்தான் கூப்பிட்டேன் உங்க முடிவு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா??

சிறிய மௌனத்திற்குப் பிறகு ரகுராம் பேசத்தொடங்கினான் .

பாருங்க மைதிலி என்னோட மனசுல அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை என்னையே அறியாமல் உங்கள்  மனசுல அந்த மாதிரி எண்ணம் விதைக்க நான் காரணமாயிருந்த இருந்தா என்ன மன்னிச்சிடுங்க.

ஐயோ ராம் !!

இருங்க மைதிலி..

நான் சொல்றத கேளுங்க உங்களோட வாழ்க்கை முறைக்கும் என்னோட வாழ்க்கை முறைக்கும் கொஞ்சம் கூட பொருந்தாது அதனால் இந்த விஷயத்தை இதோட அப்படியே விட்டு விடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது எனக் எனக்கும் நல்லது.

எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா என்னோடு திருமணத்தை முன்னிறுத்தி தான் அவளுடைய திருமணத்தை முடிவு செய்வாங்க.

ராம் அத பத்திலாம் நீங்க கவலைப்படாதீங்க என்  அண்ணன் பார்த்துபாரு என்ன நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னுடைய பங்கு  சொத்து எல்லாமே உங்களுக்கு தான் வந்து சேரும் உங்களுடைய தங்கை திருமணத்தை பத்தி நீங்க எந்தவிதமான கவலையும் பட வேண்டாம் எனக்காக என் அண்ணன் எதை வேண்டுமானாலும் செய்வார் பேசிக்கொண்டிருந்த மைதிலி அப்போதுதான் ரகுராம் முகத்தில் ஏறியிருக்கும் கோப சிவப்பை பார்த்தாள் ரகுராமன் பார்த்த நாள் முதல் இன்று வரை இப்படி ஒரு கோபத்தை ரகுராம் இடம் பார்த்ததே இல்லை ஏனென்றால் ரகுராம் கோபமேபட்டதில்லை. ஏன் இவ்வளவு கோபம் என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தால் அப்பகூட தான்  பேசியது ஏதாவது தவறாக இருக்குமோ என்று யோசிக்கத் தோன்றவில்லை..

லுக் மிஸ் மைதிலி எவ்ளோ பணக்காரர்களாக இருந்தாலும் உங்களை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் நானே உங்களுக்கு திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்கிறேன் என் தங்கையோடு திருமணத்தை நடத்த உங்கள் அண்ணன் யார் அவருடைய பணத்தை எல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் அந்தப் பணம் முழுக்க மற்றவர்களுடைய பாவமே நிரம்பி இருக்கு அந்தப் பாவத்தை நீங்க எங்க தலையில வந்து  இறக்க வேண்டாம்.

ராம் நான் சொல்வராத நீங்க தப்ப புரிஞ்சிகிட்டீங்க.. 

பேசிக்கொண்டு இருந்த மைதிலியை கை துக்கி தடுத்தான்.. 

என்னதான் ஊரு உலகத்துக்கு தி கிரேட் பிசினஸ்மேன் ஆதித்யன் அப்படின்னு சொன்னாலும் அவரு பண்ற மற்ற தொழில்கள் எல்லாமே எல்லாருக்குமே தெரியும் அவர் மேல இருக்கிற பயத்தினால் யாரும் வாயை திறக்காமல் இருக்காங்க அவருடைய எதிரிகள் அவர் எப்படி எப்படி அடிக்கிறாரு அவரைப் பகைத்துக் கொண்டால் அவர்களுக்கு அவர் கொடுத்த தண்டனை என்னன்னு சுத்தி இருந்து பாக்குற எல்லாருக்குமே தெரியும் இந்த இடத்தில் அவர் இப்போ இருக்கறதுக்கு காரணம் எத்தனை  கொலை பண்ணி இருப்பாரு அவரை எதிர்த்தவர்கள் யாராச்சும் இப்போ உயிரோட இருக்காங்களா அப்படிப்பட்ட ஒரு அசுரன் ஓட தங்கச்சிகிட்ட வேற என்ன எதிர்ப்பாக முடியும். 

பணம் மட்டும் போதுமா இந்த உலகத்தில அந்த பணத்த வச்சு நீங்க என்ன சந்தோஷுக்கு அனுபவிச்சு இருக்கீங்க. 

உங்க பணத்தை நீங்களே வெச்சுக்கோங்க பணத்தை மட்டும் வச்சி யாரையும் எடை போடாதீர்கள் இந்த மாதிரி ஒரு அண்ணனுக்கு தங்கச்சிய இருந்தா இப்படி தான் எண்ணம்   தோணும்.

போதும் ராம் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் நான் உங்கள தான் லவ் பண்ணேன் உங்கள ரொம்ப பிடிக்கும் சொன்ன பட்  நீங்க என்னோட அண்ணனை இவ்வளவு கேவலமா பேசுவீங்க நான் நினைக்கவே இல்ல என்ன தெரியும் என் அண்ணன பத்தி உங்களுக்கு போதும் இதுக்கு மேல நான் உங்ககிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்கவேண்டாம் சொல்லிட்டீங்களே என புடிக்கலானு  சொல்லிட்டீங்களா இதுக்கப்புறம் முன்னாடி வந்து நிக்க மாட்டா ராம் பட்

ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுக்கோங்க நான் உங்கள ரொம்ப ரொம்ப ரொம்ப அதிகமா லவ் பண்ணேன் என்று உணர்ச்சி பெருக்கில் குரல் நடுங்க கண்களில் தண்ணீரோடு பேசிக்கொண்டிருந்த மைதிலியே பார்க்கும்போது ரகுராமீன் மனதை உருக தான் செய்தது.

சாரி மைதிலி.

என்று ராம் பேச தொடங்குமுன் வேண்டாம் ராம் என் மனசை நெஜமாவே காயபடுத்திட்டிங்க விடுங்க ராம் போய் வேலையை பாருங்க அறையில்  இருந்து வெளியே வந்த ராமின் மனது மிகவும் கனத்துப் போயிருந்தது.

எப்படி ஒரு பொண்ணோட மனதை இவ்ளோ பெருசா காயப்படுத்த முடிஞ்சது என்னால அவளோட அண்ணன் பண்ண தப்புக்கு அவ என்ன பண்ணுவ ரொம்ப தப்பா பேசிவிட்டேன் என்று அன்று முழுவதும் குற்ற உணர்ச்சியில் வேலை எதுவும் ஓடவில்லை ரகுராமிற்கு…

தனது அறைக்குள் இருந்த மைதிலி ராம் வெளியே சென்ற பிறகு ஒரு மூச்சு அழுது தீர்த்தாள் இதற்கு மேல் இன்று இங்கு வேலை பார்க்க முடியாது என்று அவளுடைய பி. எ அழைத்து  இன்னிக்கு நான் வீட்டுக்கு போறேன் எனக்கு கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு ஏதாவது எமர்ஜென்சி கால்  தவிர வேறு எந்த கால் வந்தாலும் டிஸ்டர்ப் பண்ணாதே என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டாள்… 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்