குமரி – 13
கீழே இறங்கிய மூவரும் மலை அடிவாரத்திற்கு வந்தனர். அக்கேப்டனிடம் சந்தனத்தை கையில் கொடுத்தான் சிப்பாயி. “இது எதுக்கு? கீழே தூக்கி போடு ” என்று கூறி, வேகமாக அவனது கையிலிருந்து எடுத்து தூற எறிய முற்பட்டான் அக் கேப்டன். அதை உணர்ந்து
வேகமாக கையை மடிக்கி பின்னால் இழுத்துகொண்டான்.
அதிர்ந்த கேப்டன் “ஏன்? “என்று விசாரித்தார். சிப்பாயி”அய்யா, இது தான் உங்க துருப்புச்சீட்டு .இது இல்லைனா, அங்க போக முடியாது “
கேப்டன்”இது சந்தனம் தான? இது எங்க போனாலும் கிடைக்க போகுது?” என்று வாய் கூறினாலும், சரியாக சந்தன பொட்டலத்தை சட்டை பாக்கெட்டை உள்ளே வைத்தான்..
” இல்லை அய்யா! இந்த சந்தனம் அவங்களே தயாரிச்சது. இது மாதிரி தயாரிப்பு செய்யுறதுக்கு என்னென்னமோ பண்ணுறாங்க. இந்த மாதிரி மணமும், நிறமும் இருக்கிறதில்லை. அதோடு, இது சிறப்பே இந்த சந்தனம் காயவே காயாது. சதா சர்வ நேரமும் ஈரப்பதோடையே இருக்கும். அங்க உள்ளவங்க தலைவலி, வயிற்று வலி அப்புறம் ஏதாச்சும் அடிபட்டா இந்த சந்தனத்தை தான் தேய்ப்பாங்க. இதுல ஏதோ மூலிகை உள்ளது. இவ்வளவு ஈரப்பதத்தோட இருக்கிறதை தலையில் வைத்தால் ஜன்னி வரும்னு சொல்லுவாங்க . ஆனால், இவங்க உபயோகப்படுத்தி நிருபித்தும் காண்பித்தனர் ” என்று குறிச்சியான்களின் பெருமைகளை பாடினார்.
கேப்டனுக்கு ஒவ்வொரு விஷயமும் ஆச்சர்யமாக இருந்தது. “இவர்களிடம் அனைத்தையும் கற்று விட்டு இவர்கள் இனத்தையை அழிக்க வேண்டும். அப்பொழுது தான் நாம் சம்பாதிக்க முடியும். ” என்று மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டான்.
சிப்பாயி ஏதோ சொல்ல வருவதை புரிந்துகொண்டு என்ன என்று வினவினான். சிப்பாயி “அய்யா, ஒரு வேளை நீங்க சரியான பூ எடுக்கலைன்னா என்ன ஆகியிருக்கும்? “.
ஒரு கள்ளப் பார்வை பார்த்து விட்டு “எப்படி தப்பான பூ எடுப்பேன். நான் தான் இவனை கவனிக்க சொல்லியிருந்தேன் அல்லவா. அவன் சொன்னதை வைத்து தான் எடுத்தான். எனக்கு அவர்களும், அவர்கள் திறமையும் வேண்டும். ” என்று கூறி சிரிக்க, அவர்களோடு இருவரும் சேர்ந்து சிரித்தனர் நம்மை நாட்டை அழிக்க தான் திட்டம் தீட்டுகின்றனர் என்பது புரியாமல்.
பின்பு, சிப்பாயிகளை அனுப்பி விட்டு, பிரிட்டனியர்களுக்கு என்றே அமைக்கப்பட்ட பிரத்யேக அரண்மனையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பொறுப்புகளில் உள்ள அனைத்து கேப்டன்களும் குழுமி இருந்தனர். இந்த நாளுக்காகவே காத்து கொண்டிருந்தான் அவன்.
அந்நாளும் வந்தது. அனைவரும் அவரவர் மாவட்டங்களில் நடந்ததை கூற , இருப்பதிலேயே சிவகங்கை மாவட்டத்தில் எழும்பி உள்ள பெண் குழுவே இம்மாத நிலவரமாக கருதினர். சிவகங்கை மாவட்டத்தின் கேப்டனாக திகழும் மைக்கேலை அனைவரும் பார்க்க, அவர் “சார், நான் வேலு நாச்சியார் பற்றி இப்பொழுது கூற போவதில்லை. ஏனென்றால், அதை விட ஒரு முக்கியமான விஷயம் கைக்கு கிடைத்துள்ளது ” என்னு கூறி சந்தனத்தை சீஃபிடம் நீட்டினான்.
அதை ஒரு கண்ணாடி குடுவையினுள் வைத்திருந்தான். திறந்தவுடன் அனைவரது நாசிக்கும் விருந்தளித்தது. அதை தொட்டு பார்த்தவர் “இது ஒரு சந்தனப் பொடி . இதை எதற்கு இவ்வளவு பெரிதாக பேசுகிறாய். இதில் நறுமணத்திற்கு ஏதேனும் சேர்ப்பார்கள் “என்று அவர் விளக்கம் கொடுக்க, தலையை இடவலமாக ஆட்டி” இல்லை, இதில் எந்த நறுமணமும் சேரவில்லை. அதோடு, இது என் கையில் கிடைத்தது மூன்று நாளைக்கு முன்பு . இன்னும் இதனின் ஈரப்பதம் போகவில்லை ” என்று இன்னும் சில விஷயங்கள் கூறினான்.
அனைவரும் ஆச்சர்யமாக கேட்டனர். சீஃப் மட்டும் “இதை அப்புறம் பார்ப்போம். இப்பொழுது நமக்கு எதிராக யாரும் முளைக்க விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு வழியைக் கூறு ” என்றார்.
மைக்கேல் பேச வரும் முன் இன்னொருவன் எழுந்து “சார், ஒரு முறை எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தால், அது நிற்காது. அடுத்தடுத்து என்று வேரூன்றி விடும். அதனால், நம்மால் முடிந்த மட்டும் இந்நாட்டின் வளங்களை எடுத்து செல்ல முற்பட வேண்டும். அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம் ” என்று கூறியவுடன் , சிந்திக்கும் படியான விஷயமாக இருந்தமையால் அனைவரும் யோசிக்க ஆரம்பித்தனர்.
🌿🌿🌿🌿🌿
அதே நேரம், இளமாறன் கத்தியோடு முகத்தை உர்ரென்று வைத்து கொண்டிருக்க, அவனுக்கு எதிரில் நன்றாக உணவு உட்கொண்டிருந்தாள் அங்கை சென்மொழி . இவளும் வேலு நாச்சியாரிடம் பயன்று கொள்ள சென்றவள். வேலு நாச்சியாரின் மேல் மரியாதை கொண்டு தன் பேரின் பின்னால் நாச்சியாரை சேர்த்துக் கொண்டாள்.
“ஏன்” என்று அனைவரும் கேட்டதற்கு, “தான் அவாின் வம்சம் ” என்று பெருமையாக கூறுவாள். அனைவருக்கும் கோபம் வரும் இரும்பொறையைத் தவிர.
“எதற்காக யாரோ ஒருவரை உன் இனத்தோடு சேர்க்கிறாய். நாம் வேறு …..புரிந்து கொள் ” என்று அவள் அம்மை பல முறை கண்டித்திருக்கிறார்.
அங்கை நன்றாக உண்டு விட்டு, ஏப்பமும் விட்டு விட்டு, கை கால்களை முறுக்கிக் கொண்டே வர, சுமார் ஒரு மணி நேரமாக ஆறு வயது குழந்தை என்று பாராமல், விழியான் இளமாறனை வெயிலில் கத்தியுடன் நிற்க வைத்து விட்டார். அதோடு சில பல அறிவுரைகளும். ஒரு வழியாக, விழியனை கொற்றன் அழைத்த பின்னேயே அவனுக்கு விடுதலை கிடைத்தது.
விழியன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த மாறன், அவர் தலை மறைந்தவுடன் குச்சியை எடுத்து திரும்பினான். அதற்குள் அங்கை ஒடியே விட்டாள். இவனும் விடாமல் அவன் நின்ற இடம் அங்கையின் குடில் வாசலில்.
அங்கையின் அம்மைக்கு கத்துவது என்பதே பிடிக்காது. தெரிந்தும் வேண்டுமென்றே “அங்கை, நீ ஊரில் பயிற்சி செய்ததை எனக்கும் என் நண்பர்களுக்கு சொல்லி தருகிறேன் என்று கூறினாயே. வா!” என்று கத்தினான்.
வெளியில் வந்த அங்கையின் அம்மை குந்தவை “எதுக்குடா இவ்வளவு கத்துற? அவளை எதுக்கு தேடுற?” என்று கடுப்புடன் கேட்டாள்.
மாறன்” என்ன ஆச்சி இப்படி கேட்டுடீங்க? அங்கை அக்கா எவ்வளவு திறமையான ஆளு ? ” .
“எவ்வளவு திறமையான ஆளு ? ” என்று நக்கலாக கேட்டார் குந்தவை.
“அக்காவே தான் சொன்னாங்க. அவங்களுக்கு நிறைய விஷயம் தெரியுமாம். முக்கியமா பொண்ணுங்களை தான் வரச் சொல்லுறாங்க. வீட்டுல சமைக்க கூடாது. நம்ம தான் நாட்டை காப்பத்தணும் அப்படினு சொன்னாங்க ” என்று இன்னும் நிறைய கூறிக் கொண்டே போனான்.
இதில் இன்னும் கடுப்பாகி “அப்படியா சரிய்யா . நான் அவள் வந்தால் , உங்களை வந்து பார்க்க சொல்லுறேன். நீ போய்யா !” என்று கூறி விட்டு, பக்கத்து குடிலில் இருக்கும் சிறுமியை அழைத்து அங்கையை அழைத்து வரக் கூறினார்.
வெளியிலேயே காத்துக் கொண்டிருந்த குந்தவைக்கு பொறுமை அந்தளவுக்கு காத்திருக்கவில்லை. வெகு நேரம் கழித்தே வந்தவள் கூடவே அவளின் தமையன்கள் செழியன் மற்றும் இன்பனோடு வந்தாள். வந்தவளை ஒன்றும் முடியாமல் அமைதிக் காத்தார்.
செழியனும் , இன்பனும் இவர் பெற்ற மக்கட் செல்வங்கள் இல்லை. இவர் தமக்கையின் பிள்ளைகள். அவர்களுக்கு சிற்றனையின் பிள்ளைகள் என்றால் உயிர். அதுவும் வீட்டின் கடைக்குட்டியாக பிறந்த அங்கையின் மேல் கொள்ளை பிரியம் அவர்களுக்கு. அங்கையை திட்டினால அங்கையின் அப்பன் வருவதற்குள் இவர்கள் இருவரும் முன் வந்து நின்று விடுவர்.
இவ்வாறு இருக்கும் என்று தெரிந்தும் அங்கை உள்ளே நுழைந்தவுடன் ” அம்மா, குடிக்க கஞ்சி தாங்க. பசிக்குது ” என்று கூறிய உடன் மரக்குச்சி மற்றும் கொட்டாசியினால் செய்த கரண்டியை அவள் மேல் வீசினார் பொறுமை இழந்து.
அவளின் வடதுக் கண்ணுக்கும், புருவத்துக்கும் மத்தியில் கரண்டி பட்டு வெட்டியது. ஒரு நிமிடம் துடித்து விட்டாள். பதறிக் கொண்டு இருவரும் ஒடி வந்தனர்.
அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வேகமாக அவளிடம் பாய்ந்து அவள் தலை முடியை பிடித்து “இன்னொரு முறை அந்த சண்டையை கத்துக்க போறேன். இந்த சண்டையை கத்துக்க போறேனு சொன்னாய் என்றால் அவ்வளவு தான். வீட்டில் வேலை செய்ய கஷ்டமாக உள்ளது. உன்னுடைய கஞ்சியை நீயே எடுப்பதற்கு அவ்வளவு கடினமாக உள்ளதா உனக்கு? நீ கெட்டுபோவதும் இல்லாமல் வளரும் பிள்ளைகளையும் கெடுக்கிறாயா? அவர்களை அம்மைகளின் ஏச்சுக்களை நான் தானடி வாங்க வேண்டும் ? என்று கூறி அவளின் கன்னத்தில் பதம் பார்த்து விட்டார்.
அதிர்ந்து இருவரும் “சிற்றன்னை “என்று ஒருசேரக் கூறும் நேரம், “அம்மா ” என்று மொழியாள் சத்தமிட்டாள்.
திரும்பி பார்க்க , அங்கு முல்லை மொழியாளுடன், மாறனும் பயத்துடன் நின்று கொண்டிருந்தான்.அங்கை வலியில் முணுங்குவதை காண பொறுக்காமல் , மொழியாளுக்கு முன் மாறன் அவளிடம் சென்று அவளின் நெற்றியை நீவி விட்டான்.
அவள் உடனே துடிக்க, குந்தவையிடம் திரும்பி, “ஆச்சி, என்னை மன்னித்து விடுங்கள். நான் பொய் கூறி விட்டேன். வேடிக்கையாக செய்தேன். இவ்வளவு வினையாகும் என்று தெரியவில்லை . எனது அம்மை அப்பனிடம் கூறி எனக்கு தண்டனை கொடுத்தாலும் சரி, நீங்களே கொடுத்தாலும் சரி ஏற்றுக் கொள்கிறேன். ” என்று மழலை கூறியவுடன், மொழியாள் அவனின் அருகில் வந்து “யாருக்கும் தண்டனை தேவையில்லை . தைரியமான வீர மகன் அழலாமா? கண்ணை துடையுங்கள் . நீங்கள் செய்தது தவறில்லை என்று கூற மாட்டேன். இனிமேல் யோசித்து செயல்படுங்கள் ” என்று அறிவுரை கூறி விட்டு அவனை கட்டியணைத்து அவளின் அன்னையை முறைத்தார்.
🌿🌿🌿🌿🌿
அதே நேரம், இவர்களின் திறமையை வெல்வதற்கும், வேலு நாச்சியாரை கொல்வதற்கும் ஒரு சேர செய்வதற்கு நாச்சியாரின் குடும்பத்தில் உள்ள ஒருவரையே விலை பேசினர். “அகவா , விரைந்து முடி . உனக்கு பரிவட்டங்களும் , பரிசுகளும் காத்துக் கொண்டிருக்கிறது . “என்று கூறி ஒப்பந்தம் இட்டு கொண்டனர் பிரிட்டனியரும் , அகவனும்.
கீர்த்தி☘️
இந்த மாறனை பிடிச்சு வெளுக்கணும்… குந்தவை அம்மா பண்ணுறது தப்பு… வீர மகனாமே வீர மகன்… அவன் அழ கூடாது குலத்த காக்க வந்தவன்…. ஆனா சென்மொழி வீட்டு வேலைக்கா 🙄😤
துரோகம்… அதை வச்சு தானே இங்க எல்லாம் நடக்குது 🫠
🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️