150 views

குற்றங்கள் பல விதம்! ஒவ்வொருவரு ஒரு விதம்!

நம டெய்லி நீயூஸ் பேப்பர் பார்க்கிறேம். ஆனா மேக்ஸிமம் ஹெட்லைன் மட்டும் பார்த்துட்டு கடந்து போய்டுவோம்!

நம்ம ஊர்லயே விதவிதமா திருடுற, குற்றம் செய்ற ஆசாமிகள் பல பேர் இருக்காங்க! தினுசு தினுசா குற்றங்கள்  நடக்குது  

இந்த மாதிரி விநோதமான இல்ல சுவாரஸ்யமான குற்றங்களை முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் கதையாக கொடுக்க நினைக்கும் என் சிறு முயற்சி தான் குதுகல குற்றங்கள்!

இதை விழிப்புணர்வாகவும் சுவாரஸ்யமாகவும் கொடுக்க முயற்சி செய்துள்ளேன்!

அன்புடன்

Shailaputri R.

வீலீங் திருடன்!!

கோவில்பட்டி காவல் நிலையம்:

யாருமா நீ என்ன கம்பிளைண்ட் சொல்லு.

அகிலா, ‘என்னோட சொந்த ஊர் கோவில்பட்டி. நான் மணிவண்ணன் பெயிண்ட் கடைல சேல்ஸ் கேர்ல்லா இருந்தேன் 2 வருஷத்துக்கு முன்னாடி என் அப்பா செத்துட்டாங்க. மூனு வருஷத்துக்கு முன்னாடி நாங்க சென்னைல இருந்தோம். அங்க தான் எனக்கு அஜித் அறிமுகம் ஆனாரு.’

ஃபிளாஸ்பேக்..

மாரியம்மாள், ‘என்னடி எப்ப பாரு வாசல்லயே நிக்கிற? ஆம்பிளை இல்லாத வீடுன்னு எவனும் வம்பு பன்னவா ஒழுங்க உள்ள போடி’.

‘ம்மா நான் ஒன்னு சொல்லுவேன் கோபப்படாம கேளும்மா. நானும் நம்ம பக்கத்து வீட்டு அஜித்தும் லவ் பன்றோம்மா கோபப்படாம கொஞ்சம் யோசிம்மா நல்ல பையன் நல்ல வேலை பாக்குறாரு. நமக்கு எல்லா விதத்துலயும் பாதுகாப்பா இருப்பாரும்மா’ என்றாள் அகிலா.

‘எல்லாம் சரி தாண்டி ஆனா அவன் குடிப்பானே! அதான் யோசனையா இருக்கு.’ என்ற மாரியம்மாளிடம் ‘இந்த காலத்துல யார் தான் குடிக்கிறது இல்ல அது எல்லாம் நான் பார்த்துகிறேன்ம்மா பீளீஸ்ம்மா. அப்பா கிட்டயும் பேசி பெர்மிஷன் வாங்கும்மா’ என்று தாஜா செய்தாள் அகிலா.

‘சரி ஒத்தபுள்ள ஆசை படுற அதோட கண்ணுமுன்னாடி தான இருக்கப்போற. உன் மனசு போல அவனை கல்யாணம் பண்ணிக்கோ! அப்பா கிட்ட நான் பேசுறேன்.’ என்றார் மாரியம்மாள்.

‘அஜீத் எங்க வீட்டுல கல்யாணத்துக்கு ஒகே சொல்லிட்டாங்க. நான் ரொம்ப ஹாப்பி. நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்!’ என்று குதுகலித்தவளிடம் சூப்பர்டி நானும் எங்க வீட்டுல பேசிட்டேன் சீக்கிரம் நீ என் மனைவி ஆகிடுவ. 2020 ஜனவரி மாதம் நமக்கு நம்ம அம்மா அப்பா முன்னாடி கல்யாணம்’ என்று தானும் தன் மகிழ்ச்சியை அகிலாவிடம் பகிர்ந்தான் அஜீத்.

சில மாதங்களுக்கு பிறகு,

‘ஏண்டா! எப்ப பாரு குடிச்சிட்டு வர. கல்யாணத்துக்கு முன்னாடி தான் குடிச்சன்னா இப்பயுமா உன் கூட எல்லாம் என்னால குப்ப கொட்ட முடியாது நான் அம்மா கிட்ட போறேன் போடா. என் மூஞ்சிலயே முழிக்காத!’ என்று கோவில்பட்டியில் இருக்கும் தன் தாய் மாரியம்மாளிடம் சென்றுவிட்டாள் அகிலா.

அவசரத்தில் ஆரம்பித்த காதல் ஒரே வருடத்தில் சட்டப்படியும் மனதின் படியும் பிரிந்தது.

6 மாதங்களுக்கு பிறகு..

மாரியம்மாள்,’இப்படியே இருந்தா எப்படி!  உனக்கு இன்னும் வாழ வயசு இருக்கு. எல்லாருமே அஜித் மாதிரி இருக்க மாட்டாங்க! இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோம்மா!’.

’ம்ம் சரிம்மா உனக்காக பன்றேன்’ என்று Tamil matrimony அப்பில் தான் ஒரு விவாகரத்து ஆனா பெண், தனக்கு மனமகன் தேவை என்று பதிவுசெய்தாள் அகிலா 

ஒரு மாததிற்கு பிறகு.. (11.06.2022)

‘ஹாய் ஐ ஆம் ராகேஷ் உங்கள தமிழ் மேட்ரிமோனில பார்த்தேன். நாம மீட் பன்னலாமா’ என்று ஒரு வாட்சப் மெசேஜ் அகிலாவிற்கு வருகிறது.

ச்சே இது வேற..

டிரிங்டிரிங்.. டிரிங்டிரிங்..

‘ஹெலோ நான் ராகேஷ் உங்களுக்கு மெசேஜ் பண்ணிருந்தேன்னே!’

‘சாரிங்க நான்  என் அம்மாக்காக தான் இந்த ஆப்ல ரெஜிஸ்டர் பன்னேன் பீளீஸ் இது சரி வராது விட்டுருங்க’ என்று மறுத்தாள் அகிலா.

டிரிங்டிரிங்.. டிரிங்டிரிங்…

‘ச்ச சரியான இம்சை இவன் பேசாம போனை ஆஃப் பண்ணிடலாம்!’

(அவன் நம்பர்ர மட்டும் பிளாக் பண்ணிருக்கலாம்லன்னு கேக்காதீங்க! அகிலாக்கு அவ்வளவு அறிவு இல்ல!)

2 நாட்களுக்கு பிறகு..

அகிலா, ‘இன்னுமா அவன் போன் பண்ணிட்டு இருக்க போறான்! போனா ஆன் பன்னுவோம்!’ என்று போன் ஆன் செய்ய 2 நிமிடங்களில்..

டிரிங்டிரிங்.. டிரிங்டிரிங்..

அகிலா, ‘ஹலோ.!’

எதிர்புறமிருந்து, ‘ஏங்க நான் தான்ங்க ராகேஷ் ஒரு 2 நிமிஷம் மட்டும் பேசனுங்க. பீளீஸ்’ என்று கெஞ்ச, ‘சரி சொல்லுங்க என்ன விஷயம்’ என்றாள் அகிலா.

ராகேஷ், ‘நானும் ஒரு டைவோர்சி தான் என் அம்மா அப்பா கூட பெங்களூர்ல இருக்கேன். நான் *** பேங்க்ல வேலை பார்க்கிறேன் மாசம் *** சம்பளம். ஒரு தங்கச்சி அவளுக்கும் கல்யாணம் முடிஞ்சிருச்சு. எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு. நான் உங்களை நல்லா பார்த்துப்பேன் உடனே சொல்ல வேண்டாம் வேனும்ன்னா கொஞ்ச நாள் பழகிபார்க்கலாம்’. என்றான்.

‘முன்ன பின்ன தெரியாதவங்க கூட எப்படி பழக’ என அகிலா தயங்க. தன் போட்டோவை அனுப்பி வைத்தான் ராகேஷ்.

சாதாரண நடுத்தர குடும்பத்து பையனாக இருந்தாலும் ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் திருத்தமான முகம் அகிலாவிற்கு பிடித்தும் இருந்தது.

இப்படியே செல்போன் வழியாக அவர்கள் பழக ஆரம்பிக்க ஒரு நாள் ‘பேபி நான் நாளைக்கு உன்ன பார்க்க பெங்களூர்ல இருந்து கோவில் பட்டி வரேன். நாம நேர்ல மீட் பன்னலாம்.’ என்றான் ராகேஷ்.

அதற்கு அகிலாவும் சம்மதிக்க, 19.06.2022 காலையிலேயே கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் அவளுக்காக காத்திருக்கலானான்.

8 மணிக்கு யமஹா ஃபசினோவில் இறங்கிய அகிலாவை கண்டவன், எதாவது பெரிய ஹோட்டல்லா சொல்லு பேபி ஃபர்ஸ்ட் சாப்பிடலாம் என்றான் ராகேஷ்.

அகிலா அவனை ‘இங்க பக்கத்துல ஆர்யாஸ் ஹோட்டல் இருக்கு. அங்க போவோம்’ என்று இருவரும் ஆர்யாஸ் ஹோட்டலின் ஏ/சி ஹாலில் அமர்ந்தனர்.

‘ஹே பேபி! உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.’ என தங்க சங்கிலியை அவள் கழுத்தில் அணிவித்தான்.

ராகேஷ், ‘வாவ்! சூப்பர்ரா இருக்கு பேபி இது உனக்கு. ஆனா நீ ஏற்கனவே போட்டுருக்க செயின் தான் இதோட அழக கொஞ்சம் கெடுக்குது. அத கழட்டி உள்ள வச்சிரு. அப்பறம் போட்டுக்கோ!’ என்றான்

 அகிலா, ‘ நீயே பத்திரமா வச்சிரு! வீட்டுக்கு போகும் போது வாங்கிக்கிறேன்!’ என தன்கழுத்தில் இருந்த பெரிய டாலார் வைத்த 3 பவுன் முருக்கு செயினை அவனிடம் கொடுத்தாள்.

அவனும் தன்னிடம் இருந்த பெரிய டாலரை அவளது முருக்கு செயினில் மாட்டி தன் கழுத்தில் போட்டுக்கொண்டான். பின், ஒரு கவரை அகிலாவிடம் கொடுத்து ‘இதுல 3 லட்சம் பணம் இருக்கு பேபி நாம ஷாப்பிங் பன்னாலம்.’ என்றவன் அவளது செல்ஃபோனை வாங்கி பார்த்தவன், அது மிகவும் ஹாங் ஆகுவதாக கூறி சுவிட்ச் ஆஃப் செய்து தன் பாக்கிட்டில் வைத்துக்கொண்டான்.

ராகேஷ்,’ நல்ல கிளைமேட்ல பேபி. வா! ஒரு லாங் டிரைவ் போவோம். உன் பேக்க வண்டி பெட்டிக்குள்ள போட்டுக்கோ உனக்கு ரொம்ப தூரம் போகும் போது கஷ்டமா இருக்காது. என்றவன் தனது செல்போன் அவனது செல்போன் எல்லாத்தையும் வண்டியின் பெட்டிக்குள் போட்டான்.’

பின் வள்ளிமில்லை தாண்டி HP பெட்ரோல் பல்கில் பெட்ரோலை நிரப்பியவன், ‘வண்டிய செம்ம கண்டிஷன்ல வச்சிருக்க பேபி ஒரு தடவை வீலீங் பண்ணி பார்க்கவா’ என்று கேட்க அகிலாவும் சம்மதித்தாள்.

வண்டியை எடுத்து வேகமாக சென்றவன் திரும்பவேயில்லை. சந்தேகம் அடைந்த அகிலா அங்கிருந்த பெரியவரிடம் நிலமையை உரைக்க அவர் அவளை கோவில்பட்டிக்கு பஸ் ஏத்திவிட்டு 10 ரூபாய் கொடுத்து வீட்டுக்கு செல்லுமாறு கூறினார்.

பின் வீட்டுக்கு வந்த அகிலா தன் தாயிடம் நடந்ததை கூற மாரியம்மாள், ‘அடியேய் அவன் ஏமாத்துனது கூடவா உனக்கு தெரியல! இது போலி நகைடி வா போலீஸ்ல கம்பிளைண்ட் கொடுப்போம்’ என்றார்.

 இப்பொழுது கோவில்பட்டி காவல் நிலையத்தில்…

அகிலா, ‘அவன் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி தான் சார் மீட் பண்ணான். இப்போ என்னோட 3 பவுன் தங்க செயின், VIVO Y12 மாடல் செல்போன், TN 96, D 0868 YAMAHA FASCINO வண்டி எல்லாத்தையும் திருடிட்டு போய்ட்டான் சார். எனக்கு அவனை பார்த்தா அடையாளம் காட்ட முடியும் ஆனா பெயர் அட்ரெஸ் எல்லாம் உண்மையான்னு இப்போ சந்தேகமா இருக்கு. என் பொருட்களை எல்லாம் கண்டுபுடிச்சி மீட்டு கொடுங்க சார்!’ என்றாள்.

இது சாத்தூர்  காவல் நிலையத்தில் 19.06.2022 அன்று பதிவான ஒரு குற்ற முதல் தகவல் அறிக்கை.!

மக்களே! இப்படியும் நாட்டில் இருக்கிறார்கள். ஜாக்கிரதை!

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்