Loading

காதல் 7

“அப்பாவோட கட்டுப்பாட்டுல வளர்ந்ததால என்னால ஈசியா யாரோடயும் மிங்கிள் ஆகவே முடியாது… அதனாலயே எனக்கு ஸ்கூல் அண்ட் காலேஜ்ல பெருசா ஃப்ரெண்ட்ஸ் கிடையாது… ஆப்போசிட் ஜெண்டர் கூட பெருசா எந்த இண்ட்ராக்சனும் ஒர்க்குக்குப் போறதுக்கு முன்னாடி நடந்தது இல்ல… இவங்களும் நம்ம அப்பா மாதிரி தானே இருப்பாங்கங்கிற அனுமானத்துல அவங்களை ஒரு லிமிட்ல நிறுத்தி வச்சு பழகிட்டேன்… இது எல்லாமே டாமோட விசயத்துல தலைகீழா மாறி போயிடுச்சுனு தான் சொல்லணும்… என் ஃபியான்ஸ் கிட்ட கூட அட்ராக்ட் ஆகாத என்னோட மனசு ஃபர்ஸ்ட் டைம் டாமைப் பாத்ததும் நெகிழ ஆரம்பிச்சுது… அவனோட ஹக், ஃபோர்ஹெட் கிஸ் இது எதுவும் தப்பில்லனு என்னை நம்ப வைக்க பாக்குது அந்த மனசு… மனசை விடுங்க, எனக்கே டாமோட வார்ம் ஹக்ல புதைஞ்சிருக்க பிடிக்குது… இது வயசுக்கோளாறா இல்ல ஹார்மோன் விளையாட்டானு புரியல”

     -ஜெர்ரி

பீட்டர்.T.ஃப்ளான் அகாடெமிக் செண்டர், டெக்சாஸ் பல்கலைகழகம், ஆஸ்டின்…

மாணவர்களுக்கான அடையாள அட்டையை வாங்க ஐ.டி சென்டருக்கு டாமுடன் வந்திருந்தாள் ஆர்யா.

ஸ்டூடண்ட் ஐ.டி.கார்ட் அங்கே படிக்கும் மாணவர்களின் அடையாளத்திற்கான சான்று மட்டுமில்லை. அவர்கள் பல்கலைகழகத்திலிருக்கும் வெவ்வேறு துறைகளுக்கும், கட்டிடங்களுக்கும் செல்ல வேண்டுமென்றாலோ, நூலகத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றாலோ அந்த கார்ட் மிகவும் அவசியம்.

ஏற்கெனவே ஆன்லைனில் புகைப்படம் எல்லாம் அனுப்பி வைத்துவிட்டதால் கார்ட் தயாரானதும் வரச் சொல்லியிருந்தார்கள்.

அங்கே காத்திருக்கும் போது ஐ.டி சென்டர் அமைந்திருக்கும் பீட்டர்.T.ஃப்ளான் அகாடெமிக் சென்டரின் வெளிப்புற அழகை ரசித்துக்கொண்டிருந்தாள் ஆர்யா. பசும்புல்வெளி, ஓங்கியுயர்ந்த மரங்கள், அழகுக்காக வளர்க்கப்படும் குத்துச்செடிகளுக்கு மத்தியில் ஓங்கியுயர்ந்து கம்பீரமாக நின்றது அந்தக் கட்டிடம்.

அப்போது அவளின் கவனத்தைக் களவாடியது ஒரு கம்பீரக்குரல்.

“ஹாய் டாம்! ஹாலிடே எப்பிடி போச்சு?”

ஆர்யா வெளியே பார்ப்பதை நிறுத்திவிட்டு குரலுக்குரிய நபரை கவனிக்க ஆரம்பித்தாள். சிகையற்ற தலை மொழுமொழுவென பளபளத்தது. எப்படியும் வயது நாற்பதுக்குள் இருக்கலாம்.

“ஹாலிடே ரொம்ப அற்புதமா போகுது மிஸ்டர் ஆரோன்ஸ்… உங்க செகண்ட் புக் வால் ஸ்ட்ரீட் ஜர்னல்ல பெஸ்ட் செல்லர் போல… கங்கிராட்ஸ்”

டாம் அவரிடம் கை குலுக்கி வாழ்த்தைப் பகிர்ந்து கொண்டான்.

“உங்களுக்கும் என்னோட அட்வான்ஸ் வாழ்த்துகள் டாம்… இந்த வருசம் யூனிவர்ச்சிட்டியோட எக்பீரியன்சல் லேனிங் எக்சலன்ஸ் அவார்ட் வின்னர் நீங்க தான்னு பேசிக்கிறாங்க”

அவர் கண் சிமிட்டிச் சொன்னதும் டாம் ஆர்ப்பாட்டமின்றி சிரித்தான்.

“கைக்கு வராத வரை அந்த விருது எனக்குச் சொந்தமில்ல மிஸ்டர் ஆரோன்ஸ்”

“ஹேய்! உங்களைத் தவிர வேற யாரும் அந்த விருதுக்குத் தகுதியான நபர் இல்ல யங்மேன்… அண்ட் மேரி ஹாகின்ஸ் ஃபவுண்டேசன் அவார்டுக்கும் யூனிவர்சிட்டி சார்பா உங்களை பரிந்துரை செஞ்சிருக்கோம்… திஸ் இயர் வில் பி ப்ராஸ்பரஸ் டு யூ”

ஆர்யா அவர்கள் பேசுவதை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பல்கலைகழக விருதுக்கு டாம் தகுதியானவன் என்கிறார் இம்மனிதர். அதுவும் சிறந்த முறையில் கற்பித்தலுக்கான விருது. அப்படி என்றால்?

ஆர்யா யோசிக்கும் போதே “மிஸ் ஆர்யா தேவ்” என்று அலுவலகத்திலிருந்து ஒரு நபர் வந்து அழைத்தார்.

“ஜெர்ரி உன் ஐ.டி கார்ட்” அந்நபரைக் கை காட்டினான் டாம்.

ஆர்யா எழுந்து சென்று தனது ஐ.டி.கார்டை அந்நபரிடமிருந்து வாங்கிக்கொள்ளும் போதே “புரொபாசர் டாம்” என்றார் அவர்.

புரொபசரா? ஐ.டி.கார்டை வாங்கியவளின் கண்கள் கார்ட்டூனில் வரும் கேரக்டர்களைப் போல இமைக்க மறந்து நின்றன.

“ஹாய் ஜேக்”

அந்நபரிடம் கை குலுக்கினான் டாம்.

“இந்த இயர் இண்டர்நேஷனல் ஸ்டூடண்ட்சோட எண்ணிக்கை அதிகம்… அங்கங்க ஃபாரீனர்ஸ் மேல அட்டாக் நடந்தாலும் அவங்களுக்கு அமெரிக்க எஜூகேஷனல் இன்ஸ்டிட்டியூசன்ஸ் மேல இருக்குற நம்பிக்கை இன்னும் குறையல”

அப்படி என்றால் டாம் இந்த பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறானா? உடனே மடேர் என அவளது மண்டையில் மானசீகமாக அடித்தது ஆர்யாவின் மனசாட்சி.

“புரொபசரை அவன் இவன்னு சொல்லுற? மரியாதையா பேசு”

ஏற்கெனவே ஆச்சரியத்தில் உறைந்திருந்தவளுக்கு மனசாட்சியின் பேச்சு நியாயமென தோன்றியது.

அந்த ஜெக்கும் மிஸ்டர் ஆரோன்சும் கிளம்பியதும் டாமிடம் வந்து நின்றவள் “நீங்க செஃப்னு நினைச்சேன் மிஸ்டர் போல்டன்…” என்று மரியாதை பன்மையுடன் பரிதாபமாக இழுக்கவும் அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“எந்த ஆங்கிள்ல நான் பாக்க செஃப் மாதிரி இருக்குறேன்? அப்பப்ப அலெஸாண்ட்ரோவோட ரெஸ்ட்ராண்டுக்குப் போறப்ப எல்சாக்கு ஹெல்ப் பண்ணுறேன்னு ஏதாச்சும் பண்ணுவேன்… நீ என்னை ஃபர்ஸ்ட் டைம் பாத்தப்ப சீஸ் வீலோட நின்னதால நான் செஃபா தான் இருக்கணும்னு நீயே முடிவு பண்ணிடுவியா?”

ஆர்யாவிற்கு அவனிடம் கறாராகப் பேசிய தருணங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன.

மன்னிப்பு கேட்கும் பாவனையுடன் கரம் கூப்பியவள் “ஐ அம் ரியலி சாரி… புரொபசர்னு தெரியாம நான் கொஞ்சம் ஓவரா நடந்துகிட்டேன்” என்கவும்

“ஓஹ் காட்! நான் ஜஸ்ட் விளையாடுனேன்… உடனே ஃபார்மலா பேச ஆரம்பிச்சிடாத ஜெர்ரி” என்றான் டாம்.

“அப்பிடி இல்ல டாம்… மிஸ்டர் போல்டன்… எங்க நாட்டுல புரொபர்ஸ், டீச்சர்ஸை ரொம்ப உயர்வா மதிப்போம்… அவங்களை தெய்வத்துக்கு ஈக்வலா வச்சு மரியாதை குடுப்போம்… ஆனா நான் உங்க கிட்ட கோவமா நடந்துக்கிட்டேன்”

தடுமாற்றத்துடன் உரைத்தவளை அமைதி காக்கும்படி பணித்தான் டாம்.

“ஈஸி ஈஸி ஜெர்ரி… இவ்ளோ எம்பாரசிங்கா நீ பேசவேண்டிய அவசியமே இல்ல… டீச்சிங் இஸ் மை புரொபசன்… இதை காரணமா வச்சு திடீர்னு நீ எனக்கு அதிகப்படி மரியாதை குடுத்தனா ஐ ஃபீல் அன்கம்பர்டபிள்… உன்னோட எம்.எஸ்.ஐ.டி.எம் கோர்சுக்கு நெக்ஸ்ட் செமஸ்டர் தான் நான் க்ளாஸ் எடுக்கப்போறேன்… க்ளாஸ் டைம்ல மட்டும் நீ என்னை புரொபசர் தாமஸ் போல்டனா பாத்தா போதும்… மத்த டைம்ல நான் டாம், நீ ஜெர்ரி… ஓ.கேவா?”

தயக்கத்துடன் தலையாட்டினாள் ஆர்யா.

“இப்பிடி சைலண்டா இருந்தா நல்லா இல்ல ஜெர்ரி”

அவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவர்களைக் கடந்து போன இருவர் டாமுக்கு வணக்கம் சொல்ல ஆர்யாவோ தர்மசங்கடத்தில் நெளிந்தபடி அவனோடு கிளம்பினாள்.

ஏதாவது இந்திய உணவகத்துக்குப் போகலாமென்று மட்டும் சொன்னதோடு சரி, காரிலேறியதிலிருந்து அவள் வாயைத் திறக்கவே இல்லை.

“இங்க க்ளே பிட்னு ஒரு இந்தியன் ரெஸ்ட்ராண்ட் இருக்குனு அலெஸாண்ட்ரோ சொல்லிருக்கான்…. ஷால் வீ கோ தேர்?”

“ம்ம்ம்”

க்ளே பிட் ரெஸ்ட்ராண்ட் இந்தியத்தனத்துடன் தெரிந்தது. ஆர்யாவுக்கு மெனுவைப் படிக்கும் அளவுக்குப் பொறுமையில்லை.

மேலோட்டமாகப் படித்தவள் “பட்டர் நாண், பாலக் பனீர் அண்ட் பிந்தி மசால்” என்றாள்.

டாம் அவளருகே எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கவும் அவனுக்கு என்ன வேண்டுமென விசாரித்தாள்.

“ஐ ஃப்ரிப்பர் லெஸ் ஸ்பைசி ஃபூட்”

இருவருக்கும் பட்டர் நாணே போதுமென ஆர்டர் செய்தவள் சாப்பாடு வரும் வரை பேசினால் தானே!

சாப்பாடு வந்ததும் பசியைச் சாக்காக வைத்து டாமின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு முழுமூச்சாகச் சாப்பிட ஆரம்பித்தாள்.

டாம் அவளை எப்படியாவது இயல்பாக ஆக்க வேண்டுமென யோசித்தபடியே பிந்தி மசாலில் இருந்த வெண்டைக்காய் ஒன்றை எடுத்து கடித்தான்.

அன்று ரெஸ்ட்ராண்டின் செஃபுக்கு யார் மீது கோபமோ காரத்தை அள்ளிப் போட்டிருந்தார். இவ்வளவு காரம் சாப்பிட்டிடாத டாமின் நாவு தீப்பற்றினாற்போல எரிய “ஓஹ்! ஹவ் ஸ்பைசி…. ஆஹ்… காட்” என்று துடிக்க ஆரம்பித்தான்.

“என்னாச்சு டாம்?” என ஆர்யா பதற

“லேடீஸ் ஃபிங்கர் இஸ் டூ ஸ்பைசி ஜெர்ரி” என்றவனின் கண்கள் கலங்கி மூக்கு நுனியெல்லாம் காரத்தால் சிவந்துவிட்டது.

“ஓ மை காட்! என் வாழ்க்கைல இவ்ளோ காரம் சாப்பிட்டதே இல்லையே” என அவன் அலற ஆர்யா தண்ணீரை புகட்டினாள்.

“இப்ப ஓகேவா?” தண்ணீர் புகட்டியபடியே கேட்டாள்.

நாக்கில் காரத்தின் எரிச்சல் அடங்கியது. ஆனால் அந்நேரம் பார்த்தா ஆர்யா அணிந்திருந்த உல்லன் ஸ்ரக் விலக வேண்டும்? அவளது துடியிடை பளிச்சென தெரிய வேண்டும்?

“நோ… ஐ காண்ட் ஹேண்டில் திஸ் கைண்ட் ஆப் ஸ்பைசி அண்ட் ஹாட்”

இவ்வளவு நேரம் இருந்த பதற்றம் போய் கள்ளத்தனம் எட்டிப் பார்த்தது டாமின் குரலில்.

ஆர்யா அவனது குரலில் இருந்த பேதத்தை உணர்ந்து “டாம்” என்றவள் அவனுடைய கண்கள் அவளது க்ராப் டாப்புக்கும் ஜீன்சுக்கும் இடையே தெரிந்த சில சென்டி மீட்டர் இடையைக் கவனித்துக்கொண்டிருப்பதை அறிந்ததும் விலகிய ஸ்ரக்கை வேகமாக இழுத்துவிட்டாள்.

அவளது பார்வை முறைப்பாக மாறி அவனைக் குத்த ஆரம்பிக்கவும் கண்களில் குறும்போடு இரு கரங்களால் அவளது கன்னங்களை ஏந்தியவன்

“ஐ காண்ட் ஹேண்டில் திஸ் கைண்ட் ஆப் ஸ்பைசி அண்ட் ஹாட் ஜெர்ரி” என நகைப்பினூடே சொல்லவும் அவனது வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் புரிந்து ஆர்யாவின் கன்னங்கள் குல்மொஹர் மலர்வனம் ஆகின.

டாம் தன்னை ரசிப்பது அவளுக்குப் பிடித்திருந்தது. அவன் தன்னை ரசிக்கிறான் என்ற எண்ணம் அவளது அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகளைப் பறக்க வைத்தது.

என்ன இது? டீனேஜ் பெண்ணைப் போல நடந்துகொள்கிறேனே என அவளே சமாளிக்க முயன்றாலும் கன்னங்களில் பரவியிருந்த செம்மை அவளது நாணத்தை அவனுக்குப்  புரியவைத்தது.

“யூ ஆர் ப்ளஷிங் ஜெர்ரி (you are blushing jerry)”

“யூ ஆர் மேக்கிங் மீ ப்ளஷ் டாம் (you are making me blush tom)”

முன்பிருந்த தர்மசங்கடம் எங்கே போனதென தெரியவில்லை ஆர்யாவுக்கு. குரலில் அவ்வளவு கனிவு.

இதைக் கூட அவள் சொல்லாமல் மறைத்திருக்கலாம். மனதை எப்போதும் கட்டுப்படுத்திக்கொண்டே இருக்காதே என டாம் கூறிய அறிவுரை வேலை செய்ததால் வெளிப்படையாகக் கூறிவிட்டாள்.

டாம் அவளது கன்னங்களை விடுவித்தவன் “ஐ லைக் திஸ் ஜெர்ரி… ரொம்ப பணிவா பவ்வியமா என் கிட்ட பேசுற ஆர்யாவை விட இந்த ஜெர்ரிய தான் எனக்குப் பிடிச்சிருக்கு” என்று சொல்லிவிட்டு மேஜை மீதிருந்த அவளது கரத்தை எடுத்து அதில் முத்தமிட்டான்.

அவனது முத்தத்தில் உடலெங்கும் வெட்கப்பூக்கள் பூக்க இன்னும் சிவந்து போனாள் ஆர்யா.

“ஹே ஜெர்ரி… நம்ம இதே போஸ்ல ஒரு செல்ஃபி எடுத்துப்போமா?”

“செல்ஃபியா?”

அவள் கேட்கும்போதே தோளை அணைத்தபடி செல்ஃபி எடுத்தான் டாம்.

அந்நேரத்தில் ஆர்யாவின் மொபைலுக்கு அழைப்பு வரவும் வேகமாக அவனது கரத்தை விலக்கிக்கொண்டவள் அழைப்பை ஏற்றாள்.

இந்தியாவிலிருந்து அழைத்த ஆராதனா ரவியிடமிருந்து எந்த அழைப்பும் இல்லை என தனது மாமியார் ஒப்பாரி வைப்பதாக கூறினாள்.

அவளிடம் அலுவலக வேலை என்று பொய் சொல்லி சமாளித்தாள் ஆர்யா.

“அதுக்குனு பெத்த அம்மா கிட்ட பேசக்கூட டைம் இல்லாத அளவுக்கா வேலை? இங்க உன் மாமா கோவத்துல கொதிச்சுப் போய் இருக்கார்… அந்தம்மா சின்ன மகன் நினைப்புல சரியா சாப்பிடாம, ப்ரஷர் மாத்திரை போடாம அழுதுக்கிட்டே இருக்காங்கனு இவருக்கு டென்சன்… என் மாமனாரும் பேசிப் பாத்துட்டார்…. ரவி பேசலனா பச்சத்தண்ணி கூட குடிக்கமாட்டேன்னு தர்க்கம் பண்ணுறாங்க அந்தம்மா”

மனக்குமுறல்களை எல்லாம் கொட்டித் தீர்த்தாள் ஆராதனா.

“அவன் வீட்டுக்கு லேட்நைட்ல வர்றான்கா… மானிங் சீக்கிரமே போயிடுறான்… அதனால தான் போன் பேச டைம் இருந்திருக்காது”

“இதை சொன்னா அந்தம்மா கேக்கணுமே ஆர்யா… வீடு வீடா இல்ல”

ஆர்யாவின் நிலை தர்மச்சங்கடமாகிப் போனது. தமக்கையிடம் உண்மையைக் கூறிவிடலாமா என யோசித்தாள்.

இனியும் பொய் சொல்லி சமாளிக்க முடியாதென ஆராதனாவிடம் ரவி செய்த காரியத்தைக் கூறிவிட்டாள். முழுதாக கேட்டு முடித்ததும் ஆராதனா கோபத்தில் கொந்தளிக்க ஆரம்பித்தாள்.

“அவனை நான் சும்மா விடமாட்டேன்டி… இப்பவே உன் மாமா கிட்ட சொல்லி என் தங்கச்சிக்கு என்ன பதில் சொல்லப்போறிங்கனு கேக்குறேன்”

“அக்கா அவசரப்படாத… உன் மாமியாருக்கு இதை கேட்டு எதுவும் ஆகிடுச்சுனா…”

“ஆகட்டும்டி… இப்பிடிப்பட்டவன் தலையில உன்னைக் கட்டிவைக்கணும்னு நினைச்சிருக்கு பாரு… அந்தம்மாக்கு ஒரு பொண்ணு இருந்து ரவி மாதிரி ஒரு கேடுகெட்டவனுக்கு அவளைக் கட்டி வைக்குமா? ரத்தம் கொதிக்குதுடி… அவன் குடிப்பான்னு தெரியும்… அதான் நீ அவன் கூட தங்கப்போறதா சொன்னதும் பயந்தேன்… அவன் போதை மாத்திரை எடுக்குறதுலாம் நீ சொல்லித் தானே தெரியுது”

“விடுக்கா… அவன் இப்ப போலீஸ் ஸ்டேசன்ல இருக்கான்… இனிமே என்ன?”

“இனிமே தான் பிரச்சனை ஆரம்பிக்கும் ஆர்யா… அப்பா நம்ம என்ன சொன்னாலும் நம்பமாட்டார்… அவன் வெளிய வந்ததும் என் மாமியார் கிட்ட நடந்ததை அப்பிடியே மாத்தி சொல்லுவான்… ஆல்ரெடி உன்னை காப்பாத்துனவரைப் பத்தி தப்பா சொன்னவன்தானே… அப்பாவும் நம்ம பேச்சைக் கேக்க மாட்டார்… அவன் சொல்றதை தான் நம்புவார்… ஆனா இந்த தடவை நான் விடமாட்டேன் ஆர்யா… இப்பவே ராஜேஷ் கிட்ட சொல்லுறேன்”

“அக்கா…”

ஆர்யா பேசும்போதே அழைப்பு துண்டிக்கப்பட்டது. சற்று முன்னர் இருந்த அழகான சூழல் மாறி அவள் முகத்தில் கவலையின் ரேகைகள் பதிய ஆரம்பித்தன.

டாம் மெதுவாய் என்ன விவரமென கேட்டதும் தமக்கை கூறிய செய்தியைச் சொன்னவள் “அடுத்து என்ன நடக்குமோனு பயமா இருக்கு டாம்” என்றாள்.

“இதுல நீ பயப்பட என்ன இருக்கு ஜெர்ரி? தப்பு பண்ணவன் அந்த ஸ்கவுண்ட்ரல்”

“பட் எங்கப்பா என்னை நம்பமாட்டார்… அக்காவோட மாமியார் பெருசா பிரச்சனை பண்ணுவாங்க… உஃப்… இந்தப் பிரச்சனைய எப்பிடி சமாளிக்கப்போறேன்னு நினைச்சாலே தலை சுத்துது டாம்… குடும்பம், உறவுகள் இதெல்லாம் எந்தளவுக்கு நல்லதோ அந்தளவுக்கு ஸ்ட்ரெஸ்ஃபுல்லானதும் கூட”

“அப்புறம் ஏன் அதை பத்தியே யோசிக்குற? அங்க இருந்து வெளிய வந்துடு”

டாம் இலகுவாகச் சொல்லவும் ஆர்யாவுக்குத் திகைப்பு.

“தட்ஸ் நாட் பாசிபிள் டாம்… குடும்பத்தை வேண்டாம்னு உதறி தள்ளுறது ரொம்ப தப்பு”

“ஹேய்! அவங்களை விட்டு விலகி இருந்து பாருனு தான் சொல்லுறேன்… ஒரேயடியா அவங்களை வெறுத்து ஒதுக்குனு சொல்லல… யூ நோ வாட்? எனக்கும் என் பேரண்ட்சுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்திருக்கு… அதுக்காக அவங்க என்னை வெறுக்கல… நான் எனக்குப் பிடிச்சத செய்யுறதுக்குத் தடையாவும் நிக்கல… குறிப்பிட்ட வயசுக்கு மேல பெத்தவங்க நமக்குப் பிடிக்காததை செஞ்சாங்கனா வேண்டாம்னு சொல்ல பழகணும் ஜெர்ரி… என்னைக் கேட்டா, உன் அப்பா உன் ஃபேமிலினு யோசிச்சு யோசிச்சு நீயே உன்னை சிக்கல்ல மாட்டிவைக்குற… ஒரு தடவை அதை விட்டு வெளிய வா… உன்னால சுதந்திரமா மூச்சுவிட முடியும்”

டாமின் அறிவுரைகள் எல்லாம் அவன் வளர்ந்த நாட்டுக்குப் பொருந்தலாம். இந்தியக்குடும்பங்களில் இதெல்லாம் சாத்தியமில்லையே.

விரக்தியாய் சிரித்தாள் ஆர்யா. இவ்வளவு நேரம் கனிவும் நாணமும் பொங்கிய வதனத்தில் இப்போது அதற்கான அறிகுறி கூட இல்லை.

டாமிற்கு அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

அவளது கரத்தை ஆதரவாகப் பற்றிக்கொண்டவன் “லீவ் தோஸ் ஆல் க்வாரல்ஸ், ஹர்டில்ஸ், ப்ராப்ளம்ஸ் ப்ளா ப்ளா ப்ளா… இங்க உனக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் நான் பாத்துக்குறேன்… எதை நினைச்சும் நீ வொரி ஆகாத… முக்கியமா இன்னைக்கு ஆகக்கூடாது… நம்ம ஃபர்ஸ்ட் டேட்லயே நீ சோகமா இருந்தா நல்லாவா இருக்கும்?” என வேடிக்கையாய் பேசி சீண்டவும் அவனுக்குப் பதிலடி கொடுக்கிறேன் என இயல்புக்குத் திரும்பினாள் ஆர்யா.

அவள் முழுதாய் சமாதானமானதும் ரெஸ்ட்ராண்டிலிருந்து கிளம்பினார்கள் இருவரும்.

நல்லவேளை எனக்குக் குடும்பம் என்ற பிக்கல் பிடுங்கல் இல்லை என ஆசுவாசப்பெருமூச்சு டாமிற்கு. இனியும் அப்படி எந்தப் பந்தத்திலும் சிக்கிக்கொள்ளப்போவதில்லை என தீர்மானித்தபடி காரைக் கிளப்பினான் அவன். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
54
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment