Loading

 

காதல் 2

“காதல் – நம்ம உணராத வரை அந்த உணர்வோட ஆழம் நமக்குப் புரியறதில்ல… காதல்னா நம்மளை மெய்மறந்து மூழ்க வைக்குற உணர்வுனு அதால பீடிக்கப்படாத வரைக்கும் நம்மளே ஒரு அர்த்தம் எடுத்திருப்போம்… அதை மயக்கம் தர்ற உணர்வா மட்டுமே பாத்திருப்போம்… ஒரு தடவை காதலிச்சுப் பாத்தா மட்டும் தான் காதல்ங்கிறது என்னனு நமக்குப் புரியும்… அப்பவும் நம்மளால இதுதான் காதல்னு அதை வரையறுத்துட முடியாது… காதலோட நோக்கமே நம்ம அதிபுத்திசாலித்தனத்தை டீ-ஆக்டிவேட் பண்ணுறது தான்… ஜேன் ஆஸ்டின் சொல்லுற மாதிரி We are all fools in love…. அது நம்மளை சாதுரியமா யோசிக்கவிடாது”

 

-டாம்

 

நியூமரோ 28 இட்டாலியன் ரெஸ்ட்ராண்ட், சன்ரைஸ் ரோடு, ரவுண்ட் ராக்…

 

இருளை விழுங்கி வாடிக்கையாளர்களை ஒளி வெள்ளத்தில் நனைக்க முயன்று கொண்டிருந்தன அந்த ரெஸ்ட்ராண்டின் பேஷியோவில் நின்ற மரங்களில் அழகுக்காகச் சுற்றப்பட்ட சிறிய விளக்குச்சரங்கள்.

 

உணவு மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கனமான சீஸ் வீலின் குழிவான பகுதியில் ஸ்பகட்டியை முட்கரண்டியால் கிண்டிக்கொண்டிருந்தன இரு வலிய கரங்கள்.

 

“மவுத் வாட்டரிங்” என்று சொன்ன பத்து வயது சிறுவன் எப்போது சீஸ் வீலில் இருக்கும் ஸ்பகட்டி தனது தட்டிற்கு இடம்பெயருமென ஆவலோடு காத்திருந்தான்.

 

ஆவி பறக்க இரண்டு முட்கரண்டிகளால் ஸ்பகட்டியைச் சுற்றி அச்சிறுவனின் தட்டில் வைத்தான் அந்த வலிய கரங்களின் உரிமையாளன்.

 

ப்ளாக் பெப்பர் காரத்தோடு ‘கேசியோ இ பெபே’ எனப்படும் அந்த இத்தாலிய உணவை தட்டில் வைத்துவிட்டு “என்ஜாய் யுவர் மீல்” என்று புன்னகைத்தான் அவன்.

 

புன்னகைத்த போது ரோஸ் வண்ண இதழ்களோடு சேர்ந்து அவனது பச்சை வண்ண விழிகளும் சிரித்தன என்று சொல்லலாம்.

 

அமெரிக்கர்களுக்கே உரித்தான சிவந்த நிறம், ஐந்து அடி பதினோரு அங்குல உயரத்திற்கு ஏற்ற சதை போடாத உடல், டார்க் ப்ரூனெட் வண்ண சிகை, மோவாயில் ஃபைவ் ஓ க்ளாக் ஷேடோ தாடி என எப்பேர்ப்பட்ட பெண்ணையும் மயக்கிவிடும் வசீகர தோற்றம் அவனுடையது.

அடுத்த மேஜையில் சீஸ் வீல் பாஸ்தா வேண்டுமென கோரிக்கை எழும்பவும் அந்த மேஜையை நோக்கி சென்றான் அவன்.

 

அதற்குள் “ஹே டாம்” என்று ஒரு குரல் கேட்கவும் நின்றவன் தன்னை நோக்கி வந்த இன்னொரு இளைஞனைப் பார்த்ததும் எக்ஸ்ட்ரா புன்னகையை ஈந்தான்.

 

“உன்னை யாரு மேன் இதெல்லாம் செய்ய சொன்னது?” என்றபடி டாமின் கையிலிருந்த சீஸ் வீலை வாங்கிக்கொண்டான் அந்த இளைஞன்.

 

“எல்சா இஸ் பிசி இன் கிச்சன்… அதான் நான் சர்வ் பண்ண வந்தேன்… இதுக்காக உன் கிட்ட சேலரி எதுவும் கேக்க மாட்டேன் அலெஸாண்ட்ரோ… டோண்ட் கெட் பேனிக்” என்றான் அந்த டாம் கேலியாக.

 

“தி க்ரேட் பிசினஸ்மேன் எரிக் போல்டனோட மகனுக்கு நான் சேலரி குடுக்குறதா? குட் ஜோக் மேன்… நீ சீஸ் வீலோட நிக்குறதை உன் டாட் பாத்தார்னா நிச்சயமா அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும்… என்ஜாய் யுவர் வைன்… ஐ வில் கம்”

 

பதிலுக்குக் கேலி செய்தபடி சீஸ் வீலோடு உணவு மேஜைக்கு நகர்ந்தான் அலெஸாண்ட்ரோ, அந்த உணவகத்தின் உரிமையாளன் ப்ளஸ் சீப் செஃப்.

 

அவன் மேஜைக்கு நகர்ந்ததும் ரெஸ்ட்ராண்டின் ‘வைனெரியா’ பகுதிக்குச் சென்ற டாமின் முழுப்பெயர் தாமஸ் போல்டன். முப்பத்திரண்டு வயது என அனுமாணிக்க முடியாத வசீகரமான அமெரிக்க இளைஞன். உபயம் தினச்சரி உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக்கட்டுப்பாடு.

 

வைனெரியாவில் வைக்கப்பட்டிருந்த எவர்சில்வர் ஒயின் ட்ரம்களில் இருந்து தனக்காக ஒரு கண்ணாடி குவளையில் ரெட் ஒயினை நிரப்பிக்கொண்டு சாவகாசமாக அமர்ந்து ஒரு மிடறு அருந்தினான்.

 

அவனது பச்சை வண்ண விழிகள் கண்ணாடி தடுப்பின் வெளியே தெரிந்த பேஷியோ பகுதியில் உணவு உண்பவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தன.

 

நியூமரே 28 இத்தாலிய உணவு வகைகளுக்கென பிரசித்தி பெற்ற உணவகம் என்பதாலும், செவ்வாய் கிழமை தோறும் ஒயின், பீர் மற்றும் காக்டெயில்களுக்கு பாதி விலை என்ற ஆபர் போய் கொண்டிருப்பதாலும் கூட்டம் அள்ளியது அங்கே.

 

குடும்பத்தோடு வந்த சிலர், தங்களது தோழர் பட்டாளத்தோடு வந்த சிலர், காதலர்களாய் சிலர் என பார்ப்பதற்கு சுவாரசியம் தரக்கூடிய வாடிக்கையாளர் கூட்டம்.

 

ஒவ்வொரு மேஜையாகப் பார்த்தவனின் கண்கள் அலெஸாண்ட்ரோ சீஸ் வீலோடு நின்று கொண்டிருந்த உணவு மேஜையில் முகமெங்கும் தவிப்போடு அமர்ந்திருந்த இளம்பெண்ணிடம் வந்ததும் நகராமல் நிலைத்தன.

 

அதற்கு முதல் காரணம் அவளது அசாத்தியமான அழகு. கட்டாயம் அமெரிக்கப்பெண்ணில்லை. பெரிய கண்களும் கூர் நாசியும் பீச் வண்ண லிப்ஸ்டிக்கில் குளிப்பாட்டியிருந்த சதைபற்றான இதழ்களும் வெளிர்நிற சருமமும் ஒருவேளை பாகிஸ்தானியாக இருப்பாளோ என்ற ஐயத்தை உருவாக்கின டாமிற்கு.

 

அவள் அழகையும் தாண்டி அவனை இன்னொரு விசயம் உறுத்தியது. உறுத்தலோடு எரிச்சலையும் கொடுத்த அந்த இன்னொரு விசயம் அப்பெண்ணின் அருகே அமர்ந்திருந்த இளைஞன்.

 

அந்தப் பெண் மறுக்க மறுக்க பீர் குவளையை அவளது வாயருகே கொண்டு போனவனைக் கண்டதும் டாமின் நரம்புகளுக்குள் வெப்பம் ஊடுருவியது.

 

வேண்டாம் என்பவளை ஏன் வற்புறுத்தி அருந்த வைக்க வேண்டும். சரியான மடையனாக இருப்பான் போல!

 

அந்தப் பெண்ணுடைய பெரிய கண்களின் அலைபாய்தலும், தவிப்பும் அவளுக்கு இப்போது அந்த இடத்திலிருந்து செல்ல வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்ல ஜீன்ஸ் பாக்கெட்டில் உறங்கிக்கொண்டிருந்த மொபைலை எடுத்து அலெஸாண்ட்ரோவின் எண்ணுக்கு அழைத்தான் டாம்.

 

“என்னாச்சு டாம்?” என்றவனிடம்

 

“நீ இப்ப சர்வ் பண்ணிட்டிருக்குற டேபிள்ல இருக்குறானே ஒருத்தன், அவனை எப்பிடியாச்சும் தனியா அழைச்சுட்டுப் போ” என்றான் டாம்.

 

“ஹே! ஹவ் இஸ் இட் பாசிபிள் மேன்?”

 

“டூ அட் எனி காஸ்ட்”

 

அலெஸாண்ட்ரோ அந்த இளைஞனிடம் ஏதோ பேசி நகர்த்தி சென்றதும், சற்றும் தாமதிக்காமல் எழுந்த டாம் பேஷியோவை அடைந்து அந்தப் பெண் அமர்ந்திருந்த மேஜைக்குச் சென்றான்.

 

கண்களின் அலைபாய்தல் அடங்கிப் போய் இருந்தவள் திடுமென வந்து நின்ற டாமை கண்டதும் கேள்வியாய் நோக்கினாள்.

 

“ஹாய் ப்யூட்டிஃபுல்”

 

டாம் சினேகமாய் முறுவலிக்க அவளோ அவனது கரத்திலிருந்த ஒயின் கோப்பையை கண்கள் விரிய நோக்கினாள்.

 

அதை கண்டுகொண்டவன் “ஓஹ்! டோண்ட் மிஸ்டேக் மீ… இது ரெட் ஒயின் தான்… எனி வே, இங்க இருந்து தப்பிச்சா போதும்னு இவ்ளோ நேரம் ஃபீல் பண்ணுனல்ல… திஸ் இஸ் த ஹை டைம்… அந்த இடியட் திரும்பி வர்றதுக்குள்ள போயிடு” என்றான்.

 

அவள் பதில் சொல்லாமல் ‘ஙே’ விழித்தாள். பின்னர் தான் அந்த இளைஞனை அலெஸாண்ட்ரோ அழைத்துச் சென்றது எதேச்சையாக நடக்கவில்லை என்பதே அவளுக்குப் புரிந்தது.

 

உடனே கண்களில் நன்றியுணர்ச்சி மின்னலாய் பாய “தேங்க்யூ சோ மச்” என்றவள் பரபரப்புடன் எழுந்தாள். அடுத்த நொடியே ஏமாற்றம் முகத்தில் பரவ நின்றாள்.

 

டாம் அவளது உடல்மொழியும் முகபாவனையும் சடுதியில் மாறுவதை ரசித்தபடி நின்றவன் “வாட் ஹேப்பண்ட் நவ்?” என்றதும்

 

“நான் ஆஸ்டினுக்குப் புதுசு… இப்ப வீட்டுக்குப் போகணும்னா எனக்கு ரவியோட ஹெல்ப் வேணும்” என்றாள் அவள்.

 

இப்போது புரிந்திருக்குமே அந்த இளம்பெண் வேறு யாருமில்லை ஆர்யாவே தான். ரவியோடு இரவுணவுக்காக அங்கே வந்தவளுக்கு பீர் குடிக்கும்படி அவன் தொந்தரவு கொடுக்க, தன்னால் ஆன மட்டும் அவனைத் தவிர்க்கப் பார்த்தாள்.

 

திடுமென சர்வ் செய்து கொண்டிருந்த நபர் ரவியிடம் காக்டெயில் இலவசம் என்று கூறி அழைத்துச் சென்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டவளின் முன்னே வந்து நின்ற அமெரிக்கன் ‘பியூட்டிஃபுல்’ என அழைக்கவே, அவளது இதயம் கூட்டிலிருந்து பறக்க துடிக்கும் பறவையைப் போல படபடத்தது. அந்த படபடப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது அவனது கையில் வீற்றிருந்த ஒயின் கோப்பை.

 

இவனும் ரவியைப் போல தானா என சலித்தவளிடம் அவன் விளக்கம் அளிக்கவும் சமாதானமுற்றாள். ரவியிடமிருந்து தற்காலிகமாகத் தப்பித்தாயிற்று. இனி வீட்டுக்கு எப்படி செல்வதென தெரியாமல் திகைத்தவளுக்கு அந்த அமெரிக்கனே உதவிக்கரம் நீட்டினான்.

 

“எங்க போகணும்னு சொன்னா என் கார்ல ட்ராப் பண்ணிடுறேன்” என்று தானாக முன்வந்து அவளை வீட்டில் கொண்டு போய் விடுவதாகச் சொன்னான் டாம்.

 

ரவி மீண்டும் வந்து தொந்தரவு செய்வதற்குள் ஓடிவிடுவோமென டாமோடு சேர்ந்து ரெஸ்ட்ராண்டை விட்டு வெளியேறினாள் ஆர்யா.

 

அவன் காரைக் கிளப்பி முன்பக்க கதவைத் திறந்து விடவும் அமர்ந்தவள் “தேங்க்ஸ்” என்றாள் மீண்டும்.

 

டாம் கண்கள் மின்ன சிரித்தவன் “ஹவ் குட் யூ ட்ரஸ்ட் மீ? ஐ மே பி அ ட்ரங்கர்ட் ஆர் அ கிரிமினல்” என்று சொன்னபடி ஸ்டீயரிங் வீலை வளைத்து காரை ஓட்ட ஆரம்பித்தான்.

 

அவன் அவ்வாறு சொன்னதும் ஆர்யாவின் கண்களில் மெல்லிய பயம் பரவியது. கிலியோடு டாமை பார்த்தாள் அவள்.

 

ரெஸ்ட்ராண்டுக்கு வந்ததும் முதலில் அவளது பார்வையில் விழுந்தவன் அவன் தான். சீஸ் வீலோடு ஒவ்வொரு மேஜைக்கும் சென்று ஸ்பகட்டி, பாஸ்தா என தயார் செய்து கொடுத்தவனின் பச்சை விழிகளும், வசீகரமான சிரிப்பும் அவளை ஒரு கணம் மெய் மறந்து ரசிக்க வைத்தன.

 

தேவையின்றி ஆண்கள் பக்கம் தனது கவனம் திரும்புவதை விரும்பாதவள் டாமின் ஒவ்வொரு செய்கையையும் ரவிக்குத் தெரியாமல் ரசித்தது அவளுக்கே ஆச்சரியம் தான். அவனே வந்து உதவுவதாகக் கூறவும் எதைப் பற்றிய யோசனையுமின்றி கிளம்பி வரத் தோன்றியதே தவிர அவன் எப்படிப்பட்டவன் என்று ஆராயத் தோன்றவில்லை.

 

அவனே சொல்லும் வரை அவன் மோசமானவனாக இருப்பான் என்ற எண்ணமே அவளுக்குள் உதிக்கவில்லை.

 

ஆர்யாவின் முகம் போன போக்கை வைத்து அவளது மனவோட்டத்தைக் கண்டுகொண்டு “பயப்படாத… எனி வே ஐ அம் டாம்” என்று ஒரு கரத்தை நீட்டினான் டாம்.

 

“ஆர்யா”

 

“ஐ திங் யூ மே பி அ பாகிஸ்தானி”

 

“நோ… ஐ அம் இந்தியன்”

 

“ம்ம்… இண்ட்ரஸ்டிங்”

 

அறிமுக கைகுலுக்கல் முடிந்ததும் அவள் எங்கே செல்லவேண்டுமென கேட்டான் டாம்.

 

“அட்லாண்டிஸ் ஹௌசிங் ஃபவுண்டேசன், சன் ரைஸ் ரோட்”

 

“ஓஹ்! த்ரீ மினிட்ஸ் ட்ராவல் தான்… பை த வே, ஹூ இஸ் ஹீ? பாய் ஃப்ரெண்ட் ஆர்…”

 

டாம் முடிக்காமல் இழுக்கவும் “ஃபியான்ஸ்” என்றாள் ஆர்யா சுரத்தின்றி.

 

உடனே ஆச்சரியமான புருவ தூக்கலுடன் அவளைப் பார்த்தவன் முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டான்.

 

“மை டீப் கண்டோலன்சஸ் (ஆழ்ந்த இரங்கல்)” என்றான் மார்பில் கை வைத்து.

 

ஆர்யா திகைத்துப் போய் அவனைப் பார்த்தாள்.

 

“இப்பிடி ஒருத்தனை கல்யாணம் பண்ணப்போறவளுக்கு வாழ்த்தா சொல்ல முடியும்? இரங்கல் தான் சொல்ல முடியும்… சஷ் அ ப்ரெயின்லெஸ் இடியட்”

 

 நக்கலாகச் சொன்னபடி காரை ஓட்டியவனிடம் என்ன கூறுவதென புரியாமல் சாலையைப் பார்த்தாள் ஆர்யா.

 

மூன்று நிமிட பயணம் முடிந்து ‘அட்லாண்டிஸ் ஹௌசிங் ஃபவுண்டேசன்’ வந்ததும் கார் நின்றது. டாம் அவள் பக்கம் சரிந்து கார்க்கதவைத் திறந்துவிட ஆர்யா திகைப்பில் மூச்சை அடக்கி இருக்கையோடு ஒட்டிக்கொண்டாள்.

 

அவளது பாவனையில் பீறிட்டு வந்த சிரிப்பை அடக்கியபடி கதவைத் திறந்தவன், சீட் பெல்டைக் கழற்றிவிட்டு இறங்கிய ஆர்யா நன்றி சொல்லவும் தலையசைத்து அதை ஏற்றுக்கொண்டான்.

 

“மறுபடி மீட் பண்ண சந்தர்ப்பம் அமைஞ்சா பாக்கலாம்” என்றான்.

 

“அதுக்கு வாய்ப்பு கம்மி” என்றவள் “இன்னும் ஃபோர் டேய்ஸ்ல யூனிவர்சிட்டில க்ளாஸ் ஆரம்பிச்சிடும்” என்றாள் அமைதியாக.

 

உடனே டாமின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டன.

 

“விச் யூனிவர்சிட்டி?”

 

“டெக்சாஸ் யூனிவர்சிட்டி”

 

“ஓஹ்! என்ன கோர்ஸ்?”

 

“எம்.எஸ்.ஐ.டி.எம் (Master of Science in Information Technology and Management)”

 

அவ்வளவு நேரம் தீவிரமாக விசாரித்தவனின் விழிகளில் சுவாரசியம் கூடியது அப்போது.

 

“தேங்க் காட்” என்றான் விழி மலர. அவனது திடீர் உற்சாகத்துக்கான காரணம் புரியாமல் ஆர்யா விழிக்கவும் “சீக்கிரமே மறுபடி மீட் பண்ணுவோம்” என்றான்.

 

“எப்பிடி இவ்ளோ நம்பிக்கையா சொல்லுறிங்க?”

 

டாம் விளையாட்டாக “உன் ஃபியான்ஸ் கிட்ட இருந்து உன்னைக் காப்பாத்துறதுக்கு நான் தானே வரணும்” என்று சொல்லவும் ஆர்யாவின் முகம் சுருங்கிப் போனது.

 

“டோண்ட் ஃபீல் லோ… நான் ரொம்ப ரசிச்சு பாத்த முகம் இப்பிடி வாடுறத என்னால தாங்க முடியல” என்றான் அவன்.

 

மீண்டும் விளையாட்டாக அவன் பேசவும் வாடிய முகம் மலர்ந்தது ஆர்யாவுக்கு.

 

“நீங்க நிறைய பொய் சொல்லுவிங்களோ?” என்றாள் அவனது தொனியிலேயே.

 

“ஆமா… பட் பொண்ணுங்க கிட்ட பொய் சொல்ல மாட்டேன்… அதுவும் ஆர்யா மாதிரி அழகான பொண்ணுங்க கிட்ட பொய் சொல்லவே மாட்டேன்”

 

அழகன் என்று நினைத்தால் பேச்சு சாதுரியமும் இருக்கிறதே என மனதுக்குள் டாமைப் பாராட்டினாள் ஆர்யா.

 

“நீ எனக்குக் காம்ப்ளிமெண்ட் குடுக்கணும்னு ஆசைப்பட்டா, தாராளமா குடுக்கலாம்”

 

பெருந்தன்மையோடு அவன் கூற “நீங்க சொன்ன மாதிரி நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணுனா, கட்டாயம் காம்ப்ளிமெண்ட் குடுக்குறேன்” என்றாள் ஆர்யா.

 

“ஐ வில் பி வெயிட்டிங்”

 

மூன்று விரல்களால் சலாம் வைத்தவன் புன்னகையோடு காரைக் கிளப்பிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட ஆர்யாவும் ரெஸ்ட்ராண்டில் இருந்த தவிப்பான மனநிலை அகன்று துள்ளலோடு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

 

அனாவசியமாக ஒரு வார்த்தை கூட அன்னியர்களிடம் பேசாத தன்னால் டாமிடம் மட்டும் வார்த்தையாட எப்படி முடிந்ததென ஆச்சரியத்துடன் நினைத்தபடி வீட்டை நோக்கி நடந்தாள் அவள்.

 

 

 

காரில் சென்று கொண்டிருந்த டாமின் மனமோ ஆர்யாவைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

 

“ஸ்டாப் இட் இடியட்… ஷீ இஸ் கமிட்டட்… டோண்ட் திங் அபவுட் ஹெர்”

 

தனக்குத் தானே அறிவுரை சொன்னபடி காரை ஓட்டிக்கொண்டிருந்தவனுக்கு வெகு விரைவில் ஆர்யாவை மீண்டும் ஒரு சிக்கலில் இருந்து காப்பாற்றப் போகிறான் என்பது தெரியாது.

*****

அடுத்த எபி நாளை வரும் டியர்ஸ் 😍

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
22
+1
44
+1
4
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment