மந்திரம் – 14
கையை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு தன்னையே காண்பவனை ஓரக்கண்ணில் கண்டு கொண்டவள் அவனை நேராகச் சந்திக்க இயலாமல் தவித்து நின்றாள். மெல்ல அவனருகில் வந்தவள் மன்னிப்புக் கேட்க எண்ணி,
“சா…” என்று வாயைத் திறக்க மீதி வார்த்தைகளை அவனுடைய இதழ்கள் வேட்டையாடின. சட்டென அவனின் இந்தத் தாக்குதலை எதிர்பாராதவள் முதலில் திணறிப் பின்பு தனது மன்னிப்பை முத்தத்தின் வழியே வேண்டத் தொடங்கினாள்.
வெகு நாளாய் கேட்டேன்
விழித் தூரல் போட்டாய்
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே
விலகாத கையைத் தொட்டு
விழி ஓர மையைத் தொட்டு
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே
இதழ்நீரின் சுவையைச் சுவைத்துக் கொண்டிருப்பவன், அதில் அவளின் விழிநீரும் கலந்து கொண்டிருக்கிறது என்பது புரியவும், முத்தப் போருக்கு அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவளை நோக்கினான். அவனை இறுக்கி அணைத்துக் கொண்டவள் அவன் மார்பில் முகம் புதைத்துக் கேவினாள்.
“ஹேய் அழாதடி. எவ்வளவு நேரம் அழுவ? ஏற்கனவே உன்னை நிறைய அழ வச்சுட்டேன்.” என்று அவன் வருந்த அவளோ, “இல்ல நந்தா, நான் உங்களைப் புரிஞ்சுக்காம விட்டுட்டேன். தப்பு என்மேல தான்” என்றாள் பாவமாக.
“ஹே லூசு, இங்கப் பாரு” என்க அவளோ குனிந்தபடியே அழ அவளின் கன்னம் பற்றித் தன்னை நோக்க வைத்தவன்,
“உன் அளவுக்கு என்னைப் புரிஞ்சுக்க யாருமே வர மாட்டாங்க லூனா, ஐ அம் டேம் ஷ்யூர்” என்றான்.
“சும்மா சொல்லாதீங்க நந்தா. நான் எங்க உங்களைப் புரிஞ்சுகிட்டேன். புரிஞ்சிருந்தா உங்களை வார்த்தையால நோகடிச்சுருப்பேனா? நீங்க எவ்வளவு வருத்தப் பட்டுருப்பீங்க. எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு.” என்றாள் சோகமாய்.
“ஹேய், நீ என்னைப் புரிஞ்சுகிட்டதுனால தான், உதய் வந்த அப்புறமும் கூடச் சம்மதம்னு சொன்ன. சீரியஸ்லி அந்த செகண்ட் ரொம்பவே பயந்துட்டேன். போச்சு இவ்வளவு நாள் எதுக்காகக் கஷ்டப்பட்டோமோ அது வீணாப் போகப் போகுதேன்னு. அந்த ஆளு ஜெயிலுக்குப் போனாலும் இங்க இந்த மாதிரிப் பல பேர் இருக்காங்க. விஷயம் வெளிய தெரிஞ்சு அவங்க உன்னை ஏதாவது செஞ்சுட்டா… பேட்டண்ட் வாங்கிட்டால் பயப்படாம நிம்மதியா இருக்கலாம்.
ஆனா நீ சொன்ன பாரு சம்மதம்னு. எனக்குள்ள அப்படி ஒரு ஃபீல். மனசுக்குள்ள ஒரு சின்ன நம்பிக்கை இருந்துச்சு. என் காதல் என்னைத் தோற்கடிக்காதுன்னு. என் நம்பிக்கையை நீ காப்பாத்திட்டடி. ஒருத்தன் அவ்ளோ செஞ்சுருக்கான்னு தெரிஞ்ச அப்புறமும் எந்தப் பொண்ணு இப்படிச் சொல்லும், சொல்லு. உன் மனசுல இவன் ஏதோ காரணத்தோட தான் இதெல்லாம் செஞ்சான்னு எங்கோ ஒரு மூலைல தோணுனதுனால தான.” என்று அவன் உணர்ச்சி பொங்கக் கேட்டான்.
“ஆமா நந்தா, ஆக்சுவலி நான் சம்மதம் இல்லன்னு சொல்ல தான் நெனச்சேன். ஆனா உங்க கண்ணு… அது ஆரம்பத்துல இருந்து எனக்கு எதையோ சொல்லிட்டே இருந்துச்சு. அப்படியென்ன அந்தக் கண்ணுல மந்திரம் வச்சிருக்கீங்கன்னு தெரியல, அந்த மந்திரம் தான் என்னைச் சம்மதம் சொல்ல வச்சது.” என்றாள்.
“தட் இஸ் கால்டு லவ் மந்திரம் லூனா” என்றவன் அவளைச் செல்லமாக முட்டினான்.
“காதல் மந்திரமா?” என்றவள் சுவாரசியமாகக் கேட்டாள்.
“பின்ன? அது தான் நம்ம ரெண்டு பேரையும் கோவில்ல சந்திக்க வச்சது. அதுக்கப்புறம் பைத்தியம் மாதிரி என்னை உன்னைப் பத்தித் தேட வச்சது. உனக்குள்ளயும் என்னைப் பத்தின தேடலை உருவாக்குச்சு. உன்னைக் கண்டுபிடிச்ச அப்புறம் உனக்காக வெயிட் பண்ண வச்சது. உன்னை இங்க வர வச்சது. எட்செட்ரா எட்செட்ரா” என்றான்.
“ஆஹான். என்னை இங்க வர வச்சதுல இருந்து நடந்த எல்லாம் காதல் மந்திரம் செய்யல, என்னைக் காதலிக்கிற இந்த மந்திரவாதி செஞ்சது” என்றவள் அவனைப் போலவே செல்லமாக முட்டினாள்.
“நான் மந்திரவாதின்னா, என்னை மயக்குன மாயக்காரிடி நீ” என்றான் காதலாய்.
அவனின் உயரத்திற்கு எக்கியவள் முடியாமல் போக அவனைச் சற்றுக் குனியச் சொல்லி அவனின் நெற்றியில் அழுந்த இதழ் பதித்தாள். அதனைக் கண்களை மூடி ரசித்துப் பெற்றவன் பின் அவளைச் சீண்டும் பொருட்டு,
“இப்போ எந்த டெஸ்டுக்காக நந்தா இந்த முத்தம்?” என்று பரிதாபமாக அவளைப் போன்று முகத்தை வைத்துக் கேட்டான்.
“யூ… கிண்டலா பண்றீங்க?” என்றவள் அவனின் மார்பில் குத்தினாள் செல்லமாக.
“இனிமே எந்த டெஸ்ட்டுனாலும் எடுங்க, நான் ரெடி” என்றாள்.
அவனோ, “அப்படிங்களா மேடம். சரி கம் இன்சைட். ஒரு முக்கியமான டெஸ்ட் ஒன்னு பண்ண வேண்டியிருக்கு” என்று கூறியவன் கண்ணடிக்க அவன் நோக்கம் புரிந்து சிவந்தாள்.
“உங்களுக்கு வர வர வாய் அதிகமாயிடுச்சு” என்றவள் செல்ல எத்தனிக்க அவள் கரத்தைப் பற்றியிழுத்தவன் அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.
“நீ தான சொன்ன எந்த டெஸ்ட் எடுக்குறதுனாலும் ஓகேன்னு.” என்றவன் அவளின் காது மடலைத் தன் இதழால் உரசியபடி கேட்க அதில் நெளிந்தவள், கூச்சம் தாளாமல் தன் இடையை வளைந்திருந்த அவனது கரங்களை இறுகப் பற்றினாள். அதை உணர்ந்தவனின் இதழ்கள் விரிந்தன.
“சரி, என் லூனாவுக்கு வேற ஏதும் கேள்வி கேட்கணுமா என்கிட்டே?” என்றான். அவள் ஆமெனத் தலையசைக்க அவ்வாறே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் அவளைத் தன் மடியில் அமரவைத்து,
“ஆஸ்க் மீ” என்றான்.
அவளோ, “நிஜமா என் மேல சின்ன வருத்தம் கூட உங்களுக்கு இல்லையா?” என்றாள்.
“வருத்தம் இருக்கறவன் இப்படித்தான் கொஞ்சிட்டு இருப்பானா?” என்க,
“நான் வருத்தப்படக் கூடாதேன்னு நீங்க மறைக்குறீங்களோன்னு…” என்று இழுத்தாள்.
“சரி, நீ நம்பணும்னா நான் என்ன செய்யணும்? டெல் மீ” என்றான்.
“என்ன சொன்னாலும் செய்வீங்களா?”
“நீ கேக்குற மாடுலேஷனைப் பார்த்தா ஏதோ வில்லங்கமா கேட்கப் போறன்னு நினைக்குறேன். நீ முதல்ல கேளு, அப்புறம் இருக்கு” என்றான் அவளைக் கேள்வியாய் நோக்கியபடி.
“இல்ல நந்தா, நீங்க ஏன் புரோஜெக்ட் இதயநிலாவைக் கன்டின்யூ பண்ணக் கூடாது?” என்றிட,
அவனோ, “பைத்தியமா லூனா நீ?” என்று கத்தி விட்டான். அதனை எதிர்பார்த்தவள் தான்… நன்கு அவன் மடியில், அவன் புறம் வாகாய் திரும்பி அமர்ந்தவள் தன் கரங்களை அவன் கழுத்தில் மாலை போன்று கோர்த்துக் கொண்டு பேசலானாள்.
“என் புருஷனுக்கு என்னை வச்சு வளர்ச்சி கிடைச்சா அது எனக்குச் சந்தோஷம் தான. சின்னச் சின்ன விஷயத்துக்காக, எனக்காக அவ்ளோ யோசிக்குறவருக்காக நான் ஏன் இதை யோசிக்கக் கூடாது?” என்றாள்.
“நீ என்னைப் புருஷன்னு உரிமையா சொன்னதுக்குச் சந்தோஷப்படணுமா? இல்ல நீ சொன்ன விஷயத்துக்காகக் கோபப்படணுமான்னு தெரியல லூனா.” என்றான் சற்றுக் கோபமாக.
“நீங்க என்ன வேணா பண்ணுங்க. ஆனா நான் கேக்குறதுல நியாயம் இருக்கு தான?” என்றாள்.
“என்னடி நியாயம் இதுல? நான் ஏற்கனவே பண்ணதுக்கே இன்னும் கில்ட்ல இருக்கேன். இதுல இவ வேற? உன்ன வச்சு எல்லாம் என்னால பிஸினஸ் பண்ண முடியாது. ஜஸ்ட் லீவ் திஸ் டாபிக் லூனா.” என்று கடுகடுத்தான்.
“அப்படி எல்லாம் விட முடியாது. ஏன்னு வேலிட் ரீசன் சொல்லுங்க எனக்கு” என்றவள் கேட்க,
“உனக்கு ரீசன் தான வேணும். சொல்றேன்” என்றவன் அவளை அலேக்காகத் தூக்கிக் கொண்டு அவனறைக்குச் சென்றவன், அவளைக் கட்டிலில் கிடத்தி அவள்மீது படர்ந்தபடி அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். இதயநிலாவின் உடலில் உள்ள அணுக்கள் எல்லாம் அவளுடைய நந்தனின் காதலினால் அதிர்ந்தது. தன்னவனின் மீசை முடி கழுத்தோரம் உரசியதில் கிறங்கியவள்,
“நந்தா என்ன பண்றீங்க?” என்றாள் வராத வார்த்தைகளை வரவைத்து. தன்னவளின் வாசத்தை ஆழமாய் சுவாசித்தவன்,
“நீ தான லூனா ரீசன் கேட்ட” என்றவன் அவன் பணியைத் தொடர்ந்தான். மேலும் கூச்சத்தில் நெளிந்தவள்,
“அதுக்கு?” என்றாள் கேள்வியாக.
“இதோ எனக்கே எனக்கு மட்டும் சொந்தமான இந்த வாசத்தை…” என்றபடி மேலும் அவளை வாசம் பிடித்தவன்,
“நானே எப்படி மத்தவங்களை ஸ்மெல் பண்ண விடுவேன்?” என்றான் கண்களில் காதலைத் தேக்கி. காரணம் கேட்டவளின் தொண்டைக் குழியில் வார்த்தைகளுக்குப் பஞ்சமாகிப் போனது. இப்படி ஒரு பதில் அவன் கொடுப்பான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
தனக்குச் சொந்தமான ஒன்றை யார் தான் அடுத்தவருக்குக் கொடுப்பார்கள். அவனின் காதலில் திக்குமுக்காடிப் போனவள், அவனையே காதல் பொங்கப் பார்த்தவள், தன்னவனைக் காற்றுக் கூடப் புகாத அளவு இறுக அணைத்துக் கொண்டாள்.
உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை காண வேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்து
“மேடமுக்கு இதைவிட வேலிட் ரீசன் வேணுமா என்ன?” என்க,
“போங்க நந்தா” என்று வெட்கியவள் பின்பு,
“ஆமா, எனக்கு இன்னொரு டவுட்” எனவும்,
“இந்தக் குட்டி மூளைக்குள்ள எத்தனை டவுட்டு தான் வருமோ?” என்று நொந்தவன் அவளின் பக்கவாட்டில் தன் கைகளைத் தலைக்கு அண்டை கொடுத்துப் பெருமாள் சயனத்தில் படுத்திருப்பது போன்று படுத்தபடி,
“சொல்லுங்க மேடம், என்ன டவுட்டு?” என்றான்.
“இல்ல, நேத்து நாம பால்கனில பேசிட்டு இருக்கும் போது கிஸ் பண்ற மாதிரி கிட்ட வந்து அப்புறம் விலகிட்டிங்களே, ஏன்?” என்றாள்.
“எப்படி லூனா? உங்கிட்ட அவ்ளோ பெரிய விஷயத்தை மறைச்சுருக்கமேங்குற கில்ட்ல, இதெல்லாம் ஐ காண்ட் டூ தட் லூனா. ஆனா நான் ஏற்கனவே எல்லாம் ரெடி பண்ணி வச்சுட்டேன், இந்தப் பேட்டண்ட் சம்மந்தப்பட்ட விஷயமெல்லாம். அதனால இன்னைக்குப் பாதி நாளுலயே எல்லாம் ஸ்மூத்தா முடிஞ்சுட்டு. இதுக்கு மேல எல்லாம் நீ அழுறதைப் பார்க்க எனக்குத் தெம்பு இல்ல. அழாதடி, இதெல்லாம் நடிப்பு தான்னு உன்னைக் கட்டிப்பிடிச்சுச் சொல்லணும் போல இருந்துச்சு தெரியுமா. அப்புறம், சரி எல்லாம் இன்னையோட முடிஞ்சுரும். அப்புறம் உங்கிட்ட டீல் பண்ணிக்கலாம்னு தைரியம் தான். சரி ஏன் அப்படிக் கேட்ட? ரொம்ப எதிர்பார்த்தியோ நேத்து?” என்றவன் உதடு மடித்துச் சிரிக்க அவளோ,
“இல்லையே, நான் எதுவும் எதிர்பார்க்கல. ஜஸ்ட் கேட்டேன்” என்றாள்.
“ஆஹான், சரி விடு. நேத்து தான் கொடுக்க முடியல, கொஞ்சம் நேரம் முன்னாடி கொடுத்ததும் வேற ஒரு ஃபீல்ல கொடுத்துட்டேன். இப்போ ரெண்டு பேருமே நல்ல மூட்ல தான இருக்கோம்” என்றவன் அவளின் இதழை நெருங்க,
“மாம்ஸ்” என்றபடி கதவைத் தட்டினான் உதய்.
“கரடி” என்று கடுப்பாகக் கூறியவன் மனமே இல்லாமல் எழ அவன் கூற்றில் சிரித்த இதயநிலாவும் அவனோடு வந்து கதவினைத் திறந்தாள்.
“என்னடா” என்றான் கடுப்பாக. அவன் முகத்தில் இருந்த கடுப்பைப் பார்த்தவன்,
“சொன்னேன்ல நானு, மாம்ஸ் இன்னும் அக்கா மேல கோவமா தான் இருக்காப்படின்னு” என்று அவன் கூற அவன் கூற்றில்,
சந்திரிகாவோ, “டேய் நீ நடிக்காத, அவங்க ஓவரா சமாதானம் ஆயிடுவாங்களோன்னு பயந்து தான இப்போ நீ வேகமா வந்து கதவைத் கட்டுன” என்று கூற அவனோ,
“கிராதகி! போட்டுக் கொடுத்துட்டாளே’ என்று புலம்பியவன் சூர்யநந்தனைப் பார்த்து அசடு வழிய அவனுடைய முறைப்பினைப் பரிசாக வாங்கிக் கொண்டான். இதயநிலா வாய்பொத்திச் சிரிக்க அவனோ,
“சரி சரி காண்டாகாதீங்க மாம்ஸ். வாங்க ஹால்ல உக்கார்ந்து பேசுவோம்” என்றபடி அவனைக் கைபிடித்து அழைத்துச் செல்ல,
சூர்யநந்தனோ, “இதுல மட்டும் கரெக்டா இருங்கடா” என்று நொந்து கொண்டான். இதயநிலாவோ தனக்கருகில் நின்ற சந்திரிகாவை வாஞ்சையாகப் பார்த்தாள்.
“என்ன அண்ணி? அப்படிப் பார்க்குறீங்க?” என்று அவள் கேட்க எதுவும் கூறாமல் அவளை அணைத்துக் கொண்டாள் இதயநிலா. அதிராவையும் சேர்த்து அணைத்தவள்,
“யாருன்னே தெரியாத அப்போ கூட என்னைக் காப்பாத்தியே ஆகணும்னு ரிஸ்க் எடுத்து வந்தீங்கல்ல. உங்களுக்கு நான் தேங்க்ஸ் சொல்லவே இல்ல, நடந்த கலவரத்துல உங்க ரெண்டு பேரையும் மறந்துட்டேன்” என்றாள்.
“இதுல என்ன அண்ணி இருக்கு?” என்று சந்திரிகாவும், “தட்ஸ் ஓகே இதயா” என அதிராவும் பதிலுக்கு அணைத்துக் கொண்டனர்.
“ஏன் பேசமாட்டீங்க? விட்டா ஒரு அப்பாவி ஜீவனை ஜெயிலுக்கு அனுப்பிருப்பாங்க ரெண்டு பேரும். இதுல இந்தம்மா தேங்க்ஸ் வேற சொல்லுறாங்க.” என்றவன் இதயநிலாவைப் பார்த்துக் கூறப் பிறகு,
“இதுல சந்திரிகா செஞ்ச ஆர்வக் கோளாறு விஷயத்துக்கு இந்த அம்மா வேற ஹெல்ப் பண்றாங்களாம்” என்று அதிராவைப் பார்த்து முறைத்தவன்,
“இவனும் ஆளு வந்ததும் நண்பனை மறந்து உதயைக் கோட்டை விட்டாச்சு” என்று கடைசியாக அகத்தியனிடம் வந்து முடித்தான் குற்றச்சாட்டை. அனைவரும் அவனைப் பார்த்து அசடு வழிய,
“நல்லா வந்து சேர்ந்துருக்கீங்க பாருங்க எனக்குன்னு” என்று புலம்பிக் கொண்டான் சூர்யநந்தன்.
“விடு மச்சான். ஒரு வகைல நான் சந்திரிகாவுக்கு தேங்க்ஸ் சொல்லணும். இல்லனா இன்னும் இவ எத்தனை நாளைக்கு என்னை அலைய விட்டிருப்பாளோ?” என்ற அகத்தியன் அதிராவின் தலையில் கொட்டினான்.
உதயசந்திரனோ, “ஆமா, நானும் ஒருவகைல சந்திரிகாவுக்கு தேங்க்ஸ் சொல்லணும்” என்றிட அவன் எதற்காகக் கூறுகிறான் என்று புரிந்தவள்,
‘ஐயோ! ஒரு முத்தத்தைத் தெரியாத்தனமா கொடுத்துட்டேன், இவன் என்னைப் படுத்துறானே’ என்று வெளியே நொந்தாலும் உள்ளே ரசிக்க தான் செய்கிறாள் என்பதை அவளின் முகத்தில் குடியேறிய சிவப்பு கூறாமல் கூறியது சந்திரிகாவின் சந்திரனுக்கு. அனைவரும் மகிழ்ச்சியாக அரட்டை அடிக்கச் சிரித்துக் கொண்டிருந்த இதயநிலாவின் முகம் திடீரென்று சுருங்க அதனைக் கண்டு கொண்ட அவளின் சகோதரன்,
“என்னச்சுக்கா?” என்றான்.
தொடரும் காதல் மந்திரம்
மூணு ஜோடியா ரொம்ப சந்தோசமா இருக்காங்க சூப்பர்👌👌
இதய நிலாவுக்கு என்ன ஆச்சு ஏன் அவ முகம் சுருங்குது அவ அப்பா அம்மாவா நினைச்சா??
சூப்பர் அக்கா.. அதே தான்.. நன்றி அக்கா😍😍💜
super super super super super super super super
நன்றி