“ஹேப்பி பர்த்டே வினோ ” காதோரம்
அவள் கிசுகிசுக்க சட்டென அவளை
இழுத்து அணைத்தான் .” தாங்ஸ்
டார்லிங்”, “எந்திரிக்க மனசில்லையோ? “
“கரெக்ட் வா படுக்கலாம்” என்னது
“மறுபடியும் படுக்கவா சரியா போச்சு
அப்பா கேக் வாங்கி வச்சு கிட்டு கீழ
காத்து கிட்டு இருக்காரு சீக்கிரமா
எழுந்து குளிச்சிட்டு வாங்க கேக் வெட்டி
ட்டு சாப்பிடலாம்”, “அப்ப ஒரு கண்டிஷன்
“? என்ன? நீ என்னை குளி பாட்டி விடனும்
” நினைச்சேன் அதுலாம் முடியாது நா
குளிசாச்சு ” பரவாயில்லை மறுபடியும்
என்னோடு குளி”ம்ஹுஉஉம் முடியாது
என் ராஜால்ல ராத்திரி தான் உங்க
பர்த்டே ஸ்பெசல் லா இருந்துச்சுல இப்ப
முடியாது ப்ளீஸ் “சரி போ ஒரே ஒரு கிஸ்
குடு நான் எழும்பறேன்” ,”விடமாட்டிங்களே”
என அவன் கண்ணத்தை நோக்கி குனிய
அவன் சட்டென நேரே முகம் திருப்ப
அதரங்கள் நான்கும் ஹைக்கூ கவிதை
படைத்தன “ம் ப்ச் ” என. “கள்ளன்” ஆமா
பின்னே இங்க குடுனு காட்னா குடுக்க
வா போற ” கைப்பேசி ஒலித்து ஆதிரை
கனவை கலைத்தது படக்கென எழுந்த
ஆதிரை டிஸ்பிளே பார்கக அதில் “நித்தி”
யென
ஒளிர அதை எடுத்து ஆன் செய்தாள்.
“சொல்லு நித்தி” குட்மார்னிங் அம்மா
எப்படி இருக்காங்க? “ஹா இப்ப ஓகே”
“அப்புறம் எதுக்குடி லீவு கிளம்பி வா
வேற எப்பவாச்சும் எடுத்துக்
கலாம்”.சிறிது யோசித்தவள் சரியென
தோன்ற ” சரி நீ என்ன பண்ற…. “ஒன்
ஹவர் அப்படிங்கறது டூ ஹார்ஸ்னு
சொல்லிக்கறேன் நீ அறக்க பறக்க
வராம நிதானமா வா ” செல்லம்டி நீ
“போதும் செல்லம் கொஞ்சினது
பத்திரமா வந்து சேரும் ” டபுள் டண்”,
“அம்மா சீக்கிரமா டயம் ஆச்சு ” சூர்யா
சத்தம் கேட்க, எழுந்து சென்றாள்
“என்னாச்சு சூர்யா ஏன் கத்திகிட்டு
இருக்கா ” பாருக்கா இந்த அம்மாவ
இன்னிக்கு நீ வேற லீவு நான் பஸ் பிடிச்சு
போகனும் ஒன் ஹவர் ஆகும் இந்தம்மா
என்ன டானா லேட் பண்றாங்க “ப்ச்
அவளோதான நான் இன்னிக்கு
ஆபிஸ் போறேன் ஆனா பர்மிஷன்
போட்டிருக்கேன் சோ உன்ன
கிளாஸ்லயே டிராப் செய்யறேன்
பொறுமையா சாப்டு ” ஐ ஜாலி அம்மா
அப்ப நல்ல ரோஸ்டா ஊத்து “அதற்குள்
லஷ்மி தட்டோடு வர “நல்ல முடிவு ஆதி,
நானே அடுத்த வாரம்
பொங்கவைக்கனும் உன்ன எப்படி லீவு
போட சொல்றது ன்னு யோசிசுக்கிட்டே
இருந்தேன் நீ நல்லவேளை செஞ்சே
போ” ஏன்மா என்ன விஷயம் ?”வருஷா
வருஷம் நம்ம குல தெய்வத்துக்கு
வெக்கறதுதான்மா” ஸ்ஸ ஆமால்ல
நித்திகுதான் தாங்ஸ் சொல்லனும் சரி
நா போய் குளிசிட்டு வரேன் “ம் சரி “
“அம்மா தோசை “வா என்னோடு ” என
இருவரும் அடுப்பங்கரைக்கு சென்றனர்.
சிறிது நேரத்திற்கெல்லாம் ஆதியும்
அவளோடு இனணந்து கொண்டாள்
“அம்மா நீ தள்ளு நா ஊத்தறேன் “,
“உனக்கேமா இந்த வேலை நீயே
என்னைக்கோ நிம்மதியா சாப்பிடுற
அதுல இது வேறயா ? “பரவாயில்ல
நானாச்சு ஒரு நாள் ,நீ எப்ப சாப்பிடுவ
போய் உட்காரு போ”, எனசொல்ல அவள்
போய் அமர்ந்து கொண்டாள்” அப்படி
சொல்லுக்கா “ஓய் வாண்டு நீ எப்ப
சமைக்க போற ? ” இப்பவே கூட ரெடி
நீங்க ரெடியா? “” வாலு வாலு ” என ஆதி
காதை லேசாய் திருக “ஆ வலிக்குதுகா
சாப்பாடும் போட்டு இப்படி சண்டையும்
போடுறியே நியாமா இருக்கா உனக்கு”,
“வாயாடி ” ஆதி உரைக்க அன்னை
அவள் இதழ்விரித்தாள் . “ஆதி நீ
உட்கார் எனக்கு போதும் “சூர்யா உனக்கு
இன்னும் ஒன்னு சுடவா ” ஓ தாராளமா
உன் புதினா சட்னி செம டேஸ்ட்” சரி சரி
இந்தா ஆதி”, என ப்ளேட நீட்ட ஒரு வாய்
அள்ளி போட்டவள் சூர்யா சொன்னது சரி
என உரைக்க “செமயா இருக்குமா சட்னி
” உங்க ரெண்டு பேருக்கும் இப்பதான்
நிதானமா சாப்பிட டைம் கிடச்சிருக்கு
அதான் ருசி பாக்குறீங்க இந்த வாண்டு
அது கூட பாவம் அரக்க பரக்க தான்
அள்ளி போடுறா ஏதோ இன்னைக்கு நீ
டிராப் செய்தால பொறுமையா
சாப்பிடுவது. ஆதி க்கு ஏதோ உறைக்க
“சூர்யா ஸ்கூட்டி வாங்கிதந்தா பத்திரமா
ஓட்டுவியா?ஓ ஓட்டு வேனே! நானே
கேக்கனும்னு இருந்தேன் நீயே கேடுட்ட “
சரி இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்க
வாங்கிடலாம் என்ன? “ம் சரிகா”
அத்தோடு அவர்கள் சபை களைந்தது.
குட்மார்னிங் நித்தி “குட் மார்னிங் “
என்றாள் சுரத்தே இன்றி “ஏன்டி
காலையில போன் பேசும் பொழுது கூட
நல்லாதானே இருந்த இப்ப என்ன
திடீர்னு”.”எல்லாம் அந்த ராஜேஷாலதான்”
என்றாள் ரேகா அவர்களின் எதிர்
சீட்டுக்காரி அந்த பெயரை கேட்டதும்
ஆதிக்கே ச்சை என ஆனது. எம் டி குரு
நாதனின் மகன். “ஏன்டி ரொம்ப
வழிஞ்சிட்டானா?” _ஆதி ” அப்படி
இருந்தாலும் பரவாயில்லை அவன்
என்னை கூப்பிடுற முறையே எனக்கு
புடிகல. “ஹாய் டார்லிங்காம் “,நா
என்ன இவன் லவ்ரா ?,இல்ல கட்டின
பொண்டாட்டியா?, லூசுபய ,எல்லாம் குரு
சாருக்காக பாக்கறேன் இல்லனா
அவனனன …
” என கைகொண்டு நெரிப்பது போல
சைகை காட்ட ” சரி சரி, விடு
கூல் _ஆதி ” விடு ஆதி அவ திட்டி
ஆவது அவ ஆதங்கத்தை தீத்து கட்டும்
சரி நா வரேன் என்றவள் நகர்ந்து
விட்டாள்.” சரிடி அத மறந்துட்டு வேலயா
பாரு, இல்ல டீ சாப்டு வரலாம் வரியா? “
“இல்ல வேணாம் நீ போய் உன் வேலய
பாரு நா போய் சில்லுனு கூல்டிரிங்ஸ்
குடி சிட்டு வரேன் அப்பதான் என்
ஆத்திரம் அடங்கும்”சரிதான்” என
இதழ்விரிக்க தன் கேபினை நோக்கி
போனாள் ஆதிரை. அவள் குளிர்பானம்
அருந்தி வருவதற்குள் ராஜேஷைபற்றி
நாம் சட்டென பார்துவிடலாம்.
குருநாதனுக்கு நேர்மாறானவன் அவர்
மகன் தாய் இல்லை என்ற குறை தெரிய
கூடாதென
செல்லம்கொடுத்திருந்தாலும்
கண்டிப்பும் காட்டியே வளர்தார் . ஆனால்
அவன் நிழலாய் அத்தனை கெட்ட குணம்
கொண்டவனாய் இருந்தான் ஆபிசில்
அளவோடு தான் விளையாடுவான்
அப்படி இருந்தே அத்தனை நல்ல பெயர்
அவனுக்கு பார்பதர்க்கென்னவோ நாடக
நடிகர் போலதான் இருப்பான். அவன்
தோற்றமும் அவனை சில நேரங்களில்
அவனை காத்ததுண்டு. தந்தைக்கு
பயந்து இல்லை இல்லை அவர்
சொத்துக்கு ஆசை பட்டு அடக்கி
வாசிக்கும் ஓர் ஆசாமி.