Loading

ஆதியும் , நித்தியும்   வரவேற்பறையில்

காத்துக் கொண்டிருந்தனர்.

யதேச்சையாக அந்த பக்கம் வந்த

ராகவன்  ஆதிரையை  பார்க் சற்று

ஆச்சரிய பட்டார்  இந்த காலத்தில் இப்படி

ஒரு பொண்ணா? புடவை யும் பூவும்

அதுவும் ஒரு கம்பனிக்கு எப்படியும்

வேலை விஷயமாக இருக்கும் சரி போய்

கேட்போம் என  நகர அவரை

கண்டவர்கள் அனைவரும் வணக்கம் 

வைக்க  ஆதியும் நித்தியும்

புரிந்துகொள்ளும் நேரத்திற்கு அவர்

அருகில் வந்திட இருவரும் எழுந்து

நின்றனர். “வணக்கம் சார் “என ஆதிரை

உரைக்க “வணக்கம், “இந்த வார்த்தை

கேட்டு பல வருஷம் ஆச்சு  “ஹாய்,

ஹலோ, இப்படி இங்கிலீஸ்காரனே 

இரிடேட் ஆகறமாதிரி  இன்னைக்கு நம்ம

ஆளுங்க பேச ஆரம்பிசிட்டாங்க” வாவ் சார்

நல்ல ரைமிங்கா பேசறீங்க “என நித்தி

சொல்ல  ஆதிரை  அடி கண்ணில்

ஷ்ஷஷஷ்  என அபிநயிக்க ” விடுமா 

இப்ப இருக்குற பசங்ஙளேயே நீங்க

ரெண்டு பேரும் கொஞ்ச டிஃரண்டா

இருக்கீங்க பை த வே நீங்க யாரு? எந்த

கம்பனி டீடெய்ல்ஸ் என்ன? ” என் பேரு

ஆதிரை இவ  நித்தியா  நாங்க யூ ஆர்

எஸ் கம்பனியில இருந்து கிட்சன

எக்யூப்… என தொடர்லதர்கு முன் “எஸ்

எஸ் ஐ ரிமெம்பர்  , வாங்க என்னோடு

என மூவரும்  சென்றனர்.

           வினோ வின் கேபின் கதவை

திறக்கும் முன்பே  அவனை கண்ணாடி

வழியே பார்த்த  ஆதிரை தனக்குள்

சில்லென்று  ஏதோ சொல்லொன்னா

உணர்வு   எழும்ப  சிரமப்பட்டு அடக்கிக்

கொண்டாள். அவளே முதல் ஆளாக “

வணக்கம் ஸார் “என வினவ ” வணக்கம்

  ரொம்ப வருஷம் ஆச்சு இந்த வார்த்தை

கேட்டு “இருவரும் ஆச்சரியத்துடன்

பார்க்க ” இப்பதான் இதே வார்த்தையை 

சார் சொன்னார் “என்றவாறு நித்தி  கூற

அவள் விழிகள் ராகவனை காட்டின. “

எங்க அப்பாவும் நானும் கிட்ட தட்ட ஒரே

மாதிரி தான் திங் செய்வோம் எனிவேஸ்

டேக் யுவர் ஸீட்”தேங்யூ  “என்றவாரு 

இருவரும் அமர . “முகஜாடயே

சொல்லுதே அப்பா பையன் என்று ” என

நித்தி கூற மைல்டாக  வினோ சிரிக்க

“அழகா”என்றது ஆதியின் உள்ளம். காபி

கூல்டிர்ங்க்கிஸ் ? வேணாம் சார் இப்ப

தான் சாப்டோம்  தேங்ஸ்”,சரி மீட்டிங்

ஸ்டார்ட் பண்ணலாமா ?.அண்ட்…… ஒரு

அரை மணி நேரம் போயிருக்கும் “ஓகே

உங்க  ஐடியாஸ் எனக்கு பிடிசிருக்கு

என்னபா?, “ஆமா  எனக்கும்,   இன்னும் டூ

டேஸ்ல  உங்க  கோட்டிங் பார்த்து ஸ்டெடி

பண்ணிட்டு நானே உங்க எம்டிகிட்ட

பேசறேன்  என்ன வினோ? ” ஸ்யூர்

பா”ரைட் அண்ட்  உங்க நேம் என்றவாறு

ஆதியை கைகாட்ட  “ஆதிரை ” நல்ல

பெயர் “வந்ததும் சொல்லிருக்கனும்

இப்ப சொல்றேனு  தப்பா நினைக்க

வேண்டாம்  நயிஸ் ஸாரி வித் குட் லுக்”

அவள் உள்ளுக்குள் குளிர்ந்து போனதை

மறைக்க பெரும் பாடு பட்டாள் “நன்றி “

“ஓகே தென் பை ஸீயூ  இன் அனதர்

நைஸ் டைம் ” என கூற ” வி டூ சார்

பை_என நித்தி கூற “பை ” என ஆதியும்

கூற அந்த சபை கலைந்தது.

       சரிபா  எனக்கு வெளியில கொஞ்சம்

வேலை இருக்கு நீங்களும் கிளம்புங்க

உங்கள் வீட்ல டிராப் செஞ்சி ட்டு நா

போறேன் . “ஏன்டா நீ கெளம்பு  நான்

இருந்து பாத்துட்டு  எப்பவும் போல

கிளம்புறேன். ” நோ சான்ஸ் நீங்க

கொஞ்ச நாளைக்கு  நல்ல ரெஸ்ட்

எடுக்கனும் டேப்லட்ஸ் சாப்பிடனும் ….

போதும்டா வீட்ல யே சாப்ட்டு தூங்கி

மாத்திர போடுறது  ஏதோ வியாதி காரன்

மாதிரி இருக்கு உனக்கு என்ன நான்

மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கனும்

அவ்வளவு தானே இங்கயே  நான் டைம்

ஒதிக்கிக்கறேன் ப்ளீஸ் வேணா 

சாய்ந்திரம் சீக்கிரம் வீட்டுக்கு போறேன்

ஓகேவா?. என்ற வரை ஒரேடியாய் மறுக்க

ஏனோ மனமில்லை “சரி  சொன்னபடி

செய்யனும் இல்லனா நாளையில

இருந்து அலவுடு இல்ல ஓகேவா? ” டபுள்

ஓகே  “சரி நா போய்ட்டு கால் பண்றேன்

பை டேக் கேர்” என்றவாறு

கிளம்பிவிட்டான.

        ஆ திரைக்கு வீடு சென்ற பின்னும்

அவன் நினைவாகவே இருந்தது. ச்ச நாம

எப்பவும் இப்படி இருந்ததில்லை யே

இன்னைக்கு இது என்ன புதுசா? என்ன

மாதிரியான உணர்வு இது ?, என்னவா

இருக்கும்? கடவுளே நான் என்னைக்கும்

இல்லாது   புது மாதிரி உணர்றேனே?….

“அக்கா  அக்கா… ” சூரியாவின்  குரல்

அவளை கலைக்க  நினைவுலகத்திற்கு

வந்தாள். “இதோ வந்துட்டேன் சூர்யா”…

என்று  எழயிருந்தவளை  நித்தி யின்

போன் அழைத்தது. “சொல்லு நித்தியா

என்ன இந்த நேரத்துல “? என் நிம்மதியே

போச்சு டி? ” ஏன் டி? என்னாச்சு? “எல்லாம்

அந்த வினோவால  வந்தது ” அது யாருடி

” சரியா போச்சு உனக்கு போய் போன்

செஞ்சேன் பாரு என்ன சொல்லனும்?

“போதும் யாருனு  சொல்றியா”அதான்

காலையில சந்திச்சோமே ஒரு

ஹான்ட்சம் கய்” ஓ ஓஓஓஓ”அவரா  ?..

“ஏனோ சட்டேன நித்தி மேல் கோபம்

வந்தது. ” என்னடி லைன்ல  இருக்கியா ?

“இருக்கேன் சொல்லு அவர் என்ன

செஞ்சார் உன்ன  ? ” போடி  என்

நினைவையே  கலசுட்டார் ,ம்ம்  என்ன ஒரு

சிம்ளிசிட்டி ,என்ன ஒரு கூல்னஸ்  அந்த

சார்மிங்…. “ப்ச்  இதுக்குதான் போன்

செஞ்சியா “? என்றாள் சிறு

சிடுசிடுப்புடன் அதுக்கு நீ ஏன் டி

கடுகடுக்குற  ? அதெல்லாம் ஒன்னும்

இல்ல சாப்பிடலாம் னு எழுந்திருக்கும்

பொழுது கூப்பிடியா சரி ஏதோ

முக்கியமான  விஷயமா இருக்கும்னு

பார்த்தா நீ என்ன டானா? “சரி சரி

இதுவும் முக்கியம்தான் எனக்கு ,ஆனா

உன் பசியவிட பெரிசில்ல நீ சாப்ட்டு

தூங்கு நாளைக்கு பார்கலாம்”என அவள்

சொல்லி வைக்கவும் அவளுக்கே

என்னவோ போல் ஆகிவிட்டது.

        அனைவரும் அமர்ந்து சாப்பிட,

என்னக்காடல்லா இருக்க? எதாவது

பிரச்சனையா? அதெல்லாம் ஒன்றும்

இல்ல சூர்யா  லஷ்மி சிறிது  படபடப்பாய்

என்னம்மா எதாவது காசு  தேவபடுதா?

என வினவ “அதெல்லாம் ஒன்னும்

இல்லம் இன்னைக்கு கொஞ்சம் அலச்சல்

அதான்” ஆதிரையே  ஆச்சிரிய பட்டாள்

நா  பொய் சொல்கிறேன் அதுவும்

அம்மாவிடம் ஏனோ சாப்பிட பிடிகாமல்

“அம்மா பசிக்கல  நீ சாப்ட்டு அப்புறம்

எனக்கு பால் கொண்டு வா” இப்படி

சொன்னால்தான்  இருவரும்  இதற்கு

மேல் யோசிக்க மாட்டார்கள் .

  1.            ஞ
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்