Loading

          

லஷ்மி   கிச்சனில்   காலை டிபன்  ரெடி

செஞ்சிக்கொண்டிருக்க  “அம்மா

அம்மா.. ,  என்றபடி ஆதி என்னும் ஆதிரை

அழைத்தாள். மென்னமையானள்  ,

அளவான அழகுடையவள் 

அக்கவுன்டட்டாக வேலை பார்கிறாள் 

கல்லூரி முடிக்கவும் அவள் தந்தையின்

ஆயுள் முடியவும் சரியாக இருந்தது .மேல்

படிப்பு  தொடர வழியில்லாமல் கிடைத்த

வேலை செய்தாள் கடைசியாக நிலைத்த

வேலை இது. தந்தையின் சொத்தென்று

எதுவும் இல்லை கடனை தவிர இல்லாத

கெட்ட பழக்கம்  இல்லை  ,அன்னையவள்

சிரித்த நாளும் இல்லை ,”அப்பா

இல்லை” என்ற கவலை அவர்கள்

யாருக்கும் இருந்ததில்லை மாறாக 

சிறிது சுதந்திரம் பெற்றனர். லஷ்மி யும்

அவளாள் முடிந்த சின்ன சின்ன

வேலைகளை செய்து ஆதிக்கு

உதவியாகவே இருந்தால்  வேண்டாம்

என பெரியவள் சொல்லியும்

கேட்டாளில்லை. இரண்டு பெண்

பிள்ளை பத்தாதற்கு கடன் வேறு

சொல்லவும் வேண்டுமோ.

” தோ வந்துடடேன்மா”,  டிபன் ரெடியாமா ?

” எனக்கு காஃபி மட்டும் கொடு ,டிபன்

ஆபிஸ் போய் சாப்டுக்கறேன்”. “ஏன்டாமா

இங்கயே ஒரு வாய் சாப்டிருமா , “உனக்கு

பிடிச்ச  ஆப்பம் செஞ்சிருக்கேன், பாக்ஸ்ல

போட்டா ஆறிடும்டா, “ஏன்மா  வக்கனயா

சாப்பிடுற நிலமலையா நாம இருக்கோம்

“, அன்னை  முகம்  வாட கண்டு” சரிமா

போ ஒண்ணே ஒன்னு சட்டுனு

கொண்டுவா”, “தோ ஒரே நிமிஷம் ,”என்று

சென்றவளை  கண்டு  உதடு விரித்தாள் .

“சூர்யா”, என குரல் கொடுக்க” அக்கா தோ

வந்துட்டேன்  “,என்றபடி வந்தாள் அவள்.

கல்லூரியில் கடைசி வருடம் கம்பியூட்டர்

சயிஸ்  படித்துக்கொண்டிருக்கிறாள்.

” ரெடி ஆகிடியா   என் கூட வரியா  டிராப்

பண்றேன் “,”இல்லகா  வேண்டாம் எனக்கு

கொஞ்சம் நோட்ஸ் எழுத வேண்டி

இருக்கு  நா போய்கறேன்”, அதற்குள்

அன்னை வந்து விட  ரெண்டே  வாயில்

அள்ளி திணித்து கொண்டு” நா வரேன்

மா “,என்றபடி சென்றாள் “இதுக்கு ஆப்பிஸ்

போயே சாப்டிருக்கலாம் “,என முனவ

” விட்றதுதானே”,  என்றவளை  “போதும்
டி நீ  
  
வா வந்து சாப்பிடு  “,என்றபடி அவள்

செல்ல பின் தொடர்தாள் சின்னவள்.

“சூர்யா இந்தா உனக்கு சுட்டு

வச்சிருக்கேன் நீ சாப்டுட்டு   உன்

வேலய முடிசிட்டு  எப்பவும் போல

பக்கதுவீட்டு மல்லி கிட்ட சாவி

கொடுத்துட்டு கிளம்பு  நாம சாயங்காலம்

பாக்கலாம்  என்ன தங்கம் “,”ம்மம  நீ

எப்பவும் போல கஞ்சிய  குடுசிட்டு போற

அதானே “,”இல்ல டி நானும் ஆப்பம்

சாப்டேன், ”  எப்ப  கனவுலயா?,என அவள

வினவ மௌனமாய் தாயவள், ”  ஏம்மா

இப்படி இருக்க  பழயபடினா பரவால்ல

இப்பதான் கொஞ்ச கொஞ்சமா மேல

வர்ரோம்ல இப்பவும் இப்படி செஞ்சா

எப்படி ?,!”அது இல்ல கண்ணு அக்கா பாவம்

அவ ஒருத்தியே  எவ்வளவு னு அழுவா

அவள கரசேக்கனும் அவளுக்கு அடுத்து

நீ இருக்க  கடன  மொத்தமா முடிக்கனும்

இன்னும் கொஞ்ச நாள் அப்புறம் நாம

எல்லாரும் ஆசபட்டபடி சந்தோஷமா

இருக்கலாம் என்ன ?,எனக்கு நேரமாகுது

சாமி நாம அப்புறம் பேசுவோம் என்ன”,

“என் தங்கம் ,என்றவாறு உச்சி முகர்ந்து

நகர்ந்து விட்டாள். சாப்பிட்ட விட்டு அவள்

எழுதும் வேலையை தொடங்கும் நேரம்

“சூர்யா சூர்யா… “,”ஆ வா மல்லிகா

நானே இன்னும் கொஞ்ச நேரத்தில்

வந்து சாவி கொடுக்கலாம் னு

இருந்தேன் “, “அதனாலதான் நானே

வந்துட்டேன்  என்றவாறு, “அவள் அருகில்

அமர்ந்து “டேய் செல்லம் நானும்

அம்மாவும் ஒரு சாவுக்கு ஊர் வரை

போறோம் காலையிலதான் எனக்கு

விஷயமே தெரியும் நீ சாவி கொண்டு

போய் அம்மா வேலசெய்யற வீடு

தெரியும்ல அங்க கொடுத்துட்டு

போய்ர்யா  ?,”நாங்க எப்ப வருவம்னு

தெரியாது வந்ததும் நானே வந்து

பார்கிறேன், “என்ன நா வரடா  அம்மா

கிட்ட சொல்லி டு   பத்திரம் நா

வரேன்” ,என்றவாறு கிளம்பி விட்டாள்

  “சரி அது படியே செய்வோம் வேற என்ன

செய்ய என நினைத்தவள்”,  சிறிது

நேரத்திற்கெல்லாம் சாவி யோடு கிளம்பி

விட்டாள். அரைநிமிட நடை பயணத்திற்கு

பின்  அம்மா வேலை செய்யும் வீட்டை

அடைந்தாள் அம்மா வீட்டிற்கு வெளியே

  வியர்வை வழிய துணி

துவைதுக்கொண்டிருந்தாள்  இவள்

கண்கள் கலங்கி விட்டது  யதேச்சியாக

திரும்பி பார்தவள்  “சூர்யா வா கண்ணு,

என  வீட்டை ஒரு தரம் பார்தவள்

இவளிடம் வந்தாள் “என்னடா தங்கம்”

நடந்ததை அவள் சொல்ல” சரி கொடு” ,

என்றவள் அப்பொழுதுதான் அவள்

கண்கள் கலங்க இருப்பதை பார் தாள்

“என்னடா மா ஏன் கண் கலங்குற”?,

“எனக்கு  உன்னை இப்படி பாக்கவே

கஷ்டமா இருக்குமா வேணும்னா நா

வேலைக்கு போக வா?”, ‘அறஞ்சேனா

பாரு நீ வேலைக்கு போக வா நானும்

ஆதியும் இவ்வளவு கஷ்ட பட்றோம் எங்க

கனவு ,உசிரு  எல்லாம் நீதான்டா

இதுலாம் இன்னும் கொஞ்ச நாள் தான்டா

உனக்கு ஒரு நல்ல வேலை கிடசிட்டா

அப்புறம் ஏது கஷ்டம்லாம் “,இங்க பாரு

அழ கூடாது என் செல்லம் இல்ல ,என் தங்கம், வீடுகாரம்மா குளிக்க

போய்ருக்காங்க  அவங்க வரதுக்குள்ள நீ

கிளம்பு உனக்கும் நேரம் ஆகுது இல்ல”, “சரிமா, “என்றபடி கண்களை

துடைத்தேகொண்டே சென்றவளை

விழிஅகலாது பார்து நின்றாள். வீட்டு

வேலை முடித்தவளுக்கு  பாக்ட்ரி  சென்று

வேலை செய்ய மனம் ஒப்பாததால்  லீவு

சொல்லி விட்டு வீடு வந்து சேர்ந்தாள்

கண் கலங்கி நின்ற சூர்யாவின்  முகமே

வந்து
வந்து போனது. தானும் இப்படித்தான்

பெற்றவள் துன்பம் தாங்காது. ஆதியும்

இப்படித்தான் ஆனால் வெளி காட்ட

மாட்டாள். ஆதி மென்மையானள் ஆனால்

கொஞ்சம் உள்ளதால் சிறிது வலிகளை

தாங்குவாள் ஆனால் சூர்யா

வாய்தான்  தைரியம் பத்தாது. ஒரே

வயிற்றில் பிறந்தாலும் இருவரையும்

நினைது லஷ்மியே பல தடவை வியந்த

துண்டு. இப்படி ஏதேதோ நினைத்தவள்

பசி வயிற்றை கிள்ளவே  தான் இன்னும்

எதையும் செய்யவில்லை என்பது

நினைவு வர எழுந்து அடுப்படி  சென்று

இருப்பதை சமைக்க ஆரம்பித்தாள்.

பாக்ட்ரி போய் இருந்தால் அங்கேயே 

அவர்கள் தரும் உணவு இல்லை மெஸ்சி

ல் சாப்பிட்டு இருப்பாள். சிறிது நேரத்தில்

வேலை முடித்து  சாப்பிட்டவள்  அப்படியே அசதி யில்

படுத்து தூங்கி விட்டாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்