காலை நேரம் அழகாக புலர்ந்துக்
கொண்டிருந்தது. கதிரவனின் கதிர்கள்
பட்டு பல மலர்களும் மனங்களும்
மலர்துக்கொண்டிருந்தன. ராகவன்
ஐம்பதின் தொடக்கத்தில் இருப்பதால்
முதுமை முன்னுரையாய் முகத்தில் இடம்
பிடித்தாலும் அவர் மனம் என்றும்
இளமை மாறாது என்பது போல
இருக்கும் அவர் உழைப்பும் செயலும் தன்
நாற்பதும் தொடக்கத்தில் தன்
மனைவியை ஒரு விபத்தின் மூலம்
எமனுக்கு தாரைவார்தவர்.அன்றிலிருந்து
ஒரு தந்தையாய் ,நல்ல எஜமானாய்
மற்றும் ஓர் நல்ல தொழிலதிபராய் தன்
கடமையை செம்மையாய் செய்து
கொண்டிருக்கும் ஓர் நல்ல உள்ளம்.
கையில் காபி மற்றும் பேபர் ஓடு
அமர்ந்திருந்தவர் முன் நிலழாட
தலைநிமிர்ந்து பார் தார் தன் மகன்
வினோ தான் நின்றிருந்தான். “ஹாய்
டாடி குட் மார்னிங்”. “குட் மார்னிங்
கண்ணா “,”என்றவர் “முத்து தம்பிக்கு
ஒரு காபி, “என்றவாரு திரும்பவும் காஃபி
யோடு முத்து வரவும் சரியாக இருந்தது.
“இந்தாங்க தம்பு “தேங்க்ஸ் அங்கிள் “
“இதுக்கு எதுகுப்பா தேங்க்ஸ்”அட அவன
பத்தி தெரியாதா முத்து ?,”நா முத்தம்
கொடுத்தாலே தாங்ஸ் சொல்ற ஆசாமி
அவன், அப்படி இருக்க இது என்ன
அதிசயம் ?!”முத்துவும் வினோவும்
இதழ்விரிக்க, “என்ன வினே ஜிம்மிற்கு
போகல இல்ல டாடி என் பிரண்ட் வரேனு
இருகான் நாங்க பக்கத்து கிரவுண்ட்
டிற்கு ஷெட்டி ல் விளையாட பேறோம்
“,”அங்கிள் இன்னைக்கு என்ன டிபன்
உனக்கு, என்ன வேனும் சொல்லு தம்பு?
நா செய்யறேன் ,”ம்அஅ பூரி கிழங்கு
என்ன டாடி ஓகேவா “,என தந்தையை
பார்தவாரு கேட்க “டபுள் ஓகே . சரி
வினோ நா உன்கிட்ட கொஞ்சம்
பேசனுமே பேசலாமே ?”,என்னகேள்வி இது பா “? சொல்லுங்க என்ன?”நா
வேற என்ன கேக்க போறேன் எப்ப
கம்பனி பெறுப்ப ஏதுக்க போற ?”டாடி
நானும் எத்தனை வாட்டி சொல்ல ,எனக்கு
அதுல விருப்பம் இல்ல நா வெளிநாட்ல
வேலை செய்ய போறேன் அங்கேயே
செட்டில் ஆனாலும் ஆவேன், “”என்னடா
சொல்ற அப்ப என் கதி “,ஏன்பா
உங்களுக்கு என்ன நீங்களும் என்னோட
தான் வர போறீங்க”. “நான்
சொன்னேனா? இந்த வீட்ட விட்டு நா வர
மாட்டேன் ,என் தொழில் என் கனவு,
எப்படி வருவேன்”, “அதே தான்,
வெளிநாடு என் கனவு சரி உங்க
பேச்சுக்கே வரேன் வெளிநாட்ல
இருக்கிறவங்க அவங்க அப்பா அம்மாவ
பாத்துக்கறது இல்லையா என்ன? “
“இல்ல வினோ இது சரி படாது நான்
சொல்றத கேளு நம்ம கம்பனியே…”,
மேலும் பேசும் முன்னே வெளியில்
ஹார்ன் சவுண்ட் கேட்க “என் ப்ரன்ட்
வந்துட்டான் சாரிபா நா வந்து பேசறேன்,
“வரேன் அங்கிள் “என விருட்டென்று
சென்றவனை விழி அகலாது
பார்துக்கொண்டிருந்தார் “அய்யா நீங்க
ஒன்னும் கவலை படாதீங்க இள ரத்தம்
பாருங்க அவங்க போக்குல
போகவிட்டுதான் பிடிக்கனும் நீங்க போய்
குளிசிட்டு வாங்க நான் போய் டிபன் ரெடி
பண்றேன் “என்றவாரு நகர்ந்திட ,
ராகவன் மட்டும் இன்னும் அமர்ந்த படியே
இருந்தார் அவர் மனம் பின்னோக்கி
சென்றது. மீனா அவர் செல்ல
பெண்டாட்டி என சொன்னால் அது
மிகையில்லை அம்மா அப்பா பார்த்து
வைத்த பெண்தான். பார்ததும் பிடித்துப்
போனது. முகத்தில் சாதுவான கலை.
ராகவனென்றாள் உயிர். திருமணமான
சில மாதங்களிலேயே வினோ உண்டாக
இருவரும் மகிழ்ச்சியில் திண்டாடினர்
மீனாவை மிகவும் மென்மையாக ஓர்
தாயை போல பார்துக்கொண்டார்.
அவனுக்கு விவரம் தெரியும் நாளில்
மீனாவிற்கு இன்னொரு உலகமானான்
வினோ. தந்தைக்கும் பிள்ளைக்கும்
நேரம் ஒத்து வராது என்றாலும்
ராகவனுக்கு வினோ என்றால் அவ்வளவு
ப்ராணம்.வினோவும் லேசு பட்டவன்
இல்லை தந்தை என்றால் பித்து
கிடைக்கும் நேரம் எல்லாம் அவரோடு
தான். அன்று காலை மீனா தலை
குளித்து கையில் காஃபியோடுவர.
ராகவன் தூங்கிக் கொண்டிருந்தார்
சிறிது நேரம் அவரையே பார்தபடி
நின்றவள் கையில் இருந்த
காஃபியையும் அவரையும் மாறி மாறி
பார்க்க என்ன தோன்றியதோ திரும்பி
நடக்க யத்தனிக்கையில் ” நில்லு மீனா
என்ன காஃபி கொண்டு வந்துட்டு
கொடுக்காம போறே “அட நீங்க தூங்கல,
நான் இன்னைக்கு சீக்கிரம் எழுந்து
பூஜை
யெல்லாம் முடிச்சேனா எனக்குனு
காஃபி போடும் பொழுது உங்களுக்கும்
சேர்த்து போட்டேன் ஆனா நீங்க
தூக்கிட்டு இருந்தீங்களா எழுப்ப
மனசில்ல அதான்””, ஓ அதான் தூக்கிட்டு
இருக்குற என்னை கண்ணால
குடிசிங்களோ ,”?ஒரு நிமிடம்
வெட்கபட்டவள் “சட்டென மறைத்தபடி அதெல்லாம் இல்லை
ராத்திரி நீங்க படுக்கும் பொழுது மணி
பண்ணி ரெண்டு சரி எழுப்பவேணா
இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டுமேனு
கம்மனு இருந்துட்டேன் “, “சரி ,சரி ஆக
மொத்தத்துல நீ என்ன டாவ் அடிக்கல
அப்படித்தானே ,”ஆசைய பாரு இன்னும்
இருபது வயசுனு நினப்பு “, “ஓய் எனக்கு
என்னடி ,அழகான பெண்டாட்டி
அறிவான பையன் ராஜாடி நானு என்றும்
பதினாறாக்கும் ,”ஆமாமா இப்படியே
பேசிகிட்டு இருந்தா வேலையெல்லாம்
தன்னால நடக்கும் நீங்க பேசிய பேச்சுல
ஹாட் காஃபி கோல்ட் ஆயாச்சு
குளிசிட்டு வாங்க சூடா டிபனும் சேர்ந்தே
சாப்பிடலாம்”, “ஓகே, தம்பி
எழும்பியாச்சா ?,”இன்னும் இல்லீங்க போய்
தான் எழுப்பும் அவனும் ராதிரியெல்லாம்
படி சிட்டு லேட்டா தான் தூங்கினான்”.”
“சரி நீ போய் வேலய பாரு அஞ்சே
நிமிஷத்துல நா வரேன் என அவர்
உள்ளேயும் இவள் வெளியேயும் நடையை
கட்டினர் அனைவரும் டைனிங்
டேபிள்முன் அமர்ந்திருக்க” குட் மார்னிங்
வினோ குட்டி ” ,குட் மார்னிங் பா “,”மீனா
நீயும் உட்கார் எல்லாரும் சேர்ந்தே
சாப்பிலாம் ,
“ஆமாமா உட்காருங்க, “என்றவாரு
நாற்காலியை இழுத்துப்போட “ம்ம் பாரு
மீனா நான் சொன்னேன் உன் பிள்ள
செய்தான் கவலையே படாத உன்
பையன் உன்ன நல்லா
பாத்துப்பான்”.”என்ன பேச்சு
இது ?,இவன் நம்ம பையன், நீங்க
சொல்லாட்டியும் இவன் நம்ம
ரெண்டுபேரையுமே நல்லா பாத்துப்பான்
இல்ல ராஜா?,”கண்டிப்பாமா,என்றான் உரக்க
“ஹாஹாஹ என்று ராகவன் சிரிக்க
மிதமான புன்னகையோடு தென்றலும்
கைகோர்தது. கண்கள் கலங்க மனது
மட்டும் சத்தமாக “ஏன் மீனா உனக்கு
என்ன அவசரம் ஐ மிஸ் யூ டூஊஊ மச்”
என தவிக்க ஒரு கரம் அவரை உலுக்க
நினைவுலகத்திற்கு வந்தார் …முத்து அறியாது
கண்ணீரை மறைந்தார் “என்னயா
இன்னுமா குளிக்க போகல ?டைமாகுது
தம்பு வர நேரமாச்சு சீக்கிரம் குளிசிட்டு
வாங்க சூடா சாப்பிடலாம் ,”இதோ
ரெண்டே நிமிசம்”, என்றவாரு எழுந்து சென்றார்.