Loading

அன்று  ராகவனுக்கு ஆபிஸில் பயங்கர

வேலை பளு ,அதன் காரணமாக

பயங்கர டென்ஷன்  ஆகிட மதியமே வீடு

வந்துவிட்டார். பொதுவாகவே

வினோவும்  சரி ராகவனும்  சரி 

காலையில் கிளம்பி சென்றுவிட்டால்

ராத்திரி  டிபனுக்கு தான் சந்திப்பார்கள்

அதுவும் சில  நாட்களில்தானஅ முக்கால்வாசி

ஞாயிற்றிகிழமைகள் மட்டுமே அப்பாவும்

மகனும் பார்துக்கொள்ளவது. சாப்பிட்டு

தூங்கி எழவும் தான் ராகவனுக்கு

கொஞ்சம்  ஃபீரியானது மனது. முத்து டீ

கொண்டு வந்து கொடுக்க வெளியில்

பைக் சத்தம் கேட்டு தலை நிமிர வினோ

தான் நுழைந்து கொண்டிருந்தான். ஒரு

நிமிடம் அவனை பார்த்தவர் பிரமித்தார்

” என் மகன் எவ்வளவு வளர்துட்டான் தளிர்

நடை வளர்ந்து இன்று துள்ளலுடன் 

என்ன அழகாக ஓர் நடை ,தூரத்திலிருந்து

பார்க் மீனாவை  நியாபகபடுத்தினான்.

“”சாக்லெட் பாய்” என்ற பெயர் இவனுக்கு
.
பொருந்தும்  ,அவன் முகவெட்டுக்கு

கோதுமை நிறம் மிக அழகு. “ஹீரோ” என்ற

சொல்லுக்கு இவன் கண்டிப்பாக நல்ல

உதாரணம். பார்த்ததும் மனதில் பதியும்

முக அழகு.”என் இளவரசன் இவன் என

“நினைக்கும் பொழுது ஓர் கம்பீரம்

தோன்ற புல்லரிக்கும் உணர்வு” யாரோ

உலுக்கநினைவிற்கு வந்தார் ராகவன் “

என்னப்பா  நான் இத்தனை கேள்வி

கேட்டும் பதிலே இல்ல? என வினவ சுய

நினைவிற்கு வந்தவராய் “என்ன கேட்ட”?

” சரியா போச்சு ஐஞ்சு  நிமிஷமா கேட்டு

கிட்டு இருக்கேன் என்ன அதிசயம்  வீட்ல

இருக்கிங்கனு கேட்டேன்?”. “இதையே

நானும் கேக்கட்டுமா?ஓ கேக்கலாமே ?

ஆனா நான் தான் பர்ஸ்ட்   ? அதற்குள்

முத்து காஃபியோடு வர “மதியம் ஐயா

வரும் பொழுது பாக்கனுமே  முகம்

சிவந்து ரொம்ப சோர்ந்து போய் வந்தாரு

சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்ததுக்கப்புறம்

தான் கொஞ்சம் தெளிவானார். “அத பத்தி

அவனுக்கு என்ன கவலை  முத்து  ?

” ஏன்பா அப்படி சொல்றீங்க நான் எத்தன

வாட்டி கம்பனிய  லீஸுக்கு விடுங்க

முடிஞ்சா  வித்துடுங்கனு …,”இன்னொரு

வாட்டி அப்படி பேசாத வினோ இந்த

கம்பனிய இந்த நிலைக்கு கொண்டு வர

நா எவ்வளவு பாடு பட்டேனு தெரிஞ்சு ம் நீ

இப்படி பேசலாம?”” அப்பா ப்ராக்டிகலா

யோசிங்க  உங்களுக்கு வயசு என்ன ?,

இந்த வயசுக்கு மேல எவ்வளவு

ரிலாக்ஸ்டா  இருக்கிங்களோ

அவ்வளவுக்கவ்வளவு  ஆரோக்கியம்

நல்லா இருக்கும், “அதனால் தான்  உன்ன

பொறுப்பேத்துக்க சொல்றேன்”. “அஹா

ஆரம்பிசிட்டிங்களா உங்க வேலைய

எனக்கு…”,போதும் வினோ கேட்டு கேட்டு

சலிசிட்டேன்”. சிறிது நேரம் அங்கு

அமைதி நிலவ  முத்து தான்

ஆரம்பித்தான்” ஐயா  நான் ஒரு

யோசனை சொல்றேன் கோசிக்காதீங்க, “

“சொல்லு முத்து “,”நம்ம தம்பு வெளிநாடு

போக எப்படியும் கொஞ்ச 

நாள் ஆகும் அதுவரை வேணா

கம்பனிக்கு வந்து உங்களோட இருந்து

பாக் கட்டுமே என்ன தம்பு சொல்றீங்க “?,

” இதுவும் நல்ல யோசனையாதான்

இருக்கு நீ என்ன சொல்ற வினோ? “நீங்க தான்

இதுக்கு மொதல்ல ஓகேவானு

சொல்லனும்? ஏனா….அவன் சொல்லிக்

கொண்டிருக்கும் பொழுதே அவர் மயங்கி

சரிய “அப்பாஆஆஆ “…என வினோவும்

“ஐயாயாஆஆஆஆ”….என முத்து வும் அலற

அடுத்து ஐந்து நிமிடத்தில் ராகவன்

ஹாஸ்பிடல் பெட்டிலும்  வினோ டாக்டர்

முன்னும்  இருந்தனர். “வினோ  ஹைய் பிபி
காரணமா  மயக்கம் வந்திருக்கு  இது

கண்டினியூ ஆனா ஹார்ட் அட்டாக் வர

சான்ஸஸ்  இருக்கு இப்போதைக்கு

டேப்லட்ஸ்  குடுதிருக்கேன்  பயம் ஏதும்

இல்லை ” . “தேங்ஸ் டாக்டர்”  . “டேக் கேர்”

. ரூமிற்கு வந்தான். அப்பா சாய்தபடி

அமர்ந்திருக்க “என்னப்பா டாக்டர் என்னை

காட்டிலும்   அவர்  ரொம்ப 

சொல்லி பயங்காட்டிட்டாரா?”

ஏதும் பேசாது அவரையே பார்க்க  “ஏன்டா

அப்படி பாக்கர தேரமாட்டேனுடாரா என்ன? “

என்றதும் தான் தாமதம்  அவர் மீது

சாய்து அழ ஆரம்பித்துவிட்டான்  “டேய்

ராஜா ஏன்டா அழற ?,தோ பாரு என்னாச்சு

இப்ப, இங்க பாரு என்ன இப்ப ?நீ சொன்ன

மாதிரி கம்பனிவித்துட்டு உன்னோடு

வரேன்டா  அழாதடா  அப்பாவால

தாங்கமுடியாதுடா ,என் ராஜால்ல , “

என்றதும் அவன் தலை நிமிர கண்

துடைத்து விட்டார்  “அதெலாம் ஒன்னும்

விக்கவேண்டாம்  நா கம்பனிய

பாத்துக்கரேன் “,ஹய் சூப்பர் அப்ப

வெளிநாடு கேன் ஸல் தானே”, என்றார் ஒர் குழந்தையின் குதூகலத்துடன்

“” அதெல்லாம் இல்லை அங்கிள் சொன்ன

மாதிரி இங்க இருக்குர வரை தான், “

என்றான் அழுத்தமாய் . அவர் சங்கடமாய்

முத்துவை  பார்க்க அவர்  ‘பாத்துக்கலாம்”

என்பது போல கண் ஜாடை காட்டினார். “சரிபா

டாக்டர் டிஸ்ஜார்ஜ்  ஆகலாம்னுடார்  நான்

போய் பில் அமௌன்ட் செட்டில்

பண்ணிட்டு வரேன் நாம கிளம்ப லாம்.”

மறுநாள் காலை வினோ அப்பாவின்

ரூமிற்கு சென்றான் “அப்பா இன்னைக்கு

எனக்கு கொஞ்சம்  வேலை இருக்கு

அதனால கம்பனிக்கு நாளையிலிருந்து போகலாம்  

நான் போன்ல நம்ம பிஏ வோடகாண்டாக்ட் ல  தான் இருக்கேன்

“சோ   நீங்க எந்த கவலையும்

இல்லாமல் நிம்மதியா ரெஸ்ட் எடுங்க

ஓகேவா  ?,”சரிடா  “நானும் நாளையிலருந்து

உன்னோட ஜாய்ன்  பண்ணிக்கறேன், “அத

அப்புறம் பேசிக் கலாம் எனக்கு டைம்

ஆச்சு மறக்காம டேப்லட்ஸ் எடுத்துகங்க

பை பை “பை பத்திரம். ” அவன் வர

ராத்திரி ஆகிவிட்டது  வந்ததும்

தந்தையின் ரூம் செல்ல அவர் அசந்து

தூச்கிக்கொண்டிருக்க சத்தமின்றி

அறையை சாற்றிவிட்டு வந்தான் .

சோஃபாவில் அமரவும் முத்து வரவும்

சரியாய் இருந்தது “தம்பு சா ப்பாடு

கொண்டுவரவா  ?”இல்ல அங்கிள் நான்

சாப்டேன்  நீங்க சாப்டிங்களா அப்பா

சாப்ட்டு  மாத்திரை சாப்டாரா “, ” “சாப்டோம்

தம்பு, அப்பாதான் உங்கள பத்தி சதா கேட்டு

கிட்டே இருந்தார் நீங்க வந்தா தான்

சாப்பிடுவேனுவேற அடம் புடிச்சுக்கிட்டு இருந்தார்

நாதான் அத இத  சொல்லி சாப்பிட

வெச்சு மாத்திர போட வச்சேன்

மனசேஇல்லாமதான் தூங்க போனார்

சின்ன பிள்ளை தோதிடும்  போங்க “,

. மென்மையாய் புன்னகைத்தவன்

” ரொம்ப தாங்ஸ்  அங்கிள் நீங்க இருக்குர

தெம்புலதான் நான் நிம்மதியா

வேலபாக்க முடியுது ,நீங்களும் தூங்குங்க

நேரமாச்சு நாளைக்கு பாக்கலாம் ,”சரி

தம்பு, “என்று முத்து சென்று விட  மீண்டும்

தந்தையின் அறைக்கு சென்றான் அவன்

அவர் தூங்குவதை பார்தவன்  பழைய

நினைவுகளுக்கு ள் சென்றான்

” என்னம்மா டல்லா  இருகிங்க? “எல்லாம்

உங்க அப்பாவ  நினச்சுதான் நாலுநாலா

இரும்பிகிட்டு இருக்கார் டாக்டர் கிட்ட

போலாம் வாங்கனு சொன்னா கேக்க

மாட்டேங்கிறார் , “நீ வாமா “என பெரிய

மனிதனை போல கை பிடித்து

தந்தையின் அறைக்குள் செல்ல”” வா வினோ”

என்றவர்  அவன் கையையும் கூடவே

மீனா வையும்  பார்க்க “என்ன எதாவது

பந்சாயத்தா  ? என வினவ  “அப்பா

இத்தோடு நாலு  வாட்டி இருமிடிங்க

இதுவே நா இருமி இருந்தா இந்நேரம்

டாக்டர் கிட்ட கூடி ட்டி போய்யிருப்பிங்க

உங்களுக்கு மட்டும் பாக்கமாட்டிங்க  ” ஏன்பா? “அது

இல்ல டா சாதாரன காஃவ்தான் சுடு

தண்ணி குடிச்சா சரிஆகிடும் இதுக்கு

போய் யாராவது வேலய கெடுதுகிட்டு

டைம் வேஸ்ட் செய்வாங்களா ” அப்போ

ஆரோக்கியம் பெரிசில்லயா டாடி “என

வினவ ஒரு முறை மீனாவை பார்தவர்

“பெரிசுதான்டா நா சாயங்காலம் போய்

டாக்டர் பாக்குறேன் இப்ப முக்கியமான

வேல இருக்கு கண்ணா”, எனவும்” சரி

ஆனா கண்டிப்பா போகனும் ஓகே”, “டபுள்

ஓகே ” ஆனால் அவர் போகவில்லை

வினோவும் அவர் கண்ணில் படவும்

இல்லை பேசவும் இல்லை கடைசியாக

அவர் டாக்டரிடம் சென்று வந்தபின் தான்

பேசினான். “சொல்றவங்க சொன்னா

கேக்கறவங்க கேப்பாங்கலாம் “

சும்மாவா சொன்னாங்க “யார்

சொன்னாங்க மீனா”? “ம்ம உங்க தாத்தா”,

“பார்ரா நானே பாக்காத

என் தாத்தாவ நீ பாத்து பேசி வேற இருக்க

சூப்பர் பவர்தான் போ “,அவள் முறைக்க

” முறைக்காத அதான் அவன நல்ல

டிரெய்ன் செஞ்சு வச்சிருக்கே இல்ல

இதுல நீ சொல்லி கேட்டா இன்ன ?,அவன்

சொன்னா என்ன ?”என்னை சொல்லலைனா

உங்களுக்கு தூக்கம் வராதே “?”இல்ல

வருதே! “அவள் புரியாமல் விழிக்க “மருந்து

சாப்பிட்டதால  தூக்கம் வருதுமா  அத

சொன்னேன்  என்றவர் படுக்க “,”சரி

தூங்குங்க என்றவாரு  நகர்ந்து விட்டாள்.

நினைவுகளில்  இருந்து மீண்டவன்

தந்தையை பார்க்க ஏனோ அவரோடு

தூங்க வேண்டும் என்று தோன்ற

அங்கேயே  படுதுக்கொண்டான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்