“அம்மா அம்மா சீக்கிரம் டைம் ஆச்சுமா”
அவள் கேள்விக்கு பதிலாக இருமலும்
அதை தொடர்ந்து “இதோ
வந்துட்டேன்டாமா”என்ற பதிலும் வர
“என்னம்மா இப்படி இருமுற கிளம்பு
உன்ன ஹாஸ்பிடல்ல விட்டுட்டு
போறேன் “இதுக்கெல்லாமா டாக்டர்
கிட்ட போவாங்க கஷாயம் வச்சு குடிச்சா
சரியாகிடும் ” என்னம்மா நீ எப்படி
அதெல்லாம்எப்படி சரி படும் இல்ல நீ
கிளம்புபோய்ட்டு வரலாம்” இரு ஆதிமா
ரெண்டுநாள் கஷாயம் குடிச்சு
பாக்கறேன்
இருமல் நிக்காம போனா வேணா நீ
சொன்ன மாறி ஹாஸ்பிடல் போலாம்
சரியா? “என்னவோ போ மறக்காம
கஷாயம் குடி இரண்டு நாள் வேலைக்கு
லீவு போடு முடியாது சொன்னா ..”வா
இப்பவே ஹாஸ்பிடல் போலாம் ,” சரி சரி
வேலைக்கு போகல போதுமா? “என்ன
ஆதி இன்னுமா கிளம்பல அம்மாவோட
பேசிகிட்டு இருக்க ? “அது ஒன்னும்
இல்ல நித்தி இருமிடேனா, வேலைக்கு
போக வேணா கஷாயம் குடி ,இல்ல
ஹாஸ்பிடல் போலாம் னு சொல்லிகிட்டு
இருக்கா !? நியாயம்தானே மா .
ஆரோக்கியம் முக்கியம் தானே
அவளுக்கு உங்கள விட்டா யாரு இருக்கா
சொல்லுங்க? நீ உன் தோழிய விட்டு
குடுப்பியா? சரி சூர்யா எங்க ? என நித்தி
வினவ “இதோ வந்துட்டேன் “என சூர்யா
வர “ஹய் கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு
ரெடியா?”, ஆமா இன்னும் என்ன
பட்டிமன்றம் போகுது இங்க? “அடி பாவி
என நித்தி வினவ”, ஆதி நடந்ததை
சொன்னாள். நீ வேணா கூட இரேன்
சூர்யா? அவள் ஏதோ சொல்ல வர
“ஆதிமா இத பெரிசு படுத்தாத அவ
கிளம்பட்டும் கொஞ்சம் பொறுமையா
இருடா நீங்க முதல்ல கிளம்புங்க டைம்
ஆகுது பாரு?, “கரெக்ட் ஆதி நாம
கிளம்புவோம் இன்னைக்கு மீட்டிங்
இருக்கு “. ஒருமனதாய் வேறுவழியின்றி
ஆதிரை கிளம்பினாள்.”சரிமா நானும்
கிளம்பறேன் சாயங்காலம் சீக்கிரம்
வந்துடறேன் வரும்பொழுது உனக்கு
மருந்து வாங்கிட்டு வரேன் சாப்டு நல்லா
ரெஸ்ட் எடு மறக்காம கஷாயம் குடி
என்ன? ” சரிடாமா பத்திரம் “பைமா”என
அவளும் கிளம்பி விட்டாள். வீட்டை பூட்டி
விட்டு வேலைகளை கவனிக்க
ஆரம்பித்துவிட்டாள் பெரியவள்.
வினோ போன் பேசிக்கொண்டிரு
க்க ராகவன் ஏனோ அவனையே
பார்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம்
பேசுக்கு பிறகு வினோவே வந்து
விட “என்ன வினோ பயங்கர
ஆச்சர்யத்தோடும் குழப்பத்தோடும்
பேசிகிட்டு இருந்த? “. “ஆமா பா அது ஒரு
வித்யாசமான கதை என் ப்ரண்ட சிவா
இருக்கான்ல அவனுக்கு ரீசெண்டா
கல்யாணம் ஆச்சு கல்யாண துக்கு
முன்னாடி வரை என்ன மாதிரியே
வெளிநாட்டுக்கு போகனும்னு கனவோடு
இருந்தவன் இப்ப வோணாம்னு
சொல்றான் பத்தாததுக்கு அவன் வைஃப்
இப்ப பிரக்ணன்டா இருக்காங்கா .
“கேட்கவே சந்தோஷமா இருக்கு இதுல
உனக்கு என்னடா கண்ஃபியூஸன் “
“என்னப்பா இப்படி கேக்கறீங்க? அவன்
கனவு போச்சே? ,”என்னடா போச்சு?அவன்
பெண்டாட்டி போக வோணாம்னு
சொன்னாங்களா, இல்ல சொந்தகாரங்க
சொன்னாங்களா? “அது தெரியாது யார்
சொன்னாலும் இவன் எப்படி கேட்டான்?
“ப்வு இது வா உன் கண்ஃபியூஸன்.”
“பின்ன இருக்காதா? “, அவனுக்கு இந்த
லைஃப் பிடிசிருக்கும் அதான். “ப்ச்
“நோ”பா எனக்கு இது சரினு படல ,சரி
விடுங்க நமகுள்ள இந்த
கான்வர்ஸேசனே வேணாம் நீங்க
சாப்டிங்களா மாத்திரைபோட்டிக்களா?
“ம்ம்”,” என்ன பேட்டரி
இறங்கிடுச்சு அதுக்கு தான் இந்த டாபிக்
வேணாமுன்னு சொன்னே சரி வாங்க
ஒரு டிரைவ் போய்ட்டு வரலாம்? “நா வரல
. ப்ச் வாஙக்பா”, என கை பிடித்து இழுக்க
‘விடுடா “,என அவராகவே எந்திரித்து
அவனோடு பேனார். ஐஸ்கிரீம் பார்லர்
முன் வண்டி நிற்க “இங்க எதுக்கு டா
நிறுத்தினே? “, “சும்மா தெரியாத மாதிரி
கேக்காதிங்க இறங்கி வாங்க “,என்றவாறு
உள் சென்று ” உங்களுக்கு பிடிச்ச
பிஸ்தாதனேபா? “,”எனக் கு வேணா “, நா
வாங்கி குடுக்குப்பொழுதே சாப்பிடுங்க
அப்புறம் விடமாட்டேன் நம்ம
அண்ணாச்சி ,பாக்ஷையில் சொன்னா,
“மிஸ் பண்ணாதிங்க அப்புறம்
வருத்தப்படுவிங்க” என இமிடேட் செய்ய
சிரித்துவிட்டார் ராகவன்.”ஏதாவது
செஞ்சு மனச மாத்திடுவியே
படவா”இருவரும் ஐஸ்கிரீம் சுவைக்க
ஆரம்பித்தனர். ஏதேச்சியாக வெளியில்
பார்வை ஓடவிட்ட ராகவன் எதிர் மெடிகல்
காப்பில் ஆதிரையை பாத்து விட்டார்.
“வினோ அங்க பாரு “யாரு பா? ” என
வினோ பார்வை செலுத்த அவனால்
அடையாளம் காண முடியவில்லை
என்னடா நம்ம கம்பெனிக்கு வந்தாளே
வணக்கம் சொல்லி நீயும் என அவர்
நீள….. “ஆ ஹா ஆமா அவங்க பேரு கூட “
“ஏதோ நல்ல தமிழ் பெயர்டா ” ம்ம்ம் ஆ
ஆதிரை” என வினோ சொல்ல கரெக்ட்
வாடா ஒரு வார்த்தை பேசிட்டு வரலாம்
இருங்க பில் செடில் செஞ்சி ட்டு வரேன்
சரி என அவர் எழ ஆதிரை ஏதேச்சியாய்
திரும்ப இவர்களை பார்துவிட்டாள்
புன்னகை பூவை உதிர்தாள் வினோ
இதற்குள் வந்துவிட அவனை
அப்பொழுதுதான் பார்தாள் மனம்
சட்டென ஆறுதல் கொண்டது இந்த
மாற்றம் புதிது ஆனால் பிடித்திருந்தது.
அவர்கள் தன்னை நோக்கி வர
இருப்பதை உணர்ந்தவர் தானே
வருவதாய் சைகை செய்தாள்.
அவர்களும் நின்று விட்டனர். “வணக்கம்
சார் எப்படி இருக்கிங்க” என வினவ
“நாங்க ரெண்டு பேருமே நல்ல
இருக்கோம் உன் உடம்புக்கு என்னம்மா?
” என அவர் வினவ ஒரு நிமிடம் குழம்பி
பின் எனக்கு ஒன்னும் இல்ல சார் அம்மா
க்கு தான் இருமல் அதான் மருந்து
வாங்க வந்தேன் “ஓ தண்ணி
மாறியிருக்கும் இல்ல நீயும் இவன
மாதிரி ஐஸ்கிரீம் ஏதும் வாங்கி குடுத்து
ஐஸ் வச்சுட்டியா? ” அப்பா… “என அவன்
வினவ” சரிடா சும்மா தான்
சொன்னேன்”அப்படிலாம் இல்ல சார்
நேத்து வெளியில போய் இருந்தோம்
அதுல ஏதோ ஒத்துக்கல அதான் “சரிமா
அம்மாவ பாத்துக்க நேரமாச்சு நீ கிளம்பு
பாத்து போ ” சரி சார் வரேன் ” என
உரைத்தவள் வினோவை பார்த்து
தலையசைக்க அவனும்
தலையசைத்தபடி “பை ” என உரைக்க
சொல்லென்று காற்று தீண்டியதவளை.
தன் பைக்கிடம் சென்று ஸ்டார்ட்
செய்தவள் மிரரில் அவன் முகம் பார்க்க
அவன் கார் நோக்கி போய்
கொண்டிருப்பது தெரிய மெதுவாய்
ஒட்டியபடி அவன் நடயை ரசித்தாள்
அவன் காரில் ஏறிய வுடன் இவள்
பைகின் வேகம் கூட்டினாள்.