கல்யாண வானில் 11
ஹாசினி, “ஏய்! கண்டிப்பாக ஆகாஷ் அங்க தான் இருப்பானா? “
நந்தினி, “ஆமா, நீ பேசாமல் இருந்தாலே அவனுக்கு மனசு சரியில்லாமல் அந்த மங்கி ஆனந்த் கூட தான் இருப்பான். நீ சீக்கிரமாக போ.
ஹாசினி, “சரிடி..நீயும் வந்துரு.. என. சொல்லி விடைபெற்றாள்.
ஆகாஷ், “டேய் மச்சி எங்கடா இருக்குற “சீக்கிரம் வாடா,
இதோ மச்சி காலேஜீக்குள்ள வந்துட்டேன். நீ கேண்டினில் தானே இருக்குற,
ஆகாஷ், “ஆமா.. டா.. வா.. வா..
“நான் அடிச்சா தாங்க மாட்ட
…நாலு மாசம் தூங்க மாட்ட!,
மோதி பாரு வீடு போயி
சேர மாட்டா.. என்ற பாடலை உற்சாகத்தோடு பாடிக் கொண்டே வந்தான் ஆனந்த். “
கேண்டினில் மெளனமாக அமர்ந்திருந்த ஆகாஷை பார்த்து, என்னடா நீயும் உன் காதலும் பேசாமல் என்னை மாதிரியே நீ இருந்துருக்கனும். அத விட்டுட்டு காதலித்த பிறகும் அந்த பொண்ண மறக்கவும் முடியாமல் வெறுக்க முடியாமல் இருக்குற, பேசாமல் அவளை உம் மனசுல இருந்து தூக்கி போட்டு விடு எல்லாமே சரியாகி விடும்.
ஹாசினி, “டேய் அப்படி என்னை தூக்கி போட்டு விடுவேனா?,என ஓங்கி குரல் கொடுத்தபடியே டேபிளை நோக்கினாள்.
ஆனந்த, “அடடடடா!, இவ நம்ம பேசியதை கேட்டுருப்பாளே, என்ற பயத்தில் ஸ்தம்பித்து நின்றான்.
ஹாசினி, “நீ ஆகாஷீடம் பேசியதை கேட்டுட்டேன். . இன்னொரு முறை ஆகாஷ் பக்கமாக வந்த, நீ தொலைஞ்ச மவனே!எழுந்திருச்சு போடா, மங்கி..
ஆனந்த், “எல்லாமே உன்னால தான்.. எதுக்காக இங்க வந்தும் அவனைத் தொந்தரவு பண்ற,அவனை சந்தோஷமா இருக்க விட மாட்டீயா?
ஹாசினி, “உன்னோட நண்பன் குழப்புத்துல இருந்தா,அந்த குழப்பத்தைத் தெளிய வைக்கிறவன் தான் உண்மையான தோழன். ஆனா நீ அவன் செஞ்ச தப்பை அவனுக்குப் புரிய வைக்காமல் நீயும் அவளை மனசுல இருந்து தூக்கி போடுனு, அவ உனக்கு சரிப்பட்டு வரமாட்டானு சொல்லிக்கிட்டு இருக்குற, கடைசியா உன்னிடம் மரியாதையா சொல்றேன்.என் கண்ணு முன்னால நிக்காதே?,ஒழுங்கா ஓடிரு என எரிச்சலாக சொன்னாள்.
ஆகாஷ், “இப்ப எதுக்காக அவனை மிரட்டுற “
ஹாசினி, “ப்ளீஸ் ஆகாஷ் கொஞ்ச நேரம் உட்காரு என்றாள்.
ஆகாஷ், “உன் முகத்தை பார்த்து கூட பேச தைரியமில்ல ,என்னை விட்டுவிடு நானே போயிடுறேன்.
ஹாசினி, “அப்படியா, ஒரு நிமிஷம் நில்லு,டா..
ஆகாஷ், “என்ன விஷயம்? “எதுவாக இருந்தாலும் சீக்கிரம் சொல்லு,…
ஹாசினியும் அவனெதிரே நின்றவளோ அக்கம்பக்கமாக பார்த்து விட்டு ஆகாஷின் இதழிலே இதழ் பதித்ததும் அந்த இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனான்.
இங்க பாரு ஆகாஷ், உன்னை உண்மையாக தான் லவ் பண்றேன். எங்க வீட்டுல எந்த பிரச்சினையும் வந்தாலும் பரவாயில்ல, நம்ம இரண்டு பேரும் சேர்ந்து வாழனும் என்றாள் கண்ணீரோடு.
ஆகாஷ், “அவளருகே சென்று கண்ணீரைத் துடைத்து விட்டு, நீ எதுக்காகவும் கவலைப்படாதே?, நம்முடைய காதல் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையோடு இரு என ஹாசினியை மார்பில் சாய்த்துக் கொண்டான் .
ஹாசினி, “டேய், “எம் மேல எந்த கோபமும் இல்லையே “
ஆகாஷ், ‘”அதெல்லாம் இல்ல டி “நீ இப்படியே என்னுடைய மார்பில் சாய்ந்தபடி இருந்தாலே அதுவே போதும்.
ஹாசினி, “சரிடா, போதும் எல்லாருமே பார்க்கிறாங்க “நம்ம கிளாஸ்க்கு போயி பேசலாம் என்றாள்.
ஆகாஷ்,” நேத்து ஏன்டி கோவிலுக்கு வரல, “
ஹாசினி, ‘டேய் ,”எனக்கு கடுமையான வயிற்றுவலி, அப்புறம் கோவிலுக்கும் என்னால் வர முடியாத சூழ்நிலை..
ஆகாஷ், “மும்ம்.. புரிஞ்சது டி.. இத நேற்றே எனக்கு போன் செய்து சொல்லியிருக்கலாம்மே!
ஹாசினி, “அது கூட என்னால முடியல,ஸாரி.. டா.. என்றாள்.
ஆகாஷ், “நீ இப்படி ஸாரி சொல்லக்கூடாது.நான் மன்னிக்க மாட்டேன் என திமிராக..
ஹாசினி, “அப்படினா எப்படி ஸாரி சொல்லனும். “
ஆகாஷ், “இங்க வா எம் பக்கத்துல வந்து அதுவும் மடியில் உட்கார்ந்து உன் விழிகள் என்னைப் பார்த்து உம் இதழ்கள் எனது கன்னத்தில் இதழ் பதித்து ஸாரி என்றதொரு வார்த்தையை மட்டும் சொன்னால் போதுமானது.
ஹாசினி, போடா.. ,போடா … டூமுக்கு ..நீ என்னை மன்னிக்கவே வேண்டாம்.
ஆகாஷ், “ஹேய்!,ஹாசினி ப்ளீஸ் ஒரே முறை ,
ஹாசினி, “அதெல்லாம் முடியாது. இது காலேஜ் கேண்டின் முதலில் அத தெரிஞ்சுக்கோ, ஒழுங்கா கிளாஸ்க்கு வா என சொல்லிட்டு சென்றாள்.
ரவி, “மணி வேற எட்டு ஆயிடுச்சு.. இன்னிக்கு இம்புட்டு நேரம் தூங்கிட்டு இருந்துருக்கேன். என்னை எழுப்பி விடாமல் இவ எங்க தான் போனா?,என திட்டிக்கொண்டே இருக்க அறைக்குள்ளேயே நுழைந்தாள்.
நிவேதிதா, “என்னங்க இன்னும் கிளம்பாமல் இருக்கீங்க?.உங்களை பாட்டி வரச் சொன்னாங்க,
ரவி, “ஹேய்!,என்னை எழுப்பி விடாமல் இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்த, “
நிவேதிதா,”ஸாரிங்க நானும் மறந்துட்டேன். நீங்க அலாரம் வைச்சு தான் படுப்பீங்க, இன்னிக்கு அலாரம் அடிக்கவே இல்லை. ஒரு வேளை நீங்க வீட்டுல தான் இருப்பீங்கன்னு நினைச்சேன்.
ரவி, “நல்லா நினைச்ச, அங்கிட்டு போ.. என்று கடிந்து பேசினான். “
நிவேதிதா ,”இவரு எதுக்காக இப்படி கோபப்படுறாரு “ஒரு வேளை ஏதாவது முக்கியமான வேலையாக இருக்கும்மோ? சரி. நம்ம வேலையைப் பார்ப்போம் என்றவள் திரும்பவும் ஒரு பேப்பரை எடுத்து உட்கார்ந்தாள்.
ஆகாஷ், “இப்ப சொல்லும்மா “எங்க அப்பாவுக்கும் உங்க குடும்பத்திற்கும் என்ன தான் பிரச்சினை, அன்றைக்கு எம் மேல கோபப்பட்டு போன”
ஹாசினி, “ஆமா, கோபப்பட்டேன். உன்கூட பேசக்கூடாதுன்னு இருந்தேன். ஆனால் உன்னை பிரிய எம் மனசு ஏத்துக்க மாட்டிக்கிது…
ஆகாஷ், “எங்க அப்பாவை எதுக்கு உங்க குடும்பத்துக்கே பிடிக்கல..
ஹாசினி, “டேய் அது தான் எனக்கும் தெரியல,
ஆகாஷ், “பிறகு எதுக்காக எங்க அப்பாவை பிடிக்காதுனு நீயும் சொல்ற,
ஹாசினி, “உங்க அப்பாவை எங்க குடும்பத்திற்கும் பிடிக்காது என்று மட்டும் தான் தெரியும். அதற்கு என்ன காரணம் என்பதை நம்ம ரெண்டு பேரும் தான் தெரிஞ்சுக்கனும்.
ஆகாஷ், “அதுக்கு நான் என்னடி பண்ணனும். “
ஹாசினி, நாளைக்கு காலையிலேயே எங்க ஊருக்குப் போயிடுவேன் .அடுத்த நாள் எங்க வீட்டுல புது வருடத்தை சிறப்பாக கொண்டாடப்போறாங்க. அதுல என்னுடைய காலேஜ் ப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் சொல்லியிருக்கேன். அவங்களோட நீயும் எங்க வீட்டுக்கு வரனும். மற்றதை அங்க வைச்சு பேசிக்கலாம்.
ஆகாஷ், உங்க வீட்டுல வைத்து பேசும் போது யாராவது பார்த்துட்டாங்கன்னா?,
ஹாசினி, “அப்படியெல்லாம் எதுவும் நடக்காது.. எங்க வீட்டுல யாருக்கும்மே இந்த விஷயம் தெரியாது.
ஆகாஷ்,”ஓ.. கோ அப்படியா.. சரி. நீ. ஊருக்குப் போயிட்டு போன் பண்ணு என்றான்.
“ஹாசினியும் மிகவும் சோர்வாக கட்டிலில் அமர்ந்தாள். “
நந்தினி, “என்னடி நீ ஆகாஷை சமாதானப்படுத்தியாச்சா?, “
ஹாசினி, “நாங்க இரண்டு பேரும் சமாதானம் ஆகி மூன்று மணி நேரம் ஆகுது…எல்லாத்தையும் சொல்லியாச்சு, எங்க குடும்பத்துக்கும் அவுக குடும்பத்திற்க்கும் என்ன பிரச்சினை என்று தான் கண்டு பிடிக்கனும் .அதனால் அவனை எங்க வீட்டு புத்தாண்டு விழாவிற்கு அவனை கூப்பிட்டு இருக்கேன்.
நந்தினி, “நீ எங்கிட்ட கூட இத பத்தி சொல்ல வில்லை .முதன் முதலில் ஆகாஷிடம் தான் சொல்லியிருக்குற,
ஹாசினி, “நம்ம கிளாஸில் உள்ள எல்லாருக்கும் தானே சொன்னேன். உனக்கும் சேர்த்து தான்டி,
நந்தினி, “ஓ.. அப்படியா!,அவங்கிட்ட எப்படி பேசுவ “நீ பேசுறத யாராச்சும் பார்த்தாங்கன்னா?,
ஹாசினி, “அதுக்கு வாய்ப்பே இல்ல “ஏனென்றால் எங்க வீட்டுக்கு தான் நான் லவ் பண்ற விஷயம் தெரியாதே என்றாள்.
நந்தினி, தெரியாமலேயே இருந்தாலும் நீ அவனோட பேசுறத பார்த்துட்டா?,
ஹாசினி, “ஏன்டி நீ வேற பயமுறுத்துற, அப்படியெல்லாம் நடக்காது..எனக்கு தூக்கம் வருது என நழுவினாள்.
பவித்ரா, “”ஹலோ ஆகாஷ், இந்த அம்மாவுக்கு போன் பண்ணனும்னு தோணலயா?, நானே போன் பண்ணா தான் நீயே பேசுற,
ஆகாஷ், “ஸாரிம்மா.. நீங்க கட் பண்ணுங்க நானே கூப்பிடுறேன் என. நக்கலாக பதிலளித்தான்.
பவித்ரா, “எப்போது ஊருக்கு வருவ “
ஆகாஷ், “அது இன்னும் ஒரு மாசம் ஆகிடும். டெஸ்ட்க்கு லீவு விடும் போது வாரேன்.
பவித்ரா, “சரிடா நீ நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிடு, அப்புறம் உடம்பைப் பார்த்துக்கோ, உன்னோடு மங்கி மாதிரி ஒருத்தன் இருப்பானே, அவன் எப்படி இருக்குறான்.
ஆகாஷ், “அம்மா அவன் நல்லா இருக்கிறான். நீங்களும் உங்க உடம்பை பார்த்துக்கோங்க என்றவனோ அழைப்பைத துண்டித்தான். அவுக அம்மாவை நினைச்சு வருத்தப்பட்டான். இதுவரைக்கும் அவங்க அம்மாவிடம் எந்த ஒரு விஷயத்தையும் மறைச்சது இல்லை. ஆனால் இப்போது பொய் சொல்லிட்டோம்மே என்ற குற்ற உணர்ச்சியில் இருந்தான்.
பவித்ரா ,”டேய் ஆகாஷ் உங்க அப்பாவிடம் அந்த பெண்ணைப் பத்தி சொன்ன நீ என்னிடம் எதுக்காக மறைக்கிறாய் என தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள் .
விரைவாக எழுந்த ஹாசினி பஸ் ஸ்டாப்பிற்குச் செல்வதற்காக ஆகாஷீற்கு அழைத்தாள்.
ஆகாஷ், “சொல்லுடி.. இந்த நேரத்துல எதுக்காக போன் பண்ணியிருக்க?,
ஹாசினி, டேய் பஸ் ஸ்டாப் வரைக்கும் நீ வந்து விடுறீயா? உன்னைப் பார்க்கனும் போல தோணுது என கலையாக கூறினாள்.
ஆகாஷ், “எனக்கு தெரியும் டி “உன்னை பஸ் ஸ்டாப்பில் போய் விடுவதற்கு ஆளில்லை. அதான் எனக்கு அக்கறையாக போன் செய்துருக்க,
ஹாசினி, “நான் கடைசியா கேட்குறேன். வர முடியுமா?, முடியாதா?
ஆகாஷ், “இதோ வந்துட்டேன். கொஞ்சம் வெளிய வந்து பாரு “
ஹாசினி, நந்தினியைத் தொந்தரவு செய்யாமல் மெதுவாக கதவைத் திறந்து வெளியே சென்றாள். ஆகாஷீம் அவளோடு இருப்பது ஒரு தைரியத்தை வரவழைத்தது.
ஹாசினி, “ஏன்டா எம் மேல கோபமா?,
ஆகாஷ், “இல்லடி, நீ ஊருக்குப் போறீயா அதான் கவலையாக இருக்குது.
ஹாசினி, “நான் வேற ஊருக்கு வாரேனு சொல்லிட்டேன் என்றவள் மெல்லமாக கைகளை தோளில் போட்டாள்.
ஆகாஷீற்கு ஏதோ ஒரு மாதிரியாக உணர்வு ஏற்பட அதை வெளிப்படுத்தாமல் பைக்கை விரைவாக அழுத்தினான்.
ஹாசினி, “என்னடா!சீக்கிரமா வந்துட்ட,
ஆகாஷ், இல்லடி, ரொம்ப குளிருது.. இந்த குளிர் உனக்கு ஒத்துக்காதே அதான் வேகமாக அழுத்தி வந்துட்டேன்.உனக்கு வேற ஏதாவது வேணும்மா?,
ஹாசினி, “ஆமா எனக்கு ஐஸ்கிரீம் வேணும்.
ஆகாஷ், “உன்னை வெளுக்க போறேன். இந்த குளிருல உனக்கு ஐஸ்கிரீம் கேட்குதா?,இங்க வேற எந்த கடையும் இல்லை.. நீ ஊருக்குப் போயிட்டு வா பெரிய டப்பா ஐஸ்கிரீம் வாங்கி வச்சுருக்கேன்.
ஹாசினி, “எனக்கு தேவையான ஐஸ்கிரீம் உங்கிட்ட தான் இருக்கு.. டா
ஆகாஷ், “என்னடி சொல்ற “
ஹாசினி, “ஆகாஷுன் சட்டையை இழுத்து முகத்திற்கு எதிரே நீயும் தான் ஜில்லுனு இருக்குற, உன் குளிர்ந்த இதழை என் கன்னத்தில் பதித்தால் ,நானும் உறைந்து போவேனடா!,
என கவிதையினால் அவனுக்கு புரிய வைத்தாள்.
ஆகாஷ், “”ஏய்!, ஹாசினி இங்க வா என்று. கைகளைப் பற்றியபடி அவளைத்தழுவி கன்னத்தில் இதழ் பதிக்க நெருங்கும் நேரத்தில் பேருந்தின் இரைச்சல் சத்தம் தடுத்தது.
ஹாசினி, “ம்ம்ம். வேண்டாம்.. டா இன்னொரு நாள் பார்த்துக்கலாம். இப்ப பஸ் வந்துடுச்சு,
ஆகாஷ், “ஹாசினி ஒரு தடவ நானே கொடுக்கிறேன் .ப்ளீஸ் மா.. எனக் கெஞ்சினான்.
ஹாசினி, “ஆகாஷ், சின்ன புள்ள மாதிரி அழக்கூடாது. ஒழுங்காக காலேஜீக்கு லீவு போடாமல் போயிருக்கனும் என்றாள்.
நிவேதிதா,ரவி இம்புட்டு நேரம் ஆயிடுச்சு இன்னும் வரக்காணோம்மே என்ற. பதற்றத்தில் இருந்தாள். அப்போது உள்நுழைந்தவனை பார்த்ததும் புன்னகையிட்டாள்.
ரவி, “என்னடி ஒரு மாதிரியாக சிரிக்குற,
நிவேதிதா, “ஏங்க மணி ஐந்து ஆயிடுச்சு. நீங்க விடிய விடிய அப்படி என்ன வேலை பார்த்துட்டு வர்றீங்க எனக் கேள்வியை எழுப்பினாள்.
ரவிச்சந்திரன், “பதில ஏதும் கூறாமல் எதுவென்றாலும் காலையில் பேசிக் கொள்ளலாம் என்றவன் கண் அசந்தான்.
நிவேதிதா, “ஏங்க சாப்பட்டீங்களா?,
ரவி, “ம்ம்ம்ம்.. சாப்பாட்டாச்சு ,நீயும தூங்கு “
சொர்ணம்மாள், “நளினி சீக்கிரமாக இங்க வா “
நளினி, “சொல்லுங்க அத்தை,
ஹாசினி உனக்கு போன் பண்ணாளா?,
நளினி, “எனக்கு எங்க அத்தை போன் பண்றா?, அவ தான் காலேஜீக்குப் போயிட்டாளே?, எங்களெல்லாம் கண்டுக்கவே மாட்டாள் என சொல்லிக் கொண்டிருந்தாள். அச்சமயம், பாட்டி.. பாட்டி என துள்ளிக் குதித்து ஓடி வந்தாள்.
சொர்ணம்மாள், “எப்படி மா இருக்குற, ரொம்ப மெலிஞ்சு போய் இருக்குற, முதலில் நீ போய் நல்லா ரெஸ்ட் எடு என்றாள்.
அம்மா.. என. மார்பைக் கட்டி தழுவினாள்.
ஆகாஷ், “காலையில் எழுந்தவனோ கல்லூரிக்குக் கிளம்பாமல் சோகமாக அமர்ந்திருந்தான். “
அந்த நேரத்தில் ஆனந்த், ஒரு உற்சாகமான பாடலோடு பாடிக்கொண்டே வந்தான்.
“எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதேதோ உன்னிடம் இருக்கிறது “
அதைக் கேட்டதும் சப்பென்னு கன்னத்தில் அறை விட்டான்.
ஆனந்த், “எதுக்குடா அடிச்ச”
ஆகாஷ், “நீ பாடுறது பிடிக்கல, அதுக்காக தான் அடிச்சேன்..
“ஹாசினி கோவிலுக்குக் கிளம்பாமல் தூங்கிக்கொண்டு இருக்குற, “
பெரியப்பா எனக்கு கோவிலுக்கு வரனும்னு தோணல, நான் பாட்டியிடம் சொன்னா கோபப்படுவாங்க, நீங்களே சொல்லு சமாளிச்சுருங்க என்றவளோ பெட்ஷீட்டை இழுத்து திரும்பவும் படுத்தாள்.
“ரத்னா ,ரத்னா என கனத்த குரலோடு அழைத்தாள்
சொர்ணம்மாள் அழைத்த சத்தம் கேட்டு மூன்றாவது மாடியில் வேகமாக இறங்கி வந்தார்.
அம்மா, சொல்லுங்கம்மா என பெருமூச்சு விட்டபடி,
இன்னிக்கு கோவிலுக்குப் போகனும்னு சொன்னேன் எல்லாரும் கிளம்பியாச்சா, லலிதாவை எங்கே?,
இதோ வந்துட்டேனுங்க அத்தை, என புன்னகையுடன் மெல்லமாக நடந்து வந்தாள்.
நீயும் இப்போது தான் கிளம்பி வர்றீயா?, நேற்றே உங்ககிட்ட என்ன சொன்னேன். அனைவரும் விரைவாக எட்டு மணிக்கு தயாராகி இருக்கனும்னு,நான் சொல்ற விஷயத்தை இந்த யாருமே கேட்கல, அப்படித்தானே,
“அத்தை ,அது வந்து என தயங்கி தயங்கி பேசினாள். ‘
ஹாசினி… ஹாசினி என ஓங்கி சத்தமிட்டாள்..
நிவேதிதா, “பாட்டியம்மாவிடம் ஹாசினி தூங்குகின்ற விஷயத்தைச் சொன்னதும் கடுங்கோபமடைந்தாள்.
ஆகாஷீம் தன்னுடைய அம்மாவைப் பற்றி சிந்தித்தான்.
“உன்னை எங்கெல்லாம் தேடுறது, இந்த ஸ்டோர் அறையில் என்ன பண்ற, ‘
பவித்ராவின் பார்வை முழுவதும் புகைப்படத்தை பதித்து இருக்க, அவளது தோள்பட்டைகளை தழுவிய கார்த்திகேயன்.
அப்பா, “அம்மா ஏன் ஒரு மாதிரியாக இருக்காங்க, “
அதெல்லாம் ஒன்றுமில்லை டா, நீ மில்லுக்குப் போயிட்டு வந்துட்டீயா, “எனப் பேச்சை மாற்றினார்.
அதனை அறியாதவனாக இப்ப தான் வேலை முடிஞ்சது என்றதும், அவனது கைகளைப் பிடித்து அழைத்து சென்றாள் பவித்ரா.
சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்த போது ,அவங்க அம்மாவின் முகத்தைப் பார்த்தபடியே இருந்தான்.
என்னடா, ஆகாஷ் அம்மாவைப் பார்த்துட்டே இருக்குற,
அம்மா நானும் உங்ககிட்ட பல நாள்களாக கேட்டுக்கிட்டே இருக்குறேன். நீங்க மெளனமாக இருக்கீங்க, “அப்பா முடிஞ்சு போன கதையைப் பத்தி பேசி ஒன்னும் ஆகப்போறதில்ல, அப்படியென்று சொல்கிறாரு?,அந்த ஸ்டோர் ரூம்ல அப்படி என்னதான் இருக்குது…. இதுவரைக்கும் அந்த அறைக்குள்ளே போக விடுவதில்லையே?, சொல்லும்மா என கேள்விகளை எழுப்பினான்.
…………
அம்மா, உங்களுக்கு அவ்வளவு. பெரிய குடும்பம் இருக்குதா?, எனக்கே ஆச்சரியமாக இருக்குது.
ஏன்டா மகனே. உங்க அம்மாவுக்கு யாருமே இல்லைனு நினைத்தாயா?, எனக் காதைத் திருகியபடி பவித்ரா,
அம்மா, இதுவரைக்கும் எங்களிடம் நீங்க சொன்னதே இல்லையே?, அதனால் அப்படி சொன்னேன் .
ஆகாஷ், “ஏதோ ஒரு.ரகசியம் இருக்குது. அதுவும் அப்பாவுக்கும் தெரிய வாய்ப்பிருக்கிறது. அது என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில்…
அந்த நேரத்தில் அவுக அப்பா கார்த்திகேயன் போன் செய்தார்…
வானில் தொடரும்…
Intha family thn hashini family pola… Anga ena poranga nu teriyalaye…