Loading

கல்யாண வானில் 7

 

    நிவேதிதா, “ஏங்க கதையா சொல்றேன். நேருல  உங்க தங்கச்சியை பார்த்தேன். அவ  இப்படி செய்வானு  கொஞ்சம்கூட நினைக்கல. 

 

ரவி, “என்னடி  சொல்ற  “என்னுடைய தங்கை அப்படி என்ன  செஞ்சா?என வினவினான். 

 

நிவேதிதா, “மும்ம்.. இந்தாங்க வீடியோவைப் பாருங்க என  நீட்டினான். 

 

ரவி, “ஆஹாம்.. இவளா  இது என  வியந்தான். 

 

நிவேதிதா, “அட ஆமாங்க, நம்ம  ஹாசினியே தான். இன்னிக்கு நல்லா  வசமா  மாட்டுனா!அவ காலேஜ்  படிச்சுட்டு  இருக்கிறாள் என்று  பாட்டியம்மா  நினைச்சுட்டு  இருக்குறா? இதுல  இவ  அந்த பையனோடு  ஊரைச்  சுத்திக்கிட்டு இருக்குறா என  பேசினாள். 

 

ரவியும்  அதை கேட்டு  எந்தவொரு அதிர்ச்சியை ஆகாமலும்  மெதுவாக அமர்ந்தான். 

 

நிவேதிதா, “இந்த வீடியோவை மட்டும் பாட்டியம்மா பார்த்தாங்க “ஹாசினியை. காலேஜீக்குப் போட. வேண்டாமென்று சொல்லிடுவாங்க, அதனால்  இன்னிக்கு  காலையில்  என்னோட  முத வேலை  இத காட்டி  ஹாசினியைப் பத்தி சொல்றது தான் எனச் சொல்லிட்டு தூங்கச் சென்றாள். 

 

ரவி, “இவ வேற  ஹாசினியும்,ஆகாஷீம் ஒன்னா இருக்கிறதை பார்த்துட்டாளே? இவ மட்டும் நாளைக்கு பாட்டியிடம்  வீடியோவை  காட்டிவிட்டால்  ஹாசினியை  படிக்க வேண்டாமென்று  சொல்லிடுவாங்களே! ஏதாவது செய்யனும் என்ற  யோசனையில்  இருந்தவனோ  அப்படியே  கண் அசந்து தூங்கிவிட்டான். 

 

காலை வேளையிலேயே  சமையல்  அறையினில்  பரபரப்பாக வேலையைச் செய்து கொண்டிருந்தாள் நளினி. ஹாலில்  தொலைக்காட்சியை  நோக்கியவாறே  இருந்த  சொர்ணம்மாளை  இளைய மகன்  கணேசன்  அழைத்தான். 

 

சொல்லுப்பா, அதுக்குள்ளேயும் கடைக்குக் கிளம்பியாச்சா? மணி  எட்டு கூட ஆகலயே!

 

கணேசன் ,”அம்மா  எனக்கு நேரமாயிடுச்சு, அதுவும் அவசர வேலை  மதியம்  சாப்பாட்டிற்கு வந்துடுவேன். “

 

நளினி, “ஏங்க  கொஞ்சம் நேரம் வெயிட்  பண்ணுங்க “இதோ  டிபன்  ரெடியாச்சு சாப்பிட்டே  போங்க, என  உத்தரவிட்டாள். 

 

கணேசன், “எனக்கு  நேரமில்லை.. நான்  தான்  மதியம்  சாப்பாட்டிற்கு வாரேனு  சொல்றேனே?,என  கடிந்து பேசினான். 

 

சொர்ணம்மாள், “டேய் ஏன்டா  காலங்காத்தாலயே  இம்புட்டு கோபப்படுற, அவ சாப்பிட்டு போங்க என்று தானே  அன்பாக சொன்னாள். . “நீ  எதுக்காக  இப்படி கத்துற ” என  எதிர்கேள்வி  கேட்டாள்.

 

கணேசன், “அம்மா  எனக்கு அவசரமான  வேலை ,அப்பவே போன் பண்ணிட்டாங்கம்மா?, என  எடுத்துக் கூறினான். 

 

எந்தவொரு வேலையாக இருந்தாலும் பரவாயில்ல, நீ  சாப்பிட்ட பிறகு தான் போகனும் என  கட்டளையிட்டாள். அந்த சமயத்தில்  கோவிலுக்குப போயிட்டு வந்த  ரத்னாவும், லலிதாவும்  பிரசாதத்தை  கொடுக்க,சொர்ணம்மாளும் திருநீறு இட்டுக் கொண்டாள். 

 

நளினியும்  பரபரப்பாக டைனிங் டேபிளில் டிபனை  எடுத்து வைத்தாள்.கணேஷன் வேகமாக போய்  அமர, அவனுடைய  அண்ணன்  ரத்னா  அருகே அமர்ந்து இரவினில்  புது துணிகள்  அனைத்தையும் நம்முடைய கடையில்  இறக்கி வைத்துவிட்டார்கள். இனி  எந்த பிரச்சனையும் இல்லை என்றான். 

 

அப்படியா, நானும்  இன்னும்  வரவில்லை என  நினைத்து வேகமாக கிளம்பினேன் என்றான். 

 

ஆமா, “கொழுந்தனாரே இப்ப தான்  சாப்பிட கூட நேரமில்லை, எனக்கு அவசர வேலை  என்றெல்லாம் சொன்னாங்க “கடைசி நீங்க சொன்ன பிறகு தான் தெரியுது என்றாள்  நளினி. 

 

தூங்கி எழுந்த நிவேதிதா,  இவுக அனைவரும் ஒன்றாக பேசி  மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு  எரிச்சலடைந்தாள். 

 

ச்சே, காலையிலேயும்  எல்லாரும்  ஒன்னா உட்கார்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக  இருக்காங்களே? இதையெல்லாம் பார்க்கும்  போது ஆத்திரமாக இருக்குது என திரும்பியபடி  அவளுடைய அறைக்குள் நுழைந்தாள். 

 

இவுக இந்த மாதிரி சந்தோஷமாகவே  இருக்கக்கூடாது. ஒட்டு மொத்த சந்தோஷத்தைக் கலைக்க  தான்  என்னிடம்  வசமான  ஒரு வீடியோ  இருக்குது. இத  இப்பவே  போய்  எல்லாரிடமும் காட்டுவோம்  என  எழுந்தாள். 

 

மாடியில் இருந்து பதற்றமாக ஓடி வந்ததைக் கவனித்த சொர்ணம்மாள், நில்லு என சத்தமாக.. 

 

பாட்டியம்மா, உங்ககிட்ட ஒரு முக்கியமான  விஷயம் என ஆர்வத்துடன்  சொல்ல வந்த அவளை  தடுத்தது சொர்ணம்மாவின்  குரல். 

 

சொர்ணம்மாள்  அதிகாரத்தோடு எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். சமையல் அறைக்குள்ளேயே  குளிச்சுட்டு தான் வரனும். முதலில்  போய்  குளித்து விட்டு அப்புறம்  பேசலாம். 

 

ரவி,”என்னடி, என்னாச்சு”

 உனக்கு தான்  பாட்டியை பத்தி தெரியுமே?பிறகு எதுக்காக அது வாயாலேயே வசவு வாங்குற,

 

ம்ம்ம்.. எல்லாம்  என்னோட  தலையெழுத்து. உங்களை  காதலிச்சு கல்யாணம் செய்துக்கிட்டேன்ல .எனக்கு இதுவும் வேணும். நீங்க போங்க என  கோபத்துடன்  குளியல் அறைக்குள் சென்றாள். 

 

ஹாசினியும் மணி  எட்டு  ஆனது கூட தெரியாமல்,நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள். அவளது  தூக்கத்தைக் கலைத்தது ஆகாஷுன்  அழைப்பு. 

 

சொல்லுடா, ஏன்டா இவ்வளவு சீக்கிரமாக போன்  பண்ணியிருக்க?

 

ஆகாஷ், ஹேய் கொஞ்சம்  எழுந்து மணியை பாரு, அத  விட்டுட்டு என்னை சொல்லாதே?, 

 

லேசாக கண்திறந்து  பார்க்க மணி  எட்டு.. அச்சச்சோ இம்புட்டு நேரம் தூங்கிட்டா இருந்தேன். கட்டில் இருந்து வேகமாக எழுந்தாள். நீ  இன்னும்  கொஞ்சம் லேட்டா கால் பண்ணியிருந்தா? இன்னிக்குள்ள  எக்ஸாம்  அவ்வளவு தான். நானே  கிளம்பிட்டு கூப்பிடுறேன். 

 

நிவேதிதா கையில்  கைப்பேசியை  வைத்தபடியே  கீழே இறங்கி வந்தவள்   பாட்டியம்மாவின் எதிரே நின்றாள். 

 

நிவேதிதா, “பாட்டி  உங்ககிட்ட  ஒரு முக்கியமான விஷயம் பேசனும், “

 

சொல்லு.. காலையில் இருந்தே  ஏதோ  சொல்லனும்னு சொல்லிட்டு இருக்குற, என்னன்னு  தான்  கேட்போம். 

 

ஊருக்கு போன இடத்துல ஹாசினியை  இன்னொரு பையனோட  சேர்த்து வைச்சு பார்த்தேன் என்றாள். 

 

அதைக் கேட்டதும்  கோபமாக எழுந்த ராஜவேல் பாண்டி, நீ  பேசறது  எனக்கு  கொஞ்சங்கூட பிடிக்கல. 

 

சொர்ணம்மாள், “ஏங்க  முதலில்  நீங்க உட்காருங்க, அவ  என்னதான் சொல்ல போறானு பார்க்கலாம் .

 

ரவி, “அடடடா பாட்டிக்கு மட்டும் ஹாசினி  லவ் பண்றது தெரிஞ்சது அவ்வளவு  தான். இத பத்தி அவகிட்ட  சொல்லியே ஆகனும் என்ன பண்ணலாம் என்ற. யோசனையில் இருந்தான். 

 

ராஜவேல்பாண்டி, ரவி  இவ  நம்ம ஹாசினியை பத்தி தப்பா  சொல்லிட்டு இருக்கும்?, நீயென்ன பேசாமல் இருக்கிறாய் என  அதட்டினார். 

 

தாத்தா,குரல் தடுமாற்றத்துடன் என்றான்  ரவி.

 

நிவேதிதா,ஹாசினி ஒரு பையனோட  சுத்தியதை  வீடியோ எடுத்துருக்கேன். அத  நீங்களெல்லாம் பாருங்க, அப்போது தான் புரியும் கைப்பேசியை  எடுத்து  வீடியோவை  எடுக்க முயற்சித்தாள். 

 

ராஜவேல்பாண்டி  கோபமாக  சொர்ணம்மாளை பார்க்க, நளினியும்  ,லலிதாவும்  கடுங்கோபத்துடன்  நிவேதிதாவை  நோக்கினர். 

 

நிவேதிதா,வீடியோவை காணோம்மே! நேத்து இதுல தானே  இருந்துச்சு, என்று போனை  திரும்ப திரும்ப செக் செய்தாள். 

 

சொர்ணம்மாள், என்னம்மா  வீடியோவை  காட்டு என  அவளிடம்  இருந்த போனை  வெடுக்கென்று வாங்கி ரவியிடம் கொடுத்து வீடியோவை  எடுக்க  உத்தரவிட,பேச வந்த நிவேதிதாவை தடுத்தாள். 

 

ரவியும்  செக் செய்துட்டு இதில் வீடியோ இல்லவே இல்ல பாட்டி என்றான். 

 

நிவேதிதா  ,இதுல  இருந்த  வீடியோவை  யாரு  அழிச்சா என  சந்தேகத்தில்  இருந்தாள். ஆனா  இப்ப  பாட்டியிடம்  எப்படி சொல்லி சமாளிக்க என்ற  குழப்பத்திலும்  கையை பிசந்து கொண்டு இருந்தாள். 

 

நளினி, “பாருங்க அத்தை  எம் பொண்ணு மேல தேவையில்லாத  பழியை  சுமத்துறா?அவ சென்னையில்  படிச்சுட்டு இருக்குறா, அவளை  போய்  இன்னொரு  பையனோட ஊரை சுத்துறானு  சொல்றத  என்னால  ஜீரணிக்க முடியல  என்று  ஆத்திரத்துடன் பேசினாள். 

 

சொர்ணம்மாள், ஏய் நிவேதிதா  என ஓங்கி சத்தமிட்டாள்  .உம்  மனசுல  என்ன? பெரிய மகாராணியென்று  நினைப்பா, எங்க வீட்டுப் பொண்ணைப் பத்தி நீ  இந்த அளவுக்கு தப்பா பேசுகிறாய். இனிமேல்  ஹாசினியை பத்தி ஏதாவது சொன்ன, இனி இந்த வீட்டுல நீ  இருக்க முடியாது. 

 

சொர்ணம்மாள்  பாட்டியிடம்  என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல்  இந்த மாதிரி பேச மாட்டேன் என்றவள்  அவள்  அறைக்கு சென்றாள். 

 

சொர்ணம்மாள், நளினி  இப்ப  நடந்த விஷயத்தைப்  பத்தி ரத்னா, கணேசனுக்குத் தெரிய வேண்டாம். 

 

ம்ம்ம்.. சரிங்க அத்தை என்று  தலையசைத்தார்கள். 

 

போங்க  அவரவர்  வேலைகளைப் பாருங்க என்றாள். 

 

அறையினில்  அங்குமிங்குமாக  குழப்பத்துடன் நடந்து கொண்டிருக்க, கண்காணித்த ராஜவேல்பாண்டி ஏம்மா  நீ  இந்த மாதிரி  இருப்பதை  இதுவரைக்கும் பார்த்ததே  இல்லை. 

 

சொர்ணம்மாள், நீங்க சொல்றது  உண்மை தான்  .இன்னிக்கு நடந்ததை நினைச்சு தான் எனக்கே  குழப்பமாக இருக்குது. நிவேதிதா சொன்னது பொய் இல்லை. அவ  சொன்ன விஷயம் அனைத்தும்  உண்மை தான். 

 

ராஜவேல்பாண்டி, “என்னம்மா  சொல்ற ‘ஹாசினி இன்னொரு பையனோட ஊரைச் சுத்துனது உண்மையா? 

 

சொர்ணம்மாள், ஆமா  ,நானே  அந்த  வீடியோவை பார்த்தேன். அத  என்னால  கூட நிவேதிதா ஒரு வீடியோவை காட்டுறேனு சொன்னாளே? அது  உண்மை தான். அந்த வீடியோவை  நான் தான்  அவளின்  கைப்பேசியிலிருந்து அழித்து விட்டேன். 

 

வானில்  தொடரும். 

 

ஹாய்.. ஹாய் ப்ரண்ட்ஸ் டூவிஸ்ட் மாதிரி முடிச்சுட்டேன். உங்களுக்குப் பிடித்திருந்தால்  காயின்ஸ் மூலமாக உங்க கருத்துக்களைத் தெரிவியுங்கள். இந்த  டூவிஸ்ட்  உங்க எல்லாருக்கும் பிடித்திருக்கிறதா?, அதையும் மறக்காமல்  பகிருங்கள். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Nic going sis… Patti ku terunjuruchu .. ipo enna aga poghuthu nu teriyala….