98 views

அத்தியாயம் 6

  

ஹாசினி, “பைக்கில்  பின்னால  உட்கார்ந்துட்டு என்னடா  செய்ய”?

 

ஆகாஷ், “நீ  நினைச்சா  முடியும் “என  ஒளிமறைவாகவே  பேசினான். 

 

சற்று யோசித்த  ஹாசினி  ,”டேய்  திருட்டு  ராஸ்கல் இப்ப  புரியுது”என புன்முறுவலோடு தலைகுனிந்து  ஆகாஷின்  தோளிலேயே  சாய்ந்து  இரு கைகளையும் முன்பக்கமாக  இறுக்கி அணைத்தாள். 

 

ஆகாஷ்  ,:இத  தான்  எதிர்ப்பார்த்தேன் என  சந்தோஷ  அலையில் சென்று  கொண்டிருக்கையில் பெட்ரோல்  பல்கை நெருங்கினான். அப்போது  ஹாசினியின்  அண்ணி நிவேதிதா வேறொரு காரில் அமர்ந்திருந்தாள். ஹாசினி  இன்னொரு பையனுடன்  ஒன்றாக சேர்ந்திருப்பதைப் பார்த்துவிட அந்த  நிமிஷமே அவளின் நம்பருக்கு போன்  செய்தாள். 

 

ஹாசினியின்  போன் அடிக்க, அதை  பார்த்துக் கொண்டே போனை  எடுக்காமல்  அழைப்பை துண்டித்தாள். 

 

“எதுக்காக வந்த அழைப்பை கட் செய்யுற?என வினவினான். 

 

ஹேய்”,எங்க அண்ணி தான் பண்றாங்க?,இப்ப மட்டும்  எடுத்தா அவ்வளவு தான்.அவுக கேள்வி கேட்டே  டார்ச்சர் பண்ணுவாங்க, என்று கூறினாள். 

 

நிவேதிதா, “அடியேய்  நான்  உன்னை கேள்விக் கேட்டு டார்ச்சர் பண்ணுவேனா?இருடி ,உனக்கு  பெரிய  ஆப்பா?,வைக்கிறேன்  என. யோசித்தவளோ  போனில் வீடியோ எடுத்தாள். ஹேய்!, ஹாசினி  நீ எத்தனை முறை என்னை உங்க பாட்டி முன்னால அசிங்கப்படுத்தி தலைகுனிய வைச்சுருப்ப! அதுக்கு சேர்த்து வைச்சு உனக்கு பதிலடி கொடுக்கிறேன் என்று  மனதில் வேறோரு திட்டம் தீட்டினாள். நம்ம வீட்டுல  போய்  இவ ஒரு பையனோட  பைக்கில்  ஊரைச் சுத்திக்கிட்டு இருக்ககுறானு சொன்னா!யாருமே நம்ப மாட்டாங்க, வேற எப்படி சொன்னால்  நம்புவாங்க என்ற யோசித்தவளோ  சட்டுன்னு  கையில் இருந்த  கைப்பேசியை  எடுத்து வீடியோ  எடுத்தாள். 

 

ஹேய் ,என்னடி பண்ற  என்னோட செல்லக்குட்டி என்று  கொஞ்சலாக கூற.. 

 

டேய்  ,ஆகாஷ்  இன்னிக்கு நம்ம  இரண்டு  பேரும்  வெளியே சாப்பிடாலாம்மா?, ஹாஸ்டலில்  எப்போதும்  சாம்பார், பொரியல்  ,அவியல்  இதே  தான்  செய்யுறாங்க, எனக்கு ரொம்ப  போர்  அடிக்குது.. அதனால்  வெளியே ரெஸ்டாரண்ட்ல போய்  ப்ரைடு ரைஸ்  சாப்பிடுனும் போல  தோணுது என ஆசையாக கூறினாள் .

 

சரிடி,நீயே ஆசைப்பட்டு  கேட்டுட்ட, உன்னுடைய விருப்பத்தை  நிறைவேற்றனும்மே!,சீக்கிரமாக  ஏறுடி எனக் கூறினான். 

 

ஹாசினி, “ஹேய் !,ஜாலி  ஜாலி  என  கன்னத்தில் முத்தமிட  ,அப்படியே சிலையாக நின்றான். 

 

அடியேய், இப்படியா  எதிர்பாராத  நேரத்துல  கொடுத்தா  எனக்கு ஒரு. மாதிரியாக இருக்குதுடி  என வெட்கப்பட்டு தலைகுனிந்தான் ஆகாஷ். 

 

டேய்  ,என்னடா செய்யுற  ,சீக்கிரமா ஸ்டார்ட்  பண்ணு,என உற்சாகத்தோடு கூற  அவனும்  விரைந்தான். 

 

நிவேதிதா, “அட  ஹாசினி  நான் வீடியோ  எடுத்தது  தெரியாமல்  நீ நல்லாவே  ஸ்டில்  கொடுத்துருக்க?,இந்த  வீடியோ  பார்க்கிற  உங்க வீட்டுல எல்லாருமே  நடுங்க போறாங்க என வஞ்சத்தோடு சென்றாள். 

 

ஹாசினியும் ,ஆகாஷீம்  சேர்ந்து மாலை நேர பொழுதில்  ரெஸ்ட்டாரண்டில்  அமர்ந்திருக்க, அந்நேரம்  மழை  பெய்ய  தொடங்கியது. 

 

ஹாசினி, “அடேய்!,மழை  வேற  ஆரம்பிச்சுட்டு, நான்  தான்  அப்பவே சொன்னேனே  சீக்கிரம்  போவோம்னு  ,நீதான்  டா  ரெஸ்ட்டாரண்ட்க்குப்  போயிட்டு போவோம்னு  சொன்னேன் என  நக்கலாக பேசினாள். 

 

ஆகாஷ், “உன்னை  வெளுக்க போறேன்டி?, அறியாத  பையன்கிட்ட. நீயா வந்து  எனக்கு ப்ரைடு ரைஸ். வாங்கித் தாடா, அப்படினு சொல்லிட்டு  நல்லா வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு  பேச்சையே மாத்துற, அடியேய் கள்ளி.. 

 

ஓ. கே.. கூல்.. கூல்.. என்றவள் கூற 

 

என்னது.. டி.. கேப்பக்கூலா?,கேள்வியோடு

வினவினான். 

 

ஹாசினி, “ஏய், என  செல்லமாக ஆகாஷின்  காதை  திருகினாள். 

 

ஆகாஷ், “ஹேய்!,பாப்பா  காதை  விடுடி… வலிக்குது என  சொன்னதும்  டப்பென்று  விட்டாள். 

 

ஹாசினி, “டேய் புதுசா  பாப்பா என்றெல்லாம் கூப்பிடுற,.. 

 

ஆகாஷ்.. ஏன்டி  கூப்பிடுறது பிடிக்கலயா!, 

 

ம்ம்ம்..சூப்பராக இருக்கு  கல்யாணத்துக்கு அப்புறம்  இப்படி தான் கூப்பிடனும்  என  கட்டளையிட்டாள். 

 

ஓ.. சரிங்க பாப்பா  என  தலையசைத்தான். 

 

டேய் ,”தலையாட்டும் பொம்மையா?, என்றவளோ  அருகில்  அமர்ந்து கேட்டாள். 

 

ஆகாஷீம்  அவள் அருகே வந்ததும் விலகிச் செல்ல  ,அவனது  கைகளைப் பற்றினாள். இருவரும் ஒருவர்  மேல்  ஒருவர் பார்வை  பதித்து  இருக்க,சற்றென்று இடி இடித்திட  ,

டப்பென்று  மார்பிலேயே சாய்ந்தாள். 

 

ஹேய்!,என்னாச்சு.. டி ..இது  ரெஸ்ட்டாரண்ட்  .எல்லாரும் பார்க்கிறாங்க என்றான் .

 

மும்ம்.. ஸாரி. டா.. வா கிளம்பு.. லேட்  ஆயிடுச்சு.. என விரைவாக எழுந்தாள். 

 

மழை  வேற  விடுற மாதிரி தெரியல.கொஞ்ச நேரம்  வெயிட் பண்ணு   என்றான்  ஆகாஷ். 

 

வேண்டாம். ஆகாஷ்.. இதுக்கு மேல தாமதமாக போனால் மேடம் திட்டுவாங்க.. வா.. போகலாம்  என்றாள். 

 

ச்சே.. அவளே  அருகில் வந்து மார்பில் சாய்ந்தாளே!,நானே அவளை எழுந்திருக்கச்  சொல்லிட்டேனே மனதில்  நினைத்துக் கொண்டே பைக்கை  ஹாஸ்டலை நோக்கி விரைந்தான். 

 

வீட்டிற்குச் சென்ற  நிவேதிதா அங்குமிங்குமாக உலாவிக் கொண்டிருக்க,எப்படி ஆரம்பிக்கலாம் என்ற  சிந்தனையில் இருந்தாள். அந்த  நேரம்  ரவிச்சந்திரன் உள் நுழைந்தான். 

 

ரவி, “ஏன்டி ,தூங்காமல்  ஏதோ  யோசனையில்  இருக்கிற  மாதிரி தெரியுதே?, உங்க வீட்டுக்குப் போயிட்டு வந்ததில் இருந்து கொஞ்சம்  உற்சாகமாக இருக்குற மாதிரி தெரியுது. 

 

நிவேதிதா, “ஏங்க  எம் முகத்தைப் பார்த்தா?”அப்படியா தெரியுது  என  காட்டினாள். 

 

ஆமாம்.. அப்படி தான் இருக்கு என  திரும்பவும் கூறினான். 

 

நிவேதிதா, “சரிங்க, நான்  அங்க வைத்து ஹாசினியை பார்த்தேன். அதுவும் இன்னொரு பையனோட பைக்கில் அமர்ந்து இருந்தாள். ஒரு வேளை அவளோட நண்பனாக இருக்கலாம் என நினைத்தேன். ஆனா என  வார்த்தைகளை இழுத்தாள். 

 

சொல்லு.. மா அப்புறம்  என்னாச்சு  என்று ஆவலோடு  கேட்டான். 

 

வானில் தொடரும்.. 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  1 Comment

  1. Sangusakkara vedi

   Intha nivethitha periyavilli ya iruppa polaye… Rmba thn panra…. V2la pottu kudutha enna aghumo… Intha pakkikalu petrol bank la thn romance pannanuma… Pochu pochu granny ku mattum terunjathu margaya thn….