கல்யாண வானில்
அத்தியாயம் 18
சந்தோஷ், “நீயும் உன் காதலாயோடு சேர்ந்து சந்தோஷமாக வாழனும்னு தான் ஆசைப்படுகிறேன். ஆனால் அம்மா, அப்பாவுக்கு அந்த குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணே வேண்டாமென்று மறுக்கிறார்கள். இதுக்கு மேலயும் நீ அந்த பெண்ணைத் தான் கல்யாணம் செய்யப் போகிறாயா? “
ஆகாஷ், “அண்ணா!என்னோட வாழ்க்கையில் ஹாசினியைத் தவிர வேறோரு பெண்ணைக் கூட மனதால் நினைத்துக் கூட பார்க்கமாட்டேன். நீங்க எல்லாரும் வேற கல்யாணத்தைப் பத்தி மட்டும் இனிமேல் பேசாதீங்க என நகர்ந்தான்.
சந்தோஷ், “டேய்!ஆகாஷ் என்னைப் பத்தி புரிந்து கொண்டது அவ்வளவு தானா? “உன்னுடைய கல்யாணத்தைப் பத்தி நான் எப்படியெல்லாம் கனவு கண்டிருந்தேன் தெரியுமா? “
ஆகாஷ், “அண்ணா! நீ சொல்றதே எனக்கு புரியல “
சந்தோஷ், “என்னுடைய வாழ்க்கையில் காதலித்த பெண்ணே மனைவியாக வருவதற்கு முக்கிய காரணமே நீ தான். உனக்கு இப்படியொரு பிரச்சினை வரும் போது நானும் உன் காதலை சேர்த்து வைக்கனும்னு தானே நினைப்பேன்.
ஆகாஷ், “அண்ணா!, ஸாரி என மார்பைக் கட்டி தழுவிக் கொண்டான்.”
சந்தோஷ் ,”இதுவரைக்கும் அம்மா சொந்தபந்தங்கள் யாரையுமே பார்த்ததே. இல்லை.அவங்க குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாரும் அம்மா மேல இன்னும் கோபமாக தான் இருக்கிறார்களா? என்பதை தெரிஞ்சுக்கனும் .நீ எத பத்தியும் கவலைப்படாதே? “
ஆகாஷ், “என்னுடைய காதலுக்கு யாருமே சப்போட் பண்ணலயேனு நினைச்சு வருத்தப்பட்டேன். இனி அந்த கவலை இல்லை.
சந்தோஷீம், ஆகாஷீம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் கார்த்திகேயனும் நடுவே வந்து என்னது கவலை இல்லை என்று சொல்கிற மாதிரி தெரியுது என்றார்.
சந்தோஷ், “அப்பா அது வந்து வீட்டுக்குள்ளேயே இருந்ததால் அவனுக்கு மனசு ஏதோ ஒரு மாதிரியாக இருந்துச்சாம். இப்போது இங்க வந்த பிறகு அப்படி ஏதுமில்லை. கவலையில்லை எனச் சொல்கிறான் என சமாளித்தான்.
கார்த்திகேயன், “ஆகாஷ், வா நம்ம வீட்டுக்குப் போகலாம் என அழைத்துச் செல்ல, சந்தோஷீம் கையால் சைகை காட்டினான்.
நாம எப்படியாவது ஹாசினியோட காதலை சேர்த்து வைக்கனும் என்ற யோசனையில் இருந்தான். அப்போது நிவேதிதா அவனை நோக்கினாள்.
நிவேதிதா, “ஏங்க எதுக்காக இவ்வளவு பதற்றமாக இருக்கீங்க? “ஒரு வேளை தங்கச்சிக்கு கல்யாணம் ஆகப் போகிறதால யாருக்கெல்லாம் சொல்லலாம் என்ற நினைப்பில் இருக்கீங்களா? “
ரவி, ‘இவ வேற ஒருத்தி நம்ம வாயுல இருந்து என்ன வருதுனு என்று பார்ப்பாள். இவளிடம் கொஞ்சம் உஷாராக தான் இருக்கனும் என நினைத்தான்.
நிவேதிதா, “ஏங்க உங்களை தான் கேட்டுட்டு இருக்கிறேன்.”
ரவி, “அதெல்லாம் ஒன்றுமில்லை, எனக்கு ஒரு அவசரமான வேலை உள்ளது, அதை இன்னிக்கே முடிச்சுட்டா நம்ம நாளைக்கு வீட்டுல நிச்சயதார்த்த ஏற்பாடுகளைப் பார்க்கலாம் என்று காரணத்தைச் சொல்லி விட்டு சென்றான்.
ஏதோ ஒரு குழப்பத்தில் இருக்கிறீங்க? அதுவும் ஹாசினியோட லவ் மேட்டராக தான் இருக்கும் என யூகித்தாள்.
ராஜவேல்பாண்டியும் தனிமையான அறையிலேயே முடங்கி இருக்க, அவரிடம் பேச வந்தாள் சொர்ணம்மாள்.
சொர்ணம்மாள், “ஏங்க எதுக்காக தனிமையாக இங்க வந்து இருக்கீங்க? “நாளைக்கு ஹாசினிக்கு நிச்சயதார்த்தம். வீடே பரபரப்பாக இருக்கும் போது நீங்க இப்படி வருத்தத்தில் இருக்கிறதை என்னால் பார்க்க முடியல என்றாள்.
ராஜவேல்பாண்டி, “நீ உன்னோட சுயநலத்துக்காகவும், கெளரவத்திற்காகவும் இந்த நிச்சயதார்த்தத்தை முடிக்கனும்னு நினைக்கிறாய் என எரிச்சலோடு..
சொர்ணம்மாள், “நீங்க எம் மேல கோபப்படுறதால என்னுடைய முடிவை மாத்திக்க முடியாது. நாளைக்கு நான் நினைச்சது கட்டாயம் நடக்கும் என உறுதியாக சொல்லிட்டு சென்றாள்.
கார்த்திகேயனும் ஆகாஷீம் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கையில் எதிரே உள்ள பைக்கில் மீது மோதினார். ஆகாஷீம் வேகமாக போய் எதிரே விழுந்தவனை கையால் தூக்கி எழுப்பி விட்டான்.
கண்ணைக் கசக்கியபடி எழுந்த ரவியும் ஆகாஷைப் பார்த்து சந்தோஷம் அடைந்தவனோ அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் நின்றிருந்தான்.
கார்த்திகேயன், “தம்பி, ஸாரிப்பா எங்க மேல தவறு, உனக்கு ஏதாவது காயம் ஏற்பட்டிருக்கிறதா? “எனக் கேட்டவனோ, கையில் லேசாக அடிப்பட்டிருந்தது.
ஆகாஷ், “அப்பா இவங்களுக்கு கையில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
கார்த்திகேயன், “தம்பி, வாப்பா ஹாஸ்பிட்டலுக்குச் சென்று காயத்திற்கு மருந்து போட்டு வரலாம் என்றார்.
ரவி, “பரவாயில்லை! நானே ஹாஸ்பிட்டல் போய் கொள்கிறேன் என பைக்கை எடுத்து ஸ்டாட் செய்தவனோ, கையில் ஏற்பட்ட வலியால் தன்னுடைய முயற்சியை இழந்தான்.
கார்த்திகேயன், “தம்பி ,கொஞ்சம் இருப்பா? “ஆகாஷ் நீயும் இந்த தம்பியோடு சேர்ந்து ஹாஸ்பிட்டல் போயிட்டு வா, என்றார்.
ரவியும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொண்டு ஆகாஷையும் தன்னுடனே அழைத்துச் சென்றான். ஆனாலும் அவனைப் பின்தொடர்ந்து தான் வந்தார் கார்த்திகேயன்.
ரவி, “இவரும் பின்னாலயே தான் வர்றாரு? “ஆகாஷீற்கு என்னை யாரென்று தெரியாது.இன்னிக்கு எப்படியாவது ஆகாஷ் குடும்பத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டே ஆகனும் என உறுதியோடு இருந்தான்.
கார்த்திகேயன், “சரிப்பா இப்போதைக்கு அடிப்பட்ட காயத்தில் வலி இருக்கிறதா? “
ரவி, “பரவாயில்லை.. என்றவனோ பைக்கைத் திரும்பவும் அழுத்த முயற்சித்தான்.
கார்த்திகேயன், “தம்பி உன்னைப் பார்த்தால் வெகு தொலைவில் இருந்து வந்தது போல தெரிகின்றதே?”
ரவி, “ஆமா,சார் எனக்கு வெளியூர்,ஒரு வேலை விஷயமா என்னுடைய நண்பனைப் பார்கக வந்தேன். ஆனால் அவனும் வீட்டிலேயே இல்லை. அதான் திரும்பி ஊருக்குச் சென்றேன். அதுக்குள்ளேயும் காயம் ஏற்பட்டு விட்டது.
கார்த்திகேயன், “தம்பி நான் ஒன்னு சென்னா கேட்பீயா? “
ரவி, “ம்ம்ம் சொல்லுங்க சார்? “
கார்த்திகேயன்,”நீ இன்னிக்கு ராத்திரிக்கு மட்டும் இங்க தங்கு, நாளை காலையில் நீ உன்னுடைய வீட்டிற்குக் கிளம்பலாம். “
ரவியும் நாம நினைச்சபடியே நிறைவேறிடுச்சு என்று மனசுக்குள்ளேயே சந்தோஷப்பட்டு கொண்டான்.
சுயமான முடிவை எடுத்த பின்பும் இறுதியாக தாத்தாவைப் பார்க்க அறைக்குச் சென்றாள் ஹாசினி.
தாத்தா… தாத்தா…
“நீ எம் பேச்சைத் தான் கேட்கலயே,அப்புறம் எதுக்காக என்னைப் பார்க்க வந்துருக்க? “என கடிந்து பேசினார்.
ஹாசினியும் அறையை விட்டு வெளியே வந்தவளோ அவங்க அம்மாவை தேடிச் சென்றாள். அவங்க அம்மா நளினியும் தூங்காமல் இருந்தாள்.
நளினி, “ஹாசினி, இங்க வாம்மா? உன்னுடைய முகமே சரியில்லையே? “
ஹாசினியும் அவங்க அம்மாவிடம் எதுவும் சொல்ல முடியாமல் மடியினில் படுத்தாள்.
நளினியும் ஹாசினி தூங்கும் வரையில் தலையை வருடி விட்டாள்.
வானில் தொடரும்…