Loading

அத்தியாயம் 16

 

நிவேதிதா, “ஹேய்!,ஹாசினி  நீயும் உங்க அண்ணனும்  சேர்ந்து என்னை  கிண்டல் பண்றீங்களா? “

 

ஹாசினி, “அண்ணி உங்கள சொல்ல வில்லை. எங்க அக்கா தாரணியைச் சொல்லிட்டு இருந்தோம். 

 

ரவி, “மும்ம்….

 

நிவேதிதா, “உங்க ரெண்டு பேரை பத்தி எனக்கு தெரியாதா? “

 

ஹாசினி, “ச்சே!அண்ணி இம்புட்டு சீக்கிரமாக கண்டுபிடிச்சுட்டாங்களே!,” என  பாராட்டினாள். 

 

தாரணி, “ஹாசினி ஷாப்பிங் முடிஞ்சது.. நம்ம வீட்டுக்குப் போகலாம் “என்றாள். 

 

சொர்ணம்மாள், “வாசலயே எதிர்பார்த்து காத்திருந்தாள். இந்த புள்ளங்க  போயி இம்புட்டு நேரமாகுதே? “

 

லலிதா, “அத்தை எதுக்காக பதற்றமாக உட்கார்ந்து வாசலயே பார்த்துட்டு இருக்கீங்க?”

 

ராஜவேல்பாண்டி, “இன்னும்  புள்ளங்க வரக் காணோம்மே! “

 

நளினி, “இப்ப தான் ரவிக்குப் போன் பண்ணுனேன். இதோ  பக்கத்துல வந்துட்டேனு சொன்னாங்க! “

 

ராஜவேல்பாண்டி,”நீ  பண்றது தப்பு என உனக்கே தெரியலயா?”

 

சொர்ணம்மாள், “என்னங்க புதுசாக  புதிர் போடுறீங்க? “

 

ராஜவேல் பாண்டி, “நான் ஒன்னும்  புதிர போடல, ஹாசினிக்கு கல்யாணம்  அவளுக்கே தெரியாமல்  பண்றது தான் எனக்கு கவலையாக இருக்குது. “

 

நளினி, “அத்தை, எதுக்காக அவளுக்கே தெரியாமல் இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கீங்க? “

 

சொர்ணம்மாள், “உங்க  கேள்விக்கெல்லாம் பதில்  இப்ப சொல்ல முடியாது,”நேரம் வரும் போதே நீங்களே தெரிஞ்ப்பீங்க! “

 

லலிதா, “நளினி  அத்தை எதுக்காக இப்படி  குழப்புறாங்க! “

 

நளினி, “எனக்கும் தான்  புரியல?”ஹாசினிக்குத் தெரிய வரும் போது  அவளோட மனநிலை எப்படி இருக்கப் போகிறதோ? “

 

சந்தோஷ்  ,’டேய்! “ஆகாஷ்  இங்க உட்கார்ந்து என்னடா பண்ற ?”

 

ஆகாஷ், “இங்க எதுக்காக கூட்டிட்டு வந்த? “

 

சந்தோஷ், “நீ  முதல்ல எழுந்து  உள்ளே வா? “

 

ஆகாஷ், “அண்ணே !..என்னை கட்டாயப்படுத்தாதே? “எதுக்காக இப்ப இங்க கூட்டிட்டு வந்த? “

 

சந்தோஷ் ,”உன்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி சொல்லனும்னு தான்.”

 

ஆகாஷ், “என்னிடம்  எந்த முக்கியமான விஷயத்தைப் பத்தி சொல்லப் போற “?

 

சந்தோஷ்  ,’அதுக்காக தான் சொல்றேன். நீ  முதலில் கடைக்குள்ளே வா? “என்றான். 

 

லலிதா, “நளினி,.. நளினி.. 

 

நளினி, “மும்ம்.. சொல்லுங்க அக்கா, 

 

லலிதா, “இதோ  எல்லாரும் வந்துட்டாங்க? “நீ போயி அத்தையைக் கூட்டிட்டு வா?”

 

நளினி, “ஆஹாம்.. “

 

அதற்குள்ளும்  சொர்ணம்மாளே  கீழே இறங்கி வந்து அமர்ந்தாள். 

 

நிவேதிதா, “அப்பப்பா?”செம நெருக்கடி என சொல்லிட்டு அப்படியே  போய்  சோபாவில் அமர்ந்தாள். 

 

நளினி, “அக்கா ,அத்தை வந்துட்டாங்க, இந்த நிவேதிதாவைப் பாருங்க? ..என்னம்மோ  இவ  தான் எல்லாருக்கும்மே ஷாப்பிங் பண்ண மாதிரி  ரொம்ப சோர்வாக உட்கார்ந்து இருக்கிறாள். 

 

நிவேதிதா, “அத்தை  எனக்கு ரொம்ப  சோர்வாக இருக்குது.ஸ்டாங்க்காக டீ போட்டு எடுத்துட்டு வாங்களேன் “.

 

நளினி, “இதோ இப்பவே எடுத்துட்டு வாரேன் என  செல்ல முயன்றவளைத் தடுத்தாள் சொர்ணம்மாள். 

 

சொர்ணம்மாள், “கைகள் இரண்டையும் பின்பக்கமாக வைத்தபடியே புருவம் உயர்த்திக் கொண்டு திமிராக நிவேதிதாவின் முன் நின்றாள். 

 

நிவேதிதா, “அட!,பாட்டியம்மா நீங்க எப்ப வந்தீங்க? “எனத் தயக்கத்தோடு எழுந்தாள். 

 

சொர்ணம்மாள், “ஏம்மா! “ஷாப்பிங் போறேனு சொன்னது தாரணி. அவ தான்  சோர்வாக இருக்கனும். நீயும்  அவளுக்கு உதவி செஞ்சீயா? “

 

ரவி, “அப்படியெல்லாம் இல்ல பாட்டி”அவ தாரணிக்கு எந்த ஒரு உதவியும் செய்யல, அவளுக்கு மட்டும் தான்  ஷாப்பிங் செஞ்சுக்கிட்டா? “

 

சொர்ணம்மாள், “ஓ.. கோ!.இவளும் ஷாப்பிங் பண்ணிட்டு  சோர்வாக இருக்குதுனு  மற்றவர்களை  டீ போட்டு எடுத்துட்டு வாங்கன்னு  வாய் கூசாமல் சொல்ற, “

 

நிவேதிதா, “பாட்டி, இப்ப என்ன நடந்து போச்சு? “அவங்கள டீ போட்டு எடுத்துட்டு தான் வரச் சொன்னேன். மற்றபடி அதிகாரம் பண்ணல, “

 

சொர்ணம்மாள், “வீட்டுல இருந்தாலும் ஒரு வேலை  பார்க்கிறது கிடையாது. இதுல அவங்க டீ போட்டு வச்சிருந்தாலும்  அத உன்னால போய்  சுட வைத்து குடிக்க முடியாதா? “

 

நிவேதிதா, “ஸாரி, பாட்டி நானே போய் குடிச்சுக்கிறேன் “என  நகர்ந்தாள். 

 

பவானி, “அக்கா, இவுக எல்லாரும் எங்க போயிட்டு வந்தாங்க? “

 

சொர்ணம்மாள், “தாரணி ஷாப்பிங் பண்ணனும்னு சொன்னா?”அதான்  ரவி தான் அழைச்சுட்டு போனான். 

 

பவானி, “ஹாசினி.. ஹாசினி.. 

 

ஹாசினி, ‘சொல்லுங்க, மேடம்.. 

 

பவானி, “ஹேய்! இப்பவும் என்னது மேடம்னு கூப்பிடுற, 

 

ஹாசினி, “உங்கள அப்படியே கூப்பிட்டு பழக்கம் ஆனதால் தான் இப்படியே கூப்பிடுறேன். “

 

பவானி, “சரி.. சரி. உன்னோட மாப்பிள்ளை போட்டோவை காட்ட மாட்டீயா? “

 

ஹாசினி, “என்னது!.மாப்பிள்ளை போட்டோவா? “

 

பவானி, ‘ஹாசினி, உன்னை  நாளை மறுநாள் கல்யாணம். அத கூட மறந்து இன்னும்  நரேஷ் நினைவாகவே இருக்கிறாயா? “

 

நளினி, “ஆஹஹா!நம்ம பொண்ணுக்குத் தான் கல்யாணம் விஷயத்தைப் பத்தி எதுவுமே தெரியாதே? “இப்ப எப்படி தான் சமாளிக்கப் போறாங்களோ? “..

 

ஹாசினி,”எனக்கு கல்யாணம்மா?”வீட்டுல என்னதான் நடக்குது, 

 

பவானி, “என்னாச்சு!ஹாசினி உனக்கு தெரியாதா? 

 

ஹாசினி, “எனக்கு இத பத்தி எதுவுமே தெரியாது? “

 

சொர்ணம்மாள், “ஹாசினி  நீ  என்னுடைய அறைக்கு வா? “என சொல்லிட்டு சென்றாள். 

 

பவானி ,’ஹாசினிக்கே தெரியாமல்  எதுக்காக கல்யாணத்தை முடிக்கனும்னு நினைக்கிறாங்க? ‘என  யோசனையில் இருந்தாள். 

 

ராஜவேல்பாண்டி, “தன்னுடைய மனைவியின்  பிடிவாதத்தை  எதிர்த்தவரோ கீழே செல்லாமல் பேசாமல் மெளனமாக இருந்தார். 

 

ரவி, “தாத்தா நீங்க எங்கூட வாங்களேன் என  அழைத்து சென்றான். “

 

ராஜவேல்பாண்டி, “டேய்! எங்கடா கூட்டிட்டு போற ?”

 

ரவி, “தாத்தா பாட்டி எதுக்காக ஹாசினிக்கு கல்யாணம் பண்றாங்க? “

 

ராஜவேல்பாண்டி, “உங்க பாட்டிக்கு ஹாசினியும், ஆகாஷீம்  லவ் பண்ற விஷயம்  தெரிஞ்சு போச்சு, அதனால்  அவுக பாட்டியின்  வார்த்தைக்குக் கட்டுப்பட்டு இருக்கிறாள்.  ஹாசினிக்கு கல்யாண ஏற்பாடுகளைப் பத்தி  இதுவரைக்கும் தெரியாமல் தான் இருந்தது. 

 

ரவி, “தாத்தா பாட்டிக்கு அப்படி என்னதான் கோபம் ஆகாஷ் குடும்பத்திற்கும்  நம்முடைய குடும்பத்திற்கும் என்ன பிரச்சினை?”அடுத்தடுத்த கேள்விகளை எழுப்பினான். 

 

ராஜவேல்பாண்டி, “இப்போதைக்கு அத பத்தி கேட்காதே? “என்றார்.

 

ரவி, “தாத்தா இப்பவே ஹாசினிக்கு அவளோட விருப்பமில்லாமல் கல்யாணம் பண்றது ரொம்ப ரொம்ப தப்பு. 

 

ராஜவேல் பாண்டி, “இத  உங்க  பாட்டியிடம்  பல முறை சொல்லிட்டேன்.அவளும் என் பேச்சைக் கேட்கவே மாட்டேங்கறா? “

 

ரவி, “தாத்தா வேற என்ன தான் செய்றது?”என்ற சந்தேகத்தில் கேட்டான். 

 

வானில் தொடரும்… .

 

வார்த்தைகளின் எண்ணிக்கை :602

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்