கல்யாண வானில் 13
சொர்ணம்மாள், “யாரும்மா போன் பண்றா?
ஹாசினி, “அது பாட்டி, வந்து… என தடுமாறி பேச..
சொர்ணம்மாள், “வெடுக்கென்று போனை வாங்கினாள்.நீ இப்படி செய்வேனு நான் கொஞ்சங்கூட நினைக்கல, நீ எம் மூஞ்சுலயே முழிக்காதே என நகர்ந்தாள்.
ஹாசினி, “பாட்டி.. பாட்டி நில்லுங்க.. நான் செஞ்சது தப்பு தான், அதுக்காக பேசாதே!, மூஞ்சுல முழிக்காதேனு மட்டும் சொல்லாதீங்க, என்னால அத தாங்கிக் கொள்ள முடியாது என வருத்தமாக கூறினாள்.
சொர்ணம்மாள்,”நான் உம் மேல அம்புட்டு பாசம் வச்சுருந்தேன். ஆனா நீங்களெல்லாம் சேர்ந்து என்னை முட்டாளாக ஆக்கிட்டீங்க!, இனியும் நான் வாழ்ந்து ஒரு பிரோஜனமில்லை.
ஹாசினி, “பாட்டி என்னை மன்னிச்சுருங்க?, இனிமேல் நான் உங்க பேச்சை மட்டும் கேட்குறேன். எனக்கு யாரும் வேண்டாம் பாட்டி என கால்களைப் பிடித்து அழுதாள்.
சொர்ணம்மாள், “எழுந்திரும்மா!நீ சொன்னீயே இந்த வார்த்தை போதும், நமக்கு அந்த குடும்பத்தில் உள்ள பையன் வேண்டவே வேண்டாம். அவனை மறந்து விடு. இனிமேல் நீ காலேஜீக்குப் போக வேண்டாம். பாட்டி கூடவே வீட்டுல இருந்துக்கோ என்று தலையை வருடி விட்டு சென்றாள்.
அந்த நேரத்தில் ஆகாஷ் திரும்பவும் அழைத்தான்.
ஆகாஷ், “ஹாய் !,ஹாசினி என்னோட போன் ஜார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆயிடுச்சு, அதனால் தான் போன் பண்ண முடியல,ஸாரி..செல்லம்..
ஹாசினி, “நீங்க யாரு என்கிட்ட எதுக்காக ஸாரி சொல்றீங்க என்றாள்.
ஆகாஷ், “விளையாடாதே!,ஹாசினி.. நாளைக்கு நம்ம ப்ரண்ட்ஸோட சேர்ந்து வரவா?, இல்ல தனியாக வரட்டும்மா,
ஹாசினி, “நீ ஒன்னும் வரவேண்டாம். உங்கிட்ட நான் சும்மா ஒரு பொழுது போக்குக்காக பழகினேன் .அத நீ இந்த அளவுக்கு சீரியஸாக எடுப்பேனு கொஞ்சங்கூட எதிர்பார்க்கல, நீ ஒரு லூசு.. டா. இனிமேல் என்னை பார்க்கனும்னு நினைக்காதே,எனக்கு வேற ஒரு இடத்துல நிச்சயம் பண்ணிட்டாங்க, என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.
ஆகாஷ், “இவ இப்படி பேசவே மாட்டாளே!, வீட்டுல எதுவும் பிரச்சினையா?, என தெரியலயே என குழப்பத்தில் இருந்தான்.
ராஜவேல்பாண்டி, “எதுக்காக என்னை கூப்பிட்ட,
சொர்ணம்மாள், “உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் கேட்கனும் .நீங்களும் உங்க பேத்தியும் ஏதோ பேசிட்டு இருந்தீங்களே!,அவ என்ன சொல்லிட்டு இருந்தா?என கேள்வி கேட்டார்.
ராஜவேல்பாண்டி, “இவ எதுக்காக இத பத்தி கேட்குறா?,தெரிஞ்சு கேட்கிறாளா? தெரியாமல் கேட்குறாளா?,இவ கேட்ட கேள்விக்கு எப்படி பதில் சொல்ல என்று தயங்கி நின்றார்.
சொர்ணம்மாள், என்னங்க!, இவகிட்ட உண்மையைச் சொல்லவா?,பொய் சொல்லவா?, என்றுதானே யோசிக்கிறீங்க,
ராஜவேல்பாண்டி, “நீ என்ன சொல்றது புரியல. அப்படி எதுவும் நினக்கலயே!
சொர்ணம்மாள், “போதும்.. நீங்களும் நடிச்சது.. எனக்கு எல்லாமே தெரிஞ்சுடுச்சு.. இனிமேல் ஹாசினி அந்த பையனை பத்தி நினைக்கவே மாட்டாள் .எம் பேச்சை மட்டும் தான் கேட்பாள். நீங்க எனக்கு ஏதாவது உதவி செய்யனும்னு நினைச்சா, தயவுசெய்து அவனோட குடும்பத்தைப் பத்தி ஹாசினியிடம் சொல்லாமல் இருங்க என சொல்லிட்டு சென்றாள்.
ராஜவேல்பாண்டி, “ஹாசினி… என கூப்பிட… அவளோ அழுததை வெளியே காட்டிக்கொள்ளாமல் சொல்லுங்க தாத்தா என புன்னகையோடு…
நீ இந்த மாதிரி பொய்யாக சிரிப்பது எம் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்குது. உங்க பாட்டியோட குணத்தைப் பத்தா தான் உனக்கு தெரியுமே?, அப்படியிருந்தும் எதுக்காக உங்க பாட்டியிடம் உங்க பேச்சை மட்டும் கேட்குறேன் அந்த ஆகாஷ் வேண்டாமென்று சொன்னியாம்மே!,
ஹாசினி, “தாத்தா, நானும் ஆகாஷீம் ஒருத்தருக்கொருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டு உண்மையாகவே பழகி காதலிச்சோம். எங்க காதல் கண்டிப்பாக நிறைவேறும். ஆனா அது பாட்டியின் சம்மதத்தோடு நடக்கனும்னு நாங்க நினைக்கிறோம்.
ராஜவேல்பாண்டி, “நீ என்னம்மா சொல்ல வர்ற… தாத்தாவுக்கு புரிகின்ற மாதிரி சொல்லு…
ஹாசினி, “தாத்தா எனக்கு பாட்டியும் வேணும், ஆகாஷீம் வேணும்.. இவுக இரண்டு பேருமே எனக்கு முக்கியம். பாட்டிக்கு முதலில் ஆகாஷைப் பிடிக்கனும்.அதுக்காக தான் இப்போதைக்கு நான் பாட்டியிடம் அப்படி சொல்லியிருக்கிறேன்.
ராஜவேல்பாண்டி, “நீ சொல்றதெல்லாம் சரி தான்.. ஏற்கனவே ஆகாஷீக்கு போன் பண்ணி என்னை மறந்துடுனு, வேற கல்யாணம் ஏற்பாடு பண்ணியிருக்காங்கன்னு சொல்லிட்டீயே!,
ஹாசினி, “ஆமாம், தாத்தா அவங்கிட்ட சொன்னது உண்மை தான். ஆனாலும் அவன் இத நம்பவே மாட்டான்.கண்டிப்பாக அவன் எனக்காக பொறுமையாக காத்திருப்பான்
நேரம் வரும் போது என்னைத் தேடி வருவான் என உறுதியாக சொல்லிட்டு சென்றாள்.
ராஜவேல்பாண்டி, “கடவுளே!,எம் பேத்திக்கு ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கனும்.. அவ அதுக்காக தான் போராடுறா? அவ நினைச்சது நடக்கும். என்று வேண்டிக்கொண்டார்.
ஆகாஷ், “அவனுடைய அறையினிலேயே பலத்த யோசனையில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை அழுத்தி பேசியவனோ எதிர்ப்பக்கமாக நந்தினி குரல் கேட்டது.
நந்தினி, “ஹலோ ஆகாஷ் ஹாசினி உனக்கு போன் பண்ணினாளாம். அப்போது உம் போன் சுவிட்ச் ஆப்ல இருந்துச்சுனு சொல்லிக்கிட்டு இருந்தா, நீ அவகிட்ட பேசினாயா?,
ஆகாஷ், “இல்ல, நந்தினி இப்ப தான் என்னுடைய மொபைல் ஆன் ஆயிடுச்சு, இதோ அவளுக்கு இப்பவே கால் பண்றேன் என்று சொன்னான்.
நந்தினி, “சரிடா, வச்சடுறேன் என அழைப்பைத் துண்டித்தாள்.
ஆகாஷ், “நம்ம நினைச்சது சரிதான் .அவ யாருக்காகவோ நம்மிடம் பொய் சொல்லி இருக்கிறாள். கண்டிப்பாக அவங்க பாட்டிக்காக தான் இப்பயடியெல்லாம் பேசி இருப்பாள். இனி நம்ம கொஞ்ச நாளைக்கு அவளைப் பார்க்காமல் இருப்போம். அவ என்னை தவிர வேற யாரையும் கல்யாணம் செய்யவே மாட்டாள். அவ மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றவன் தனக்குத்தானே ஆறுதலாக பேசிக் கொண்டான்.
ஹாசினி, “அவுக வீட்டில் புத்தாண்டு பிறந்ததை மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கையில், தன்னுடைய ஆகாஷ் வரவில்லையே என்ற வருத்தம் அவளைச் சோகத்தில் ஆழ்த்தியது.
நிவேதிதா, “இவ என்ன ரொம்ப சோகமாக இருக்குறா? இந்த மாதிரி புத்தாண்டு கொண்டாடனும்னு சொன்னதே இவ தான். ஆனா இவ முகத்துல மட்டும் சந்தோஷமே இல்ல என நினைத்தாள்.
ஹாசினியின், காலேஜ் நண்பர்கள், தோழிகள் அனைவரும் அந்த பங்கஷனில் கலந்துகொண்டார்கள். அவுக பாட்டியிடம் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.
இறுதியாக நந்தினி, என்னடி எல்லாரும் வந்துருக்காங்க, உன்னோட ஆகாஷ் மட்டும் வரலயே,
ஹாசினி, “அவனை நான் தான் வரவேண்டாமென்று சொல்லிட்டேன். இருந்தாலும் எனக்கும் மனசு கேட்கல, நீ ஒரே ஒரு உதவி செய்வியா?,
நந்தினி, “ம்ம்ம். சொல்லு என்ன பண்ணனும் என்றாள்.
ஹாசினி, “இந்தா இதுல ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. இந்த கடிதத்தை அவனிடம் எப்படியாவது கொடுத்து விடு, அது போதும் எனக் கெஞ்சினாள்.
நந்தினி, “சரி. சரி. எப்படியாவது அவங்கிட்ட கொடுத்து விடுகிறேன்.இன்னொரு விஷயம் ஆகாஷீம் இப்ப காலேஜீக்கு வருவதே இல்லை. உன்னை மாதிரி தான் அவனுக்கும் பிரச்சினை ..உன்னைக் காதலிக்கிற விஷயம் அவுக அப்பாவுக்கு தெரிஞ்சது தான். நீ சொர்ணம்மாள் பேத்தி என்றதும் அவருக்குப் பிடிக்காமல் ஆகாஷை காலேஜீல் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விட்டார்.
ஹாசினி, “எங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது. அவங்கூட சேர்ந்து வாழ்வேனா என்ற சந்தேகமாக இருக்கு,.
நந்தினி, “நீ எதுக்கும் கவலைப்படாதே?,உன்னுடைய நம்பிக்கை தான் உனக்கு பலமே என ஆறுதலாக பேசிக் கொண்டு இருந்தாள்.
நிவேதிதா, “ஹாசினியும், நந்தினியும் பேசுவதை ஓரப்பார்வையால் பார்த்துக்கொண்டிருக்க, அதை கவனித்த ரவி, அவளருகே வந்தான்.
ரவி, “என்னடி இங்க என்ன பண்ற “
நிவேதிதா, “சும்மா தான் ஹாசினி உள்ள போனா அதான் இன்னும் வெளியே வரக்காணோம்மேனு பார்க்க வந்தேன்.
ரவி, “ஏன்டி, “இந்த புழுவு புழுவுற… “உன்னைப் பத்தி தெரியாது. அவுக இரண்டு பேரும் என்ன பேசுறாங்கன்னு கேட்க வந்திருப்ப,
நிவேதிதா, “இல்லங்க, ஹாசினியை பாட்டி கூப்பிட்டு வரச் சொன்னாங்க, என எப்படியோ சமாளித்தாள்.
ரவி, “சரி, அவள கூப்பிடாமல் நின்னுட்டு இருக்குற “
நிவேதிதா, “இவன் இருக்கானே?, எனக்கு எதிராகவே பேசுறான்.ஹாசினி..ஹாசினி.. என கூப்பிட..
“சொல்லுங்க அண்ணி, இங்கயே நிக்குறீங்க!, உள்ளே வர வேண்டியதுதானே, என்றாள்.
நிவேதிதா, “இல்லம்மா?, உன்னை பாட்டி வரச் சொன்னாங்க, எனச் சொல்லிட்டு விறுவிறுவென்று சென்றாள்.
நந்தினி, “நீ முன்னால போம்மா, இதோ ரெஸ்ட் ரூம் வரைக்கும் போயிட்டு வந்துடுறேன் என்றாள்.
சொர்ணம்மாள், “நீங்க வருவீங்கன்னு கொஞ்சங்கூட எதிர்பார்க்கல..
பத்மா, “ஏங்க நீங்க போன் பண்ணி சொல்லியிருக்கீங்க, வராமல் இருப்பேனா, என சத்தமாக சிரித்தபடி..
நிவேதிதா, “அத்தை இது யாரு?, ரொம்ப ஓவரா பண்றாங்க,
லலிதா, “ஹேய், மெதுவாக பேசு, பாட்டி காதுல விழுந்துடப்போகுது என அதட்டினாள்.
ஹாசினி, “பாட்டி, என்னை வயசு சொன்னீங்களாம்மே என்றவளோ கேட்க..
சொர்ணம்மாள், “இதோ இவள தானே கேட்டீங்க!, எம் பேத்தி வந்துட்டா?, நீ உட்காரும்மா!,
பத்மா, “என்னம்மா எப்படி இருக்குற? என நலம் விசாரித்தாள்.
ஹாசினி,”ஆஹாம் ஆன்ட்டி நல்லா இருக்குறேன் “என மெதுவாக பதிலளித்தாள்.
சொர்ணம்மாள், இவ எப்போதும் யாரிடமும் அதிகமாக பேச மாட்டாள்.இன்னிக்கு இந்த மாதிரி பங்கஷன் ஏற்பாடு செய்யச் சொன்னதும் இவ தான்.
ஹாசினி, “பாட்டி என்னோட ப்ரண்ட்ஸ் எல்லாரும் கிளம்புறாங்களா!, அவங்கள வழியனுப்பி விட்டு வந்துடுறேன் .
சொர்ணம்மாள், “பத்மா உனக்கு எத்தனை பசங்க?,
பத்மா, “அம்மா எனக்கு ஒரே ஒரு மகன் தான் அதான் அன்னைக்கு கோவிலில் வைச்சு பார்த்தீங்களே!
சொர்ணம்மாள், “ஓ.. ஆமா எனக்கு ஞாபகம் இருக்குது ,நீ முதன் முதலில் வீட்டுக்கு வந்துருக்க சாப்பிட்டு தான் போகனும் என அன்பாக கேட்டுக் கொண்டாள்.
பத்மா, அம்மா, என்னை மன்னித்து விடுங்கள்.. நான் கண்டிப்பாக இன்னொரு நாள் வந்து சாப்பிடுறேன் அதுவும் எம் பையனோட வாரேன் என்று கூறி வீட்டுக்குத் திரும்பினாள்.
ஹாசினி,”அவங்க அம்மாவின் தேடி சமையல் அறைக்கு சென்று பின்னால் நின்றிருந்தாள். “
நளினி, “என்னடி எம் பின்னால நின்னுட்டு இருக்குற, எப்போதும் எம் பக்கத்துல் கூட வரமாட்ட? இன்னிக்கு என்ன புதுசா வந்திருக்கிற என நக்கலாக கேட்டாள்.
ஹாசினி, “என்னம்மா! நீ உம் பொண்ணு .இன்னிக்கு உன் கையால சாப்பிடனும் போல இருக்கு. அதான் வந்தேன்.
நளினி, அப்படியா! நீ இங்கயே உட்காரு. எடுத்துட்டு வாரேன். தட்டினில் எடுத்து வந்து பிசைந்து கொண்டே இன்னும்மா சாப்பிடாம இருக்குற,
ஹாசினி, “ஆமா.. மா எனக்கு பசியே இல்லை. தூங்க போகலாம்னு தான் நினைச்சேன் .இரவு நேரத்தில் சாப்பிடாமல் இருந்தா தூக்கமே வராது என்றாள். “
நளினி ,”சரி.. நல்லா சாப்பிடு. அம்மா உனக்கு ஊட்டி விடுறேன் என சந்தோஷமாக ஊட்டிக் கொண்டிருந்தாள் .அந்த சமயத்தில் கணேஷனும் வந்தான்.
கணேஷன்,” அம்மாவும் பொண்ணும் என்ன பண்றீங்க, “
ஹாசினி, “அப்பா ,நீங்களும் இப்ப தான் வர்றீங்களா, வாங்க வந்து உட்காருங்க, சாப்பிடலாம்.
கணேஷன்,” இல்லடா!, அப்பா வரும்போதே சாப்பிட்டேன். என்னோட சிநேகிதன் கடைக்கு வந்திருந்தான். அவன்தான் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினான்.
ஹாசினி, “சரிங்க, டாடி, ஆல்ரெடி நீங்க சாப்பிட்டே வந்தாச்சு..
கணேஷன், “செல்லம், இன்னிக்கு பங்கஷன் எல்லாம் எப்படி போச்சு,
ஹாசினி,”எல்லாமே பர்பெக்ட்டா இருந்துச்சு,நீங்களும் பெரியப்பாவும் இல்லை என்கிற குறை.
கணேஷன்,”அதான் நாங்க கேக் வெட்டும் போது இருந்தோம்மே,
ஹாசினி, “ஓ.. அதுக்கு மட்டும் தான் இருந்தீங்க, என்னோட ப்ரண்ட்ஸ் கேக் வாங்கிட்டு வந்தாங்க, அது தெரியுமா?,
கணேஷன், “ஸாரிம்மா, அப்பாவுக்கு அவசர வேலை வந்துடுச்சு, இன்னொரு முறை கண்டிப்பாக நாள் முழுவதும் இருக்குறேன் .
ஹாசினி, “இத எந்த டைரியில் எழுதி வைக்கனும், சொல்லுங்கப்பா, என கிண்டலாக பேசினாள்.
நளினி, “ஏம்மா!அப்பா பாவம் விட்டுரு என கூறியதும், ஹாசினியும் அவங்க அப்பாவின் தோளில் சாய்ந்தாள்.
டேய் ,ஆனந்த் நீ எங்க இருக்குற?,பக்கத்துல ஆகாஷ் இருக்கானா,
ஆனந்த், “ஆகாஷ் இங்க இல்லை என பொய் சொன்ன அவனிடம் சட்டுனு போனை வாங்கி சொல்லும்மா.. இன்னிக்கு ஹாசினி வீட்டுக்குப் போனீங்களா ?,பங்கஷன் எல்லாம் நல்லா முடிஞ்சதா?,
நந்தினி, “ம்ம்ம், எல்லாமே சிறப்பாக முடிந்தது. உன்கிட்ட ஒன்னு கொடுக்கச் சொன்னாள். நீ எங்க இருக்குற கொஞ்சம் பஸ் ஸ்டாண்டில் வந்து வாங்கிக் கொள்ள முடியுமா?,
ஆகாஷ், “என்னால இப்ப வெளியே வர முடியாது. ஆனந்தை அனுப்பி விடுறேன்.
ஆனந்த், “அட போடா? உனக்கு வேற வேலையே இல்ல!, அவ ஏதாவது பொய்சொல்வாள் .நம்மள அலைய வைக்கிறது தான் இந்த பொண்ணுங்களோட பிழைப்பே!,
ஆகாஷ், “எனக்காக இந்த உதவி மட்டும் செய்யுடா?,
ஆனந்த், “சரி.. சரி. கிளம்புறேன்..
ந்நதினியிடம் வாங்கி வந்த கடிதத்தை ஆகாஷீடம் கொடுத்தான் ஆனந்த்.
ஆகாஷ், “சந்தோஷமாக பிரித்து படிக்க ஆரம்பித்தான் இறுதியில் இக்கடிதத்தை யாரிடமும் காட்டி விடக்கூடாது. நம்ம இருவரும் கொஞ்ச நாள்கள் பிரிந்து இருப்போம் எனக் குறிப்பிட்டிருந்தது.
ஆனந்த், “என்னடா!,அதுல அவ என்னதான் சொல்லியிருக்கா!,
ஆகாஷ், அதெல்லாம் ஒன்னுமில்ல, இது எங்க இருவருக்கும் உள்ள ரகசியம்.இப்போதைக்கு யாருக்கும் தெரியக்கூடாது என கூறியிருக்கிறாள்.
கண்களைத் திறந்து அக்கடிதத்தை பார்க்க, அப்படியே மடக்கி பர்ஸில் வைக்க சென்றவனோ திடீரென்று இதுல இருந்தா திரும்பவும் அம்மா கேட்பாங்க?,அதனால் நம்முடைய காலேஜ் டைரியில் வைத்து விடலாம் என முடிவு செய்தான்.
ப்ளாஷ்பேக் முடிந்தது…
பவித்ரா.. ஆகாஷீன் கதவைத் தட்ட, வேகமாக திறந்தான்.
ஆகாஷ், “உன்னை அப்பா வரச் சொன்னாங்க,
கார்த்திகேயன்,”அவனை எங்க?
ஆகாஷ், “ஆஹாம் சொல்லுங்கப்பா!
கார்த்திகேயன், “உட்காரு, முதலில் சாப்பிடு. அப்புறம் விஷயத்தைச் சொல்றேன்.
கார்த்திகேயன், “”உனக்கு வேலைக்குப் போகனும்னு ஆசை இருக்கிறதா?,
ஆகாஷ், “அப்படி எதுவும் இல்லப்பா என பொய் சொன்னான்.
கார்த்திகேயன், “எனக்கு தெரியும்டா “உனக்கு செல் சர்வீஸ் கடை வைக்கனும்னு ரொம்ப நாள் ஆசைப்பட்டு இருக்குற,
ஆகாஷ், “ம்ம்ம். ஆசைப்பட்டதெல்லாம் கிடைச்சா நான் எதுக்கு இப்படி இருக்கப் போறேன் .எதுவுமே நடக்காது என. மன உளைச்சலில் பேசினான்.
கார்த்திகேயன், “டேய்! நம்ம தகுதிக்கு ஏற்றது கட்டாயம் நமக்கு கிடைக்கும். நீ ஆசைப்படுகிற கடை ஏற்பாடு செய்துட்டேன். அதுவும் நம்ம ரைஸ்மில்லு அருகேயுள்ளது தான். உனக்கு சம்மதமா?,
ஆகாஷ், “இல்ல எனக்கு எந்த கடையும் வேண்டாம் .எப்போதும் வீட்டுலயே இருந்துக்கிறேன். எனக்குப் பிடிச்ச எதுவும் நடக்கல என வெறுத்து பேசினான்.
பவித்ரா, “ஏனுங்க நம்ம பையனை உங்க கட்டுப்பாட்டுக்குள்ள வைச்சாலும் அவ நினைப்பு இங்க இல்ல, அத மட்டும் என்னால உறுதியாக சொல்ல முடியும். அவனுக்கு இன்னும் நம்ம மேல இருக்குற கோபம் போகல என்றாள்.
ஆனந்த், “ஹேய் ஆகாஷ் இப்ப நீ எங்கடா இருக்குற ‘
ஆகாஷ், “வேற எங்க வீட்டுல தான் “
ஆனந்த், “ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் அதுவும் இப்பவே உங்கிட்ட சொன்னால் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும்.
ஆகாஷ், “ம்ம்ம்.. சொல்லுடா..
ஆனந்த், “நீ நினைக்கிற மாதிரி ஹாசினி உன்னை நினைச்சுட்டு இல்ல அவ வேற ஒரு பையனோட போனில் பேசிட்டு இருக்குறா?,
ஆகாஷ், “நீ உண்மைய தான் சொல்றீயா?
ஆனந்த், “ஆமா, அவளுக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம் நடக்கப்போகுதாம். அதுவும் வீட்டுல வைச்சு தான். இன்னும் நீ அவளையே நினைச்சுட்டு எந்த வேலைக்கும் போகாமல் இருப்பது ரொம்ப தப்பு. அவ்வளவு தான் சொல்லுவேன் என அழைப்பைத் துண்டித்தான்.
வானில் தொடரும்..
Intha aanath yen saguni vela pakkuthu… Avanga pirachanai avanga parthuppanga … Yen iven ipdi panran…