Loading

தன்னை வழி மறித்து நின்ற கயவனை அனுஷியா அதிர்ச்சியுடன் நோக்க, ஒரு கையால் சிகரெட்டை வாயில் வைத்து ஊதித் தள்ளியபடி உதடு சுழித்து ஏளனச் சிரிப்புடன் அனுஷியாவை நோக்கி நடந்து வந்தான் அக் கயவன்.

சத்யன் கண்ணில் பட்டு விடக் கூடாது என்பதற்காக ஆள் நடமாட்டம் அற்ற பாதையைத் தேர்ந்தெடுத்து ஓடி வந்த தன் முட்டாள்தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டாள் அனுஷியா.

“என்ன பேபி? நேத்து தப்பிச்சது போல இன்னைக்கும் தப்பிச்சிடலாம்னு பார்க்குறியா?” எனக் கேட்டவாறு அனுஷியாவின் கரத்தை வலுக்கட்டாயமாக பற்றி, சிகரெட் புகையை அனுஷியாவின் முகத்தில் ஊதியவன், “என்னவோ பெரிய உத்தமி போல சீன் போடுற… ஆஃப்டரோல் கேவலமான  ******* நீ…” என வார்த்தைகளில் விஷத்தைக் கக்கினான்.

இதுநாள் வரையிலும் இப்படி ஒரு வார்த்தையை யாரிடமும் கேட்காத அனுஷியாவிற்கு அக் கயவனின் பேச்சில் கண்கள் கலங்கின.

“நா…நான் நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு இல்ல… ப்ளீஸ் என்னை விட்டுருங்க…” எனக் கெஞ்சினாள் அனுஷியா.

ஆனால் அக் காமுகனோ அனுஷியாவின் கெஞ்சலை செவிமடுக்காது அவளை முத்தமிட நெருங்கினான்.

தன் மானத்தை காப்பாற்றுவதற்காக மற்ற கையால் அனுஷியா அக் கயவனைத் தள்ளி விட முயற்சிக்க, அவனோ அனுஷியாவே எதிர்ப்பாராத சமயம் அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

அனுஷியா வலி தாங்காமல் கீழே விழ, அவளின் உதடு கிழிந்து இரத்தம் வருவதை ஆசை தீர ரசித்த அக் கயவன் அனுஷியாவை நெருங்கி அவளின் உதட்டில் இருந்து வழிந்த இரத்தத்தை ஒரு விரலால் துடைத்து தன் நாவில் வைத்து ருசித்தான்.

அனுஷியா அவனை அருவருப்புடன் நோக்க, “உன் ப்ளெட்ட டேஸ்ட் பண்ணிட்டேன்… உன்ன டேஸ்ட் பண்ண வேணாமா பேபி?” என இகழ்ச்சியுடன் கூறிய கயவன் சட்டென அனுஷியாவின் மீது மொத்தமாய் படர்ந்து அவளை அடைய முயன்றான்.

தன் மொத்த பலத்தை உபயோகித்து அனுஷியா அவனிடம் இருந்து விடுபடப் போராட, ஏற்கனவே மனதளவில் பலவீனமாய் இருந்தவளின் முயற்சி அனைத்தும் வீணானது.

இறுதியில் அவளின் உடலை மறைத்திருந்த உடையையும் அக் கயவன் விலக்க முயல, ‘இதுக்கு நீ என்னைப் பெத்தவங்களோட என்னையும் கொன்னிருக்கலாம் கடவுளே…’ என மனதில் எண்ணியவளின் விழிகள் கண்ணீரை சிந்தின.

திடீரென தன் மேல் இருந்த கனமான சுமை விலகவும் மெல்ல இமை திறந்து நோக்கிய அனுஷியா கண்டது தன்னை கற்பழிக்க முயற்சித்தவனை முன் தினம் தான் காப்பாற்றியவன் அடித்துக் கொண்டிருப்பதைத் தான்.

காலையில் அனுஷியா கூறி விட்டுச் சென்றதை எண்ணியபடியே தன் வண்டியில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த பல்லவன் ஏதோ சிந்தனையில் அனுஷியாவின் நல்ல நேரமோ என்னவோ வழி மாறி வேறு வழியில் வண்டியை செலுத்தினான்.

சில நிமிடங்களில் சுயத்தை அடைந்த பல்லவன் தெரு ஓரமாய் யாரோ ஒருவன் ஒரு பெண்ணிடம் அத்துமீற முயற்சிப்பதை நொடியில் புரிந்து கொண்டு உடனே வண்டியை விட்டு இறங்கி அவ்விடம் நோக்கி ஓட, இரவு தன்னைக் காப்பாற்றிய தேவதையிடம் அக் கயவன் தவறாக நடக்க முயற்சிப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றான்.

நொடியும் தாமதிக்காது அக் கயவனின் கழுத்தைப் பிடித்து இழுத்து அவன் எதிர்த்தாக்குதல் நடத்த முன்னரே முகத்தில் பல குத்துகள் விட்டு அடி பிண்ணி எடுத்தான்.

அனுஷியா மெது மெதுவாக மயக்க நிலைக்கு செல்ல, அவளிடம் ஓடிய பல்லவன் தான் அணிந்திருந்த சட்டையைக் கழற்றி அனுஷியாவிற்கு அணிவித்தவன், “ஹலோ… மேடம்… மேடம்… இங்க பாருங்க…” என அவளின் கன்னத்தில் தட்டினான்.

ஆனால் அனுஷியாவோ கண்களில் கண்ணீருடன் பல்லவனை நன்றிப் பார்வை பார்த்துவிட்டு மயங்கி விடவும் மறு நொடியே அவளைத் தன் கரங்களில் ஏந்திச் சென்று வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் பல்லவன்.

இங்கு பல்லவனிடம் அடி வாங்கிய கயவனோ அவர்கள் இருவரையும் வஞ்சத்துடன் வெறித்து விட்டு, “என்னையே அடிச்சிட்டேல்ல… உங்கள சும்மா விட மாட்டேன்… நான் யாருன்னு காட்டுறேன்…” என சூளுரைத்தவன் யாருக்கோ கைப்பேசியில் அழைத்து பேசினான்.

மருத்துவமனையில் அனுஷியாவைப் பரிசோதித்த மருத்துவர், “மிஸ்டர் பல்லவன்… சரியான நேரத்துல போய் நீங்க அவங்கள காப்பாத்தி இருக்கீங்க… அவங்களுக்கு பிஷிக்கலா எந்த அப்பியூஸும் நடக்கல… மென்டலி வீக்கா இருக்காங்க… அதனால தான் மயங்கிட்டாங்க… கொஞ்சம் நேரத்துல கான்ஷியஸ் வந்துடும்… வார்டுக்கு மாத்தினதும் நீங்க போய் பார்க்கலாம்…” என்கவும், “ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்…” என்றான் பல்லவன்.

பல்லவன் கீழே சென்று அனுஷியாவிற்கான மருந்தை வாங்கி வர, “சார்… நீங்க கூட்டிட்டு வந்த பொண்ணுக்கு கான்ஷியஸ் வந்திடுச்சு… பட் ட்ரிப்ஸ் எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு பயங்கரமா கத்தி அழுதுட்டு இருக்காங்க… நாங்க எவ்வளவு சமாதானப்படுத்த ட்ரை பண்ணியும் எங்களால முடியல…” என்ற மறு நொடியே அனுஷியா இருந்த அறைக்கு ஓடினான் பல்லவன்.

“வராதீங்க… வராதீங்க… யாரும் என் பக்கத்துல வராதீங்க… எனக்கு பயமா இருக்கு… அம்மா… என்னையும் உங்க கிட்ட கூட்டிப் போங்கம்மா…” எனக் தலையில் அடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள் அனுஷியா.

அனுஷியாவின் கரங்களைப் பிடித்து தடுத்த பல்லவன், “ஹேய் ஹேய்… காம் டவுன்… காம் டவுன் மா… நத்திங் டு வொர்ரி… உனக்கு எதுவும் ஆகல…” என்கவும் தான் அவனின் முகத்தை ஏறிட்டாள் அனுஷியா.

பல்லவனைக் கண்டதும் தான் எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து உள்ளோம் என்பதை நினைத்துப் பார்க்கவும் பயத்தில் அனுஷியாவின் உடல் சிலிர்த்தது.

அவளின் பயத்தைப் புரிந்து கொண்ட பல்லவன் தன் அழுத்தத்தை அதிகரிக்க, சட்டென அவனிடம் இருந்து விலகிய அனுஷியா, “எனக்கு பிடிக்கல… வேணாம்… என்னால இந்த உலகத்துல ஒரே பொண்ணா அநாதையா தனியா சமாளிக்க முடியல… அம்மா… அப்பா… என்னையும் உங்க கூட கூட்டிப் போங்க…” என பழையபடி அழ ஆரம்பித்தாள்.

பல்லவன் எவ்வளவு முயற்சித்தும் அனுஷியா சமாதானம் அடையாமல் போகவும், “ஷட்டப்… ஷ்ஷ்ஷ்…” எனச் சத்தமிட்டான் பல்லவன்.

அதில் பயந்து அனுஷியா சட்டென அமைதியாகி விட, மெலிதாகப் புன்னகைத்த பல்லவன், “சாரி… உன் நேம் என்ன?” எனக் கேட்டான்.

“அ…அனுஷியா…” எனப் பயம் விலகாமலே அனுஷியா பதிலளிக்க, “ம்ம்ம்… அனு… நைஸ் நேம்… பயந்துட்டியா? சாரி… உன்னை அமைதிப்படுத்த எனக்கு வேற வழி தெரியல…” என்றான் பல்லவன்.

அனுஷியா பதிலளிக்காது இருக்கவும், “ஆஹ்… என்னைப் பத்தி எதுவும் சொல்லலல்ல நான்… ஐம் பல்லவன்… உனக்கு யாரும் இல்ல அநாதைன்னு சொன்ன… எனக்கு எல்லாரும் இருந்தும் நானும் அநாதை தான்…” என்றவன் அவள் முன் நட்புக் கரம் நீட்ட, தயக்கமாக பதிலுக்கு கை குலுக்கினாள் அனுஷியா.

“ஆமா… ஊருக்கு மட்டும் தான் உபதேசமா? உங்களுக்கு இல்லையா?” எனப் பல்லவன் கேட்கவும் அவனைக் குழப்பமாக ஏறிட்டாள் அனுஷியா.

பல்லவன், “இல்ல… மார்னிங் எனக்கு அட்வைஸ் பண்ணீங்க… இப்போ நீங்களே வாழ பிடிக்கலன்னு சொல்றீங்க…” என்கவும் தலை குனிந்தவாறு கண்ணீர் சிந்தினாள் அனுஷியா.

ஒரு விரலால் அனுஷியாவின் தாடையைப் பற்றி தன் முகம் காண வைத்த பல்லவன், “அனுஷியா… நீங்க சொன்னதையே தான் நான் உங்களுக்கு திரும்ப சொல்றேன்… பிரச்சினைன்னு வந்தா உயிர விடுறது தான் வழின்னா இந்த உலகத்துல மனுஷங்களே இருக்க மாட்டாங்க… உங்க வலி எனக்கு புரியிது… பட் எல்லா விஷயத்தையும் பாசிடிவ்வா பாருங்க… இப்போ எவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து நீங்க தப்பி இருக்கீங்க… ஒரு வேளை நான் அந்த இடத்துக்கு வராம போய் இருந்தேன்னா என்ன நடந்து இருக்கும்? நான் ஏன் ரோங் ரூட்ல வரணும்? நீங்க ஏன் சரியா என் கண்ணுல படணும்? எல்லாத்துக்குமே ஏதோ காரணம் நிச்சயம் இருக்கும்… ஒரு பொண்ணா தனி மனுஷியா இந்த உலகத்துல உங்களால சமாளிக்க முடியாதுன்னு சொன்னீங்க… அது தப்பு… பொண்ணா இருந்தா யாரையாவது நம்பி தான் இருக்கணுமா? ஏன் ஒரு பொண்ணால சொந்த கால்ல நிற்க முடியாதா? முடியும்… நீங்க சாதிக்க வேண்டியது இந்த உலகத்துல எவ்வளவோ இருக்கு… அதுக்காக தான் என் மூலமா கடவுள் அந்த இடத்துல உங்கள காப்பாத்த வெச்சிருக்கார்…” என்றான்.

“என்னால என்ன பண்ண முடியும்? உங்களுக்கு என்னைப் பத்தி எதுவுமே தெரியாது… அதனால தான் இப்படி சொல்றீங்க…” என்ற அனுஷியா தன்னைப் பற்றி அனைத்தையும் கூறி விட்டு பல்லவனின் முகம் நோக்க, அவனோ அதே புன்னகையுடன் அவளை நோக்கிக் கொண்டிருந்தான்.

“ப்ச்… இவ்வளவு தான் விஷயமா? இதுல உங்க தப்பு என்ன இருக்கு? நீங்க ஒன்னும் வேணும்னு அங்க போகலயே… சந்தர்ப்ப சூழ்நிலையால அந்த இடத்துல மாட்டிக்கிட்டீங்க… மாட்டிக்கிட்டீங்கன்னும் சொல்ல முடியாது… தன்னோட நிலைமை உங்களுக்கு வரக் கூடாதுன்னு அங்க இருந்தவங்க உங்கள கவனமா பார்த்துக்கிட்டாங்க… அவங்க கூட தப்பானவங்க கிடையாது… உங்களுக்கு கிடைச்ச வாய்ப்பு கூட அவங்களுக்கு கிடைக்கல… பட் அது கூட நிரந்தரம் இல்ல… உங்களால அவங்க வாழ்க்கைய மாற்ற முடியும்… அவங்களாலயும் வெளி உலகத்துல தலை நிமிர்ந்து வாழ முடியும்… அதை நடத்தணும்னா முதல்ல நீங்க தன்னம்பிக்கையோட இருக்கணும்… முடியுமா?” எனக் கேட்டான் பல்லவன்.

அனுஷியா ஆம் எனத் தலையசைக்கவும், “தெட்ஸ் மை கேர்ள்…” என்றான் பல்லவன் புன்னகையுடன்.

“பட் நான் இன்னும் காலேஜை கூட கம்ப்ளீட் பண்ணலயே… என்னால என்ன பண்ண முடியும்?” எனக் கேட்டாள் அனுஷியா வருத்தமாக.

பல்லவன், “எல்லாமே முடியும்… திங்க் பாசிட்டிவ்… அதுக்கு முன்னாடி நீங்க ஹெல்த்தியா இருக்கணும்… ஃபர்ஸ்ட் இந்த ஃப்ரூட்ஸை சாப்பிடுங்க…” என்றவன் ஒரு தோடம்பழத்தை எடுத்து தோலுரித்து அனுஷியாவிடம் நீட்டினான்.

அதனை வாங்கிய அனுஷியா, “தேங்க்ஸ்…” என்க, “இன்னும் என்ன தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு… நீங்க என் உயிரை காப்பாத்தி இருக்கீங்க… அதுக்காக நான் இதைக் கூட பண்ணலன்னா எப்படி?” எனப் பல்லவன் கேட்கவும் அனுஷியா புன்னகைக்க, அப் புன்னகையில் தன்னையே தொலைத்தான் பல்லவன்.

_____________________________________________________

“ஹேமா… நடக்குற எதுவுமே நல்லா இல்ல… இப்படியே போனா உன் அண்ணன் மொத்த சொத்தையும் ஏதாவது அநாதை ஆசிரமத்துக்கு எழுதி வெச்சிடுவான்… அப்புறம் நம்ம நடு ரோட்டுல பிச்சை எடுக்க வேண்டியது தான்…” என கிஷோர் தன் மனைவியைக் கடிந்து கொண்டான்.

“அது எப்படி கிஷோர் முடியும்? அந்த சொத்துல எனக்கும் பங்கு இருக்கு… ஆனா இந்த மொத்த சொத்தையும் அடையணும்னா அதுக்கு ஒரே வழி எங்க அண்ணனுக்கு உங்க தங்கச்சிய கட்டி வெச்சி அவ மூலமா சொத்த எங்க பெயருக்கு மாத்திக்கிறது தான்…” என மனசாட்சியே இன்றி பேசினாள் ஹேமா.

_____________________________________________________

“என்ன சொல்ற? நீ ஏன் அவள தப்பிக்க விட்ட? யாரோ அவள காப்பாத்தினதா வேற சொல்ற… இப்போ அவ யார் கிட்டயாவது வாய திறந்த நம்ம டோட்டல் பிஸ்னஸும் லாஸ் ஆகிடும்… ச்சே…” என எதிர் முனையில் இருந்தவனை வறுத்தெடுத்தார் சத்யன்.

“அப்படி எல்லாம் எதுவும் நடக்காது… அவ வாய திறக்காம இருக்க என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும்… நீங்க கவலைப்படாதீங்க… அவன் என்னையே அடிச்சிட்டான்… இதுக்கு அவன் பதில் சொல்லியே ஆகணும்…” என்றான் வன்மமாய்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்