Loading

கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்-1

ஆதவன் கூட துயில் களைய அலுப்புக் கொண்டு இன்னும் மேக போர்வையின் கதகதப்பில் சுகமாய் உறங்கிக் கொண்டு இருந்தான். அத்தகைய விடியற் பொழுதிலே இருவர் மூச்சு வாங்க ஓடிக் கொண்டு இருந்தார்கள். காலில் பூட்ஸ் அணிந்து மார்புக்கு குறுக்கே ஸ்போர்ட்ஸ் பேக்கை மாட்டிக் கொண்டு அரக்க பறக்க இருவர் கல்லூரி வளாகத்தின் உள்ளே ஓடிக் கொண்டு இருந்தார்கள். 

“டேய்.. இன்னிக்கு சீனியர் கிட்ட செத்தோம்.. சீக்கிரம் வந்து தொலை டா” என முன்னே ஓடிக் கொண்டு இருந்த ஒருவன் மூச்சு வாங்க இன்னொருவனை அவசரப்படுத்திக் கொண்டு இருந்தான். 

“எல்லாத்துக்கும் நீ தான் டா காரணம்.. நேத்தே சொன்னேன் நமக்கு first day ட்ரைனிங் சீக்கிரம் போனும்ன்னு.. கேக்காம படத்துக்கு கூட்டிட்டு போயிட்டு இப்போ என்ன அவசரப்படுத்துரியா நாயே” என ஓடியபடியே திட்டினான் அருள். சரணும், அருளும் இளங்கலை பயிலும் மாணவர்கள். இன்று அவர்களுக்கு NCC ட்ரைனிங்யின் முதல் நாள். இதற்கு முன்பே குழுவில் இருக்கும் அனைவரையும் அவர்கள் சந்தித்து இருக்கிறார்கள். அவர்களின் குழு தலைவன் மிகவும் கண்டிப்புடன் இருப்பவன். அதற்கு பயந்து தான் இருவரும் வேகமாய் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். விடியல் இன்னும் புலராமல் இருந்தாலும் அந்த புகழ்பெற்ற கல்லூரியின் விளையாட்டு  மைதானம் மாணவர்களால் உயிர்புடன் இருந்தது. கல்லூரியில் இருக்கும் ஒவ்வொரு குழுவும் மற்ற விளையாட்டு குழுக்களும் அவர்களின் காலை பயிற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். அந்த நேரம் மைதானம் முழுதும் ஒருவனின் குரல் எதிரொலித்தது.

“SQUAD SAVDHAAN” என அதிகாரம் நிறைந்த குரலில் சத்தமாய் உத்தரவிட மொத்த NCC மாணவர்களும் நேராக நெஞ்சை நிமிர்த்தி attentionயில் நின்றார்கள்.

“SQUAD VISHRAM” என்ற அடுத்த கட்டளையில் அனைவரும் கைகளை பின்னே கட்டிக் கொண்டு இரு கால்களுக்கும் பன்னிரண்டு இன்ச் சரியாக இடைவெளி விட்டு நின்று இருந்தார்கள். 

“DAHINE SE GINTI KAR” என அவன் கட்டளையிட அனைவரும் எண்ணிக்கைக்காக ஒன்றில் இருந்து வரிசையாக கூற துவங்கினார்கள். 

அருள், “போச்சு டா.. Counting ஆரம்பிச்சிட்டாங்க.. உன்னால தான் லேட்டு.. நாயே.” 

சரண், “சாரி டா.”

அவனை முறைத்தவன் ட்ரைனிங் நடக்கும் இடத்திற்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள். அவர்களின் சீனியர் இருவரையும் பயங்கரமாய் முறைத்தான். 

“முதல் நாள் ட்ரைனிங்க்கு லேட்டா வந்து இருக்கீங்க.. ஒரு நல்ல soldierக்கு ஒழுக்கம் தான் முக்கியம். ட்ரைனிங் அஞ்சு மணிக்குன்னு சொன்னா உங்களால வர முடியாதா? ஹாஸ்ட்டல்ல தானே இருக்கீங்க.. ஒழுக்கம் இல்லாதவன் எல்லாம் squadலையே இருக்க வேணாம்.. இப்படியே திரும்பி போங்க” என்று கடுகடுத்தான் அவர்களின் சீனியர் ஸ்ரீகாந்த். முதுகலை முதலாம் ஆண்டு படிக்கிறான். NCCயில் அவனுக்கு ஒழுக்கம் தவறினால் கொஞ்சமும் பிடிக்காது. இந்திய ராணுவத்தில் சேருவதே அவனின் உயிர் மூச்சு. அவன் மூச்சு காற்றாய் சுவாசிப்பதை அவமதித்தால் சுர்ரென்று கோவம் வந்து விடும். 

“சாரி சீனியர்” என்று இருவருமே மன்னிப்பு கேட்டார்கள். 

“பத்து லாப்ஸ் ஹோல் கிரவுன்டையும் சுத்தி ஓடுங்க” என்று முறைப்புடன் கட்டளையிட்டான் ஸ்ரீ.

“சீனியர்” என அதிர்ந்தார்கள் இருவரும்.

“இருவது லாப்ஸ்” என்று கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் மேலும் தண்டனையை கூட்டினான். அருளும் சரணும் வேறு வழி இல்லாமல் ஓட துவங்கினார்கள். அதன் பின் வழமை போல் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தான் ஸ்ரீகாந்த். 

“ச்சே மனசாட்சியே இல்லாம பண்றானே..” என்று முணுமுணுத்தான் சரண்.   

இருவரும் வேதனை உடன் ஓடிக் கொண்டு இருக்க மற்ற அனைவரும் இனி தாமதமாய் வரவே கூடாது என்று நினைத்துக் கொண்டார்கள். அதன் பின் மூன்று மணி நேரம் பயிற்சி ஒரு வித இறுக்கத்திலே இருந்தது. 

“VISARJAN” என ஸ்ரீகாந்த் கூறிட அனைவரும் அவனுக்கு salute அடித்து அடுத்த நிமிடம் தரையில் பொத்தென்று அமர்ந்தார்கள். Squadயில் இருக்கும் நாற்பத்தி ஐந்து பேருக்கும் அப்போது தான் ஆசுவாசமாய் இருந்தது. 

“என்ன முதல் நாளுக்கே இப்படி ஆகிட்டிங்க” என்று கேட்டு கமுக்கமாய் சிரித்தான் ஸ்ரீகாந்த். அனைவருக்கும் அவனை முறைக்க வேண்டும் என்பது போல் இருந்தது. ஆனால் முதல் நாளே அவர்களுக்கு அந்த தையிரியம் இல்லை. பாவம் அனைவரும் அவனுக்கு ஜூனியராக இருந்தார்கள். 

“ட்ரைனிங் அப்போ மட்டும் தான் நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் மத்த நேரத்துல ஒரு அண்ணாவா friendடா நீங்க என் கிட்ட தாராளமா பேசலாம்” என்றான் ஸ்ரீகாந்த். 

“சீனியர் எனக்கு ஒரு டவுட்.. கேர்ள்ஸ் நாங்க லேட்டா வந்தாலும் இப்படி தான் பணிஷ்மென்ட் குடுப்பிங்களா?” என்று ஒரு பெண் ஆர்வமாய் கேட்டாள்.

“Squadன்னு வந்துட்டா நான் பசங்க தனி பொண்ணுங்க தனின்னு பாக்க மாட்டேன்.. எனக்கு டிசிப்ளின் ரொம்ப முக்கியம்” என கறாராக கூறினான். அனைவரும் அதில் அமைதியாகினார்கள். இதில் பசங்களுக்கு தான் குஷியாக இருந்தது. 

“சரி உங்க கிளாஸ்க்கு டைம் ஆச்சு போலாம்.. நெக்ஸ்ட் எப்போ ட்ரைனிங்ன்னு நான் சார் கிட்ட கேட்டு இன்போர்ம் பண்றேன்” என கூறவும் அனைவரும் அவனிடம் இருந்து விடைபெற்று சென்றார்கள்.

“அருள், சரண்.. ரெண்டு பேரும் நில்லுங்க” என்று கூறவும் இருவருக்கும் தொண்டை வரண்டது. ஏற்கனவே ஓடிய கலப்பில் நிற்க கூட முடியாமல் நின்று இருந்தார்கள்.

“ட்ரைனிங்ல பணிஷ்மென்ட் எல்லாமே சாதாரணம் தான்.. இனிமேல் ரிபிட் ஆகாம பாத்துக்கோங்க..” என்று கூறி அவனின் பையை எடுத்துக் கொண்டு மென்ஸ் ரூம் நோக்கி சென்றான் ஸ்ரீகாந்த். 

“இவ்ளோ பெரிய கிரவுண்ட்டை ஓட விட்டு ஆறுதல் சொல்றாராம்.. போயா…” என்று முணுமுணுத்தான் சரண்.

மென்ஸ் ரூம் சென்று குளித்து முடித்தவன் நேராக காலேஜ் கேன்டீன் சென்று காலை உணவை உண்டுக் கொண்டு இருந்தான். அப்போது  அவனை தேடி அவனின் நண்பன் அங்கு வந்தான்.

“என்ன மச்சி.. ஃபோர்மல்ல கலக்குற..” என்று அவன் தோளை இடித்தபடியே வந்து அமர்ந்தான் ராஜேஷ்.

“எரும இன்னிக்கு மேஜர் லேப்.. ஃபோர்மல் ல இல்லன்னா உள்ளவே விட மாட்டான் அந்த ஆளு” என்று கூறினான் ஸ்ரீகாந்த். 

“சொல்லவே இல்ல..” என கூறியபடியே சட்டையை இன் செய்தான் ராஜேஷ். 

“ஆமா எங்க டா அந்த குட்டி சாத்தான்.. அவ கிட்ட தான் என் லேப் நோட்டு இருக்கு.. அது இல்லாம வேற உள்ள விட்டு தொலைய மாட்டானுங்க” என்று கடுப்படித்தான் ஸ்ரீ. 

“அவ எழுந்துருச்சி கிளம்பி வர்றதுக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும்” என்று பெருமூச்சு விட்டான். 

“இன்னும் அரமணி நேரத்துல லேப் ஆரம்பிச்சிரும் நாயே.. அவளை வரச் சொல்லு” என ஸ்ரீ திட்டவும் அவர்களின் ஒரே தோழி ஜூலிக்கு அழைத்தான் ராஜேஷ். கால் போய்க் கொண்டே இருந்ததே தவிர அவள் அழைப்பை ஏற்கவில்லை. 

“மச்சான் போனை silentல போட்டுட்டு தூங்குறாளோ.. எடுக்க மாட்டிங்குரா”

“டேய்.. லேப் போகலைனா இன்டர்னல்ஸ்ல கை வச்சிடுவான் டா” என அவன் கூறிக் கொண்டு இருக்கும் போதே முதல் பெல் அடித்தது. 

“வா டா போவோம்.. அவ வந்துட்டே இருப்பாளோ என்னவோ” என ராஜேஷ் கூற இருவரும் எழுந்து லேப்யை நோக்கி ஓடினார்கள். வேகமாய் ஓடியவர்கள் ஜூலியை தேடிட அவளோ  லேப் உள்ளே அமர்ந்து இருந்தாள். நேராக இருவரும் அவளிடம் சென்று அவள் தலையிலே கொட்டினார்கள். 

“பிசாசு போன் எங்க டி?”

“சாரி ராஜேஷ் பேக்லையே வச்சிட்டேன்.. நீ தான் கால் பண்ணியோ? அதானே பாத்தேன் என்னடா நமக்கு புடிச்ச பாட்டு எங்கையோ ஓடுதேன்னு” என்று அசட்டையாக கூறினாள் ஜூலி. 

“வெண்ண மவளே.. எங்க டி என் லேப் நோட்?” 

“ஐயோ.. என் பேக்ல இருக்கு டா.. நீயே போய் எடுத்துக்கோ..” என்று கூறிட அவளை முறைத்தான் ஸ்ரீ. அவள் தலையிலே தட்டிவிட்டு நோட்டை எடுக்க கதவை திறந்து வெளியே வந்தவன் அதே இடத்தில் சிலையாகி நின்றான். அடர் நீல நிற சல்வாரில் குதிரைவாளுடன் ஒரு பெண் அவனின் வகுப்பை சேர்ந்த பெண்களுடன் நடந்து வருவதை பார்த்து அப்படியே உறைந்து நின்றான். புதிய இடத்திற்கு வந்ததால் என்னவோ அந்த பெண்ணின் கண்ணில் சிறிதாய் அச்சம் தெரிய அந்த கண்ணில் விழுந்தவன் சிக்கி தவித்துக் கொண்டு இருந்தான். அந்த பெண் ஒரு சிஸ்டம் முன்னே சென்று அமைதியாய் அமர அவனின் பார்வை அவளை விட்டு ஒரு நொடி கூட விலகவில்லை. வகுடெடுத்த தலை, நெற்றியில் கடுகு போல் பொட்டு அதற்கு மேல் மெல்லிய கீற்றாய் கும்குமம். தயக்கத்துடன் சுற்று புரத்தை பார்க்கும் விழிகள், என பார்த்தவன் விழிகள் அவள் கன்னத்தில் அழகாய் இருக்கும் மச்சத்தில் நிலைத்து நின்றது. ஏனோ அவனுக்கு அந்த ஏசி அறையிலும் வேர்த்து கொட்ட படபடப்புடன் புதிதாய் வந்தவளை பார்த்துக் கொண்டு இருந்தான். அவனின் வகுப்பை சேர்ந்த அனைவருமே அந்த பெண்ணை தான் புதிதாய் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். வகுப்பில் இருந்த மற்ற பசங்கள் சும்மா இருப்பார்களா?  உடனே அந்த பெண்ணை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள். அவளோ யாரையும் எதிர் கொள்ள முடியாமல் தயக்கத்துடனே அமர்ந்து இருந்தாள். ஆனால் ஸ்ரீ அதை எல்லாம் கவனிக்கும் எண்ணத்தில் இல்லை. அவன் சுற்று புறத்தையே மறந்து பட்டாம்பூச்சியாய் படபடக்கும் இமைகளுக்கு கீழ் இருக்கும் அவளின் கண்களையே ரசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு அந்த பெண்ணை தவிர வேறு யாரும் கண்ணிற்கு தெரியவில்லை.

“ஸ்ரீகாந்த்” என்று கர்ஜனையாய் பெரும் குரல் ஒலிக்கவும் தான் நடப்பிற்கே வந்தான். அவனின் பேராசிரியர் தான் கத்தி இருந்தார்.

“உன்ன எத்தனை தடவ கூப்புடறது.. செவுடன் மாதிரி நின்னுட்டு இருக்க.. பிரேயர் முடிஞ்சி கிளாஸ் ஸ்டார்ட் ஆச்சு.. நீ இன்னும் வராம வாசல்லே நிக்குற.. கூப்புட கூப்புட பதில் சொல்லாம இருக்க .. உனக்கு இந்த லேப் ஆப்சென்ட் தான்.. வெளிய போ” என்று கத்தினார். அப்போது தான் சூழலை உணர்ந்தவன் லேபை  பார்த்தான். அந்த புது பெண் உள்பட அனைவரும் அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர் முடிவை மாற்ற மாட்டார் என அறிந்தவன்,

“சாரி சார்” என்று கூறி லேபைவிட்டு வெளியேறினான். அவனின் நண்பர்களோ அவனுக்கு என்ன ஆனது என புரியாமல் பார்த்தார்கள்.

“ச்சே.. அந்த பொண்ணு முன்ன இப்படி அசிங்கப்பட்டோமே” என்று நொந்தபடியே வெளியே வந்தவன் அவனின் ஜூனியர் அருளையும் சரணையும் சந்தித்தான். இருவரும் அனைத்தையும் கேட்டு, இது தான் உன் ஒழுக்கமா? என்பது போல் அவனை பார்க்க, அசடு வழிந்தான் ஸ்ரீகாந்த்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
16
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    8 Comments

        1. Senior payangarama asinga padurapappula ithellam thevaiya ithukku thaan overa pesa kudathu nnu sollurathu ❤️❤️ waiting next epi

    1. ஜூனிர்யஸ் கிட்ட டிசிப்ளினை பத்தி பக்கம் பக்கமா பேசிட்டு இப்படி அவங்க முன்னாடி அசிங்கப்பட்டு நிற்கிறீர்களே சீனியர் இதுதான் உங்க டிசிப்ளினா 😂😂

        1. இதுதான் உங்க ஒழுக்கமா 🤣

    2. Adangappa usithamani 🤣🤣🤣. Un reel anthu pochu ra. Ithu therinjiruntha ne antha pasangaluku punishment kuduthruka matta. Ice vech info collect panirpa 🤣🤣🤣. Elathulayu intha mahi(writeruu) manna alli potutanagle 🤣🤣🤣.

      Semma ud da Mahi ❤️❤️❤️😍😍