கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்-15
மின்னல் வேகத்தில் காவல் நிலையத்திற்கு சென்று இருந்தான் யுகன். அவன் சென்ற நேரமோ சதாசிவம் குடுத்த புகாரை வாபஸ் வாங்கி கையெழுத்து போட்டுக் கொண்டு இருந்தார். வேகமாய் அவரிடம் ஓடிய யுகன், “மாமா.. என்ன ஆச்சு.. ருத்ரா எங்க இருக்கானு தெரியுமா?” என பதட்டத்துடன் கேட்டவனுக்கு பயத்தில் தொண்டை அடைத்தது. லக்ஷ்மி ருத்ரா பற்றி கூறியதும் அவனுக்கு நிலவன் மீது கோவம் ஒரு பக்கம் வந்தாலும் அவளுக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்ற பயம் அதிகமாய் இருந்தது. யுகனை கண்ட நொடி குலுங்கி அழ துவங்கிய சதாசிவம், “என் பொண்ண நானே இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டேன்.. எப்படியாவது என் பொண்ணை காப்பாத்தனும் தம்பி.” என அழுபவரை ஆறுதலாய் அனைத்தவன் புகாரை வாபஸ் வாங்கும் வேலையை அவனே முடித்தான். அவன் முகம் சாந்தமாய் இந்த வேலை செய்தாலும் அவன் மனம் குறுரமாய் ஒன்றை யோசித்தது. இருவரும் காவல் நிலையத்தை விட்டு வெளியே வர அடுத்த நொடியே நிலவனிடம் இருந்து சதாசிவத்திற்கு அழைப்பு வந்தது.
“உன் பொண்ணு தெரு முகனையில இருக்குற குப்பை தொட்டி பக்கத்துல கிடைப்பா அல்லிட்டு போ” என அகங்காரத்தில் கூறிய நிலவன் பட்டென்று அழைப்பை துண்டிக்க பதட்டத்துடன் இருவரும் அங்கு விரைந்தார்கள். ஆள் உருவத்தில் யாரோ குப்பை மேட்டில் படுத்து கிடப்பதை பார்த்ததுமே இருவருக்கும் நெஞ்சம் பதபதைத்தது. சதாசிவத்தை நிறுத்தி விட்டு யுகன் நெருங்கினான். மயக்க நிலையில் கலைந்த ஓவியமாய் இருக்கும் ருத்ராவை பார்த்ததுமே அவனின் இதயம் வலியில் துடித்தது.
“ருத்ரா… என்ன பாரு… பிளீஸ் கண்ண திற ருத்ரா..” என்று அவளை மடியில் கிடத்தியவன் அவளை எழுப்ப முயற்சிக்க சதாசிவம் ஓடி வந்தவர் மகளை கண்டதும் அவளின் கையை பிடித்துக் கொண்டு அழ துவங்கினார். “மாமா அழாதிங்க.. நம்ம உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனும்.. அவளுக்கு வேற போதை மருந்து குடுத்து இருக்கான்.” என பதட்டத்துடன் கூறிட உடனே வேக வேகமாய் ஆட்டோ ஒன்றை பிடித்தார் சதாசிவம். பூ குவியலாய் அவளுக்கு ஏதேனும் ஆகி விடுமோ என்ற அச்சம் உடனே தூக்கியவன் ஆட்டோவில் ஏறிக் கொள்ள சதாசிவம் ஏறிக் கொண்டார். நெஞ்சில் சாய்த்து இருந்தவளை பார்த்து அவளுக்கு ஒன்றும் ஆகாது என்று கூறி அவனுக்கு அவனே ஆறுதல் சொல்லிக் கொண்டான். அவனின் கண்ணீர் துளிகள் அவள் கன்னம் தீண்டியது. பத்தே நிமிடத்தில் மருத்துவமனை வந்து சேர்ந்த்திட அவசர சிகிச்சை பிரிவில் அவளை அனுமதித்தார்கள்.
“மாமா எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வரேன்.. ருத்ரா கண்ணு முழிச்சா உடனே எனக்கு கால் பண்ணுங்க” என இறுக்கத்துடன் கூறிய யுகன் அவரின் பதிலை கூட எதிர் பார்க்காமல் அங்கு இருந்து வெளியே வந்தான்.
கோவத்தில் கண்கள் சிவப்பேர ருத்ராவின் மயக்க நிலையே அவனின் மனதை பிழிந்தது. அவனின் ருத்ரா மீதே கை வைத்து இருக்கிறான் ஒருவன். அவனை சும்மா விட்டு விடுவானா? உடனே போனை எடுத்து ஒருவருக்கு அழைத்தான்.
“வணக்கம் வக்கில் தம்பி.. எப்படி இருக்கீங்க?” கணீர் என்ற ஒரு குரல் மகிழ்வுடன் ஒலித்தது. “நான் நல்லா இருக்கேன் பாய்.. எனக்கு உங்க உதவி தேவைப்படுது” என நேரடியாக விடையத்தை கூறினான் யுகன்.
“சொல்லுங்க தம்பி உங்களுக்கு இல்லாத உதவியா.. எனக்காக நீங்க இந்த கேஸ் ஜெய்ச்சி குடுத்து இருக்கீங்க. என்ன வேன்னாலும் நான் செய்ய தயார்” என்று கூறிட யுகன் அவனின் திட்டத்தை பற்றி கூறினான். அதை கேட்டு சிரித்தார் பாய்.
“தம்பி அவளோ தானா.. நீங்க பெருசா கேப்பிங்கன்னு நினைச்சேன்.. நீங்க வேலைய முடிச்சிட்டு சொல்லுங்க.. நான் என் ஆளுங்களை அனுப்பி வைக்கிறேன்.. இந்த பாய் ஆளுங்களை எதிர்த்து எவன் வரேன்னு பாக்குறேன்” என சீற்றத்துடன் அவர் கூறிட அழைப்பை துண்டித்தான் யுகன்.
அவனின் எண்ணம் போலவே வண்டியை எடுத்துக் கொண்டு நேராக பீச்சில் இருக்கும் கெஸ்ட் ஹவுஸ் பக்கம் சென்றான். அந்த பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருக்க ஒரு வீட்டின் முன்பு மட்டும் வெள்ளை நிற யுநோவா கார் ஒன்று நின்றது. தலையில் முகமூடி அணிந்தவன் தலை முதல் கால் வரை கருப்பு நிற உடையால் மறைத்திருந்தான். வீட்டின் கதவை காலால் எட்டி உதைத்து அராஜகமாய் உள்ளே நுழைய நடு ஹாலில் சோபாவில் அமர்ந்தபடி போதை மருந்தை உட்கொண்டு இருந்தான் நிலவன். கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவன் நிமிர்ந்து பார்க்க அவன் தலையிலே பூ ஜாடி ஒன்றால் ஓங்கி அடித்து இரத்தம் வர வைத்தான் யுகன்.
“ஆ… யாரு டா நீ” என வலியில் தலையை பிடித்துக் கொண்ட நிலவனுக்கு போதை மொத்தமாய் வடிந்து. அவனின் சட்டை காலரை பற்றி கொத்தாக பிடித்து தூக்கிய யுகன் நான்கு முறை நச் நச்சென்று அவன் தலையாலே வேகமாய் முட்டினான். அதில் நிலவன் மூக்கு உடைந்து இரத்தம் பீறிட்டது. நிலவன் அடிக்க கைகளை ஓங்க அதனை வளைத்து பிடித்தவன் அவனை திருப்பி நடு முதுகிலே ஓங்கி உதைத்தான். வெறித்தனமாக நிலவனை போட்டு அடி வெளுத்துக் கொண்டு இருந்தான் யுகன். ருத்ராவின் மயங்கிய முகம் அவன் கண் முன்னே வந்து செல்ல ஆக்ரோஷமாய் அடித்து வெளுத்தான். நிலவனால் எழுந்து நிற்க முடியவில்லை, தரையில் சுருண்டு விழுந்தவன் கையை நிலவன் சட்டையால் இருக்க கட்டியவன் மேஜையில் பரப்பி கிடந்த போதை மருந்து அருகே அவனை இழுத்து வந்தான்.
அனைத்து பாக்கெட்டையும் மேஜையில் கொட்டியவன் நிலவன் முடியை இறுக பற்றி அவனின் முகத்தை அந்த பவுடரில் அழுத்தினான். ஏற்கனவே அடி வாங்கிய வீரியத்தில் மூச்சு வாங்கிக் கொண்டு இருந்த நிலவனுக்கு இப்பொழுது மூச்சு திணறியது. அதிகப்படியான போதை மருந்து அவன் வாயிலும் நாசியிலும் நுழைந்தது. அதனின் தாக்கம் வேற அவனை ஆட்கொள்ள சுயத்திலே இல்லை நிலவன். அவன் தலையில் இன்னொரு பீர் பாட்டில்லால் அடித்து உடைத்தவன் அவன் தலையை நிமிர்த்தி, “பொறம்போக்கு நாயே.. என் ருத்ரா மேலையே கை வைக்குறியா.. அவளுக்கு நீ ட்ரக் இஞ்செக்சன் போடுறியா.. உனக்கு இதே போதை மருந்தால தான் டா சாவு..” என ஆக்ரோஷமாய் கூறிய யுகன் அவனின் தலையை பற்றி அப்படியே மேஜையில் ஓங்கி அடிக்க மேஜை உடைய உயிருக்கு ஊசலாடினான் நிலவன். பேச வாயெடுக்க அவனுக்கு தொண்டை வறண்டது. வலியிலும் போதையிலும் அவனுக்கு வாய் குலறியது.. அந்த நேரம் மூன்று ஆட்கள் அந்த இடத்தின் உள்ளே நுழைய யுகன் அவர்களை பார்த்து லேசாய் தலை அசைத்தான்.
“லாயர் சார் பாய் சொன்ன மாதிரி நாங்க முடிச்சரோம் நீங்க கிளம்புங்க” என ஒருவன் கூற சம்மதமாக தலை அசைத்தவன் நிலவனை ஒரு முறை பார்த்து விட்டு அங்கு இருந்து கிளம்பினான்.
மருத்துவமனையில் சதாசிவமும் லக்ஷ்மியும் கண்ணீருடன் அமர்ந்து இருந்தார்கள். உள்ளே ருத்ராவிற்கு தீவிர சிகிச்சை நடைபெற்றுக் கொண்டு இருந்தது. மூன்று மணி நேரம் ஆகியும் மருத்துவர் இன்னும் வெளியே வந்து எதுவும் கூறவில்லை. அவர்கள் காத்துக் கொண்டு இருக்க அமைதியான முகத்துடன் அவர்களிடம் வந்தான் யுகன். அவன் வந்து அமர்ந்ததும் சதாசிவம் அவன் தோளில் சாய்ந்து அழ துவங்கினார்.
“கவலைப்படாதீங்க மாமா.. ருத்ராக்கு ஒன்னும் ஆகாது. இனிமேல் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல” என தேற்றிக் கொண்டு இருந்தவன் ருத்ரா சீக்கிரம் கண்விழிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு இருந்தான். அவர்களை காக்க வைத்த பின்பு தான் மருத்துவர் நல்ல செய்தி உடன் வந்தார்.
“ஃபேஷன்ட்க்கு நினைவு திரும்பிடுச்சு.. இப்போ அவங்க லேசான மயக்கத்துல இருக்காங்க. டிரக் குடுக்கபட்டு இருந்ததுனால அதோட எஃபெக்ட் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கும். அவங்களுக்கு பிஸிகலா எந்த பிராப்ளம்மும் இதுக்கு அப்பறம் இருக்காது. ஆனா ரொம்பவே பயந்து இருக்குறதுனால அவங்களுக்கு கொஞ்சம் கண்சல்டிங் தேவைப்படும்.. அவங்களை தொந்தரவு பண்ணாம போய் பாருங்க” என்றிட மூவருக்கும் அப்பொழுது தான் திருப்தியாக இருந்தது. பெரியவர்கள் இருவரும் உள்ளே வேகமாய் சென்று பார்க்க சோர்ந்த முகத்துடன் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தாள் ருத்ரா. யுகன் அவளை பார்க்க தயங்கிக் கொண்டு இருந்தான். அந்த நிலையில் அவளை பார்க்கவே மனம் வலிக்க மெல்ல உள்ளே சென்றவன் கண்களில் கண்ணீர் படர்ந்து இருந்தது.
அதன் பின் இரண்டு நாட்களில் ருத்ராவை வீட்டிற்கு அழைத்து வந்திட அவள் யாரிடமும் பேசவே இல்லை. தூக்கத்தில் இருந்து பயந்து விழிப்பதும் அடிக்கடி அழுது கொண்டு இருப்பதுமாய் இருந்தாள். அவளை வழமையாக மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று வருவான் யுகன். அவளை தேற்றி கடைசி பரிட்சையை எழுத வைத்த யுகன், கையோடு அவர்கள் வீட்டை காலி செய்ய கூறி ராமமூர்த்தியின் இன்னொரு வீட்டில் தங்க வைத்தான். வீட்டில் இருந்தால் அவள் இதே நினைப்பில் இருப்பாள் என்று அவளை மேற்படப்பில் வற்புறுத்தி சேர்த்து விட்டான்.
கொஞ்சம் கொஞ்சமாய் ருத்ரா மாறிக் கொண்டே வருவதை பார்க்க அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்த ருத்ரா கண்ணயர யுகன் அவன் தங்கி இருக்கும் வீட்டின் உள்ளே நுழைந்தான். தொப்பலாக நனைந்து இருந்தவன் விழிகள் இரத்த சிவப்பாக சிவந்து இருந்தது. அவன் அறையை சுற்றி பார்க்க அங்கு முழுவதும் ருத்ராவிற்கு பிடித்த பொம்மைகள், அவளின் புகைப்படங்கள்,என இருக்க அவள் பயன்படுத்தக் கூடிய சிறிய கிளிப் முதல் ஆடை வரை இருந்தது. அவளின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவன் குடுக்க ஆசைப்பட்டு வாங்கிய பொருட்களை எல்லாம் பார்க்கவே அவன் மனம் ரணமாக அவள் புகைப்படம் போடப்பட்ட தலையணை ஒன்றை எடுத்து கட்டிக் கொண்டு அழ துவங்கினான் ஆணவன். அவனின் காதல் மலாராமலே மண்ணில் வதைக்கப்பட மன வேதனையில் துடித்தான் யுகன். ருத்ரா பள்ளியில் படிக்கும் பொழுதே அவளிடம் காதலை சொல்லலாம் என்று நினைத்தான். ஆனால் அவளின் மனதை கலைக்க வேண்டாம் என்று எண்ணியவன் அவள் படிப்பு முடிந்ததும் கூறலாம் என்று இருந்தான். ஆனால் அவளோ வேறு ஒருவன் மீது காதல் கொண்டு இருக்க அவன் காதலோடு அவனும் மனதளவில் மாய்ந்தான்.
Correct aana தண்டனை தான் கொடுத்து இருக்க yugan super, உன் காதல ninaichi எனக்கே aluga varuthu da 🤧🤧
Enakum feel aguthu darling 😭